பிரியாதிரு 35

பிரியாதிரு 35

 

‘நான் டைவர்ஸ் கேட்கலன்னா ஆத்மனே என்கிட்ட ஒரு நாள் டைவர்ஸ் கேட்டு வாங்கிருப்பாரு.. நானே அவருக்கு ஈஸியா வேலையை முடிச்சு கொடுத்துட்டேன்’ என மனதில் வெறுமையாக சொன்னவளுக்கோ கண்களில் இருந்து சூடாக கண்ணீர் வந்து விடும் போல உணர்வு வர, பட்டென்று அவளின் அறை நோக்கி அவள் செல்ல, 

 

“அமிர்தா” என அவசர சத்தத்துடன் அழைத்த ராஜேஷ் ரெட்டி, “நீ ஆத்மனை தப்பா எடுத்துக்காத ம்மா.. சிந்துஜா பண்ணின விஷயத்துக்கு அவன் பொறுப்பு இல்ல… இனி இந்த மாதிரி நடக்காம நாங்க பாத்துக்குறோம்” என உறுதியாக சொல்ல, 

 

“அவர் விருப்பம் இல்லாம இது நடந்துருக்கும்னு நினைக்குறீங்களா மாமா இல்ல தெரிஞ்சே என்னை ஏமாத்த முயற்சி பண்றீங்களா!” என முகத்தை கூட அவர்கள் புறம் திருப்பாமல் அவள் கூறிவிட்டு சென்ற விதம் ஆத்மனின் பெற்றோர்களை கவலையில் கிடத்தியது… 

 

படம் பெரிய லெவலில் ஹிட் ஆகும் என்கிற சந்தோஷத்தில் சிந்துஜா தன்னை கட்டிக் கொண்டாள் என விட்ட ஆத்மனுக்கே அவள் அவனின் கன்னத்தில் கொடுத்த முத்தம் அவனுக்கே பெரிய அதிர்ச்சி தான்.. ஆனாலும் பொது இடத்தில் அவளை உதறி அல்லது எரிச்சலுடன் பேசுவது இங்கிதம் இல்லை என்று அவனுக்கு தெரியும்.. அதையும் தாண்டி அவன் செய்தாலும் அதை வேறு மாதிரி கதையாய் சித்தரித்து விடும் இந்த மீடியா உலகம்… 

 

அதன் பின்னர் சிந்துஜாவை தனிமையில் சந்திக்கும் தருணம் ஆத்மனுக்கு அன்றைய தினத்தில் அமையவில்லை.. அதே சமயம் அவளிடம் சற்று விலகியே தான் இருந்தான்.. 

 

ஹைதராபாத்தில் படத்தை கண்டுருந்த படக்குழு அடுத்த மூன்று நாட்கள் சென்னை, மும்பை, டெல்லி என மூன்று வரிசையாக காண்பதாக திட்டம்… 

 

ஆதலால் அடுத்த மூன்று நாட்கள் அவன் வீட்டிற்கு வரும் சமயமே இல்லை… 

 

தன் அறையில் சோர்ந்து அமர்ந்துருந்த அமிர்தாவிற்கு சர்வாவிடம் இருந்து கால் வந்தது… 

 

இப்போது அவனின் கால்லை எடுக்கும் மனதிலை பெண்ணவளுக்கு இல்லை.. அதனால் ஃபோனை சைலண்ட்டில் போட்டுவிட்டாள்.. 

 

***

 

அன்று வேலைக்கு கிளம்பிய சோனியாவிற்கோ, ‘இன்னிக்கு கண்டிப்பா வந்திடுவான்.. கடவுளே! என்னை அவன் கிட்ட இருந்து காப்பாத்து’ என மனதில் வேண்டிய படி அவள் விழா நடக்கும் திடலுக்கு செல்ல அவளின் வேண்டுதல் தான் கடவுளுக்கு கேட்டுவிட்டது போல இன்றும் விக்னேஷ் அங்கு வரவில்லை.. 

 

முதலில் ரொம்பவே நிம்மதி என்கிற ரீதியில் பெண்ணவள் இருக்க முயன்றாலும் அவனுக்கு ஏதாவது பிரச்சனையா என்கிற ரீதியில் அவ்வப்போது அவளின் ஆழ் மனம் பதறியது… 

 

தன் ஆழ் மனதின் அலைப்புறுதலை கஷ்டப்பட்டு ஓரம்கட்டியவள் தன் வேலையை முடித்து வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் தன்னையும் மீறி சுப்புரத்னத்திடம், 

 

“உங்க ஸ்பான்சர் ஏன் வரல… ரெண்டு நாளா ஆளேக் காணுமே” என அலட்சியமாக கேட்பது போல் நடிக்க, பட்டென்று விக்னேஷிற்கு அழைத்த சுப்புரத்னம், 

 

“சார்.. சோனியா மேடம் நீங்க ஏன் ரெண்டு நாளா வரலைன்னு கேட்குறாங்க் சார்” என சொல்ல, அவனின் செயலை சற்றும் எதிர்ப்பார்க்காத சோனியா திடுக்கிட்டாள்.. 

 

தன் செல்லை சோனியாவிடம் நீட்டிய சுப்புரத்னமோ, “சார் உங்களோட பேசணும்மாங்” என கொடுக்க, சோனியாவிற்கு தூக்கி வாரிப் போட்டது. 

 

ஆனாலும் வேறு வழியின்றி அவனிடம் இருந்து செல்லைப் பெற்றவள் காதில் வைத்த அடுத்த கணமே, 

 

“ரொம்ப தேடுற போல” என்று ஒரு மாதிரி குரலில் வினவினான் விக்னேஷ் கார்த்திக். 

 

சற்று தள்ளி வந்தவள், “ஸ்டாப் இட் விக்னேஷ்.. நீங்க நினைக்குற நெனப்புல ஒன்னும் நான் கேட்கல… எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு அதைக் கேட்க சுப்புரத்னம் சார் கிட்ட விசாரிச்சேன்.. அவர் இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணுவாருனு எனக்குத் தெரியாது” என்றாள் வேகமாக. 

 

“சரி என்ன டவுட்.. இப்போ கேளு” என்று அவன் கேட்கவும் பெண்ணவளுக்கு உடல் எல்லாம் பதறி விட்டது.. 

 

அவன் சட்டென்று இப்படி கேட்டால் அவளும் தான் உடனே என்ன சொல்ல முடியும்… 

 

“என் டவுட்டை நானே கிளியர் பண்ணிக்கிட்டேன்… நான் வீட்டுக்கு கிளம்பணும் சார்” என்றாள் வேகமாக. 

 

அவன் நேரில் இல்லை என்கிற தைரியம் அவளை சற்று வேகமாக பேச வைக்க, “உனக்கு மட்டும் தான் வேலை இருக்குன்ற மாதிரி சீன் கிரியேட் பண்ணாத… நான் என் பொண்டாட்டியோட ஹனிமூன் வந்துருக்கேன்.. காலையில இருந்து ஆறு ரவுண்ட் போயாச்சு.. இன்னும் எனக்கு வேகம் அடங்கல.. எனக்கு உன்னை விட நிறைய வேலை இருக்கு” என்று ஒரு மாதிரி த்தொனியில் சொல்ல, அவன் பேசிய பேச்சில் ஒரு நொடி சோனியாவின் உயிர் மூச்சே நின்றுவிட்டது போல அவளுக்கு இருந்தது…

 

எந்த ஒரு காதலியும், எந்த ஒரு முன்னாள் மனைவியும் கனவில் கூட இச்செயல்கள் வந்தால் பதறி அடித்துக் கொண்டு நாள் முழுவதும் நடைப் பிணமாக சுற்றுவார்களே… 

 

இப்போது அந்த காட்சியை அவளின் எண்ணத்தின் நாயகனே சொல்லுகையில் அவளின் மனது, மூளை, உடல் எல்லாம் உறையத் தானே செய்யும்… 

 

அவளிடம் எந்த பதிலும் இல்லை என்பதை உணர்ந்த விக்னேஷோ, “சும்மா சொல்லக் கூடாது உன்னை விட என்னோட பொண்டாட்டி என்னை ரொம்ப நல்லாவே ஸாட்டிஸ்ஃபை பண்றா” என போதை ஏறிய குரலில் அவன் வினவ, அவளின் கையில் இருந்த ஃபோனை தூக்கி எறிய முற்பட்டவளின் மூளையை கட்டுப்படுத்தியவள் அடுத்த நொடியே கால்லை அணைத்துவிட்டு சுப்புரத்னத்தின் கையில் திணித்துவிட்டு தன் வண்டியை எடுத்தவள் எப்படி எந்த ஒரு விபத்திலும் சிக்காமல் வீட்டிற்கு வந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை… 

 

விக்னேஷ் சொன்ன வார்த்தைகள் அவளின் செவிப்பறையில் மீண்டும் மீண்டும் விழ, தன் அறைக் கதவை ஓங்கி சாற்றியவள் அழுகையுடனும், கோபத்துடனும் தன் அறைக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்தாள்.. 

 

“விக்னேஷ் இப்போ உனக்கானவன் இல்ல.. அவன் இன்னொருத்தியோட புருஷன் அவனை இனி ஒரு தடவை கூட நினைக்க கூடாது” என தன் கரத்தால் தன் கன்னங்களையே வேகமாக மாறி மாறி அடித்துக் கொண்டாள். 

 

நல்லவேளை சோனியாவின் பெற்றோர்கள் ராமேஸ்வரம் சென்றுருந்தார்கள்… இப்போது வீட்டில் அவளின் சித்தியும், அவர்களின் குடும்பமும் தான் இருக்கிறது… 

 

அவர்களின் கண்களில் இதெல்லாம் படுவதற்குள் தன் அறையை சுத்தம் செய்ய வேண்டும் என வேகமாக முனைந்த சோனியா தன் அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.. 

 

அடுத்த மூன்று நாட்கள் சோனியாவுக்கும் சரி, அமிர்தாவுக்கும் சரி வெறுமையுடனும், வெறுப்புடனும், கவலையுடனும் தான் சென்றது… 

 

அன்று வேலைக்கு சென்றுருந்த சோனியா என்ன தான் கவலையில் இருந்தாலும் விக்னேஷ் இன்னொருத்தியின் கணவன் என்று தனக்குள் சொல்லி சொல்லி ஒருவாறு மனதை ஒருநிலைப்படுத்தி தான் வந்துருந்தாள்…

 

அன்று விக்னேஷ் வந்தானா இல்லையா என்பதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் அவள் வேலையில் ஈடுபட்டாள்…

 

அன்று மதியம் போல, “சோனியா மேம் நீங்க வீட்டுக்கு கிளம்புற முன்னாடி எம்டியை பாக்கணுமாம்” என சுப்புரத்னம் சொல்லிவிட்டு செல்ல, பெண்ணவளின் உடலுக்குள் ஒரு நடுக்கம்… 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!