பிரியாதிரு 37
தன் அறையில் அமர்ந்துருந்த அமிர்தாவோ மன பாரத்தில் கண்களை மூடியபடி அமர்ந்துருக்க,
“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க அமிர்தா” என தீயாய் விழுந்தது ஆத்மனின் குரல்…
அவனின் கோபக் குரலில் திடுக்கிட்டவள் கண்களை சோர்வாக திறக்க, அவளை வேகமாக எழ வைத்து கைகளை இறுக்கியவன்,
“எதுக்கு டி அப்பா, அம்மா கிட்ட டைவர்ஸ் விஷயத்தை பத்தி பேசுன..” என அதட்டும் குரலில் கேட்டான்.
“எப்படி இருந்தாலும் அவங்களுக்கு தெரிய தானே வேணும்” என்றாள் வெறுமையாக.
“அவங்களுக்கு எப்போ தெரியணும்னு நான் தான் அதை டிசைட் பண்ணனும்.. நீ இல்ல” என எகிறியவனிடம்,
“எப்போ தெரியணும்… டைவர்ஸே கொடுக்காம நீங்க சிந்துஜாவோட குடும்பம் நடத்துறீங்களே… அவ உங்க குழந்தையை சுமந்த அப்புறம் எனக்கு டைவர்ஸ் கொடுப்பீங்களா!” என்று அவள் கேட்ட நொடி தரையில் சுருண்டு விழுந்துருந்தாள் அமிர்தா..
ஆம், ஆத்மன் அமிர்தாவின் செவிப்பறையை கிழித்திருந்தான்.. அப்படி தான் அவளின் கன்னத்தில் வந்து விழுந்தது அப்பெரும் அடி…
அமிர்தா பேசிய வார்த்தைகளின் தாக்கம் அவனுக்குள் இன்னும் கூட எரிமலையாய் பொங்கிக் கொண்டுருந்தது..
என்ன என்ன வார்த்தைகள் பேசிவிட்டாள்…
அவனின் மனமெல்லம் ரணமாக கொதிக்க அங்கு சுருண்டு விழுந்த அமிர்தாவோ மயக்க நிலைக்கே சென்றுவிட்டாள்…
“உன்னை உண்மையா உயிருக்கு உயிரா காதலிச்சதுக்கு என்னை உயிரோட சாகடிச்சிட்ட டி” என கண்களில் கானல் நீர் தடயத்துடன் அவன் வெறுப்பாக சொல்ல அமிர்தா சுருண்டு மயங்கி கிடப்பதை முதலில் கவனிக்காத ஆத்மன் அமிர்தா வின் சத்தம் வராத காரணத்தினால் அவளின் புறம் திரும்ப பெண்ணவளோ அங்கு மயக்க நிலையில் கிடந்தாள்…
அவ்வளவு தான்.. ஆத்மனின் உயிரே அவனிடம் இல்லை… வேகமாக அவளின் பக்கம் ஓடியவன் அவளை தன் கைகளில் அள்ளி ஓடியவனின் ஓட்டம் நின்றது என்னவோ மருத்துமவனையில் தான்..
அங்கும் அவளை கைகளில் ஏந்தி பதற்றத்துடன் அவன் உள்ளே வந்து, அமிர்தா எமர்ஜென்சி வார்ட்டில் அழைத்துச் செல்லப்பட்டு, “கங்குராஜிலேஷன்ஸ் நீங்க அப்பாவாக போறீங்க உங்க வைஃப் அமிர்தா பிரெக்நென்ட்டா இருக்காங்க” என்று டாக்டர் சொன்னதும் தான் ஆத்மனுக்கு இத்தனை நேரம் நடை பிணமாக இருந்த உயிரே திரும்ப வந்தது… அது மட்டும் இல்லை அவனின் உயிர் வந்த கையோடு அவனுக்கு பெரிய சந்தோஷம் கொடுத்தது தன் மனைவி கருவுற்று இருக்கிறாள் என்று…
அதை அறிந்தவனின் மனதிற்கோ இத்தனை நாட்கள் இருந்த கோபம், ஆதங்கம், வெறுமை, வெறுப்பு எல்லாம் பறந்தோடி விட்டது…
அவனுக்கு கால் மேல் கால் செய்து கொண்டிருந்த அன்னை மற்றும் தந்தையின் நினைவு அப்போது தான் ஆத்மனுக்கு வர அவர்களுக்கு வேகமாக அழைத்தவனிடம்,
“ஆத்மா.. அமிர்தாக்கு என்ன ஆச்சு?” என்று பதறிய அன்னையிடம்,
“அமிர்தா நல்லா இருக்கா மா.. நீங்க பயப்படாதீங்க… அவ பிரெக்நென்ட்டா இருக்கா மா” என்றான் முழு சந்தோஷத்துடன்.
“அப்படியா ஆத்மா.. ரொம்ப சந்தோஷம் ப்பா! இனியாவது நீயும் அமிர்தாவும் சந்தோஷமா சேர்ந்து வாழணும்… அமிர்தாக்கு உன்னை பிடிக்கும் ஆத்மா.. என்னால அதை உணர முடிஞ்சுது.. நீயும் அதை உணர்ந்து ரெண்டு பேரும் செல்வ செழிப்போடு சந்தோஷமா இருங்க” என மனமார வாழ்த்தினார் கவிதா.
அன்னை சொன்னவற்றை எல்லாம் மனதில் நினைத்து பார்த்துக் கொண்டுருந்த ஆத்மனிடம், “உங்க வைஃப் கண் முழிச்சிட்டாங்க சார்” என்று சொன்னார் செவிலிப்பெண்.
அவ்வளவு தான்.. வேக நடையுடன் உள்ளே சென்றவன் அங்கு பெட்டில் சோர்வாக அமர்ந்திருந்த மனைவியின் முகத்தை வேகமாக தன் கைகளுக்குள் ஏந்தி, “அம் சாரி அமிர்தா.. உன்னை நான் அடிச்சிருக்கவே கூடாது.. சாரி டி” என்றவனின் கண்களிலோ கண்ணீர் எட்டிப் பார்க்க, அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்த அமிர்தாவிற்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாய் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறி அழுதான் ஆத்மன் ரெட்டி.
நடப்பது அனைத்தும் கனவா இல்லை நிஜமா என்கிற நிலையில் இருந்தாள் அமிர்தா…
எவ்வளவு நேரம் இப்படி தன்னவளை அணைத்து அழுதானோ அவனுக்கே தெரியாது…
மெல்ல அவளை விடுவித்தவன், “என் மனசுல என்னிக்குமே நீ மட்டும் தான் அமிர்தா இருக்க.. நீ எனக்கு விவாகரத்து கொடுத்து என்னை விட்டு போனாலும் சரி என் மனசுல நீ மட்டும் தான் டி.. உனக்கு ஏன் டி என்னை பிடிக்கவே இல்ல” என்று ஆதங்கமாக கேட்டவனோ உஷ்ணபெருமூச்சுகளை விட்டபடி அவனின் தலையைக் கோதி தன் கோபத்தை கட்டுப்படுத்த முயல, அவனை கண்களில் கண்ணீர் மல்க அதிர்ச்சி விலகாமல் பார்க்க, திருமணத்திற்கு பின்னர் அவளிடம் விலகி இருந்த காரணத்தை சொல்லி முடித்த ஆத்மன்,
“நான் என்ன பண்ணா உனக்கு என்னை பிடிக்கும் அமிர்தா..” என அவனையும் மீறி கடுப்புடன் கேட்டான்…
“யார் சொன்னா உங்களை பிடிக்காதுன்னு ஐ லவ் யூ சோ மச் ஆத்மன்” என்று தன்னவனை இறுக்க அணைத்துக் கொண்ட அமிர்தாவோ, இத்தனை நாட்கள் தன் மனதிற்குள் தேக்கி வைத்திருந்த விஷயத்தை வரிசையாக போட்டு உடைத்தாள்..
இப்போது அதிர்வது என்னவோ ஆத்மனின் முறையாகிப் போயிற்று..
சர்வாவை அவள் காதலிக்கவில்லை என்கிற விஷயத்தில் இருந்து அனைத்தையும் சொல்லி முடித்து,
“நான் சர்வாவை கல்யாணம் பண்ண நினைச்சது உண்மை தான்.. ஆனா அவன் மேல எனக்கு நட்பை தாண்டி இதுவரைக்கும் எந்தவொரு ஈர்ப்பும் வந்ததில்ல” என்றபடி கதறி அழுதாள்.
இதுவரை நடந்த விஷயத்தில் உள்ள கோபம், பிழைகள் எல்லாமே இப்போது ஆத்மனின் மனதிலும், மூளையிலும் படர மறுத்தது..
காரணம் அவனின் வாரிசு.. அவனின் மகவை சுமக்கும் அவனின் ஆத்மார்த்தமான காதல் உள்ள மனைவி..
“ஐ அம் சாரி ஆத்மன்” என கன்னங்களில் கண்ணீர் திறந்தோட சொன்ன அமிர்தாவின் இதழை தன் கரத்தால் மூடியவன்,
“வி ஆர் பிரெக்நென்ட்” என்றான் சந்தோஷ முகத்துடன்.
அதைக் கேட்டு தன்னவனை ஆசை தீரக் கட்டிக்கொண்டவளோ அவனின் நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள்…
சில விஷயங்களை வேண்டும் என்றே அமிர்தாவிடம் இருந்து மறைத்தான் ஆத்மன்… சில நாட்களுக்கு முன்பு ஆத்மனுக்கு அடிப்பட்டு அவன் மருத்துவனை சென்றுருந்த காரணம் இந்திரஜித்..
ஆம், தன் தங்கையை வலுக்கட்டாயமாக அடைந்த விஷயம் இந்திரஜித்திற்கு தெரிந்து விட அவன் தான் கோபத்தில் ஆள் வைத்து ஆத்மனை அடித்தான்…
அவனை அடிக்க வந்த ஆளை தன் கட்டுக்குள் கொண்டு வந்த ஆத்மன், “உன்னை யார் அனுப்புனா!” என கர்ஜிக்க,
“இந்திரஜித் சார் தான் என்னை அனுப்புனாரு.. என்னை விட்டுடுங்க” என்று அவன் பயத்தில் கதற, ஆத்மனுக்கு புரிந்தது இந்திரஜித்திற்கு தான் அமிர்தாவிற்கு செய்த விஷயம் தெரிந்துவிட்டது என்று…
வேண்டும் என்றே அவனை விடுவித்தான் ஆத்மன்.. தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிய
மருத்துவரிடம் கேட்டுவிட்டு பயணம் செய்யலாம் என்கிற உத்தரவாதம் வாங்கிய பின்னர் சர்வாவின் திருமணத்திற்கு சந்தோஷத்துடன் பயணிக்கத் தயாராகினர் ஆத்மனின் குடும்பம்…
***
