தீ 4

எப்படியோ ஒரு மணி நேரத்திற்குள் சமையலை அடித்து பிடித்து செய்து முடித்தாள்… 

 

ஒரு மணி நேரமாக அவளுக்குள் எத்தனை பயம், படபடப்பு, பதற்றம் சூழ்ந்தது என அவளுக்கு மட்டுமே தெரியும்.. 

 

இன்னும் சொல்லப் போனால் பதற்றத்தில் அவளுக்கு இதயம் தடதடத்து, தலையெல்லாம் சுற்றியது… 

 

ஆனாலும் அவனிடம் இன்று தண்டனை வாங்க அவளுக்கு இதற்கு மேல் உடலிலும் மனதிலும் தெம்பு இல்லை… 

 

சாப்பாடு மேஜையில் அனைத்தையும் வேகமாக அடிக்கி வைத்தவள், நேரத்தை பார்த்து மூச்சு வாங்க அவனை அழைக்க சென்றாள்… 

 

“ச…சார்… சாப்பாடு ரெடி” என தத்து தடுமாறி மூச்சு வாங்க அழைத்தாள்… 

 

தன் லேப்டாப்பில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டுருந்தவனோ, பரிமளா அழைத்த நொடி தன் கைக் கடிகாரத்தை பார்க்க, அவன் சொன்ன ஒரு மணி நேரம் முடிய இன்னும் மூன்று நிமிடங்கள் இருந்தது… 

 

“என்ன லட்சணத்துல சமைச்சு வைச்சிருக்கன்னு பார்க்குறேன்… சாப்பாடு மட்டும் நல்லா இல்லன்னா உன் மூஞ்சில தான் விட்டு எறிவேன்” என அதட்டலுடன் சொல்லியபடி அவன் எழ, 

 

‘ஐய்யோ இது வேறயா… முதல் தடவை சமைச்சிருக்கேன்… டேஸ்ட் கூட பண்ணலையே!’ என மனதிற்குள் தன்னையே கடிந்தவள், பயத்துடன் தான் பரிமாற ஆரம்பித்தாள்… 

 

இறுக்கத்துடன் வந்து அமர்ந்தவன் சாப்பிட ஆரம்பிக்க, ‘முருகா என்னைக் காப்பாத்து’ என்று கடவுளிடம் தீவிரதாக வேண்டிக் கொண்டுருந்தாள் பரிமளா… 

 

அவளின் வேண்டுதலை முருகர் கேட்டு விட்டார் போலும்… 

 

சாப்பிட்டுக் கொண்டுருந்தவன் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்து எழுந்து, “இப்போ எஸ்கேப் ஆயிட்ட!” என முறைத்தவனோ, “நீ கிச்சன்ல தான் சாப்பிடணும்… பத்தே நிமிஷத்துல சாப்பிட்டு முடிச்சிட்டு என் ஆபிஸ் ரூம்க்கு வரணும்” என கட்டளையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டிருந்தான்… 

 

‘இவன் மட்டும் இத்துநூண்டு பொங்கலையே பொறுமையா உட்கார்ந்து இருபது நிமிஷமா சாப்பிட்டான்… நான் லாம் சட்டி சட்டியா சாப்பிடுற ஆளு… பத்து நிமிஷத்துல பத்து வாய் கூட சாப்பிட முடியாது… சரியான பத்து நிமிஷத்துக்கு பொறந்தவன்’ என மனதில் அவனை ஏத்து விட்டாலும் அவனின் மீதுள்ள பயத்தில், 

 

கிச்சனிற்குள் சென்று பத்து நிமிஷத்தில் வேகமாக எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும் சாப்பிட்டு வயிறு நிரம்பாமல், கடுப்பாக அவனின் அலுவல் அறை நோக்கி சென்றவள், 

 

“சார்… கூப்பிட்டீங்க” என இழுக்க, 

 

அவளை புருவத்தை உயர்த்தி பார்த்தவனோ, “இவ்வளவு பெரிய பூசணிக்காய் மாதிரி இருக்குற நீ வந்தது எனக்கு தெரியாதா என்ன!” என நக்கல் கலந்த எரிச்சலில் கேட்க, பரிமளாவிற்கு கடுப்பு மேலோங்கியது… 

 

பெண்களுக்குள் சற்று பூசினாற் போன்று தான் இருப்பாள் பரிமளா அதற்காக குண்டாக இருக்க மாட்டாள்… அவளின் அங்க வளைவுகள் கச்சிதமாக இருந்தாலும், அவள் பென்சில் சைஸ் இடுப்புக்காரி அல்லவே! 

 

ஆனாலும் அவளால் அவனை எதிர்த்து ஒரு  கேள்வி கேட்க முடியுமா என்ன? அவளால் அவனை பார்த்து ஒரு முறைப்பை கூட தர முடியாது தானே… அதனால் அமைதியாக தலை குனிந்தாள்…

 

சர்வஜித்தோ,”பொங்கல் மொத்தத்தையும் காலி பண்ணி முடிச்சிருப்பியே!” என எளக்காரமாக கேட்டான்… 

 

அதனைக் கேட்டவளுக்கோ சுர்ரென்று வந்தது.. 

 

‘கிராதகா! நீ கொடுத்த அந்த பத்து நிமிஷத்துல வழிச்சு சாப்பிடுறது தான் குறைச்சல்’  என மனதில் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது… 

 

தன் பற்களால் உதட்டைக் கடித்து, ‘வாய் பேசி அவன் கிட்ட மர்கையா ஆகாத’ என மனதை கட்டுப்படுத்தியவள், 

 

“மி… மிச்சம் இருக்கு சார்” என்றாள் பம்மின குரலில்… 

 

“அந்த மிச்சத்தை பிரிட்ஜ்ல தூக்கி வைச்சிடு… நாளைக்கு காலையில அது தான் உனக்கு பிரேக்பாஸ்ட்” என்றான் பாருங்க… ஆடிப்போய் விட்டாள் பரிமளா… 

 

“என் வீட்டு வேலையாட்கள், ஏன் நான் வளக்குற நாய்க்கு கூட நான் பழைய சாப்பாடு கொடுக்குறது இல்ல. ஆனா நீ!” என அழுத்தமாக நிறுத்தி இடைவெளி விட்டவன்,” அஃப்டர் ஆல் பணத்துக்காக உடம்பை வித்து படுத்தவ தானே! உனக்கு பழைய சாப்பாடு போதும்” என்று அவளின் மனதை குத்தி காயப்படுத்தினான். 

 

அவன் தன்னை கட்டளை பிறப்பிக்காத சமயத்தில் கிச்சனிற்குள் சென்று மிச்ச பொங்கலை வேகமாக சாப்பிட்டு முடிப்பது தான் அவளின் பிளான்… 

 

அதில் மண்ணை அள்ளிப் போட்டதோடு, மிச்சத்தை நாளைக்கு சாப்பிட சொல்கிறானே என்பதை தாண்டி அவன் சொன்ன அந்த கொடூரமான வார்த்தைகள் பரிமளாவின் மனதை ஆணி வைத்து குத்தி கிழித்தது போன்ற உணர்வு… 

 

கண்களில் கண்ணீர் குபு குபுவென சூழ்ந்து அவளின் கன்னத்தை நிரப்பியது…

 

இருந்தாலும் அவளால் அவனின் தகாத வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…

 

“நா… நான் ஒன்னும் உங்க கிட்ட படுத்து பணம் சம்பாதிக்கல சா… சார்… என் உடம்பை கொடுத்தது நான் இல்ல நீ…நீங்க தான் கேட்டீங்க” என்று அழுகையுடன் அவள் திக்கித் திணறி சொல்ல, 

 

“அப்போ எவன் கூப்பிட்டாலும் படுக்க போயிடுவ அதானே சொல்ல வர” என நாக்கில் விஷத்தை வைத்து அவன் ஏளனமாக சொன்ன விதத்தில், கூனிக் குறுகித் தான் போனாள் பரிமளா… 

 

“நீ பணத்துக்காக படுக்கல டி… நீ படுத்ததே அந்த பணத்துக்காக தான்… உன் அப்பா அம்மா உன்னை பணத்துக்காக என்கூட படுக்க அனுப்பி இருக்காங்க… எப்பேர்ப்பட்ட குடும்பத்துல பிறந்தவ நீ…” என தாடையை தடவி குத்தலாக சொன்னவனோ, 

 

“என் கிட்ட கேள்வி கேட்குற அளவுக்கு நீ உத்தமி இல்ல…” என கர்ஜித்தபடி எழுந்தவன் அவளை நோக்கி வர, ‘என்ன செய்ய போகிறானோ’ என்கிற பயத்தில் பெண்ணவளின் இதயம் வேகமாக தடதடத்தது… 

 

அவளை நெருங்கியவனோ அவளின் கைகளை இறுக்கி,”அஃப்டரால் பணத்துக்காக உடம்ப வித்த பொம்பளைங்க நீ… நீயெல்லாம் டி கிரேட் பிசினஸ் மேன் சர்வஜித்தை கேள்வி கேட்குறியா” என அவளின் பின்னத்தலையை கொத்தாக பிடித்தவன், 

 

“இனி ஒரு தடவை உன் வாயில இருந்து ஏதாவது கேள்வி வரட்டும்… உன் அப்பனையும், ஆத்தாளையும் சந்தி சிரிக்குற போல செஞ்சிடுறேன்” என அவளிடம் ரௌத்திரமாக சொன்னவன், அவளை அதே வேகத்தில் விடுவித்தான்… 

 

பரிமளாவிற்கு தான் தலையெல்லாம் அப்படி வலித்தது… முடியை கொத்தாக இறுக்கி பிடித்தால் யாருக்கு தான் வலிக்காமல் இருக்கும்! 

 

கோபத்தில் தலையைக் கோதியவனோ,”உடம்பை காட்டி என்னை எப்படியாவது மயக்கிடலாம்னு நினைக்காத…  கொன்னுடுவேன்!” என மிரட்டியவனின் ஃபோன் ஒலிர அதை எடுத்துப் பார்த்தவனின் முகம் கோபத்தை கைவிட்டது… 

 

“சொல்லு ஹனி” என இலகுவாக மாறியவனின் த்தொனி பரிமளாவிற்கு அத்தனை அதிர்ச்சி… 

 

“கல்யாணத்துக்கு டிரெஸ் எடுக்கணும் அத்தான்” என செல்லமாக மறுப்பக்கம் அவள் கட்டளையிட, 

 

“எடுத்துடலாம் ஹனி… நாளைக்கு போலாம்” என இன்முகத்துடன் சொன்ன சர்வஜித்தை வெறுமையாக பார்த்துக் கொண்டு இருந்தாள் பரிமளா… 

 

“ஓகே அத்தான்… நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன்” என மறுப்பக்கம் அவள் ஏக்கமாக சொல்ல, 

 

“நாளைக்கு கண்டிப்பா வரேன் ஹனி… நம்ம கல்யாணத்துக்கு டிரெஸ் எடுப்போம்” என உறுதியாக சொன்னவன் கால்லை அணைத்து விட, அவனுக்கு இன்னொரு ஃபோன் காலும் வந்தது… 

 

அதை எடுத்தபடியே வெளியில் செல்ல எத்தனித்தவன் பரிமளாவை பார்த்து, “மதியானம் ரெண்டு மணிக்கு சிக்கன் குழம்பு, சிக்கன் கிரேவி, சிக்கன் 65 செஞ்சு வைச்சிருக்கணும்” என விரலை அவளின் முன்னே திமிராக சுடக்கிட்டு கட்டளை இட்டவன், “எஸ் அருண்” என ஃபோனில் பேசியபடியே வெளியே விரைந்தான்… 

 

அவன் சென்று கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் ஆனது… ஆனால் பரிமளா இன்னும் சிலையை போல் தான் நகராது உறைந்து நின்றிருந்தாள்… 

 

‘உடம்புக்கு நான் ஒருத்தி… உரிமைக்கு ஒரு பொண்டாட்டி இன்னொருத்தி.. என்னை இவ்வளவு அசிங்கமா பேசுறான்… முதல்ல இவன் ஒரு யோக்கியனா?’ என மனதில் பொங்கியவளோ இப்போது தன் எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து, அடுத்த பிரச்சனையை நினைத்து பயந்தாள்… 

 

ஆம், பரிமளாவிற்கு சமையல் வராதது தான் நமக்கு தெரியுமே… இப்போது அதையும் தாண்டி முக்கியமான ஒன்று, பரிமளா அசைவம் சாப்பிட மாட்டாள்… 

 

சிறிய வயதில் இருந்தே ஏனோ அவளுக்கு பிடிப்பதில்லை… 

 

இப்போது அதை சமைக்க சொன்னால் அவளின் மனநிலை எப்படி இருக்கும்? 

 

குமட்டிக் கொண்டு வந்தது… 

 

அசைவ உணவு பிரியர்களுக்கு எப்படி சிக்கன், மட்டன் எல்லாம் சொர்க்கமோ, அசைவத்தை முழுதாக வெறுப்பவர்களுக்கு அதை சமைக்க சொன்னால் குமட்டிக் கொண்டு தானே வரும்… 

 

அதே நிலை தான் இங்கு பரிமளாவிற்கு… 

 

“அவன் சிக்கன் செய்ன்னு சொல்லிட்டு சிக்கனை கொடுக்காம தானே போனான்… அவன் வந்ததும் இதையே சாக்கா சொல்லிடுவோம்” என அவள் மனதில் லேசான திருப்தியுடன் இருக்க, 

 

சில நொடிகளில் கடையில் வாங்கிய கோழியுடன் கதவைத் தட்டினார் அந்த வேலையாள் பெண்மணி… 

 

கதவைத் திறந்தவளோ அவரைக் கண்டு, ‘அப்பாடி வந்துட்டாங்க… தனியா இந்த வீட்டுல இருக்கவே பேய் பங்களா போல இருக்கு’ என மனதில் நிம்மதி பெருமூச்சுடன் அவரை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் பரிமளா… 

 

“அது… ஐய்யா உன் கிட்ட இதை தர சொன்னாரு தாயி” என ஒரு பெரிய கவரை நீட்ட, 

 

என்னவோ இருக்கும் என நினைத்தபடி அவள் அதை வாங்கி திறந்து பார்க்க, அவள் தலைச் சுற்றி விழாத குறை தான்… 

 

கூடவே தொண்டையில் இருந்து வாந்தி எழும்புவது போன்ற உணர்வு… வயிற்றில் இருந்து பிறட்டிக் கொண்டு வந்தது… 

 

ஏனெனில் கடையில் இருந்து ஃபிரெஷ்ஷாக வாங்கிய கோழி கறி அது.. 

 

அந்தப் பெண்மணியோ சர்வஜித்தின் கட்டளைப்படி அதன் பின் ஒரு வார்த்தை பேசாது கிளம்பியே விட்டார்… 

 

கறியின் நாற்றம் அவளுக்கு வாந்தியைக் கிளப்ப வாயை மூடி பாத்ரூம் நோக்கி ஓடியவள் கறிக் கவரை சாப்பாடு மேஜை மீது வைத்துவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி பாத்ரூமிற்குள் சென்று வாந்தி எடுத்தாள்… 

 

சாப்பிட்ட கொஞ்ச பொங்கலும் வெளியே வந்திருந்தது… 

 

அப்படியே கண்களில் கண்ணீரும்… அவள் இங்கு வந்து முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை… 

 

ஆனால் ஒரு யுகம் போல ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனதில் பயம், பதற்றம், படபடப்பு, கவலை எல்லாம் தான் சுழ்ந்து இருக்கிறது… 

 

ஆனாலும் இப்படி பயத்தில் உடைந்து உட்கார்ந்தால் அந்த ராட்சசன் அவளை சும்மா விடுவானா! 

 

தன் வாயை சுத்தம் செய்து முகத்தை கழுவியவள், தன் சேலை முந்தானை வைத்து அதை துடைத்து தளர்ந்த நடையுடன் ஹால் நோக்கி சென்றாள்… 

 

தன் செல்லை எடுத்து அவன் சொன்ன ஐட்டங்களின் ரெசிபியை பார்க்கத் தொடங்கினாள் பரிமளா….

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!