துருவம் 1

துருவம் 1

வரலட்சுமி விலாஸ், ரேஸ் கோர்ஸ் காலனி கோயம்புத்தூர்.. 

 

அது ஒரு முன் இரவு பொழுது.. 

 

வீட்டில் சமையலுக்கு ஆட்கள் இருந்தாலும் தன் கணவனுக்கு தானே சமைத்து கொடுக்க வேண்டும் என விரும்புபவள் பவித்ரா. 

 

என்ன தான் அவளுக்கும் அவளின் கணவன் விஜயக்கும் பெரிதாக ஒட்டுதல் இல்லை என்றாலும் இன்றைய நாள் வரையில் கூட அவள் அவளின் கணவனை உயிராக நேசிக்குறாள். 

 

பவித்ரா, இவளின் சொந்த ஊர் ஊட்டி. அவளின் அண்ணன் அஷ்வின் குமார் டாக்டர் படிப்பு படிக்க கோயம்புத்தூர் வந்துருக்க அப்படியே மொத்த குடும்பமும் இங்கே குடிபெயர்ந்தது… 

 

பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இருக்கிறாள்… படித்து முடித்தவுடன் ஒரு ஐடி கம்பெனியில் அவளுக்கு வேலையும் கிடைத்தது.. 

 

சில வருடங்கள் சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டுருந்தவளுக்கு ஒரு நாள் வீட்டிலிருந்து கால் வந்தது..

 

அடித்தது அவளின் தந்தை தான்.. 

 

“பவாம்மா.. இந்த வார கடைசி நம்ம ஊருக்கு வரியா!” என்றவர் பாசமாக கேட்க, 

 

“ஏன் ப்பா ஏதாவது விஷேமமா?” என புரியாமல் கேட்டாள் மகள்… 

 

“நீ வா கண்ணு.. நான் சொல்றேன்..” என்றவரோ மேலும் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து இருக்க, அவளின் அன்னைக்கு கால் செய்து கேட்டால் அவருமே எதுவும் சொல்லவில்லை.

 

அடுத்து அண்ணனுக்கு அடித்து கேட்கலாம் என்று அவளால் இலகுவாக அவளின் அண்ணனுக்கு கால் செய்து பேச முடியாது. 

 

ஏனெனில் அவளின் அண்ணன் இந்தியாவிலேயே சிறந்த கார்ட்டியாலஜிஸ்ட். 

 

இப்போது அவன் ஆப்ரேஷனில் இருக்கலாம், மருத்துவர்கள் கலந்துரையாடலில் இருக்கலாம் அல்லது டெல்லி, பாம்பே என எங்காவது ஸ்பெஷல் சர்ஜரியில் இருக்கலாம். 

 

இப்படி இந்தியா முழுவதும் சுற்றுபவன் தான். 

 

வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் அதில் பெரிதாக நாட்டம் இல்லாதவன்.. 

 

யாரிடமும் சிரித்து பேச மாட்டான். இன்னும் சொல்லப் போனால் அவன் ரொம்ப பேசவே மாட்டான். சட்டென்று கோபம் வராது. அப்படி வந்துவிட்டால் அது எதிராளிக்கு தான் பெரும் ஆபத்து… 

 

அவனை சீண்டும் வரை அமைதியாக இருப்பான். அவனை ஏதாவது மனரீதியாக பிறர் சீண்டிவிட்டால் அந்த வலியை அவர்களுக்கே திருப்பி தருவான். 

 

இதுவரை அவன் வாழ்க்கையில் அவன் படிக்கும் பொழுது மாணவர்கள் சண்டை,கல்லூரியில் இவன் மீது பொறாமை என்று சிலர் இவனை டார்க்கெட் செய்ய அவர்களை அலற அலற ஓடவிட்டு வந்தவன் தான் அஷ்வின் கிருஷ்ணா. 

 

அதன் பின்னர் அவனின் வாழ்க்கையில் அவனை மனரீதியாக யாரும் சீண்டவில்லை.

 

அதே போல இவனின் தந்தையை யாராவது அவமானப்படுத்தினால் அவர்களை சும்மா விட மாட்டான்.. சில வருடங்கள் முன்னர் உறவினர் ஒருவர் மணியை சொந்தங்கள் முன்னர் அவமானப்படுத்த அவரை அந்த நொடியே அனைவரின் முன் அவமானப்படுத்திவிட்டான் அஷ்வின். குடும்பத்தினர் எவ்வளவு தடுத்தும் அவனை கட்டுப்படுத்தமுடியவில்லை.. 

 

இது தான் அஷ்வின் கிருஷ்ணா.. 

 

ஆறடியில் ஆண்மையின் இலக்கணமாய் கட்டுக் கோப்பான உடலுடன் ஆணழகனாக இருப்பான். சிவந்த நிறத்தில் ஸ்டைலிஷ் லுக்குடன் பெண்களின் மனதை கவரும் ஹேன்ட்சம் வகையில் இருப்பான்..

 

அதிலும் சில பெண்கள் வெளிப்படையாகவே, “அஷ்வின் யு லுக் மேன்லி & ஹாட்” என்றே ஓப்பனா பேசியிருக்கிறார்கள். 

 

ஆம், மருத்துவர்கள் கலந்தாய்வு வரும் பொழுது இந்தியாவில் இருந்து பெரிய பெரிய மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வருவார்கள்..

 

அதில் பல இளவயது மருத்துவர்கள் இவனைக் கண்டு அழகில் மயங்கினார்கள் என்றால் சிலர் வெளிப்படையாகவே அவனிடம் வந்து, “யூ லுக் சோ ஹாட் வை கான்ட் வீ டேட்” என்று கூட கேட்டுருக்கிறார்கள். 

 

ஆனால் அவன் அந்த ரகம் இல்லை.. ஒருத்தியைக் காதலித்து அவளையே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் கொண்டவன். 

 

அதனால் முகத்தில் அடித்தாற் போல, “நோ” என சொல்லிவிட்டு வந்துவிடுவான். 

 

இப்படி கறாராக இருக்கும் இவனின் மனதையும் ஒரு பெண் கவர்ந்து விட்டாள். 

 

தன்னை தந்தை ஊருக்கு அழைத்ததும் அண்ணாவிடம் பேச எண்ணி பவித்ரா அழைத்தது ராகினியைத் தான்.

 

ராகினி மணியின் தங்கை மகள். இப்போது அஷ்வினுக்கு பேர்ஸ்னல் பிஏவாக இருக்கிறாள். 

 

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக அஷ்வின் மீது அவளுக்கு வெறித்தனமான காதல். 

 

“அஷ்வின் மாமா.. அஷ்வின் மாமா” என கல்லூரி காலத்தில் இருந்தே அவனின் பின்னாடி சுற்றுகிறாள். 

 

அவர்களின் காதல் கதை பெரிதெல்லாம் இல்லை… 

 

ஐந்து வருடங்கள் முன்னர் பாவடை தாவணியில், “அஷ்வின் மாமா… ஐ லவ் யு” என்று வந்து நின்றவளிடம் என்ன சொல்வது என புரியாது பார்த்தான் அஷ்வின். 

 

அப்போது ராகினிக்கு வயது இருபத்தி ஒன்று தான்.. ராகினியின் அண்ணன் திருமணத்தின் சமயம் அது. 

 

தன் அண்ணனின் திருமணத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பிறகு அஷ்வினை சந்திக்குறாள். ராகினியின் சொந்த ஊர் மதுரை. 

 

மண் மனம் மாறாமல் நல்ல கிராமத்து சாயலில் இருக்கும் அழகி அவள். நிறம் சற்று கம்மி என்றாலும் மிகவும் களையான முகம் கொண்டவள் தான்.

 

அஷ்வினிடம் ஒரு பெரிய தப்பான குணம் இருக்கு.. He is Prejudiced (தன்னுடைய முன்அனுபவங்களில் பிறரை மதிப்பிடுவது).. 

 

அதாவது ஒருவரை பணத்தை வைத்து, அவர்களின் உடை பழக்கம் வைத்து தான் அவர்களையே எடை போடுவான். 

 

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
2 Comments
error: Content copy warning!!