துருவம் 8

துருவம் 8

துருவம் 8

 

அன்று இரவு விஜய் வீட்டிற்கு வரும் போதே, வீடே கோலாகலமாக இருந்தது.. 

 

வண்ண விளக்குகளுடன், பலூன் மற்றும் கலர் காகிதங்களுடன் வீடெங்கும் விழா மயமாக இருக்க, அதையெல்லாம் கூர்ந்து கவனித்தவன் முன்னே, 

 

“ஹாப்பி வெட்டிங் அனீவர்சரி அண்ணா” என்றபடி பவித்ராவை இழுத்துக்கொண்டு அண்ணன் முன் நிறுத்தினாள் அனன்யா. 

 

அவளுடன் சேர்ந்து வீட்டில் இருந்த அனைவரும் அவனுக்கு வாழ்த்து சொல்ல, அனைவரிடமும் நன்றி சொன்ன விஜய்யின் கண்கள் மனைவியைத் தான் ஆராய்ந்தது.. 

 

சேலை கட்டியிருந்தாள்.. எப்போதும் போல அவனின் கண்களுக்கு அவள் பெரிய அழகியாக எல்லாம் தெரியவில்லை.. ஆனாலும் கல்யாணமாகியும் அவள் தன்னை அவளிடம் நெருங்க விடாது இருப்பது அவனுக்கு கடும் கோபத்தைத் தான் கொடுத்தது.. 

 

அவளிடம் முகத்தை திருப்பிக் கொண்டவனின் செயல் அங்கிருந்த அனைவருக்கும் ஒருமாதிரியாகி விட்டுருந்தாலும், பவித்ராவோ இதெல்லாம் பழகிப் போன ஒன்று போல் உணர்வின்றி நின்றுருந்தாள்.. 

 

அங்கிருந்த அசாத்திய அமைதியை உடைத்த அனன்யோ, “அப்புறம் அண்ணா.. இன்னிக்கு என்ன ஸ்பெஷல்” என பேச்சை ஆரம்பிக்க, 

 

“ஸ்பெஷல்ன்னு சொல்லிக்க இது பெரிய ஸ்பெஷல் டே லாம் இல்லயே” என வேண்டும் என்றே அலட்சியமாக சொன்னான்.. பவித்ராவின் மனதை தாக்க நினைத்தவன் அதில் வெற்றியும் கண்டு விட்டுருந்தான்… 

 

ஆம், அவளின் முகம் சுருங்கிப் போனது.. இதெல்லாம் கவனித்த விசாலாட்சிக்குத் தான் மனதே பாரமானது. 

 

அச்சூழலை மாற்ற, “என்ன ஸ்பெஷல் இல்லயா.. வித விதமா சாப்பாடு செஞ்சி..” என அவர் ஆரம்பிக்க, 

 

“ஆமா.. அத்தை சமைச்சு வைச்சிருக்காங்க” என்றாள் பவித்ரா பட்டென்று. 

 

‘ஐய்யயோ! இது உலகப்போரை விட பெரிய போரா இருக்கும் போலயே’ என அனன்யாவிற்கு தான் சலிப்பாக இருந்தது. 

 

“இந்த அண்ணியும் ஏன் தான் இப்படி முரண்டு பிடிக்குறாங்களோ” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள் அனன்யா. 

 

பவித்ரா அப்படி சொல்லும் போதே விஜய்க்குத் தெரிந்தது.. அது கண்டிப்பாக அவள் சமைத்தது தான் என்று! 

 

அவனுக்கோ பேசாமல் சாப்பிடாமல் சென்றுவிட்டால் தான் என்னவென்று தோன்றியது. அத்தனை ஆத்திரம் அவளின் மீது… 

 

ஆனாலும் பரிதவிப்புடன் நின்றுக்கொண்டுருந்த அன்னையைப் பார்த்தவன் அவரைக் காயப்படுத்த விரும்பாமல் எப்போதும் போல் இரவு நேரமும் குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு உறங்கி விட்டான். 

 

எப்போதுமே இரவு நேரத்தில் பவித்ரா அறைக்குள் வரும் முன் உறங்கி விடுவது விஜய்க்கு வழக்கம்… 

 

இப்படியே இவர்கள் நாட்கள் சென்றுக்கொண்டு இருக்க, பவித்ரா கணவனுக்கு செய்ய வேண்டிய வேலைகள், கடமைகள் என்று அனைத்திலும் எப்போதும் போல நேர்த்தியாக இருந்தாள். 

 

அவ்வப்போது தன் மாமியாரிடம், “எப்படி அத்த உங்க மகன் மட்டும் இப்படி இருக்காரு” என கேட்பாள். 

 

விசாலாட்சிக்குத் தான் இப்போதெல்லாம் மனது பாரமாக இருந்தது.. 

 

அஜய்க்கு அவர்களின் வசதிக்கு ஏற்றது போல் பெண் எடுத்தார்கள்.. அஜய்யின் மனைவி ஸ்வாதி நல்ல குணம் உள்ள பெண் தான். ஆனால் அவளுமே பிசினஸ் செய்கிறாள். அதுவும் அவளின் ஊரான ஹைதராபாத்தில்.. அதனால் அஜய்யும் அங்கேயே இருந்து விட, விஜய்க்கு சற்று வசதி குறைவான பெண்ணாக இருக்க வேண்டும் என்றும், வீட்டை முதன்மையாக பார்க்கும் மருமகள் வேண்டும் என்று அவர் நினைத்துருக்க, அவர் நினைத்தது போலவே அமைந்தவள் தான் பவித்ரா. 

 

“கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக வேண்டாம் ம்மா.. விஜய்க்கும் அதான் வேணும்” என்றவர் அப்போதே சொல்லியிருக்க, 

 

“சரிங்க த்தை” என புன்னகையாக பதில் கொடுத்தாளே… 

 

மருமகளிடம் மகன் கொஞ்சம் இணக்கமாக இருந்தா தான் என்னவென தோன்றியது.. 

 

மகனிடம் ஒரு முறை சொல்லி அவன் தன் செவி கொடுக்காமலும் சென்று விட்டான். 

 

கடந்த சில வருடங்களாக அவனின் இயல்பே இப்படி இருப்பின் அவரும் தான் என்ன செய்ய முடியும்.. 

 

தன் தங்கைக்கு தினமும் இல்லை என்றாலும் வாரத்துக்கு ஒருமுறையாவது கால் செய்துவிடுவான் அஷ்வின். 

 

தன் அண்ணனின் மீது உயிரையே வைத்திருக்கும் பவித்ரா மீது அளவு கடந்த பிரியம் அஷ்வினிடமும் இருக்கும் தானே! 

 

“எப்படி இருக்க பவாக்குட்டி?” என அண்ணன் ஆழந்து கேட்டாலும் மறந்தும் தன் மனக்கவலையை பெண்ணவள் பகிர்ந்தது இல்லையே! 

 

ஆனால் அவளின் கவலையை எல்லாம் தெரிந்துக் கொள்ள தான் அஷ்வின் அனன்யாவை பயன்படுத்துகிறானே.. 

 

அனன்யாவைப் பொறுத்த வரை அஷ்வின் இப்போது அவளுக்கு நல்ல நெருக்கம்.. ஒரு நண்பனாக.. படிப்படியாக இது காதல், கல்யாணத்தில் முடியும் என்கிற நம்பிக்கை அவளுக்குள் இப்போதே வந்துருக்க, அவளை தன் காரியத்துக்காக மட்டும் அல்லவா அஷ்வின் உபயோகப்படுத்துகிறான்… 

 

இங்கு ராகினியும் அஷ்வினை நெருங்க நிறைய பிளான் போட்டாள்.. 

 

“இந்த சட்டை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு மாமா” என வெட்கத்துடன் சொல்ல, 

 

“வேலையைப் பாரு ராகினி” என முடித்தவனுக்கோ ராகினியின் உணர்வுகள் புரியாமல் இல்லை. 

 

திருமணம் நிச்சமாகும் வரை எதுவும் நிச்சயம் கிடையாது… அதனால் அவளை தன்னை நெருங்க விடாமல் தள்ளியே தான் வைத்திருந்தான். 

 

மூன்று மாதங்கள் கழிந்துருந்தது… 

 

அன்று வீட்டிற்கு வரும் போதே இறுக்கமான முகத்துடன் தான் வந்துருந்தான் விஜய். 

 

எப்போதும் அவனின் முகம் அப்படித் தான் இருக்கிறது என்று பவித்ராவும் அவளின் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் அன்று இரவு தன் மாமியார் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும் போல கலகலத்துவிட்டு சற்று நேரம் தொலைக்காட்சியில் சீரியலை பார்த்து விட்டு தன் அறைக்குள் செல்ல, அவளின் பின்னால் கதவைத் தாழிடும் சத்தம் கேட்டது.. 

 

அதைக் கேட்டவளோ பதற்றத்தில் திரும்ப, கதவைத் சாற்றி கதவில் சாய்ந்தபடி தன் இரவு உடையில் கம்பீரத்துடன் நின்றுக் கொண்டு இருந்தான் விஜய்.. 

 

அவனின் முகத்தில் இறுக்கம் தாண்டிய கோபம் இருந்தது..

 

அவளின் கோபத்துடன் பார்த்துக் கொண்டுருந்தவனை அச்சத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு ஏதோ சரியில்லை என்றே தோன்றியது. 

 

“தினமும் தான் தூங்குன அப்புறம் பிளான் பண்ணி தானே உள்ளே வர.. இப்போ என்ன பண்ணப் போற” என அவன் கூர்மையாக கேட்க, 

 

“அ.. அது” என திணறியவளிடம், “பிடிச்சு தானே கல்யாணம் பண்ணின! இன்ஃபாக்ட் கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட நான் பேசலன்னா கூட வெக்கமே இல்லாம நீ எனக்கு மெசேஜ் அண்ட் கால்ஸ் பண்ணிட்டே இருப்ப” என்றவன் கோபத்தை கக்க, பவித்ராவிற்கோ அவனின் வார்த்தைகள் எல்லாம் சுருக்கென்று இருந்தது.. 

 

“நா.. நான் உங்க மேல வைச்சிருந்த காதலை வரே நிமிஷத்துல இப்படி அசிங்கப்படுத்துறீங்க” என கண்களில் கண்ணீர் மல்க தயக்கத்துடன் சொன்னவளை நெருங்கி வேக எட்டுக்களுடன் வந்தவன் அவளின் கைகளை வலுக்கட்டாயமாக பிடித்து, 

 

“காதல்.. ஒரு ஆம்பளையும், பொம்பளையும் லீகல்லா செக்ஸ் பண்றதுக்கு வைச்ச பேர் தான் இந்த காதல், கல்யாணம் எல்லாம்.. புரிஞ்சுதா” என கர்ஜித்தபடி அவளின் கைகளை இறுக்கியவன் அவளைத் தன்னோடு இழுக்க, அவனின் இந்த வலுக்கட்டாயச் செய்கையில் உறைந்தே விட்டாள் பவித்ரா. 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
1 Comment
error: Content copy warning!!