துருவம் 3

துருவம் 3

விஜய் வீட்டில் பூ வைத்து விட்டு சென்ற அடுத்த இரண்டாவது நாள் அஷ்வின் தன்னுடைய வீட்டிற்கு கால் செய்தான். 

 

அழைப்பை எடுத்த மணி பக்கத்தில் மனைவி இருப்பதால் ஸ்பீக்கரில் போட, 

 

“அஷ்வின்.. டெல்லில வேலை எல்லாம் முடிஞ்சுதா ப்பா.. ராகினி சொல்லுச்சு” என்றவரிடம், 

 

“எஸ் ப்பா.. முடிஞ்சுது.. ராகினி எப்போ ஃபோன் பண்ணா” என யோசனையுடன் கேட்டான். 

 

“ராகினி ஃபோன் பண்ணல ப்பா.. நம்ம பவாம்மா தான் ராகினிக்கு கால் பண்ணிருக்கா” என்றவர் விஷயத்தைச் சொல்ல, 

 

“வாட்.. என்னப்பா சொல்றீங்க! என்கேஜ்மென்ட் டேட்டை ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா.. என் கிட்ட கேட்காம நீங்க எப்படி டிசைட் பண்ணலாம்” என கடுப்பாக பேசியவனிடம், 

 

“பவித்ராக்கு எது நல்லதுனு எங்களுக்கு தெரியாதா அஷ்வின்” என ஆதங்கத்துடன் கேட்டார் அன்னை. 

 

“ம்மா.. அவங்க எவ்வளவு பெரிய கோடீஸ்வரங்க.. அதெல்லாம் நமக்கு செட் ஆகாது” என்றான் தீர்மானமாக. 

 

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ப்பா அவங்க நல்ல மாதிரி தான்” என்ற தந்தையிடம், 

 

“இல்ல ப்பா.. இதை உடனே நிறுத்துங்க” என அஷ்வின் பெற்றவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, 

 

“நீ ராகினியை கல்யாணம் பண்ணிக்க போறதும் தான் எனக்கு பெருசா விருப்பம் இல்ல.. உன் கல்யாணத்துக்கு நீ எப்படி உன் இஷ்டப்படி இருந்தியோ… அதே போல தான் பவித்ரா.. அவளுக்கு இந்த வரன் பிடிச்சு இருக்கு அஷ்வின்.. நீ இதுல தலையிட்டு கெடுத்துறாத” என்றார் சாரதா கெஞ்சுதலாக. 

 

“நான் என் தங்கச்சி வாழ்க்கையை கெடுப்பேனா ம்மா.. என்ன வார்த்தை பேசுறீங்க?” என எகிறினான் மகன். 

 

“அஷ்வின் நீயே மாசத்துக்கு பல லட்சம் சம்பாதிக்குறியே ப்பா.. அவங்க பரம்பரை கோடீஸ்வராங்கன்னா, நீ உன் படிப்பால மேல உயர்ந்து பெரிய இடத்துல இருக்க.. எல்லாம் சரியா வரும் ப்பா” என்றார் மணி நம்பிக்கையுடன். 

 

“இந்த சம்மந்தத்தை என்கிட்ட கேட்காம..” என்று விடாமல் அஷ்வின் பெற்றவர்களுக்கு மீண்டும் அழுத்தத்தைக் கொடுக்க, 

 

“போதும் அஷ்வின். இதுக்கு மேல இந்த கல்யாணத்தை நிறுத்துறதை பத்தி நீ பேசுனேனா.. உனக்கு எங்க மேல பாசம், அக்கறை எதுவுமே இல்ல” என சாரதா கரகரத்த குரலில் சொல்ல, அதற்கு மேல் அந்த சூழ்நிலை தாயின் வார்த்தைகள் அஷ்வினைத் தலையிட விடாமல் கட்டிப்போட்டது. 

 

அடுத்த நொடியே அவன் அழைத்தது ராகினிக்குத் தான். 

 

அஷ்வினுடைய மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் அவளுக்கான பிஏ அறையில் அமர்ந்து இருந்த ராகினியோ, “இந்த அஷ்வின் மாமாக்கு வாக்கப்பட என்னென்ன குரங்காட்டம் போடவேண்டியதா இருக்கு.. காலேஜ் முடிச்சிட்டு சொகுசா வீட்டுல இருக்க நினைச்சேனே! டாக்டர் மாப்பிள்ளையை கட்டிக்கிட்டா நம்ம சொகுசா வீட்டுலயே இருக்கலாம்னு நினைச்சேனே! அழகா ராசா கணக்கா இருக்குற மாமனை காதலிச்சா கண்ணே மணியே தேனேனு கொஞ்சுவாருன்னு நினைச்சேனே! எதுவுமே நடக்காம இப்படி தினமும் ஹாஸ்பத்திரியில உட்கார வைச்சிட்டியே ஆண்டவா” என ராகினி புலம்பியபடியே நொந்துக் கொண்டு இருக்கும் பொழுது தான், 

 

“இங்க என்ன சத்தம்?” என கேட்டபடி உள்ளே நுழைந்தான் மகேஷ்.

 

“வாயா மருந்து.. தினமும் நீ சாப்பாடு சாப்பிடுறியோ இல்லயோ என்ன என்ன மருந்து ஸ்டாக்ல இருக்குனு லிஸ்ட் கொடுக்க வந்துடுவியே” என நொடித்துக் கொண்டவள் அதை வாங்கிவிட்டு அந்தப் பக்கம் , 

 

“உங்களுக்கு என்ன மேடம்.. நீங்க தான் இந்த ஹாஸ்பிடலோட வருங்கால அதிபதி.. ஜாலியா லைஃப்ப என்ஜாய் பண்ணுங்க மேடம்” என புன்னகைத்தபடியே அவளிடம் விடைப்பெற்று சென்றான் மகேஷ். 

 

மகேஷ், அஷ்வின் கிருஷ்ணாவின் AK Multispeciality Hospital இல் அவனின் சொந்த மருந்தகத்தை வைத்துருக்குறான்… 

 

ராகினி அஷ்வினை நினைத்து புலம்பிக் கொண்டுருக்கையில் அவனே அவளுக்கு கால் செய்துருக்க, “என்னதிது மாமா அவர் பேர்ஸ்னல் நம்பர்ல இருந்து கால் பண்றாரு.. எப்போவுமே அவரோட டாக்டர் நம்பர்ல இருந்து தான் பண்ணுவாரு.மொத முறை எனக்கு அவர் பேர்ஸ்னல் நம்பர்ல இருந்து வருதே.. ஐய்யோ! பெருமாளே எனக்கு வெக்கம் வெக்கமா வருதே..” என ஆசையுடன் துள்ளிக்குதித்தவள் ஃபோனை எடுத்து, 

 

“மாமா” என ஆசையாக ஆரம்பித்தவளிடம், 

 

“நான் கான்ஃபரன்ஸ் போயிருக்கன்னு உன்கிட்ட வீட்டூல இன்ஃபார்ம் பண்ண சொன்னேன் ராகினி” என அவன் அழுத்தத்துடன் ஆரம்பிக்க, 

 

“ஆமா மாமா.. நான் அப்புறம் வேலையில மறந்துட்டேனா.. ஆனா பாருங்க சரியா நம்ம பவித்ரா கால் பண்ணினா.. அவ கிட்ட சொல்லிட்டேன் மாமா” என்றாள் சிரித்த முகத்தோடு. 

 

அதுவே அஷ்வினுக்கு கடுப்பு தான் வந்தது..ஆனாலும் அதை அவன் விட்டுத்தொலைத்தான். 

 

“பவித்ரா உன் கிட்ட கால் பண்ணி என்கிட்ட பேசணும்னு சொல்லிருக்கா.. நீ ஏன் அதைப் பத்தி என்கிட்ட சொல்லல” என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான். 

 

“நீங்க தானே மாமா நானா கால் பண்ணக் கூடாதுன்னு சொன்னீங்க” என்றவள் அவசரமாக சொல்ல, 

 

“நம்ம வீட்டுல இருக்குறவங்க பேசணும்னு சொன்னா அது முக்கியமான விஷயமா இருக்கும்னு யோசிக்க மாட்டியா ராகினி… நான் உனக்கு தினமும் கால் பண்ணி அப்டேட் கேப்பேனே அப்போ கூட உனக்கு இதை சொல்லணும்னு தோணலயா” என்றவன் கோபத்தில் எகிற, 

 

“சாரி மாமா.. இனி சொல்லிடுறேன்” என்றாள் பயந்து பவ்வியமாக. 

 

“டேய் அஷ்வினு ராகினியை விடுப்பா.. அவளை திட்டாத” என ரொம்ப நேரமாக கெஞ்சிக் கொண்டுருந்த தந்தைக்காக தான் அவன் இவ்வளாவது போறுமை காத்தான்.. 

 

தந்தை வேறு அவனிடம் விடாது கெஞ்ச, அதற்கு மேல் அவனின் மனது கேட்காமல் அழைப்பை துண்டித்துவிட்டான். 

 

இது தான் அஷ்வினுக்கும் ராகினிக்கும் உள்ள பந்தம்.. 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
2 Comments
error: Content copy warning!!