தீ 8

அத்தியாயம் 8

 

அடுத்த இரண்டு நாட்களும் பரிமளாவின் கண்ணில் சர்வஜித் படவில்லை…

 

‘ஒருவேளை கல்யாணம் பண்ணிக்க போறதுனால என்னை தண்ணி தெழிச்சு பிழைச்சுப் போன்னு விட்டுடுவானா!’ என நினைக்கும் போதே அவளின் மனம் நிம்மதி அடைந்தாலும் மனமெல்லாம் வெறுமை… 

 

அவளுக்கான வாழ்க்கை என்று இனி எதுவும் இல்லை என்கிற ஆதங்கம்… 

 

இத்தனை நாட்களாக அவளின் பெற்றோர் செய்த ஃபோன் கால்ஸ்ஸிற்கும், மெசேஜிற்கும் அவள் ஒரு முறை கூட செவி சாய்க்கவே இல்லையே! 

 

தன்னை இந்த இடத்தில் தள்ளியவர்கள் மீது அத்தனை கோபம்… கடுப்பு மற்றும் எரிச்சல்!!!! 

 

மூன்றாவது நாள் காலை ஐந்து மணி போல பரிமளாவிற்கு கொடுக்கப்பட்ட அறையின் கதவு வேகமாக தட்டப்பட, ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளோ சத்தம் கேட்டு பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள்… 

 

விட்டால் கதவையே உடைத்து விடும் அளவிற்கு கதவு தட்டப்பட, 

 

“ஒரு வேளை திருடனா!” என தூக்கத்தில் இருந்து உறங்கியவளோ தூக்கம் கலைந்து பயப்பட, 

 

“ஏய்! கதவை திற டி” என்று சர்வஜித் கதவை ஓங்கி தட்டுயபடியே கத்த, பயத்தில் வெடவெடத்தவளுக்கு இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது… 

 

அதே பயத்துடன் திறந்தவளை அனல் தெறிக்க முறைத்தவன், “உனக்கு கதவை திறக்க இத்தனை நேரமா பிளடி பிட்ச்” என கர்ஜித்தபடியே உள்ளே வந்தவன் தன் நீண்ட கால்களை வேகமாக பின்னே தள்ளியபடி கதவை ஓங்கி சாற்ற, அவனின் இந்த முரட்டுத் தனமான செயலில் கதி கலங்கிப் போனாள் பாவையவள்… 

 

சர்வஜித்தின் முரட்டுத்தனமான செயல்களும், மனதை குத்திக் கிழிக்கும் வார்த்தைகளும் பரிமளாவிற்கு புதிது அல்லவே! 

 

ஆனால்… மருத்துவமனையில் இருந்து வந்த பின்னர் அவளின் பக்கமே வராமல், அவளை இழிவாக பேசாது இருந்தானே… அதில் சற்று நிம்மதி அடைந்தவளுக்கோ இப்போது ருத்ர மூர்த்தியாக தன் முன்னே அனல் தெறிக்க கத்திக் கொண்டுருக்கும் ஆறடி ஆண்மகனை கண்டு பெண்ணவளுக்குள் பயப்பந்து உருண்டது.. 

 

“என்ன டி வாய்ல கொழுக்கட்டை வைச்சிட்டு இருக்கியா” என அவளின் தாடையை தன் கையால் இறுக பற்றியவனை மருட்சியுடன் பார்த்தவளின் வாய்க்குள் இருந்து வார்த்தை வரவில்லை… தொண்டை குழி வறண்டு போனது… 

 

ஆனாலும் அவனின் நடவடிக்கையில் பயந்து, “ச.. சார்… தூங்கிட்டு இருந்தேன் சார்” என திக்கித் திணறி சொன்னாள்… 

 

“ஒ… மகாராணிக்கு சொகவாசியா தூக்கம் கேட்குதோ!” என அவளின் தாடையில் இன்னும் இறுக்கத்தைக் கொடுத்து அழுத்தியவன், 

 

“என்ன டா இவன் நம்ம பக்கமே வரல… இனி நம்ம மகாராணி போல ஜாலியா இந்த வீட்டுல நல்லா சாப்பிட்டு, சாப்பிட்டு, தூங்கலாம்ன்னு மனசுல கனவு கோட்டை கட்டி வைச்சிருந்தேன்னு வை… அந்த கோட்டையை நெருப்பை வைச்சு கொழுத்திடுவேன் டி” என அவளை வேகமாக தள்ளியவன், 

 

“உன் கூட ஒரு வாரம் படுக்கக் கூடாதுன்னு உன் உடம்புக்கு ரெஸ்ட் வேணும்னு அந்த டாக்டர் சொன்னான்… அதுக்காக தான் உன் பக்கமே வராம விட்டு வைச்சேன்.”

 

“அதுக்காக உன் உடம்பு மேல எனக்கு அக்கறைனு மறுபடியும் கனவு கோட்டை கட்டாத… மறுபடியும் ஹாஸ்பிடல்ல போய் படுத்தனா, எனக்கு மூட் வந்தா நான் எப்படி உன்னை அனுபவிக்க முடியும்” என அவளை மேலிருந்து கீழ் வரை விழுங்குவதைப் போல் பார்த்தவன், 

 

“இன்னும் பத்து நிமிஷத்துல நீ கிளம்பி இருக்கணும்… கிழிஞ்ச சேலைய போடாம இந்த சேலைய போடு” என தன் கையில் வைத்திருந்த சேலை இருந்த கவரை அவளின் முகத்தில் விட்டெரிந்து, கட்டளையாக சொல்லிவிட்டு வெளியில் சென்றான்…

 

அவன் செல்லும் வரை அதே மிரட்சியுடன் சிலையாய் நின்றிருந்தவளின் மனதிலோ, ‘எனக்கு இதுல இருந்து எப்போ தான் விடிவு காலம் கிடைக்கும் கடவுளே!’ என ஒருப்பக்கம் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாலும், 

 

மறுப்பக்கமோ, ‘எங்க கூப்பிடுறானு தெரியலயே!’ என பதைபதைத்தது மனம்… 

 

அவனுக்கு பயந்தே கிளம்பியிருந்தாள்.. 

 

காரில் தான் அழைத்துக் கொண்டு சென்றான்.. 

 

பின் சீட்டில் அமர சென்றிருந்தவளை, “நான் என்ன உனக்கு டிரைவரா… முன்னாடி வா இடியட்” என அவன் கடுப்படைய, அவனின் தலையாட்டி பொம்மை போல முன்னாடியே சென்று அமர்ந்தாள் பரிமளா… 

 

அதன் பின் அவன் அவளிடம் பேசவே இல்லை… ஆனால் முகம் மட்டும் இறுக்கமாய் இருந்தது… 

 

எங்கு அழைத்துச் செல்கிறான்… எதற்கு அழைத்துச் செல்கிறான் என்று தெரியாமல், பயத்தோடு யோசித்தபடியே சென்றவளின் தலையில் அடுத்த இடி விழ காத்திருந்தது…

 

சர்வஜித்தின் கார் ஒரு கிளினிக்கில் சென்று நின்றது… 

 

உள்ளே செல்லும் வரை, ‘எதுக்காக இங்க கூட்டிட்டு வந்திருக்கான்’ என அவளின் மனது பதறி துடித்தது… 

 

“பிரியா நான் வந்துட்டேன்” என யாருக்கோ கால் செய்து அவன் சொல்ல, டாக்டர் கோர்ட்டுடன் தனது அறையில் இருந்து வெளியே வந்தாள் டாக்டர் பிரியா… மகப்பேறு மருத்துவர்.. 

 

வந்தவளோ சர்வஜித்தை முறைத்தபடி அமைதியாக நிற்க, “ஏய் சீன் போடாம… இவளை உள்ளே கூட்டிட்டு போ டி” என அந்த டாக்டர் பெண்ணின் தலையை தன் கைகளால் ஆட்டி இயல்பாக சொன்னான்… 

 

‘என்னைத் தவிர எல்லா பொண்ணுங்க கிட்டயும் இயல்பா இருக்கானே’ என நினைக்கும் போதே அவளின் நெஞ்சாங்கூடு வறண்டு வெறுமை அடைந்தது…

 

“ஆர் யூ சுவர் ஜித்து!” என கலக்கமாய் கேட்டாள் டாக்டர் பிரியா. 

 

“ஏற்கனவே உன் கிட்ட எல்லாமே தெளிவா சொல்லித் தானே கூட்டிட்டு வந்திருக்கேன்” என்றான் அழுத்தமாக. 

 

“ஐ க்னோ… ஆனா அவ கல்யாணம் ஆகாத பொண்ணு” என மெதுவாக முறையிட்டாள் டாக்டர் பிரியா. 

 

“சோ வாட்… கல்யாணம் பண்ணாமலேயே செக்ஸ் வைச்சிக்கலாம்… அப்படி நடக்கும் போது கர்ப்பமும் உண்டாகும்… நீ ஒரு டாக்டர் தானே… இப்போ இந்த ரீப்பிரொடக்ட்டிங் ஸிஸ்டம் கிளாஸ் பத்தி எல்லாம் நான் விளக்கனுமா உனக்கு” என சற்று கடுமையாகவே கேட்டான். 

 

“அதெல்லாம் தெரியாம தான் உன்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கேனா” என சலிப்பாக கேட்டாள் பிரியா… 

 

“அப்போ என்ன.. மூடிக்கிட்டு நான் சொன்னதை மட்டும் செய்.. உனக்கு ட்ரீட் பண்ண தெரியலன்னா சொல்லு நான் வேற நல்ல டாக்டர் கிட்ட போய்க்குறேன்” என்றான் குத்தலாக. 

 

“ஏன் டா நீ வேற…!” என கலக்கமாக சொன்னவள் பரிமளா புறம் திரும்பி,”நீ உள்ளே வா” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றாள்… 

 

இவர்கள் இருவரின் உரையாடலிலேயே ஏதோ பெரிய விஷயம் என்று உணர்ந்துக் கொண்ட பரிமளாவிற்கு பயத்தில் அந்த ஏசி குளிருலும் கூட வியர்வை படரத் தொடங்கியது… 

 

என்ன பயந்தாலும் அவன் கட்டளையை ஏற்கும் அடிமை போல தானே வாழ்கின்றாள்… 

 

“இன்னும் இங்கேயே ஃபெவிக்கால் போட்டு ஒட்டுன மாதிரி நின்னுக்கிட்டு இருக்க… உள்ளே போ டி” என அவளின் காதில் கடுகடுக்க, மனதிற்கு விருப்பம் இல்லை என்றாலும் பயத்தில் தானாக கால்கள் நடந்து உள்ளே சென்றன…

 

சர்வஜித் உள்ளே வரவில்லை… அவனுக்கு உள்ளே செல்லவும் விருப்பம் இல்லை… ஆதலால் வெளியில் தான் நின்றுருந்தான்… மனமெல்லாம் ரௌத்திரம் பரிமளாவின் மீது… 

 

உள்ளே பயத்துடன் சென்றவளை பார்த்த டாக்டர் பிரியாவோ பெண்ணவளின் முக பாவத்திலேயே அவளின் பயத்தினை அறிந்துக் கொண்டாள்… 

 

ஏனோ அவளுக்கு பரிமளைவை அப்படி பார்க்க பாவமாக இருந்தது… ஆனாலும் அடுத்த நொடியே அவளின் பால் பாவப்பட்ட தன் மனதை திட்டிக் கொண்டவள், “உனக்கு காப்பர் டீ வைக்க போறோம்” என்றாள். 

 

“காப்பர் டீ யா! எனக்கு காப்பி, டீ தான் தெரியும்ங்க க்கா” என வெள்ளந்தியாக சொன்னவளைப் பார்த்து அந்த நேரத்திலும் பிரியாவிற்கு பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது… 

 

‘நம்ம என்ன காமெடியா சொன்னோம்… இந்த அக்கா இப்படி சிரிச்சிக்கிட்டு இருக்காங்க… நானே என்னவோ ஏதோனு பயந்து இருக்கேன் என் பயம் புரியாம இவங்க வேற’ என மனதில் கடுப்படைந்தவள் பரிமளா… 

 

பரிமளாவின் குழப்பமான முகத்தை கண்டு சிரிப்பில் இருந்து மீண்ட டாக்டர் பிரியா, “டோன்ட் கால் மீ அக்கா, அவரக்கா அண்ட் ஆல்… ஐ அம் அ டாக்டர்… காட் இட்” என கறாராக சொன்னாள்… 

 

“புரிஞ்சிதுங்க கா… சாரி சாரி டாக்டர்” என தடுமாற்றத்துடன் சொன்னாள் பரிமளா… 

 

“உனக்கு காப்பர் டீ ன்னா என்னன்னே தெரியாதா!” என அவள் கூற்றில் நம்பிக்கை இல்லாமல் சந்தேகமாக கேட்டாள் பிரியா. 

 

“தெரியாதுங்க க்கா… அப்படி ஒரு வார்த்தை இப்போ தான் கேள்விப்படறேன்… டீ, காப்பி போல ஏதாவது சத்து மருந்தா இந்த காப்பர் டீ” என கேட்டாளே பாருங்க, வயிற்றைப் பிடித்து சிரிக்கத் தொடங்கினாள் பிரியா… 

 

‘இவங்க ஏன் பைத்தியம் போல சிரிச்சிக்கிட்டே இருக்காங்க’ என பரிமளாவின் மனதோ எரிச்சலாக இருந்தது… 

 

“ஏன் க்கா இல்ல இல்ல டாக்டர் இது என்ன அவ்வளவு பெரிய காமெடியா! எனக்கு சிரிப்பே வரல” என்றாள் இழுத்தபடி. 

 

“சர்வஜித் கூட இருக்கும் போது சப்தநாடியும் அடங்கி வாயே பேசாம இருந்த… இப்போ மட்டும் வாய் வருதே! நான் வேணும்னா அவனை கூப்பிடவா” என வேடிக்கையாக பார்த்து கேட்டாள் டாக்டர் பிரியா. 

 

“ஐய்யோ! தெய்வமே உங்களை கெஞ்சி கேட்குறேன்… அந்த காப்பி டீயா… ஏதோ சொன்னீங்களே.. அதைக் கூட நாலைஞ்சு சேர்த்து கொடுங்க… ஆனால் அவர் கிட்ட என்னை மாட்டி விட்டுடாதீங்க…ஏற்கனவே நான் ஒரு உயிருள்ள ஜடம் போல தான் இருக்கேன்” என கெஞ்சுலில் ஆரம்பித்தவள் கேவலில் முடிக்க, இப்போது டாக்டர் பிரியாவின் முகமும் உணர்வை இழந்தது… 

 

அவளை ஆறுதல் படுத்த கூட பிரியாவால் முடியவில்லை.. 

 

“லுக்… காப்பர் டீ ன்னா நீ நினைக்குற போல டீயோ, காப்பியோ இல்ல…” என இழுத்த பிரியாவோ பெருமூச்சுவிட்டபடி தொடர்ந்தாள்… 

 

“காப்பர் டீ… காப்பரால் செய்யப்பட்டது… விந்தணுக்களின் வீரியத்தை அழிக்கும் தன்மை இருக்கு.. இதை உன்னோட கருப்பைக்குள் வைச்சிடுவோம்… காப்பர் டியில் இருக்கும் செம்பு விந்தணுக்களை அழிக்கும் திறனை கொண்டிருப்பதால் இது கருத்தரித்தலை தடுக்கும்” என ஒரு மருத்துவராக அதைப் பற்றி விளக்கினாள் பிரியா… 

 

இதனை எல்லாம் கேட்ட பரிமளாவோ அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றிருந்தாள்… 

 

அவளின் மனதிலோ, ‘குழந்தை உண்டாகி அவன அட்டை போல ஓட்டிட்டு உட்கார்ந்திருவேன்னு என்னை கேவலமாக நினைச்சு இப்படி பண்ணிட்டானே! ஏன் அப்படி கரு உருவாக கூடாதுன்னா அவன் கான்டம் யூஸ் பண்ண வேண்டியது தானே’ என அவளின் மனது ஆதங்கமாக ஒலித்தது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!