அனல் 6

அதற்காக அவன் பிரியாவை வெறுக்கவில்லை… ஆனாலும் அவனுக்கு இந்த கோபம் மட்டுப்பட சில நாட்கள் தேவைப்படுகிறது… 

 

மூன்று பெண்களுக்கும் மூன்று விதமான நிலை… பிரியாவிற்கு மகேஷின் செயலில் குழப்பம், பவித்ராவிற்கு பயம் முத்துமாரிக்கு கோபம் கலந்த பிடித்தமின்மை… 

 

மகேஷின் கார் அந்தப் பெரிய மாளிகையில் நின்றது… 

 

அதற்குள் இரத்த பரிசோதனை விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட, அவர்களுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு… 

 

விசித்திரா கடும் கோபத்தில் இருப்பதால் அவள் யாரிடமும் பேசவில்லை… சித்ராவோ அப்படி என்ன தன் மகளை விட பேரழகி வரப் போகிறாள் என எளக்காரமாக காத்துக் கொண்டு இருந்தார்… 

 

வீட்டில் சகுந்தலா தேவி, காயத்ரி மற்றும் சக்கரவர்த்தி இருக்க… 

 

விஷாக் ஆபிஸிற்கு சென்று இருந்தான்… காயத்ரி எவ்வளவு சொல்லியும் அவன் கோபத்துக் கொண்டு கேட்காது சென்று விட்டான்… தன் விருப்பத்தை மதிக்காமல் திருமணம் செய்து வைக்கும் இடத்தில் என்ன நடந்தால் எனக்கென்ன என்பது போல் அவன் கிளம்பிவிட்டான்… 

 

இஷாக்கோ சொல்லவே வேண்டாம்.. அவனுக்கு ஜோசியர் சொன்னவரை தானே தெரியும்… மகேஷ் காதலித்த விஷயம் அவன் திருமணம் செய்த விஷயம் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் என அவனுக்கு ஒன்றும் தெரியாதே… 

 

காலையிலேயே யாரிடமும் சொல்லாமல் அவன் படத்தின் வேலைக்காக சென்று விட்டுருந்தான்… அதனால் வீட்டில் நடந்துக்கொண்டிருந்த கூத்து எல்லாம் அவனுக்கு தெரிந்துருக்க வாய்ப்பில்லை…

 

மகேஷின் விலை உயர்ந்த கார் அந்த பெரிய பங்களாவின் முன் நின்றது… 

 

சிவகாமி பாட்டி மற்றும் மீனாட்சி அந்தப் பெரிய மாளிகையை வாயடைத்துப் பார்க்க, மணிக்கோ இந்த சம்மந்தம் தங்களின் தன்மானத்தை விலை பேசுமா என்கிற பயம் படற ஆரம்பித்தது… 

 

மகேஷின் பின்னால் அனைவரும் செல்ல, அவர்களை வரவேற்றது அந்தப் பெரிய வீட்டு வரவேற்பு அறை. 

 

“வாங்க” என காயத்ரி இன்முகத்துடன் வரவேற்க, சக்கரவர்த்தி மென் புன்னகையுடன் ஒரு தலையசைப்பு என்றால் பாட்டியோ அவர்களைக் கண்டு இறுக்கமான முகத்துடன் அமர்ந்து இருந்தார்… 

 

பின்னே அவர்களின் தோற்றமே ஏழ்மையைக் காட்டியதே… அதுப்போக அவர் கண்ணில் முதலில் விழுந்தது முத்து மாரி தான்… 

 

First impression is the best impression என்று சொல்வார்களே… இவரோ முத்துமாரியை முதலில் பார்த்து பிரியா மற்றும் பவித்ராவை காணும் முன்னமே இந்த குடும்பத்தின் மீது அபிப்ராயம் அபிமானம் இல்லாமல் போனது… 

 

சித்ராவின் கண்களிலும் முத்து மாரி தான் முழுதாக இருந்தாள்… அப்படி ஒரு எளக்கார பார்வை அவருள்… 

 

முத்துமாரி மங்கிய நிறம் தான்… சற்று சதைப்பற்று உள்ளவள் தான்… ஆனால் லட்சணமாக இருப்பாள்… 

 

இவர்கள் கண்ணுக்கு அவள் வெள்ளை மேனி இல்லாமல் போக, அவளை ஏதோ அற்ப புளு போல பார்த்துக் கொண்டு இருந்தார் சித்ரா மற்றும் விசித்திரா… 

 

ஆம், இவர்கள் வந்த விஷயம் தெரிந்து தன் அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தாள் விசித்திரா… 

 

முத்துமாரியைக் கண்டு, ‘இந்த மூஞ்சை மருமகளாக்க தான் இவ்வளவு ஆட்டமா’ என வன்மமாக நினைத்துக்கொண்டே இருந்தவளின் கண்கள் பிரியா மற்றும் பவித்ராவை அளவிட்டது… 

 

மகேஷ் பிரியாவை அறிமுகப்படுத்தியதில் புரிந்துக் கொண்டார்கள்… 

 

காயத்ரி மட்டுமே அவர்களுடன் இன்முகத்துடன் பேசிக் கொண்டு இருக்க சக்கரவர்த்தி க்கு கூட இவர்களுடன் சமூகமாக பேச சில மணி நேரங்கள் தேவைப்பட்டது… 

 

அதற்காக அவர் இவர்களை மட்டம் தட்டவில்லை… 

 

பிரியாவின் வீட்டில் அவளின் அன்னை மற்றும் பாட்டி இவர்களை பார்த்து கூழைக் கும்பிடு போட மணிக்கும் மகள்களின் வாழ்க்கைக்காக அப்படி போட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது…. 

 

“இவ என்னோட இரண்டாவது பொண்ணு முத்துமாரி… இவ என் புருஷனோட தம்பி பொண்ணு எங்க பொண்ணு மாதிரி தான் இவளையும் பாக்குறோம்” என்றாள் மீனாட்சி அப்பட்டமாக… 

 

இது இப்படித் தான் நடக்கும் இப்படித் தான் செய்வார்கள் என பிரியாவின் பேச்சிலேயே புரிந்துக் கொண்ட பவித்ராவிற்கு மீனாட்சியின் இந்தப் பேச்சு எல்லாம் பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை… இன்னும் சொல்லப் போனால் அவளுக்கு வேடிக்கையாக இருந்தது… 

 

ஆணால் அங்கு உறைந்து இருந்தது என்னவோ முத்துமாரி தான்… ஆம், சகுந்தலா தேவியின் கர்வ தோற்றம், சக்கரவர்த்தியின் ஒட்டாத தன்மை, சித்ரா மற்றும் விசித்திராவின் ஏளன மார்வை தன் மேல் விழுகிறது என்பதை எல்லாம் அவர்களின் முக பாவனையிலும் பார்வை வீச்சிலும் புரிந்துக் கொண்டவளுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாக கூட தெரியவில்லை… 

 

ஆனால் இப்போது தன் அன்னை பவித்ராவை தன் மகளைப் போல நடத்துகிறேன் என்று சொன்ன பொய் அவளை உறைய வைத்தது… 

 

தன் அம்மா ஏன் இவ்வாறு பொய் சொல்கிறார் என அவளுக்கு புரிந்தது… 

 

ஆனால் அந்த பொய்யை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… 

 

“ஆமா… எனக்கு முத்து போல தான் பவித்ராவும்” என்றாள் பிரியா பாருங்க… ஆடிப்போய் விட்டாள் முத்துமாரி… 

 

“என் மூனு பேத்திகளும் எனக்கு உயிர் மாதிரி” என அடுத்து சிவகாமி சொல்ல, 

 

பணம் மற்றும் சூழ்நிலை மனிதர்களை எப்படி எல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை தன் கண் முன்னே தன் குடும்பத்தினரை பார்த்துத் தெரிந்துக் கொண்டாள் முத்துமாரி… 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!