தீ 6

அத்தியாயம் 6

 

‘எது எப்படியோ சிக்கன் சமைக்குறதுல இருந்து நம்ம இன்னிக்கு எஸ்கேப் ஆயிட்டோம்…’ என நிம்மதி பெருமூச்சு விட்டவள், அடுப்பில் பால் சட்டியை வைத்து காய்ச்சாத பாலை ஊத்தி கொதிக்க வைத்தாள்…

 

அப்படியே அவளின் மனதும் அவனை நினைத்து கோபத்தில் கொதித்தது! 

 

அதே கறுப்பு சட்டையில் தான் இருந்தாள்..’ ‘இதை முதல்ல மாத்தணும்’ என அடுப்பை அணைத்தவள், அவளுக்கான அறைக்கு சென்று தான் கொண்டு வந்த ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துக்கொண்டாள்… 

 

அதன் பின்னர் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது… பால்லை காய்ச்சியவள் அவனுக்கு எடுத்துச் செல்ல மனதிற்குள் ஒரு பதற்றம்… 

 

இந்த பதற்றம் மற்றும் படபடப்பு அவன் இப்படித் தான் என நன்கு அறிந்த பின்னரும் கூட ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் அவளுக்கு தோன்றுகிறதே! 

 

அவனின் அறைக் கதவை மெதுவாக திறந்துவிட்டு உள்ளே சென்றவளிடம், “திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையுற போல நீ பாட்டுக்கு வர… என் ரூமுக்குள்ள என் பொண்டாட்டியை தவிர யார் வந்தாலும் உள்ளே அனுமதி கேட்டு தான் வரணும்” என்று அழுத்தமாக சொன்னவனோ, 

 

“உன்னை மாதிரி வேசி எல்லாம் என் கிட்ட ரொம்ப மரியாதையா அனுமதி கேட்டு தான் வரணும்” என்று அழுத்தி சொன்னவனை வெறுமையாக பார்த்த பரிமளா, 

 

“இனி பெர்மிஷன் கேட்டு வரேன் சார்” என அவன் புறம் வந்தவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், 

 

“அந்த டிரெஸை நான் கழட்ட சொல்லவே இல்லயே” என அவள் நீட்டிய பால்லை வாங்காது கோபத்தில் கத்தினான். 

 

‘அதெல்லாம் ஒரு டிரெஸ்ஸா டா.. மனசாட்சியே இல்லாம பேசுறான்’ என மனதில் கடுகடுத்தவளோ, 

 

“அது வ.. ந்து அந்த டிரெஸ் கம்ஃப்போர்ட்டா இல்ல சார்” என அவள் தயங்கி இழுக்க அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், 

 

அவளிடம் பால் கிளாஸை வாங்கிய அடுத்த நொடியே அவளின் சுடிதாரில் சுடச் சுடச் பால்லை கட்டினான் அரக்கத்னமாக…

 

அதைச் சற்றும் எதிர்ப்பாராத பெண்ணவள் துடி துடித்துப் போனாள்…

 

அவளின் வலியை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாதவன், “இப்போ அந்த சட்டையைப் போட்டுட்டு வா… அப்படியே தரையை கிளீன் பண்ணிட்டு.. எனக்கு ஃபிரெஷ்ஷா பால் எடுத்துட்டு வா” என அவன் கட்டளையிட, வலியில் கண்ணீரில் தத்தளித்த பெண்ணோ, தம்பளரை வாங்கிவிட்டு வேகமாக கீழே ஓடினாள்…

 

தனக்கான அறைக்குள் வந்து பாத்ரூமில் தன் உடலில் தண்ணீர் ஊற்றிய பின்னர் தான் அவளுக்கு ஏதோ தேவலையாக இருந்தது… 

 

ஆனாலும் சற்று நேரத்தில் அந்த இடமே எரிய ஆரம்பித்தது… 

 

அவள் சற்று கனமான சுடிதார் அணிந்திருந்தால் உடலில் அந்தளவு நேரடியாக படவில்லை… 

 

இல்லையெனில் அந்த இடமே சிவந்து கன்னிப் போயிருக்கும்… 

 

ஆனாலும் அவளுக்கு ரொம்பவே வலித்தது… 

 

“இவன் எல்லாம் மனுஷனே கிடையாது… ராட்சசன், அரக்கன், டிராகன், டிராகுளா” என அவனின் மீதுள்ள கோபத்தில் கத்தியவள், 

 

“இப்போ உடனே போகலன்னா அதுக்கும் கத்துவான் அந்த மனசாட்சி இல்லாதவன்” என அழுதவள், தன் சல்வாரை கழட்டி ஹாங்கரில் போட்டுவிட்டு, அறைக்குள் வந்து அந்த சட்டையை அணிந்து விட்டு மீண்டும் பால்லை தயார் செய்தாள்… 

 

இம்முறை அறைக்குள் நுழையும் முன், “உள்ளே வரலாமா சார்” என கதவைத் தட்டி அனுமதி கிடைத்த பின்னர் தான் உள்ளே வந்தாள்… 

 

அவனிடம் பாலைக் கொடுத்தவள், கீழே கொட்டியிருந்த பாலை சுத்தம் செய்ய முனைந்தாள்… 

 

அவளின் வாடிய முகத்தை கண்டவனோ அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், அவள் அணிந்திருந்த உடையை தான் அளவெடுப்பது போல் பார்த்தான்… 

 

அதிலும் ஈரத் துணியை வைத்து குனிந்து பாலை சுத்தம் செய்ய திணறிக் கொண்டிருந்தாள் பரிமளா… 

 

ஆம், அவள் தரையில் எப்படி குனிந்தாலும் அவளின் உடை நன்றாக மேலே ஏறி ஆணவனுக்கு விருந்தளிக்குமே! 

 

அவளின் தயக்கத்தை கண்டவனோ, “கிளின் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்க!” என பாலைப் பருகியபடி சுள்ளென்று விழுந்தான். 

 

“சா… சார் அது வந்து” என அவள் திணற, 

 

“உன் உடம்பை நான் முழுசா பார்த்தாச்சு… என்னமோ கை படாத பத்தினி போல சீன் போடுற… சீக்கிரம் வேலையை முடி டி” என அவன் கர்ஜிக்க,

 

அவ்வளவு தான்… பயத்தில் குனிந்தவள் சட்டை மேலே ஏறுவதை எல்லாம் வேறு வழியின்றி சட்டை செய்யாது சுத்தம் செய்தாள்…

 

என்ன தான் அவளின் உடலை முழுவதும் கண்டவன் ஆனாலும், ஒவ்வொரு முறையும் அவளை காணும் போது அவனுக்குள் காம போதை ஏறுகிறது.. 

 

அதை மேலும் தூண்டும் விதமாய் அல்லவா இருந்தது அவள் அணிந்திருந்த சட்டை… 

 

அவளின் முன்னழகும், பின்னழகும் அவனுக்கு விருந்தாய் காட்சியளிக்க தன் வாய்க்குள், “செக்ஸ்ஸி பிட்ச்” என அவளின் காதுபடவே முணுமுணுத்தவனின் சொற்கள், பரிமளாவிற்கு பீதியை கிளப்பியது… 

 

அவளுக்கு தான் உடலும், மனமும் ரொம்பவே சோர்ந்து விட்டதே! 

 

அதில் அவளின் கைகள் தளர, “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே தரையை துடைச்சிட்டு இருக்க போற… முடிச்சுட்டு வா…” என கத்தினான்… 

 

எல்லாவற்றையும் முடித்து வந்தவளை வெறியோடு ஆட்கொண்டு முடித்தவன் மீண்டும் அவளை வன்மையாய் நாட, 

 

“ப்… ப்ளிஸ் சார் உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது” என வலி தாங்காமல் கெஞ்சினாள் பரிமளா. 

 

“என் கூட படுக்க உனக்கு கசக்குதா டி” என அவளின் தாடையை இறுக்கமாக பிடித்தவன், “உன்னை போல ஆளுங்களுக்கு எல்லாம் ஒருத்தனே தினமும்னா போரடிச்சிடும்” என கேவலமாக சொன்னவனின் வார்த்தைகள் என்னும் விஷத்தில் உருக்குலைந்தவள், 

 

“உங்களுக்கு தோணுனதை பண்ணுங்க” என மன வலியில் துடிதுடித்து சொன்னாள்… 

 

உடல் வலியை விட மன வலியின் வேதனை அதிகமாயிற்றே! 

 

“சோ யூ நீட் செக்ஸ்… என் கூட படுக்க உனக்கு அவ்வளவு ஆசைல…” என எளக்காரமாக அவளின் உதட்டை தன் விரலால் பிடித்து நசுக்கியவன், 

 

“எனக்கு நீ போர் அடிச்சிட்டா… உன்னை குப்பைத் தொட்டியில தூக்கி போட்டுடுவேன்…” என சத்தமாக சிரித்தவனொ, நேரத்தை வீணடிக்காமல் அவளின் மீது படர்ந்தான்… 

 

தன் தேவைகளை அவளிடம் தீர்த்து முடித்தவன், “கீழே போய் படு” என கட்டளையிட்டான்… 

 

அவளால் எழக் கூட முடியவில்லை… ஆனாலும் கஷ்டப்பட்டு எழுந்து கீழே சென்று படுத்தாள்… 

 

உடல் சோர்வில் அவளின் கண்கள் தானாக மூடியது… 

 

அடுத்த ஒரு வாரமும் அப்படியே தான் சென்றது… அவளின் நல்ல நேரம் அவளுக்கு சமையலின் கைப்பக்குவம் நன்றாக வருகிறது… 

 

தினமும் அவனின் காமப்பசிக்கு இரையாகிறாள் பரிமளா.. 

 

அவன் கொடுக்கும் கிழிஞ்ச சேலைகளை தான் அணிகிறாள்…

 

அவன் இப்படி தான் என்று அவள் அறிந்தாலும், ஒவ்வொரு முறையும் அவளிடம் வன்மையாக பேசும் பொழுதும், நடந்துக் கொள்ளும் பொழுதும் அவளின் மனது வெம்பி துடிக்கிறது… 

 

அதன் பின்னர் அவளிடம் அசைவ உணவுகளை அவன் சமைக்க தரவில்லை என்பதைத் தாண்டி, அதில் அவள் மறுபடியும் மயங்கி விழுந்து அவளை பேணிகாக்க அவனுக்கு விருப்பமில்லை… 

 

அதே போல மிச்ச மீதி சாப்பாடை அவளை சாப்பிட வைப்பதிலும் அவனின் மனம் அதே தீர்மானத்துடன் தான் இருந்தது… 

 

இப்படியே அவளின் நாட்கள் அங்கு நரகமாக செல்லுகையில் தான் பரிமளா கருவுற்றாள்… 

 

ஆம், எந்தவொரு பாதுகாப்பு முறையும் பின்பற்றாமல் தானே சர்வஜித் அவளை ஆட்கொள்கிறான்…

 

எப்போதுமே சரியாக வரும் மாதவிடாய் இரண்டு நாட்கள் தள்ளி சென்றுருக்க, இது கண்டிப்பாக பிள்ளையாக தான் இருக்கும் என உணர்ந்தவளுக்கு மனமெங்கும் வலி… 

 

ஆனாலும் அதை உறுதிப்படுத்த நினைத்தாள்.. 

 

அந்த வீட்டிற்கு வந்த பின்னர் ஓரிரு முறை அந்த வேலையாள் அம்மாவை பார்த்திருந்தாள் பரிமளா… அவரிடம் பிரெக்நென்சி கிட் வாங்கி வர சொல்லலாமா என்று யோசித்தவளுக்கோ பயம்… 

 

விஷயம் சர்வஜித்திற்கு தெரிந்து விடுமோ என்று… 

 

ஆனாலும் அவளின் மனதில், ‘ஒருவேளை நான் பிரெக்நென்ட் ஆனதை சொல்லிட்டா அவனுக்கு நான் போர் அடிக்க கூட வாய்ப்பு இருக்கே’ என நினைத்தாளே தவிர, அவன் கருவை கலைக்க சொல்லுவான் என அவளின் மனம் எண்ணாது விட்டதின் காரணம் ஏனோ! 

 

இதுவரை பின் கதவை திறந்து அவள் சென்றதில்லை… ஆனால் அந்த வேலையாள் பெண்மணி பின் கதவைத் திறந்து பக்கத்தில் இருக்கும் குடிசைக்கு சென்றதை ஏற்கனவே ஒரு முறை கொண்டிருந்தாள் தான்… 

 

சர்வஜித்தும் அப்போது வெளியில் சென்றிருந்தான்… 

 

அதனால் தைரியத்தை வரவழைத்து அவரின் குடிசையை நோக்கி சென்றவள், “அம்மா! கொஞ்சம் வெளியே வரீங்களா” என கதவைத் தட்ட, 

 

கதவைத் திறந்து வேகமாக வெளியே வந்தவர், “சொல்லு தாயி ஏதாவது வேணுங்களா” என சர்வஜித்தை நினைத்து பயத்துடன் கேட்டார் அந்த வேலையாள் கோமதி. 

 

“ஆமாங்க ம்மா” என தன் கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்தவள், 

 

“மெடிக்கல் கடையில எனக்கு வீட்டுலயே செக் பண்ணுற பிரெக்நென்சி கிட் வாங்கிட்டு வரீங்களா” என கெஞ்சுதலாக கேட்க, 

 

உடனே அவளின் கழுத்தை தான் பார்த்தார் அவர்… அதில் தாலி இல்லை என்பதை உணர்ந்தவரோ, 

 

‘எல்லாம் கலிகாலம்’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவரோ, வேறு வழியின்றி சரி என்றார்… 

 

“பணம் என் கிட்டயே இருக்குதுங்க ம்மா” என்றார்… 

 

“பரவாயில்லைங்க ம்மா வெச்சிக்கோங்க..” என கையில் திணித்தவள், “கொஞ்சம் சீக்கிரம் வாங்கிட்டு வரீங்களா” என கேட்க, 

 

“இதோ கிளம்புறேன் ம்மா” என்றவரோ, கிளம்ப ஆயத்தமானார்… 

 

அடுத்த அரை மணி நேரத்தில் அவளிடம் கிட்டை கொடுத்திருந்தார் கோமதி. 

 

அதை வாங்கியவளோ வேகமாக பாத்ரூமிற்குள் சென்றாள்… 

 

மனமெல்லாம் பதற்றம் கலந்த படபடப்பு… 

 

எப்படியோ பரிசோசித்து முடித்தாள்… அதில் இரண்டு கோட்டை கண்டவளின் மனமோ அதிர்ச்சியில் உறைந்தது… ஆனாலும் மனதில் மெல்லிய நிம்மதி… இவ்விஷயம் தெரிந்தால் தன்னை அவன் விட்டுவிடுவான் என்று… 

 

ஆனாலும் இருபது வயதில் தன் வயிற்றில் கரு… அதுவும் திருமணம் ஆகாமல் வந்த கரு… இதனை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை… 

 

சில நொடிகள் அப்படியே சிலையாய் உறைந்து நின்றவள் தன்னை சமாதானம் செய்ய தொடங்கினாள்… 

 

‘நீ பிரெக்நென்ட்ன்னு தெரிஞ்ச அப்புறம் அந்த ராட்சசனுக்கு நீ போர் அடிச்சிடுவ… உன்னை வெளியே அனுப்பிடுவான்’ என்கிற நம்பிக்கையில் பெருமூச்சுவிட்டவளோ, சோப்பு போட்டு தன் கைகளை கழுவ அது நழுவி கீழே விழுந்தது… 

 

சுற்றி எங்கும் தேடியவளின் கண்களில் சோப் விழாது இருக்க, அவளின் கால்களின் பக்கத்தில் தன் சேலையால் அது மறைந்திருந்ததை கண்டறிய முடியவில்லை… 

 

“சோப்பு எங்க போச்சு!” என சோர்வாக முணுமுணுத்தபடி அடுத்த எட்டு வைத்தவளோ அவள் அறியாமல் சோப்பில் கால் வைத்து தடுக்கி வழுக்கி அலறிக்கொண்டு தரையில் விழுந்து விட்டாள்… 

 

அவளின் நல்ல நேரம் அவளின் தலை தரையில் படுவதற்குள் கையை ஊன்றி தடுத்தாள்… 

 

ஆனால்…

 

 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!