தீ 7

அத்தியாயம் 7

 

பரிமளா கண் விழிக்கும் போது ஒரு மருத்துவமனையில் இருந்தாள்…

 

ஆம், பாத்ரூமில் வலுக்கி விழுந்ததில் அவளின் பெண் உருப்பில் இருந்து குருதியாய் வெளியே வந்தது அந்த புதிதாய் பூத்த சிசு…

 

பக்கத்தில் இருந்த கோமதி அம்மா தான் கரகரத்த கரலில் விளக்கினார்…

 

பிரெக்நென்சி கிட் கொடுத்தவர் ஆயிற்றே! அவருக்கும் மனது பதைபதைத்தது.. தாயைப் போல…

 

சர்வஜித்திற்கும் பரிமளாவிற்கும் கணவன் மனைவி உறவு இல்லை என அவருக்கு சொல்லாமலேயே புரிந்தது..

 

பெரிய இடத்து விடயம் அப்படித் தான் இருக்கும் என தான் உண்டு தன் வேலை உண்டு என அவர் இருந்தாலும், பரிமளாவை அவர் ரொம்பவே மதித்தார்…

 

பாத்ரூமில் குருதி ஓட சுருண்டு விழுந்தவள் கஷ்டப்பட்டு எழுந்து கதவைத் திறப்பதற்கும், அவளைத் தேடி வந்த சர்வஜித் அவளை பாத்ரூமில் இருந்து வந்ததைக் காணவும் சரியாக இருக்க, தன் காலில் கீழே ஓடும் குருதியை பரிமளா உணரும் முன்னே அவளின் சேலை இரத்த கரையாகி சர்வஜித்திற்கு உணர்த்த, அடுத்த நொடி மயங்கி சுருண்டு விழ இருந்தவளை மனதில் ரௌத்திரத்துடன் தாங்கினான் சர்வஜித்… 

 

இமைகளை விழித்தவளின் கண்களின் ஓரம் கண்ணீர் துளி துளிர்ந்தது… 

 

யூகித்து விட்டாள்… கரு சிதைந்து விட்டது என! 

 

அதை மேலும் உறுதி படுத்தும் விதமாய் கோமதி அம்மா கவலையாக சொல்ல, சேர்த்து வைத்த கண்ணீர் எல்லாம் கரை புரண்டு வேகமாக வெளியே வந்தது…

 

தன் பிள்ளையை காரணம் காட்டி அவனிடம் தப்பிக்க நினைத்தாலே! 

 

இப்போது அது இல்லை எனவும் மனம் உடைந்து போனாள்… கடவுள் எப்போதுமே தன் பக்கம் நிற்க மாட்டாரா என்கிற வெறுப்பு மேலோங்கியது… 

 

அழுது அழுது தோய்ந்தே விட்டாள்… 

 

“அழாத தாயி… கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்” என அவளின் தலையை வருடியபடி ஆறுதல் சொன்னார் கோமதி. 

 

யார் என்ன ஆறுதல் சொன்னாலும் வாழ்க்கை இப்படி சூனியமாகி போனதை நினைத்து அவளின் மனது முற்களால் குத்துவது போன்ற வலி, வேதனை… 

 

அவளை பரிசோதிக்க வந்த மருத்துவர், “நீங்க ரெண்டு நாள் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் எடுக்கணும்” என அறிவுரைத்து விட்டு சென்றார்… 

 

தான் மயங்கி விழும் பொழுது சர்வஜித் தான் தன்னை விழாது தாங்கியிருப்பான் என யூகித்தவளின் மனது அவனைத் தான் கண்களால் தேடியது… 

 

தன்னை தனியாக விட்டு சுதந்தரம் கொடுப்பவன் இல்லையே என்கிற ரீதியில் தேடியது… 

 

அதை உணர்ந்த கோமதி அம்மாவோ, “ஐய்யா தான் உங்களை தூக்கிட்டு வந்து சேர்த்தாரு தாயி… அப்புறம் டாக்டர் கிட்ட பேசிட்டு வெளியே போயிட்டாரு… எப்போ திரும்பி வருவாருன்னு தெரியல” என அவசரமாக சொன்னார். 

 

‘அவனுக்கு தேவை என் உடல் தானே! அதான் கண்டுக்காம இருக்கான்’ என்றே வெறுமையாக நினைக்க தோன்றியது… 

 

அன்றிரவு பத்து மணி போல தான் மருத்துவமனைக்கு வந்தான் சர்வஜித்… 

 

அது ஒரு பெரிய மருத்துவமனை தான்… 

 

அதில் இருக்கும் மருத்துவர்கள் கூட சர்வஜித்திற்கு பெரும்பாலும் தெரிந்தவர்கள் தான்… 

 

ஏற்கனவே ஃபோன் மூலமாக பரிமளாவின் உடல் நிலை பற்றி அனைத்தையும் சொல்லி இருந்தார் மருத்துவர்… 

 

சர்வஜித் பரிமளா அட்மிட்டாகி இருந்த அறைக்குள் வர, எஜமானை கண்டு பணிவாக எழுந்த கோமதி, “வணக்கம் ங்க ஐய்யா…” என பவ்வியமாக சொல்லிவிட்டு, அவர்களுக்கு தனிமை கொடுக்க வெளியில் சென்றார்… 

 

எவ்வளவு தான் அழ முடியும்… அழுது சோர்வாகி முடித்தவளுக்கு இரவு சாப்பாடு கொடுத்தார் கோமதி… 

 

அந்த மருத்துவமனையிலேயே சாப்பாட்டிற்கு கேன்டீன் வசதி எல்லாம் இருந்தது… 

 

அதற்கெல்லாம் சர்வஜித் பணம் கொடுத்துவிட்டு தான் சென்றுருந்தான்… 

 

இரவு சாப்பிட்ட பின்னர், சற்று கண்களை மூடி படுத்திருந்தாள்… ஆனால் உறங்கவில்லை! 

 

சர்வஜித்தின் குரல் கேட்டவுடன் அவளை மீறி பயத்தில் கண்கள் விழித்து பார்த்தது… 

 

கோமதி வெளியே சென்ற பின்னர் பரிமளாவை அழுத்தமாக பார்த்தவன், “சூப்பர்… கரு கலைஞ்சு போச்சு… இல்லன்னா அதை வைச்சு என்கிட்ட உரிமை கொண்டாட நினைச்சிருப்ப!” என குத்தலாக சொன்னான்…

 

அதனைக் கேட்டவளுக்கோ, ‘என்ன மனுஷன் இவன்! இவ்வளவு அரக்கனா இவனால எப்படி இருக்க முடியுது’ என நினைத்து நினைத்து நெஞ்சம் வலித்தது… 

 

“உன் ஹாஸ்பிடல் பில் மொத்தம் இருபது ஆயிரம் ரூபாய்… அதையும் உன் கணக்குல சேர்த்தாச்சு” என்றவனோ, வேகமாக வெளியேறி விட்டான்… 

 

அவள் தன்னிடம் இருந்து தப்பிக்க மாட்டாள் என்று அவன் நன்றாக அறிந்ததே! அப்படி ஒரு செக் தானே அவளுக்கு வைத்திருக்கிறான்… 

 

கோமதி அம்மாள் தான் கூடவே இருந்து பார்த்துக் கொண்டார்.. 

 

அவருக்கு அறையில் கூடுதலாக ஒரு பெட்டும் இருக்க, அதில் உறங்கி பார்த்துக் கொண்டார்… 

 

இரண்டு நாட்கள் அப்படியே வெறுமையாய் செல்ல, மூன்றாவது நாள் அவளுக்கு டிஸ்சார்ஜ் சமையம் வந்தான் சர்வஜித்.. 

 

அவளால் நடக்க முடிந்தது… கிளம்பும் முன்னர் மருத்துவர் சர்வஜித்திடம் சில விஷயங்களை பகிர்ந்தார்… 

 

அதில் செவியில் வாங்கியவன், வெறும் தலையசைப்போடு விடைப்பெற்றான்…

 

“அவளை கூட்டிட்டு ஆட்டோல வந்துடுங்க” என கோமதி அம்மாவிடம் சொன்னவனோ, பரிமளாவை அழுத்தமாக பார்த்துவிட்டு தன் காரில் ஏறி சென்றான்… 

 

இருவரும் வீடு சேர்ந்த போது, சர்வஜித் வீட்டிற்குள் தான் இருந்தான்… 

 

வீடு வந்ததும் குளிக்க சென்றாள் பரிமளா… 

 

இரண்டு நாட்கள் குளிக்காமல் உடம்பெல்லாம் கசகசவென இருந்தது அவளுக்கு… 

 

குளித்து முடித்தவளோ சர்வஜித் கொடுத்திருந்த கிழிந்த சேலைகளுள் ஒன்றை அணிந்து வெளியில் வர, கிச்சனில் கோமதி அம்மாள் வேலை பார்த்துக் கொண்டுருந்தார்… 

 

வீட்டில் சர்வஜித் இருக்கும் தடயமே இல்லை.. அதனால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்… 

 

பரிமளைவை கண்டவரோ, “நீ போய் உட்காரு தாயி… நான் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்றார் பாசமாக. 

 

“இல்லைங்க ம்மா… நீங்களும் ரெண்டு நாளா என் கூட சேர்ந்து ஹாஸ்பிடல்ல இருந்தீங்க… நீங்க போய் குளிச்சிட்டு வாங்க… நான் காஃபி போடுறேன்” என விடாது சொல்லி காஃபி போடத் தொடங்கினாள்… 

 

தனக்கான டம்பளரை அவளின் புறம் வைத்தார் கோமதி. 

 

பரிமளா வரும் முன்னர் சர்வஜித் இந்த வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் அவர் தானே சமைப்பார்…

 

அவர் சமைத்ததை எப்போதுமே அவருக்கான தனியான தட்டு மற்றும் தனியான டம்பளரில் சாப்பிடுவார்… 

 

பரிமளாவிற்கு சர்வஜித் அரக்கன் தான்… ராட்சசன் தான்… 

 

ஆனால் கோமதி அம்மாவை பொறுத்த வரை சர்வஜித் நல்ல முதலாளி… கடந்த ஆறு வருடங்களாக அவனிடம் வேலை பார்க்கிறார்… மரியாதையோடு தான் நடத்துவான்… 

 

அவருக்கு காஃபியை கொடுத்துவிட்டு அங்கே நின்றபடியே தானும் பருக, 

 

“ஐய்யாவுக்கு காஃபி போடணும் ம்மா” என அவர் தயங்க, 

 

“நா.. நானே போடறேன்” என மனதில் கடுப்புடன் வெளியே முகத்தை இலகுவாக்கி சொன்னாள்.. 

 

கோமதி அம்மாவை பார்க்கவே அவளுக்கு பாவமாக இருந்தது… 

 

அதனால் அவரை வேலை வாங்க வேண்டாம் என நினைத்தவள் சந்தேகம் வந்தவளாக, “அவர் வீட்டுலயா இருக்காரு” என புரியாமல் கேட்டாள். 

 

“ஆமா ம்மா அவரு ரூமுக்குள்ள இருக்காரு” என சொன்னார்… 

 

‘ஐய்யயோ! அவன் சொல்லாம கிச்சன் பக்கம் வந்து இப்போ காஃபி வேற எடுத்துட்டு போனா கத்துவானே!’ என பயத்தில் நடுங்க ஆரம்பித்தவள், 

 

‘பேசாம அவங்களையே போட சொல்லிடலாம்’ என அவள் கோமதியைத் தேட, அவரோ அவரின் வீட்டிற்கு குளிக்கச் சென்றுருந்தார்…

 

“அச்சோ! போச்சு… இப்போ என்ன பண்றது!” என படபடத்தவள், வேறு வழியின்றி போட்ட காஃபியை அவனின் அறை நோக்கி எடுத்துச் சென்றாள்.. 

 

“உள்ளே வரலாமா” என மனதில் பயத்துடன் வெளியே தயங்கியபடி நின்று அவள் கேட்க, 

 

“உன்னை யாரு எடுத்துட்டு வர சொன்னா இடியட்!” என வல்லென்று விழுந்த சர்வஜித்தோ அவனுக்கு இருந்த தலைவலியில், 

 

“வைச்சிட்டு போ” என விட்டுவிட்டான்.. 

 

சர்வஜித்திற்கும் தலைவலி… அதனால் தான் அவள் கொண்டு வந்ததை வாங்கிக் கொண்டான்… 

 

இல்லையெனில் அவளை இன்னும் வைத்து செய்துருப்பான்…. 

 

அவனிடம் காப்பியை கொடுத்துவிட்டு விறுவிறுவென வெளியே வந்துவிட்டாள் பரிமளா… 

 

‘நல்ல வேளை நான் தான் காஃபி போட்டேன்னு அவருக்கு தெரியல இல்லன்னா அவ்வளவு தான்’ என மனதில் நிம்மதி பெருமூச்சு விட்டபடி சென்றாள்… 

 

அடுத்த ஒரு வாரம் கோமதி தான் கிச்சனின் முழு பொறுப்பையும் செய்தார்… 

 

தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள்ளேயே இருந்தாள் பரிமளா… 

 

இரவு கூட சர்வஜித் அவளை அழைக்கவில்லை… 

 

மனதில் அவன் தன்னை சித்ரவதை செய்யவில்லை என்று நிம்மதி இருந்தாலும் இன்னொரு பக்கம் பயம் மிகுதி அடைந்தது… 

 

ஏன் பதுங்குகிறான் ஒரு வேளை பாய்வதற்காகவோ என அவளுக்கு வயிற்றில் பயப்பந்து உருண்டது… 

 

ஒரு வாரமாக அறைக்குள்ளேயே முடங்கி இருக்கிறாள் பெண்… 

 

ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு பயம்… பயம்… பயம் மட்டுமே…. 

 

அவளின் அறைப்பக்கம் கூட அவன் வரவில்லை… 

 

சாப்பாடும் கோமதி தான் எடுத்து அறைக்கு வந்தார்… 

 

“என்னை கூப்பிடுங்க ம்மா நானே வெளியே வரேன்…” என பயத்துடன் சொன்னாள்… 

 

பின்னே, ‘மகாராணி போல உள்ளே உட்கார்ந்திருக்க’ என்றெல்லாம் வார்த்தை போட்டு இவளை மனதை கிழித்து எடுப்பதில் அவன் கைதேர்ந்த வில்லன் ஆயிற்றே! 

 

“இல்ல தாயி… ஐய்யா தான் உன் கையிலேயே கொடுக்க சொல்லி இருக்காரு” என்றார் பாருங்க… பரிமளா ஆடிப்போய் விட்டாள்… 

 

‘ஒருவேளை என் காதுல தான் தப்பா விழுந்துச்சா’ என படபடத்து யோசித்தவள், 

 

“எ… என்னம்மா சொன்னீங்க?” என்று திணறியபடி கேட்டாள். 

 

“ஐய்யா, உன் கையிலயே சாப்பாடு கொடுக்க சொன்னாரும்மா.. அவர் வார்த்தைய மீறுனா அவருக்கு கோபம் வந்துடும்” என பவ்வியமாக அவர் சொல்ல, 

 

அவர் சொன்னதை கேட்ட பெண்ணவளுக்கு ஒருவேளை இது கனவாக இருக்குமோ என்று தோன்றிய கையோடு தன் கையை கிள்ளிப் பார்த்து மெலிதாக கத்த, 

 

“என்ன பண்ற தாயி?” என புரியாமல் கேட்டார் கோமதி… 

 

“அ… அது ஒன்னும் இல்லங்க ம்மா” என மழுப்பியவள் சாப்பாடை வாங்க, புன்னகை முகத்துடன் வெளியில் சென்றார் கோமதி… 

 

பரிமளாவின் முகத்திலோ மலர்ந்த புன்னகை… 

 

அரக்கனுக்கு தன் மேல் இரக்கம் வந்துவிட்டதா! என நினைத்துக் கொண்டவளுக்கு பேரானந்தம்.. . 

 

அவனை பற்றி தெரிந்தும் இப்படி கற்பனை குதிரை ஓட்டும் பேதை பெண்ணுக்கு தெரியவில்லை இன்னும் இரண்டு நாட்களில் அவளின் மனதை வலிக்க வலிக்க முற்களால் குத்தப் போகிறான் என்று…

 

 

 

 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!