அனல் 7

அவளிடம் பவித்ரா கெட்ட பெண், அவளுக்கு பாவம் பார்த்தால் உன்னையே முழங்கி விடுவாள், அவளுக்கு இடம் கொடுத்தால் உன்னையே உன் இடத்தை விட்டு துரத்தி விடுவாள் என பவித்ராவை பற்றி எத்தனை புகட்டுதல் முத்து மாரிக்கு சொல்லப்பட்டது… 

 

அதனால் தானே அப்படி ஒருத்தி அவளின் வீட்டில் மாடாய் உழைத்தும் முத்துமாரி கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்… 

 

ஆனால் இப்போது தன் வீட்டினரின் பொய்கள் அவளை அலசி ஆராய சொல்லி வலியுறுத்தியது… 

 

அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டு இருக்க, “எங்க தகுதிக்கு பெரிய கோடீஸ்வரங்க அழகான பொண்ணுங்களை வைச்சிட்டு காத்துக்கிட்டு இருந்தாங்க… ஆனா மகேஷ் தான் அவசரப்பட்டுட்டான்” என சலிப்பாக பெருமூச்சுவிட்டார் சகுந்தலா தேவி… 

 

“ஆமா ஆமா… உனக்கு வேற பொண்ணே கிடைக்கலயா மகேஷ்… உன்னால இப்போ உன் தம்பி தான் கஷ்டப்படப்போறான் இந்தப் பொண்ணு பார்க்க எங்க வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கு” என முத்துமாரியை ஏளனமாக பார்த்தபடி சொன்னார் சித்ரா… 

 

அதனைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தார்கள்… முத்துமாரியோ உணர்வின்றி நின்றாள்.. 

 

தன் அக்காவின் வாழ்க்கைக்காக அமைதியாக இருந்தாள்… 

 

“அண்ணி.. அவளுக்கென்ன அவ ரொம்ப அழகா இருக்கா” என பட்டென்று சொன்ன காயத்ரி,  

 

“அவ தான் என்னோட மூனாவது மருமக என் பையன் விஷாக்குக்கு ஏத்த பொண்ணு…” என முத்துமாரியைப் பார்த்து அனைவரின் முன்னர் கர்வமாக சொன்னார் காயத்ரி… 

 

அனைவரின் முன்னர் சித்ராவை திட்ட முடியாது என காயத்ரி இவ்வாறு பேச்சை மாற்றினார்… 

 

பின்னே சகுந்தலா தேவி முன்னே அவரின் மகள் தப்பு செய்தால் கூட அதைத் தட்டிக் கேட்கும் உரிமை அவருக்கு இல்லை… 

 

மனைவியின் நிலை உணர்ந்த சக்கரவர்த்தியும், “ஆமா… இவங்க மூனு பேரும் தான் இனி நம்ம வீட்டு மருமகங்க அப்படி தானே அம்மா” என்றார் சூழ்நிலையை இயல்பாக்கும் பொருட்டு அன்னையை பேச்சிற்குள் இழுத்தார் சக்கரவர்த்தி… 

 

‘நல்ல வேளை இஷாக்குக்கு இந்த பவித்ரா மனைவியா வரப்போறா… இவ பார்க்க நல்லா இருக்கா… இஷாக்குக்கு பொருத்தமா இருப்பா’ என மனதில் நிம்மதி பெருமூச்சு விட்டவர், 

 

“ஆகட்டும்… இவங்க மூனு பேர் ஏதோ பூர்வ ஜென்மத்துல புண்ணியம் செஞ்சிருக்காங்க போல சக்கரவர்த்தி வீட்டுக்கு மருமகளாக” என கர்வமாக சொன்னவர் சொல்ல, 

 

“அத்தை இஷாக்” என மெதுவாக மாமியாரின் காதில் கேட்டார் காயத்ரி.. 

 

“அவன் ஒத்துப்பான்… அவன் என் பேரன்” என பெருமை கலந்த கர்வத்துடன் சொன்ன சகுந்தலா தேவி எழுந்துக் கொள்ள, 

 

கல்யாண விவரத்தைப் பற்றி பேசினார் காயத்ரி… 

 

நாட்கள் கம்மியாக இருப்பதால் நேரடியாக திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என அவர் சொல்லிக் கொண்டு இருக்க, பிரியாவின் அன்னை மற்றும் பாட்டி வாய் முழுக்க பற்கள் தெரிய புன்னகைத்தபடி கேட்டுக் கொண்டு இருந்தார்கள்… 

 

பவித்ராவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது… அந்த வீட்டில் இருந்து தப்பித்தோம் என்கிற நிம்மதி பெருமூச்சு வந்தது… 

 

திருமணத்தில் நாட்டம் அவளுக்கு இல்லை தான்… ஆனாலும் ஏதோ சிறையில் இருந்து விடுபடுவது போல அவளுக்குள் ஒருவித நிம்மதி உணர்வு… 

 

தன் அறைக்கு அன்னையை இழுத்து வந்த விசித்திரா அவரின் காதில் சில விஷயத்தை ஓத, அது அப்படியே பாட்டியின் காதிற்கும் சென்றது… 

 

முதலில் அவர் ஒத்துக்கொள்ளவே இல்லை… ஆனால் அவரையே ஒத்துக்கொள்ள வைத்து விட்டார்கள் சித்ரா மற்றும் விசித்திரா.. 

 

அன்று மதியம் பிரியாவின் மொத்த குடும்பத்திற்குமே விருந்து வைத்தாரு காயத்ரி… 

 

ஏனோ அதில் கலந்து கொள்ள விரும்பாத முத்துமாரி தனக்கு வேலை இருப்பதாய் சென்றுவிட்டாள்… 

 

அவளுக்கு சும்மாவே இந்த கல்யாணத்தில் விருப்பம் கிடையாது… இதில் தன் உருவத்தை மட்டம் தட்டி பேசியவரின் வீட்டில் மருமகளாக வருவது அவளுக்கு எப்படி பிடிக்கும்… 

 

வேலையை சாக்காக சொல்லி கிளம்பி விட்டாள்.. மனம் எல்லாம் கனத்தது… தனக்கு மட்டும் இந்த கல்யாணம் நிற்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறா என்கிற ரீதியில் யோசிக்கத் தொடங்கினாள்…

 

முத்துமாரியின் உணர்வுகள் அவளின் அன்னைக்கு புரிந்தாலும் கோடீஸ்வர சம்மந்தம் என வாயை அடக்க, மணிக்கு தான் சுருக்கென்று இருந்தது.. 

 

இன்று வீட்டிற்கு சென்று மனைவியிடம் கத்தியாவது தன் கோபத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவர் நினைத்து இருக்க, மகேஷின் முகம் சோர்வாக இருந்ததை கவனித்த சக்கரவர்த்தி மனைவியின் காதில், 

 

“கல்யாணத்துக்கு தான் நீ விஷாக்கோட சம்மந்தத்தை கேட்கல… அந்தப் பொண்ணு முத்துமாரியை” என அவர் ஆரம்பிக்கும் போதே, 

 

“முதல்ல பிடிக்கலன்னாலும் அவனுக்கு அவளை போகப் போகப் பிடிக்கும்… நல்ல லட்சணமான பொண்ணு தான் அவ… என்ன மத்த ரெண்டு பொண்ணுங்க அளவுக்கு இல்ல” என்றார் மெதுவாக…. 

 

மனைவியின் கூற்றில் உள்ள அர்த்தத்தை உணர்ந்தார் சக்கரவர்த்தி… 

 

ஆம், விஷாக் பிடிக்கவில்லை என்றாலும் தன் அன்னையின் வார்த்தைக்கு மரியாதை கொடுப்பான் என்கிற நம்பிக்கை பெற்றொர்களுக்கு இருக்கிறது… 

 

ஆனால் அவர்களுக்குத் தெரியவில்லை அவன் தன் இணையை வெறுத்து ஒதுக்கப் போகிறான் என்று… 

 

இஷாக்கிற்கு ஏற்றபோல பவித்ரா இருக்கிறாள் என்பதை உணர்ந்த காயத்ரி, ‘கல்யாணத்துக்கு அப்புறமாவது அவன் சந்தோஷமா இருக்கணும்… அவனுக்கு எங்களை தான் பிடிக்காது… ஆனா அவன் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்கணும் அது போதும் எங்களுக்கு’ என மனதிற்குள் இஷாக்கிற்காக வேண்டினார் காயத்ரி… 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!