பிரியாதிரு 21

அமிர்தா இறங்கியது என்னவோ ஒரு உயர் தர உணவகத்தில் தான்.. 

 

அமிர்தா இறங்கி சென்றதுமே டிரைவருக்கு ராஜேஷ் ரெட்டியிடம் இருந்து கால் வந்தது.. 

 

“சார்” என்று அவன் சொல்ல, 

 

“அமிர்தா இப்போ எங்கே இறங்குனா?” என யோசனையாக கேட்டார். 

 

“இங்க கோதாவரி ரெஸ்டாரென்ட்ல சார்” என்றான் பவ்வியமாக. 

 

“அவ சேஃபா தானே இருக்கா… அவளை நல்லா பாத்துக்கோ” என்று வைத்து விட்டார். 

 

மருமகள் மீது அவருக்கு சந்தேகம் இல்லை.. அக்கறை மட்டுமே! 

 

அங்கு ரெஸ்டாரென்ட்டில் சர்வாவுடன் ஒரு ஆடவன் அமர்ந்து இருந்தான்… 

 

“சர்வா” என்றபடி அமிர்தா வர, 

 

“உட்காரு அம்மு” என்றவனிடம், 

 

“அதுக்கு நேரம் இல்லை சர்வா.. ஆத்மன் என்ன பண்ணாரு!” என பதற்றமாக கேட்டாள். 

 

“அவன் பண்ணின அயோக்கியத்தை நீயே கேளு அம்மு” என்றவனோ, பக்கத்தில் அமர்ந்திருந்த ஆடவனிடம் திரும்பி, 

 

“வெங்கட்.. இதான் அமிர்தா” என அவன் அமிர்தாவை அறிமுகப்படுத்த, அவளை மேலிருந்து கீழ் பார்த்த வெங்கட், 

 

“ஹாய்” என்று அவளிடம் கை குலுக்க நீட்டினான் வெங்கட். 

 

“ஹலோ” என கைக்கூப்பி அமிர்தாவோ சர்வாவை புரியாமல் பார்க்க, 

 

“இவன் என்னோட பிரண்ட் அமிர்தா… என் ரூம் மேட் தான்.. தமிழ் தெலுங்கு சினிமால அசிஸ்டெண்ட் டேரக்டரா வேலை பார்க்குறான். திறமையானவன்!” என பெருமையாக சொல்ல, 

 

‘இதைச் சொல்ல தான் கூப்பிட்டியா’ என கடுப்பாக எண்ணியபடி நினைத்த அமிர்தாவிற்கு மனது படபடப்பில் பொறுமை தான் பறந்து போய்க்கொண்டு இருந்தது. 

 

“சரி” என அவள் பெருமூச்சுவிட்டபடி சொல்ல, 

 

“நீ சிங்கிங் காம்படீசன்ல வின் பண்ண அப்புறம் நீ பாடி முடிச்ச தானே அதுக்கு உனக்கு பேமண்ட்டும் வரல உன் பாட்டும் வெளியே வரல தெரியுமா.. அதனால நீ எவ்வளவு நாளா மனம் உடைஞ்சு போன! எத்தனை நாள் தூங்காம அழுதுருப்ப.. அதுக்கு எல்லாம் காரணம் யார் தெரியுமா.. அந்த அயோக்கியன் ஆத்மன்” என்று அவன் சொல்ல, அமிர்தாவோ பேரதிர்ச்சியில் ஸ்தம்பித்து விட்டாள். 

 

“என்ன சொல்ற சர்வா!” என கண்களில் கண்ணீர் மூண்டபடி கேட்ட அமிர்தாவை பாவமாக பார்த்த சர்வா, 

 

“ஆமா அம்மு… அவன் தான் நீ பாடுனதை வெளியே வரவே விடல.. ச்ச எவ்வளவு கேவலமான மனுஷன் அவன்.அதனால நீ எவ்வளவு கஷ்டப்பட்ட ன்னு கூட இருந்து பார்த்த எனக்கு தான் தெரியும்” என்றான் சர்வா கோபமாக. 

 

அவன் சொல் தில் உள்ள நூற்றுக்கணக்கான நியாயம் அமிர்தாவிற்கு புரியாமல் இல்லை… 

 

அந்த வாய்ப்பு அவளுக்கு கிடைக்காமல் போனதால் தன் ஃபோட்போலியோ வைத்து அவள் வெளியே முயற்சி செய்த போது கூட, 

 

“நீங்க வின் பண்ணீங்க.. அதுக்கு உங்களை பாட கூப்பிட்டாங்க.. ஆனா அந்த பாட்டே வெளியே வரலயே.. அப்போ எந்த நம்பிக்கை நாங்க உங்களை நம்பி பாட்டு கொடுக்க… அதுக்கு நாங்க சின்மயி, ஸ்ரெயா கோஷல் வைச்சே எங்க பாட்டை பேன் இந்தியன் ஹிட் ஆக்கிடுவோம்மே” என்றார்கள். 

 

அதுபோக அதையும் மீறு அவளுக்கு இரண்டு இயக்குனர்கள் பாட அழைத்தார்கள்… 

 

அவள் பாடி முடித்தாள்.. பேமண்ட் வரவில்லை.. பாட்டும் வெளியே வரவில்லை.. 

 

‘ஒருவேளை அதுக்கு காரணமும் ஆத்மன் தானா!’ என்று அவள் பதற்றமாக நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, 

 

“உனக்கு அதுக்கு அப்புறம் ரெண்டு முறை சான்ஸ் வந்தது தெரியுமா” என சர்வா அதே கோபத்துடன் சொல்ல, 

 

“அதுக்கு ஆப்பு வைச்சதும் ஆத்மன் தான்” என்றான் அந்த வெங்கட் உறுதியாக. 

 

இதைக் கேட்ட அமிர்தாவிற்கு உலகமே தலை கீழாக சுற்றுவது போல தோன்றியது… 

 

‘யார் இந்த ஆத்மன்? என்னை காதலிக்குறேன் காதலிக்குறேன்னு டார்ச்சர் பண்ணி என்னை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி! எ..என்னை வலுக்கட்டாயமா கெடுத்து… இதெல்லாம் தாண்டி என்னோட பெரிய காதலான என்னோட பாடுற ஆசையை உடைச்சு எனக்கு சந்தோஷமே கொடுக்காத ராட்சசன்’ என அவளின் மனது அலறி, கதறிக்கொண்டு இருக்கும் போதே, 

 

“நீ இப்போ பாடியிருக்கியே அதையும் அவன் வெளியே வர விட மாட்டான்” என சர்வா சொல்லும் போதே, அவளின் மூளை அவளை எச்சரித்தது. 

 

‘ஆமா.. அதை துருப்பு சீட்டா வைச்சு தானே என்னை அவன் வலையில விழ வைச்சான். அப்போ கண்டிப்பா இந்த பாட்டும் வெளியே வராது’ என அடித்து சொல்லியது அமிர்தாவின் மூளை. 

 

அவனை சமீபமாக கணவனாக ஏற்க ஆரம்பித்தவளின் மனது மிகவும் அடிப்பட்டு போனது. சொல்ல முடியா துயரம் அவளின் ஆழ்மனதை சூழ்ந்தது… 

 

****

சோனியா அவள் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்பதில் ரொம்பவே கவனமாக இருந்தாள்… 

 

அன்றைய நாளைக்குப் பின்னர் அவள் விக்னேஷின் அறைக்கு செல்லுவதை முழுமையாக நிறுத்தினாள். 

 

வேலையை விட்டு அனுப்பினால் அனுப்பட்டும்… விக்னேஷின் அறைக்குள் சென்று அவனிடம் வார்த்தை என்னும் விஷத்தை வாங்கி மனதை மேலும் மேலும் அறுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை… 

 

விக்னேஷூம் சோனியாவை அதன் பின்னர் எதுவும் சீண்டவில்லை.. அதற்கு அவனின் தன்மானம் விடவும் இல்லை.. 

 

இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் என்று இருக்கையில் ப்ரீத்தாவிற்கு தான் மனது பக் பக்கென்று இருந்தது… 

 

சோனியா அவளின் திருமண விஷேஷத்தில் இருக்கும் வரை அவளுக்கு அபாயம் என்றே தோன்றியது… 

 

அதிலும் ப்ரீத்தாவின் தோழிகள் சிலர், “விக்னேஷோட முதல் மனைவி சோனியா செம அழகா இருக்கா.. அவளை விட்டுட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்க போறாரா..நம்புற போல இல்லையே! எதுக்கும் உஷாரா இரு ப்ரீத்தா” என்று அவள் எச்சரிக்க, ப்ரீத்தாவிற்கோ குபு குபுவென எரிந்தது… 

 

அதிலும் திருமண வேலைகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டுருந்த சோனியாவை பார்க்க பார்க்க ப்ரீத்தாவிற்கு அவளை எரித்து விடும் அளவிற்கு கோபம் தலைக்கேறியது… 

 

‘இரு டி.. உன்னை எப்படி அசிங்கப்படுத்தி என் கல்யாணத்துக்கு முன்னாடியே விக்னேஷை வைச்சே உன்னை வெளியே அனுப்பறேன் பாரு’ என மனதில் வன்மமாக நினைத்தவள் அதற்கு ஏத்த போல திட்டம் தீட்ட ஆரம்பித்தாள். 

 

ப்ரீத்தா தீட்டப் போற திட்டத்தில் மாட்டிக் கொள்வாளா சோனியா? அவளின் நிலை என்னவாகப் போகிறது!

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!