ராதைக்கு தன் மேல் காதல் இல்லை… அறைக்கு செல்வதற்கு முன் விவாகரத்து என்று பேசியவள், ஐந்தே நிமிடத்தில் எப்படி அவளின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அளவுக்கு முடிவு எடுத்தாள்? ராதைக்குத் தன் மேல் காதல் இல்லை என்று ஆணித்தரமாக நினைத்த வம்சிக்கு அவளின் இந்த முடிவு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
‘எப்பேர்ப்பட்ட சூழ்நிலையா இருந்தாலும் என்னைப் பிடிக்காமல் அவ ஏன் மறுபடியும் என் வீட்டிற்குள்ள வரணும்? இது என்ன விளையாட்டா? காதலிக்காம அவ உள்ளே வருவா, நான் அவளை ஒரு பொம்மை போல தூரத்துல இருந்தே பாக்கணும்னு நினைக்குறாளா?’ என்று தன் மனதில் உண்டான ரணத்தை அணைக்க நினைத்தவனுக்கு அந்த இடத்தில் அமர பிடிக்காமல், “நான் கிளம்புறேன். அத்தை, மாமா வீட்டுக்கு வாங்க” என்று கூறிவிட்டு தான் காரில் இருப்பதாய் அவனின் பெற்றோர்களை வர சொல்லிவிட்டுச் சென்றான்.
ராதை தன்னுடைய பொருட்களை பேக் செய்துவிட்டு வெளியே வரும்போது கூட மைதிலி அவளிடம் பேசவில்லை. “நான் போயிட்டு வரேன் பெரியம்மா… பெரியப்பா, கோதை அக்கா கிட்ட சொல்லிடுங்க” என்றாள்.
“இனி வம்சியோட வீடு தான் உன் வீடு. நீ இந்த வீட்டுக்கு வந்தால் வம்சியோட சந்தோஷமா மட்டும் தான் வரணும்” என்று ராதைக்கு மட்டும் காதில் கேட்குமாறு கூறிய மைதிலி பின் அமைதியானார். “போய்ட்டு வாம்மா” என்று கூறிய பெரியப்பாவிடம் விடைபெற்று சென்றாள் ராதை.
“நீ கவலைப்படாத மைதிலி, இனி ராதை எங்க வீட்டுப் பொண்ணு” என்று ஆதரவாகக் கூறிய சேதுராமனைக் கையெடுத்து கும்பிட்டார் மைதிலி.
ராதையை அழைத்துக்கொண்டு காரிற்கு சென்ற லட்சுமி, “வம்சி டிக்கியை ஓபன் பண்ணுப்பா” என்று கூறிவிட்டு ராதையின் பெட்டியை வாங்கி வைத்தவர், “நீ முன்னாடி உட்காரும்மா” என்று கூறியபின் ராதையால் அதை மறுக்க முடியவில்லை.
கதவைத் திறந்து உட்கார்ந்தவளைக் கண்டுக் கொள்ளாமல் கடுமையாய் இருந்தவனை புரியாமல் பார்த்தாள் ராதை. காரை வேகமாக எடுத்த வம்சி யாரிடமும் எதுவும் பேசாமல் சாலையை வெறித்து பார்த்துக் கொண்டே ஓட்டினான்.
வம்சியின் கார் நகர்ந்த பின் வீட்டினுள் சென்று கதறி அழுத மைதிலியைப் பாவமாகப் பார்த்த விஜயகுமார்,
“ஏன் மைதிலி ராதைக்கிட்ட அப்படி நடந்துக்கிட்ட? பாவம் சின்ன பொண்ணு அவ” என்று அவர் கவலையாக சொல்ல,
“வேற என்னங்க பண்ண சொல்றீங்க? ஒரு வருஷம் மாடு மாதிரி நம்ம வீட்டுக்கு உழைச்சு போட்டுருக்கா… அவளோட வாழ்க்கை பத்தி அவ யோசிக்கவே இல்லை. அவ வம்சியோட சந்தோஷமாக வாழணும். அதான் எனக்கு வேணும். அதனால தான் நான் ராதையை வேணும்னே துன்புறுத்தி பேசினேன்.”
“வம்சி அவ மேல உயிரையே வைச்சிருக்கான். இந்த பத்திரம், அம்பது லட்சம் பணம் எல்லாமே ராதை மேல் இருக்குற காதல்னால மட்டும் தான் அவன் பண்ணிருக்கான். ராதை வேற விவாகரத்துனு பேசுறத பார்த்து எனக்கு பயம் ஆயிடுச்சு, அதான் எப்படியாவது அவளை கரை சேர்க்கணும்னு இப்படி பண்ணிட்டேன்” என்று அழுத மனைவியை சமாதானம் செய்தார் விஜயகுமார்.
பெங்களூர் வரும் வரை காரில் அமைதி மட்டுமே நிலவியது. வீடு வந்த பின் ராதை இறங்கும் போதே, “நீ இங்கயே இரும்மா, வம்சி வரட்டும்” என்று மாமியார் கூறிய பின் அப்படியே நின்ற ராதை, வம்சி காரை பார்க் செய்து வந்த பின் அவர்களுக்கு ஆரத்தி எடுக்க வந்தாள் நிறைமாத கர்ப்பிணியான யசோதா.
“அண்ணி வாங்க, எப்படி இருக்கீங்க? ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க” என்று கூறிய நாத்தனாரைப் பார்த்து மெலிதாகச் சிரித்த ராதை, “எவ்வளவு மாசம்?” என்று கேட்டாள்.
“ஒன்பது மாசம் அண்ணி” என்று வெட்கப்பட்டவள், “அடுத்து நீங்க தான்” என்று சொல்லும் போது ராதைக்கு ஏன் தான் கேட்டோம் என்று ஆகிவிட்டது. இந்த உரையாடல் எல்லாவற்றையும் வம்சி கவனிக்கத் தவறவில்லை. உள்ளே இருவரும் சென்ற பின் அங்கே பாட்டி மற்றும் தாத்தா சோஃபாவில் அமர்ந்து இருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த பிறகு தன்னை மீறி அவர்களிடம் விரைந்துச் சென்ற ராதை, “பாட்டி… தாத்தா… எப்படி இருக்கீங்க? உங்களுக்கு இப்போ உடம்பு பரவாயில்லையா?” என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.
“நீ தான் வந்துட்டியே மா, இனி நல்லது தான் எல்லாருக்கும்” என்று கூறினர் பெரியவர்கள். வம்சி தன் அறைக்குள் சென்று தன்னுடைய அலுவலக வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.
“ராதை இங்கே வாம்மா” என்று அழைத்த லட்சுமி, “உனக்கு புடவை ரொம்ப நல்லா இருக்கும்மா, இந்தா இதை போட்டுக்கோ” என்று ஒரு அழகிய சீனா சில்க் புடவையை மருமகளிடம் கொடுத்தார்.
அவர்கள் பெங்களூர் வந்தடைய மாலை ஆறு மணியானதால், ராதை புடவை கட்டி வந்த பின் அப்படியே அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்றார் லட்சுமி. லட்சுமியின் நடவடிக்கை ராதைக்கு ஆச்சரியமாகவும் நிம்மதியாகவும் இருந்தது.
“அம்மா, என்னம்மா சொல்றீங்க? ராதை, க்ருஷ் வீட்டுக்கு போய்ட்டாளா?” என்று அதிர்ச்சியாகக் கேட்ட கோதையிடம் நடந்த அனைத்தையும் கூறினார் மைதிலி.
“இனியாவது அவ நிம்மதியா இருக்கணும் ம்மா, நீங்க செஞ்சது ரொம்ப சரி. ஆனா க்ருஷ் தான் என்கிட்ட பேசுறதே இல்லைம்மா. அதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. சரி என்கிட்ட பேசலைனா என்ன என் தங்கச்சியை அவன் ராணி மாதிரி பாத்துப்பான்” என்று உண்மையாக ராதைக்காக சந்தோஷப்பட்டாள் கோதை.
ராதை மற்றும் லட்சுமி இரவு வீடு திரும்பும் போதே அங்கு ஹாலில் பிரணவ் உடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான் வம்சி. ராதையைக் கண்டதும், “அக்கா எப்படி இருக்கீங்க? நீங்க இல்லாமல் அத்தான்…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே,
“பிரணவ் ரொம்ப லேட் ஆயிடுச்சு, யசோக்கு குளிர் ஒத்துக்காது” என்று வம்சி அழுத்தமாக சொல்ல, “சரி அத்தான், யசோதா கிளம்பலாம்” என்று தன் மனைவியை அழைத்தான்.
“அண்ணா, அண்ணி, ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு வாங்க” என்று கூறிவிட்டு யசோதா மற்றும் பிரணவ் கிளம்பி விட்டார்கள்.
லட்சுமியோ வம்சியிடம் வந்து, “வேதந்த், நாங்க கோயிலுக்கு போயிட்டு வந்துட்டோம். இந்தத் தாலியை ராதையோட கழுத்துல போடு…” என்றவரின் கையிலோ ராதை தூக்கி எறிந்த தாலி இருந்தது..
அவளின் பக்கத்தில் சென்று அவளின் கண்களை இறுக்கமாக பார்த்தவாறே தாலியை அவள் கழுத்தில் அணிவித்த போது அந்த ஹாலில் வம்சி மற்றும் ராதை மட்டுமே இருந்தனர்.
வம்சி தன்னைப் பார்ப்பது ஒரு விதமாய் ராதைக்குத் தோன்றியதால் உடனே கிச்சனுக்குள் புகுந்து லட்சுமிக்கு உதவி செய்கிறேன் என்று அங்கேயே இருந்து விட்டாள்.
‘ஒரு நிமிஷம் கூட உன்னால என்னோட தனியா நிக்கவே முடியாம உள்ளே பயந்து ஓடுற.. நீ எந்த தைரியத்துல இந்த வீட்டுல கால் எடுத்து வெச்சிருக்க?’ என்று மனதில் நினைத்தவன் ஒரு முடிவு எடுத்தவனாய் மேலே சென்றான்.
“ராதை நீயும் நானும் மட்டும் தான் சாப்பிடணும். வேதந்த், வேதந்த் அப்பா, அத்தை, மாமா எல்லாம் சாப்பிட்டாங்க” என்று மருமகளுக்கு பரிமாறியவரை சந்தோஷத்துடன் பார்த்த ராதை, “அத்தை, நாளையில் இருந்து நான் சமைக்குறேன்” என்றாள்.
“இது உன் வீடு மா உன் மனம் போல இரு” என்று மருமகளின் தலையைக் கோதியவர், “சரிம்மா நீ சாப்பிட்டு முடிச்சிட்டு உன் ரூமுக்குப் போ” என்ற மாமியாரிடம், “எந்த ரூம் அத்தை?” என்று கேட்டாள் ராதை.
‘இந்த பொண்ணு தெரிஞ்சு கேட்குதா இல்லன்னா வேதந்த்தோட ரூம் மறந்து போச்சா?’ என்ற குழப்பத்தில், “மேலே இருக்குற வேதந்த் ரூம் தான்” என்று சொல்லிவிட்டு அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு படுக்கச் சென்றார்.
‘நான் அவர் ரூம்க்கு போயி தான் ஆகணும்.. வேற வழி இல்ல! அவர் கண்டிப்பாக என்கிட்ட தப்பா நடந்துக்க மாட்டாரு. அதனால நம்ம போய் அமைதியா படுத்துடலாம்’ என்று நினைத்தவள், வம்சியின் அறைக்குள் சென்றாள்.
தன் லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்த வம்சி ராதையைக் கண்ட பின் தன் லாப்டாப்பை மூடிவிட்டு கதவை சாற்றினான். ராதையோ அப்படியே விழித்து நின்றாள்.
அவளுக்கு தங்களுடைய முதல் ராத்திரி அன்று நடந்த விஷயங்கள் தான் ஞாபகத்திற்கு வந்தது. அன்று இருந்த பயம் இன்று அவளுக்கு இல்லை. வம்சி தன் விருப்பம் இல்லாமல் தன்னை தொட மாட்டான் என்கிற நம்பிக்கை அவளுக்கு அதிகமாய் இருந்தது.
“நீ என்னை காதலிக்கலைனு எனக்கு நல்லாவே தெரியும். அப்போ ஏன் இந்த வீட்டிற்குள்ள என் பொண்டாட்டியா வந்த?” என்று அவளை நேராக நோக்கிக் கேட்டவனைத் திகைப்பாகப் பார்த்தாள் ராதை.
“என்ன அப்படி முழிக்குற, நீ உன் இஷ்டத்துக்கு தாலியைக் கழட்டி போட்டுட்டு போவ, இப்போ அதே தாலியை போட்டுருக்க. இதுக்கு என்ன அர்த்தம்?” என்று அழுத்தமாகக் கேட்டான்.
“அது வந்து… என் பெரியம்மா என்னை திட்டின…” என்று அவள் ஆரம்பிக்கும் போதே, “உன் கதை எல்லாம் எனக்கு வேண்டாம். மத்தவங்களுக்காகத் தான் இந்த வீட்டுக்குள்ள நீ காலெடுத்து வெச்சு இருக்கணு என்று எனக்குத் தெரியும். நீ நினைச்சா வீட்டை விட்டுட்டு போவ, திடீர்ன்னு வீட்டிற்குள்ளயும் வருவ… அண்ட் அகைன் இன்னொரு தரம் தாலியைக் கழட்டி போட்டுட்டு போவ… நீ என்ன இங்க பிக்னிக்கா வந்துருக்க?”
“உன் இஷ்டத்துக்கு உன்னை விட்டு வெச்சதால தானே உன் பெரியம்மா சொன்னாங்கன்னு என் மேல காதல் இல்லாமல் உள்ளே வந்துருக்க…” என்றபடி அவளின் கையை கோபத்துடன் பற்றியவன்,
“முன்னாடி மாதிரி உன்னைத் தொடாமலய பக்கத்துல பொம்மை மாதிரி வெச்சிட்டு இருப்பேனு நினைச்சியா டி… அப்படி நீ நினைச்சதுனால தான தைரியமா இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்க… உன்னை இவ்வளவு நாள் நான் ஷாஃப்ட்டா ஹேண்டில் பண்ணது தான் ரொம்ப தப்பு” என்று ஆக்கிரோஷமாகக் கூறியவன் ராதையின் கையைப் பற்றி தன் பக்கத்தில் இழுத்து, அவளின் இதழில் முரட்டுத் தனமாக முத்தமிட்டான்.
வம்சியிடம் இப்படி ஒரு செயலை எதிர்பார்க்காத ராதை, அந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவே திணறினாள். அவளின் இதழை சிறை செய்தவனின் செயலில் பதறியவள் உணர்ந்தது கண்டது என்னவோ கோபம் கலந்த காமம் மட்டுமே.
அவனிடம் இருந்து விடுபட தன் கைகளை வைத்து அவனின் மார்பில் அழுத்தமாகத் தள்ள முயற்சித்தாள். ஆனால் ராதையின் பலம் இங்கு பலவீனம் ஆனது. அவனிடம் இருந்து விடுபட முடியாமல் திணறியவளை விடுவித்தவன், அவளை தூக்கிக்கொண்டு வேகமாக தன்னுடைய மெத்தையில் போட்டான்.
“என்னை நீ சீண்டிட்ட ராதை… உன்னோட காதலை அடைய நினைச்ச என்னை நீ முட்டாள்னு நினைச்சு வீட்டிற்குள்ள காதல் இல்லாம நுழைஞ்சிருக்க… இனி நீ இந்த வம்சியோட ருத்ரதாண்டவத்தைத் தான் பார்ப்ப” என்று அவள் மீது படரத் தொடங்கினான் வம்சி.
வம்சி ராதையை காதலுடன் உறவாடாமல் காமம் கலந்த வெறியோடு சூறையாடினான். ராதையால் வம்சியுடன் போராட மனதிலும் உடலிலும் தெம்பில்லாமல் சோர்வாக தோற்றவள், அந்த அசுரனிடம் தன்னை இழந்தாள்.
***
