துருவம் 2

துருவம் 2

தற்போது அஷ்வின் கிருஷ்ணா அப்பர் மிடிஸ் கிளாஸ் வர்க்கம்… 

 

ஆனால் முன்னாடி எல்லாம் அவர்கள் ஏழை தான்.. அவனின் பள்ளி வாழ்க்கையில் பணம் படைத்தவர்கள் இவனிடம் ஏழ்மையை காரணம் காட்டி மட்டம் தட்டி இருக்கிறார்கள்.

 

இதோ போல சில சந்தர்ப்பங்கள் அவனை அவ்வாறு உணர வைக்க பணக்காரர்களும், பந்தா காட்டும் ஆண்களும், நவநாகரீகமாக உடை அணியும் பெண்களும் அவனுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது…

 

அஷ்வின் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது அவனுடைய கல்லூரி வகுப்பு பெண் தான்… பெரிய பணக்காரி, நவநாகரிக மங்கை… ஒரு நாள் போதை பழக்கத்தில் தாளாளரிடம் மாட்டிவிட்டாள். 

 

அதே மாதிரி இன்னும் சில நவநாகரீக பெண்கள் அவனது பார்வையில் தப்பானவர்களாக பட, நகநாகரீக பெண்கள் எல்லாம் அப்படித் தான் என்று முடிவே செய்துவிட்டான். 

 

அவனின் வீட்டிலும் அவனின் தங்கை பவித்ரா சுடிதார், சேலை தாண்டி எதையும் அணியமாட்டாள்.. 

 

சுருங்க சொல்ல வேண்டும் என்றால் அவர்களின் மொத்த குடும்பமே ஆர்த்தோடக்ஸ் (Orthodox) வகை குடும்பம் தான். 

 

எப்போதுமே இந்த சட்டம், கட்டுப்பாடு எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானே! அஷ்வின் ஸ்டைலாக தானே டிரெஸ் செய்கிறான்.. அவனிடம் காரணம் கேட்டால் தன் அனுபவத்தில் ஸ்டைலாக உடைகள் அணியும் ஆண்கள் பெண்கள் அளவுக்கு தவறானர்கள் இல்லை என வாதாடுவான்.. ஆனால் அவனின் கணிப்புகள் எல்லாம் அவனுள் மட்டுமே இருந்தது.. யாரிடமும் அவன் திணித்ததில்லை.. 

 

அவனின் இந்த தவறான புரிதலை அவன் எப்போது புரிந்து கொள்வானோ! 

 

இப்போது அந்த மனப்பான்மையை வைத்து அவன் ராகினியின் காதலை ஒப்புக்கொண்டான்.. ஆம், ராகினி தாவணி, சுடிதார், சேலை மட்டுமே அணியும் ரகம்… ஏழைப் பெண்! அவனுடைய வருங்கால மனைவி இப்படித் தான் இருக்க வேண்டும் என அவன் நினைக்கும் செக்லிஸ்ட்டில் எல்லாம் ராகினி டிக்காகி விட அவளுக்கு அப்போதைக்கு பதில் சொல்லாதவன், 

 

அவனின் தந்தையிடம் இதைப் பற்றி சொன்னான். 

 

“ராகினி உன் முறைப் பொண்ணு தானேப்பா.. என்னிக்கு இருந்தாலும் அவ நம்ம வீட்டுக்கு வரப்போறவ தான்” என்றிட, சாரதாவுக்கு தான் இதில் பெரிதாக நாட்டம் இல்லை. 

 

ஆனாலும் மகனுக்கு பிடித்துருந்தால் சரி என்று விட்டுவிட்டார். 

 

அஷ்வின் ஒன்றும் அப்படியே அவளிடம் ஆத்மார்த்தமான காதலனாக இல்லை.. 

 

“எனக்கு ஊர் சுத்துறது, கதை அடிக்குறது, கடலை போடறது எல்லாம் சுத்தமா பிடிக்காது.. உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஓகே.. மத்தபடி லவ் எல்லாம் இல்ல” என அவன் கறாராக சொல்ல, 

 

“நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதே போதும் மாமா” என அப்போதைக்கு அவனின் ஆண்மை அழகில் சொக்கித் தான் போனாள் ராகினி. 

 

அவள் படித்து முடித்த பின்னர் கையோடு அஷ்வின்க்கு பிஏ ஆகி விட்டாள். அது ஒரு பெரிய கதை! அவனை சம்மதிக்க வைப்பதற்குள் அவள் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டாள். 

 

எல்லாம் ராகினியின் அம்மாவின் ஏற்பாடு தான்..

 

கடந்த ஒரு வருடம் அஷ்வினின் பிஏவான ராகினிக்கு அன்று கால் செய்து அழைத்த பவித்ரா, “அண்ணா கிட்ட பேசணும் ராகினி.. அவர் பிஸியா” என ராகினி கேட்க, 

 

“மாமா.. டெல்லி போயிருக்காரு பவித்ரா. ஒரு வாரம் ஏதோ ரெண்டு மூனு முக்கியமான அப்ரேஷனாம். என்னையே பேச வேண்டாம்னு சொல்லிட்டாரு. அவருக்கு வர அப்பாயின்மெண்ட் கால்ஸ் மட்டும் தான் அவர் டேட் பார்த்துட்டு புக் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள். 

 

அடுத்த நான்கு நாட்கள் அஷ்வினிடம் பேச முடியாமல் கோயம்புத்தூர் சென்றிருந்த பவித்ராவை பெண் பார்க்க வந்திருந்தார்கள் டி கிரேட் இந்திரஜித் குடும்பம். 

 

அவ்வளவு தான்… பெரிய அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள் பவித்ரா. 

 

ஆம், விஜய்க்கு பெண் கேட்டு விசாலாட்சி மற்றும் சுந்தரம் வரலட்சுமி தம்பதியினர் வந்திருந்தார்கள்… 

 

வேதாச்சலம் மற்றும் லட்சுமிக்கு எத்தனை நம்பிக்கையுடைய நபர் என்று தெரிந்த பின்னர் தான் விசாலாட்சி தன் மகனுக்கு பெண் கேட்க வந்தார். அதிலும் மணி லட்சுமி பாட்டியின் தூரத்து சொந்தம்… 

 

இப்படியிருக்கையிலும் மணி தயங்கத் தான் செய்தார். சாரதாவிற்கோ பெரும் சந்தோஷம். 

 

“உங்க வசதி எங்க நாங்க எங்க.. இது சரி வராது ங்க” என மணி மறுக்க, அப்போவே அமேரிக்காவில் இருக்கும் தன் மாமியாரிற்கு கால் செய்து மணியிடம் பேச வைத்தார் லட்சுமி பாட்டி.

 

அதன் பின்னர் மணியால் மறுக்க முடியுமா என்ன! மகனிடம் சம்மதம் கேட்காமலேயே அவர்களுக்கு சம்மதம் சொல்லியிருக்க, 

 

“அப்போ இன்னிக்கு பூ வைச்சிடலாம்.. வர வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் வைச்சிக்கலாம்” என்றார் விசாலாட்சி. 

 

எதற்கு இந்த அவசரம் என பவித்ராவிற்கு தோன்றியது.. 

 

அதையும் தாண்டி இன்னும் அவள் மாப்பிள்ளையை பார்க்க கூட இல்லை. மாப்பிள்ளையும் தன்னை பார்க்கவில்லை. 

 

பிறகு எப்படி என்று அவள் சிந்திக்க சாரதாவோ, “அடுத்த வாரமே நிச்சயம் வைக்கணுமா!” என தயக்கத்துடன் இழுக்க, 

 

“ஆமாங்க.. அடுத்த மாசம் விஜய்க்கு முப்பது வயசு ஆகப் போகுது. அவன் ஜாதகத்துல அதுக்குள்ள அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க” என்கிற உண்மையைத் தான் சொன்னார். 

 

“அது இருக்கட்டும் ங்க.. இன்னும் பையன் எங்க பொண்ணை பாக்கல.. அவருக்கு பொண்ணை பிடிக்கணும்ங்கலே” என அவர் யோசனையுடன் சொல்ல, 

 

“நீங்க சொல்ற பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்குறேன்னு என் பையன் என்கிட்ட தீர்மானமா சொல்லிட்டான்..” என விசாலாட்சி புன்னகை சிந்த, 

 

“ஆமா.. உங்க பொண்ணு பவித்ராவை எங்க விஜய்க்கு எப்படி பிடிக்காம போகும்.. நல்ல லட்சணமா இருக்கா பொண்ணு” என்றார் வரலட்சுமி. 

 

அதன் பின்னர் அவர்கள் பூ வைத்து சென்றுவிட்டுருக்க, பவித்ராவுக்கு ஏனோ முழு திருப்தி இல்லை.. ஆனால் அவள் அதை அப்போதே வீட்டினரிடம் சொல்லியிருக்கலாம். 

 

“நல்ல குடும்பம்.. பெரிய குடும்பம்.. நல்ல மாப்பிள்ளை வரன்” என தாய் பேசியதில் மனம் சிதறியவள், 

 

‘அப்பா அம்மா சொன்னா சரியாத் தான் இருக்கும்’ என விட்டுவிட்டாள். 

 

அன்று அஷ்வினுக்கு தெரிந்திருந்தால் அவன் அதை கண்டிப்பா தடுத்து நிறுத்தியிருப்பான்.. 

 

அதனின் விளைவு வருங்காலத்தில் இரண்டு பெண்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகப் போவதை யாராலும் தடுக்க முடியாமல் போனது… 

 

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
2 Comments
error: Content copy warning!!