அத்தியாயம் 31
இரவு பத்து மணி ஆகி இருந்தது… நாளை காலையில் நான்கு மணிக்கே எழுந்திருக்க வேண்டும். அப்போது தான் ஃபுட்பால் ஈவண்ட் க்கு சென்று மீண்டும் கிரவுண்ட்டை சுத்தமாக தயார் செய்ய முடியும்… அதை செய்வதற்கு சோனியாவின் டீம் இருந்தாலும் சோனியா தானே மேற்பார்வை பார்க்க வேண்டும்….
ஆனால் பெண்ணவளுக்கோ தூக்கம் என்பதே எட்டாத கனி போல் ஆகி விட்டது… காரணம் அவன்.. அவன் ஒருவன் மட்டுமே… விக்னேஷ் கார்த்திக்!
கண்களை இறுக்க மூடி உறங்க முயற்சித்தாலும் காலையில் தன்னிடம் அவன் நடந்துக் கொண்ட விதமே ஞாபகத்திற்கு மீண்டும் மீண்டும் வந்து அவளின் மன நிம்மதியைக் குலைத்தது…
அன்று காலை…
சிங்கத்தின் குகைக்குள் பயந்து நுழையும் மான் போல மெல்ல தயங்கி அடியெடுத்து வைத்தவள் மூடப்பட்டுருந்த கதவைத் தட்ட, “எஸ் எம் இன்” என கம்பீரம் கலந்த திமிரோடு குரல் கொடுத்தான் விக்னேஷ் கார்த்திக்..
மனதில் இருந்த பயத்தை மறைத்து உனக்கும் எனக்கும் இனி ஒன்றும் இல்லை.. நீ யாரோ நான் யாரோ… என்கிற பாவனையை முகத்தில் கொண்டு வந்து தன்னை தயார் செய்த பின்னர் தான் உள்ளே சென்றாள் சோனியா…
விக்னேஷ் கார்த்திக்கின் ஆபிஸ் அறை… மிக மிக அழகாக, ரசனையை தூண்டும் விதமாக இருந்தது…
தற்போது கோயம்புத்தூரில் மூன்று ஃபுட்பால் கிரவுண்ட் அவனுக்கு சொந்தமாக இருந்தது…
ஸ்டேட் லெவல் ஈவண்ட், காலேஜ் லெவல் ஈவண்ட் என அனைத்திற்கும் வாடகைக்கு விடுகிறான்… அதுமட்டும் இல்லாமல் கோச்சிங் வேறு தருகிறான்…
மூன்று கிரவுண்ட்டிலுமே விக்னேஷ் கார்த்திக்கிற்கு ஆபிஸ் அறை வசதி கொண்ட அட்மின் பில்ட்டிங் என்று இருக்கிறது.
பச்சை நிறத்தில் சேட்டன் வகை துணியிலான சேலையை தான் அணிந்திருந்தாள் சோனியா.. அவளின் நிறத்திற்கும், அழகிற்கும் அது ரொம்பவே எடுப்பாக இருந்தது…
உள்ளே வந்தவளை மேலிந்து கீழ் வரை விழுங்குவது போல் பார்த்தவனை தீயென முறைத்தாள் சோனியா.
உன் முறைப்பெல்லாம் என்னை ஒன்றும் செய்து விட முடியாது என்கிற ரீதியில் அவளின் முறைப்பை அலட்சியம் செய்தவன்,
அவளை மேலும் விழுங்குவது போல் பார்க்க,
அதில் கடுப்படைந்த சோனியா, “எதுக்கு சார் வர சொன்னீங்க.. இப்படி உங்க முன்னாடி நிக்குறது என் வேலை இல்ல” என்றாள் மிடுக்காக.
அவள் பேசியதை கண்டு புருவம் உயர்த்தியவனோ, “கரெக்ட்.. என் முன்னாடி இப்படி நிக்குறது உன் வேலை இல்ல… பட் நான் என்ன சொன்னாலும் நீ செய்வேன்னு பட்டேல் எனக்கு உத்தரவாதம் கொடுத்தானே!” என கைகளை விரித்து அவன் நக்கலாக சொல்ல,
இப்போது பிரனவ் பேசியது தான் சோனியாவிற்கு ஞாபகத்திற்கு வர, “சார் ப்ளிஸ்.. எதுக்கு என்னை கூப்பிட்டீங்க!” என அவள் சோர்வாக கேட்க,
“சாரி கேட்க வர சொன்னேன்னு உனக்கே தெரியும்.. அப்போ என்ன ஒன்னுமே தெரியாத போல நடிக்குற” என சற்று குத்தலாக கேட்டான் விக்னேஷ் கார்த்திக்.
‘என் தப்பு தான்.. இவன் அதுக்கு தான் நம்மளை கூப்பிட்டான்… என் மேல தப்பு இல்லன்னாலும் மூடிக்கிட்டு இவன் கிட்ட சாரி கேட்டுட்டு கிளம்பியிருக்கலாம்’ என தன்னையே மனதில் திட்டியவள்,
“சாரி சார்” என வேறு வழியின்றி பணிவாகவே கேட்டாள்..
அதற்கு விக்னேஷிடம் இருந்து எந்த எதிர்விணையும் இல்லாமல் போகவே, வெளியேற, “நான் உன்னை வெளியே போக சொல்லாம நீ போகக் கூடாது” என கட்டளையாக சொன்னான் விக்னேஷ்…
தனக்குள் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்ட சோனியா, “உங்களுக்கு இப்போ என்ன தான் சார் வேணும்!” என சலிப்பாக கேட்டாள்.
அவளை மேலிருந்து கீழ் மோகத்துடன் பார்த்தவன் தன்னுடைய நாற்காலியில் இருந்து எழ, அவனின் இந்த திடீர் செய்கையில் பதறியவள் பின்னே நகர வேக எட்டுக்களுடன் அவளை நோக்கி நடந்தான் விக்னேஷ் கார்த்திக்….
சோனியாவின் மனதோ ஒரு நொடி அப்படியே செய்வது அறியாது அப்படியே உறைந்து விட, அவளின் அதிர்ச்சியான முகத்தை பார்த்தபடியே நக்கலாக சிரித்த விக்னேஷ் கார்த்திக் கண் இமைக்கும் நேரத்தில் அவளை கையை இறுக்கிப் பிடித்து, “எனக்கு நீ.. உன்னோட உடம்பு வேணும்” என்றபடி அவளை தன்னோடு சேர்க்க,
இத்தனை நேரம் உறைந்து இருந்த பெண்ணவளின் மூளையும் மனதும் ஆடவன் பேசிய வார்த்தைகளில் பட்டென்று விழித்துக் கொள்ள, தன் முழு பலம் கொண்டு அவனிடம் இருந்து விடுப்பட்டவள், “ஸ்டாப் இட் விக்னேஷ்… நீங்க இப்போ இன்னொரு பொண்ணோட ஹஸ்பண்ட்! இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்ல” என எகிறினாள் சோனியா.
“சோ வாட்… ஐ டோன்ட் கேர்” என அலட்சியமாக சொன்னவன் தன் இருகைகளையும் கட்டியபடி அவளைப் பார்த்து, “இதுக்கு ஏன் இவ்வளவு ரியாக்ட் பண்ற!” என கைகளை விரித்தபடி அவன் அலட்சியமாக கேட்ட விதத்தில் சோனியாவுக்கு பத்திக்கொண்டு வந்தது..
“வாட் டு யூ மீன் விக்னேஷ்… நீங்க இப்போ இன்னொரு பொண்ணோட புருஷன்… இப்படி கேட்க உங்களுக்கு வாய் கூசல… ச்ச உங்களை போல் நான் காதலிச்சிருக்கேனு நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு” என ஆதங்கத்துடன் சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர் கோர்த்தது..
அவள் காதலித்த விக்னேஷ் எத்தனை கண்ணியமானவன்.. ப்ரித்தாவின் கழுத்தில் தாலி கட்டும் முன்னரே அவன் அவளை உடலால் தீண்டி மனதை வதைத்தது எல்லாம் அவளுக்கு மன ரணத்தை கொடுத்தது தான்..
ஆனால் இப்போது ப்ரீத்தாவின் கணவன் ஆகிவிட்டான் அல்லவா… அதன் பின்னர் அவன் இவ்வாறு பேசியதை நினைத்து அவளுக்கு பேர் அதிர்ச்சி…
“ஓ நீ ரொம்ப நியாயமானவளா! அதுக்கு எல்லாம் நீ வொர்த் இல்ல டி… நீ என்னை எப்படி பிளான் பண்ணி இன்டிமேட் ஆகி பிரெக்நென்ட் ஆன… அன்னிக்கு நீ பண்ணினது உனக்கு தப்பா தெரியலன்னா இப்போ நான் பண்றதும் எனக்கு தப்பா தெரியல” என்றான் பட்டென்று…
அவன் பேசியதை கேட்ட பெண்ணவளுக்கோ சுருக்கென்று மனதை தைப்பதை போன்று வலித்தது…
“வி.. விக்னேஷ் நான் பண்ணினது தப்பு தா.. தான்… அதுக்கு நா.. நான் தான் மன்னிப்பு கேட்டேனே.. அதுவும் இதுவும் ஒன்னு இல்ல.. நீங்க இப்போ கேட்டது.. அது கெட்ட கனவா இருக்கணும்னு நான் நினைக்குறேன்.. மனசு ரொம்ப வலிக்குது விக்னேஷ்” என தடுமாறிய வார்த்தைகளுடன் கண்ணீர் மல்க அவள் சொல்ல,
“உனக்கு ரொம்ப வலிக்குதுல… நீ என்னை பிளான் பண்ணி இன்ட்டிமேட் ஆகி குழந்தையை கன்சீவ் ஆகி.. அதை வைச்சு என்னோட தங்கச்சி வாழ்க்கையை டிராப் பண்ணியே அப்போ எனக்கு எப்படி வலிச்சிருக்கும்… இப்போ என்னோட தங்கச்சி சந்தோஷமா இருந்தாலும் அன்னிக்கு அவ அனுபவிச்ச வலிக்கு நீ என்ன பதில் சொல்ல போற…” என கர்ஜித்தான் விக்னேஷ் கார்த்திக்.
