பிரியாதிரு 32

பிரியாதிரு 32

 

“நான் பண்ணின எல்லாமே தப்பு தான்! என் தப்பை உணர்ந்து நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டேனே…” என ஆதங்கத்துடன் கேட்டாள். 

 

“ஸ்டாப் இட் பிளடி பிட்ச்” என அந்த அறையே அதிரும் அளவுக்கு அவன் கத்த, 

 

அவன் சொன்ன வார்த்தையில் வாயடைத்து விட்ட சோனியா, “மைன்ட் யுவர் டன்க்! பிட்ச் ன்னு இனி ஒரு தடவை நீங்க என்ன கூப்பிட்டா உங்களுக்கு மரியாதை கெட்டுடும்” என்றாள் ஆவேசமாக. 

 

“உன்னை இப்படி கூப்பிட்டா உனக்கு வலிக்குதுல இதே மாதிரி தானே பாலாவை நீ தினமும் வார்த்தையாலே டார்ச்சர் பண்ண.. அவ எப்படி வலியில துடிச்சிருப்பா” என்றான் வேதனை கலந்த ஆவேசத்துடன். 

 

“நான் அண்ணியை டார்ச்சர் பண்ணேன் தான்.. இப்போ என்னோட எல்லா தப்பையும் நான் உணர்ந்துட்டேன்… அண்ணியே என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டாங்க ஆனா நீங்க” என பட்டென்று நிறுத்தியவளை வெறுமையாக பார்த்தவனோ, 

 

“உன் சுயநலத்துக்காக குழந்தைய வைச்சு என்னை டிராப் பண்ண… அதே குழந்தையை கொன்னுட்டு” என அவன் வலியுடன் சொல்லிக்கொண்டுருக்கும் போதே, 

 

“நோ…” என கத்தியபடி தன் காதுகளை கைகளால் பொத்தியவள், “என் குழந்தையை நான் கொன்னேன்னு சொல்லி சொல்லி என்னை உயிரொட கொன்னுட்டு இருக்கீங்க விக்னேஷ்.. சத்தியமா என் குழந்தை என்னை விட்டு போனதுல நான் சுக்கு நூறா உடைஞ்சு தான் போனேன்.. ஆனா அதை உங்க கிட்ட சொன்னா எங்க நீங்க என்னை மொத்தமா விட்டுட்டு போய்டுவீங்களோன்னு பயந்து தான் சொல்லாம இருந்தேன்… நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்பு தான்… நான் அப்போ கெட்டவ தான் ஆனா என் குழந்தைய கொல்ற அளவுக்கு” என அவள் அழுதபடி சொல்லிக் கொண்டுருக்கும் போதே, 

 

“அந்த குழந்தை வேணும்னா நீ வேணும்னே களைக்காம இருந்துருக்கலாம்.. ஆனா களைஞ்ச அப்புறம் அதை என்கிட்ட மறைச்சிருக்க அதுவே கொலைக்கு சமம் டி… அது மட்டுமா! மறுபடியும் என் கூட இன்டிமேட் ஆகி பிரெக்நென்ட் ஆகி என்னோட குழந்தை களைஞ்ச அடையாளத்தை கூட மூடி மறைக்க நினைச்ச உன்னை நான் எப்படி மன்னிக்குறது” என எகிறியவனோ தன்னை நடுநிலை படுத்திக் கொள்ள ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன், 

 

“இப்போ போய் வேலையைப் பாரு.. நான் எப்போ கூப்பிட்டாலும் நீ வரணும்.. வந்து தான் ஆகணும்” என முடித்தவன் அவனின் இருக்கையில் சென்று அமர, அவனை வெறுமையாய் பார்த்து விட்டு சென்றாள் சோனியா. 

 

அதன் பின்னர் விக்னேஷ் அவளின் கண்களில் படவேயில்லை… சோனியாவின் மனதில் கடமையே கண்ணாயிரமாக இருந்தாலும் விக்னேஷ் கேட்ட ஒவ்வொரு விஷயமும் அவளும் அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருந்தது… 

 

அன்று முன் இரவில் அன்றைக்கான விழா, போட்டிகள் முடிந்துருக்க அனைவரும் சென்ற பின்னர் தான் சோனியாவின் டீம் கிளம்பியது… 

 

அவள் கிளம்பும் முன்னர் விக்னேஷ் அவளை அழைத்ததாக செய்தி வந்துருக்க, ‘இப்போ எதுக்காக கூப்பிடுறான்’ என மனதில் பயந்தபடி அவனின் அறை நோக்கி சென்றவள், உள்ளே செல்லலாமா வேண்டாமா என தீவிரமாக யோசித்துக் கொண்டுருக்க, அவளின் ஃபோன் அலறியது.. 

 

அதில் திடுக்கிட்டவள் ஃபோனை எடுத்துப் பார்க்க விக்னேஷ் தான் அழைத்திருந்தான்.. 

 

வெகு நாட்கள் கழித்து அவன் தன் செல்லிற்கு அழைப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை இன்னொரு பெண்ணின் கணவன் தனக்கு செல்லில் அழைப்பது நினைத்து கோபப்படவா என்று அவளுக்கே தெரியவில்லை… 

 

ஆனாலும் அவளின் கைகள் தாமாக செல்லில் வந்த கால்லை அட்டென்ட் செய்தது… 

 

“இன்னும் எவ்வளவு நேரம் தான் வாசல்லயே நிக்க போற” என அவன் ஃபோனில் எகிற, “வ.. வரேன் சார்” என பதற்றத்தில் தடுமாறியவள் வேகமான இதயத் துடிப்புடன் உள்ளே சென்றாள்… 

 

பயத்துடன் வரும் அவளையே வன்மத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த விக்னேஷ் சோனியா உள்ளே வந்ததும், “காலையில கேட்ட விஷயம் என்ன ஆச்சு?” என கறாராக கேட்க, சோனியாவிற்கு அவன் என்ன கேட்டான் இப்போது என்ன கேட்கிறான் என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை… 

 

அவள் மழங்க விழிக்க, “ஐ நீட் யு…” என்று அவன் இலகுவாக சொல்ல, மழங்க விழித்திருந்தவளின் கண்களில் வேகமான அதிர்வு… 

 

அதை அவன் கவனித்தும் அலட்சியமாக, “என்ன நான் சொன்னது புரியலயா… உன் உடம்பு எனக்கு வேணும்.. நீ என் கூட படுக்கணும்” என்றான் கொச்சையாக. 

 

பெண்ணவளின் மனதில் அத்தனை குமுறல்… அவள் காதலித்தவன் கண்டிப்பாக இவன் அல்லவே! அவள் காதலித்த விக்னேஷ் ஒரு ஜென்ட்டில்மேன்.. ஆனால் இப்போது அவளின் முன் நின்று இப்படி அசிங்கமாக பேசுவது ஒரு அசுரன்… ராட்சசன்!!! 

 

“என்ன டி அப்படியே சிலை மாதிரி நிக்குற… இதுக்கு நீ ஓகே சொல்வியான்னு நான் கேக்கல நீ கண்டிப்பா இதுக்கு ஒகே சொல்லணும்…” என்றான் தடாலடியாக. 

 

இத்தனை நேரம் மனதில் அடக்கி வைத்திருந்த ரணத்தை பட்டென்று வெளியே விட்ட சோனியாவோ, “பொறுக்கி மாதிரி பேசாதீங்க விக்னேஷ்… நீங்க சொல்றதை கேட்டாலே எனக்கு அருவருப்பா இருக்கு… உங்க பொண்டாட்டிக்கு துரோகம் பண்றீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்ல!” என்று ஆவேசத்துடன் சொன்னாள் சோனியா. 

 

அதற்கு நக்கலாக, “என்ன பண்றது சோனியா.. என்னோட எக்ஸ் பொண்டாட்டியான நீ எனக்கு செஞ்சது எல்லாமே துரோகம், பொய், பித்தலாட்டம் மட்டும் தான்… அப்படி இருக்கும் போது இந்த மாதிரி உத்தமி டையலாக்ஸ் எல்லாம் நீ பேசலாமா… பேசவே கூடாது நீ!” என்று கோபத்துடன் முடித்தான். 

 

“என்னால இதெல்லாம் பண்ண முடியாது.. நான் என் மேனேஜ்மென்ட்ல உங்களை கம்ப்ளைன்ட் கொடுக்க போறேன்” என சோனியா ஆவேசப்பட, 

 

“போடி போய் தாராளமா பண்ணு… நீ ஏன் தான் கம்ப்ளைன்ட் பண்ணனு உன்னையே ஃபீல் பண்ண வைச்சிடுவேன்” என்றான் அலட்சியமாக. 

 

“என்ன மிரட்டுறீங்களா… மேனேஜ்மென்ட்ல உங்களுக்கு தெரிஞ்ச பட்டேல் மட்டும் இல்ல மிஸ்டர் விக்னேஷ் கார்த்திக் என்னோட அண்ணா இந்திரஜித்தோட பிரண்ட்டும் ஒரு பார்ட்னர் தான் அவர் கிட்ட சொல்லுவேன்” என்றாள் நிமிர்வாக. 

 

“அதை விட பெஸ்ட் ஐடியா நான் சொல்லவா… பேசாம டி கிரேட் இந்திரஜித் கிட்டயே சொல்லிடேன்” என்றான் இலகுவாக. 

 

இப்போது அதிர்ந்தது என்னவோ சோனியா தான்… 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!