பிரியாதிரு 38
அன்று இரவு சோனியா எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை…
அன்றைய நாள் வேலையை முடித்து விட்டு கிளம்ப எத்தனித்த சோனியாவுக்கு விக்னேஷ் அவளை அவனின் அறைக்கு அழைத்ததாய் ஒரு செய்தி வர, பெண்ணவளுக்கோ மனபாரம் தான் கூடியது..
முந்தைய முறை அவன் ஃபோனில் பேசிய விஷயங்கள் எல்லாம் பெண்ணவளின் நினைவுகளுக்குள் எவ்வளவு தடுத்தும் வலுக்கட்டாயமாக நுழைந்திருக்க, அவனை சந்திக்கவே வேண்டாம் என மறுத்த இதயத்தை உடைக்கவே அவளுக்கு மீண்டும் விக்னேஷிடம் இருந்து அழைப்பு வர,
‘இவன் வேணும்னே என்னைப் போட்டு இப்படி படுத்துறான்..’ என மனதில் அலறியவள் வேறு வழியின்றி அவனின் கேபினிற்குள் செல்ல,
“நான் கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சு” என தன் நாற்காலியில் சாய்வாக அமர்ந்தபடி கேட்டவனின் புருவம் உயர்ந்தது..
அவனை பார்க்கவும் அவளுக்கு முடியவில்லை அவனை பார்க்காமலும் அவளால் இருக்க முடியவில்லை…
“பத்து நாள் முடிஞ்சுது.. உங்க வேலை சூப்பரா இல்லன்னாலும் சுமாரா இருந்துச்சு” என்றபடி சில பணக் கட்டுகளை எடுத்தவன் அதை மேஜை மீது தூக்கியெறிய, பெண்ணவளுக்கு தான் அவனின் செயலில் ஏகத்துக்கும் கோபம் வந்தது…
“மைன்ட் யுவர் பிஹேவியர் மிஸ்டர் விக்னேஷ்.. நான் ஒன்னும் உங்களுக்கு அடிமை இல்ல.. உங்க கிட்ட வந்து நான் பிச்சை கேட்டும் நிக்கல.. பிச்சைக்காரங்களுக்கு கூட மரியாதையா தான் கொடுக்கணும்.. உங்களை மாதிரி” என்றவள் பேசிக் கொண்டுருக்கும் போதே,
“வாயை மூடு டி.. எனக்கு லெக்சர் எடுக்குற தகுதி எல்லாம் உனக்கு கிடையவே கிடையாது.. என்ன ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் எப்படி இருந்தனு மறந்துட்டியோ” என எகத்தாளமாக கேட்டவன்,
“உனக்கு எல்லாம் இவ்வளவு தான் மரியாதை” என்றான் அலட்சியமாக.
இவனிடம் மல்லுக்கட்டி ஜெயிக்க அவளின் உடலிலும் மனதிலும் தெம்பில்லை…
அதனால் அமைதியாக பணத்தை எடுத்து அவள் செல்ல எத்தனிக்க, “அப்புறம் சோனியா.. அந்த பென் டிரைவை பாலாவுக்கு அனுப்பிடலாமா” என நாற்காலியில் சாய்வாக சுழன்றியபடியே அவன் கேட்க, சோனியாவின் உடல் அதிர்ச்சியில் உறைந்து விட்டது…
இவ்விஷயத்தை அவன் மறந்துருக்க கூடும் என்று நினைத்து விட்ட அவளது மடத்தனத்தை இப்போது நொந்துக் கொண்டாள்..
“விக்னேஷ்… நீங்க இப்படி பண்றது ரொம்ப ரொம்ப தப்பு. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு… உங்களை நம்பி உங்க வைஃப் இருக்காங்க” என்று அவள் வேகமாக பேசிக் கொண்டு இருக்க,
அவளையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டு இருந்த விக்னேஷோ, “வைஃப் இருந்தாலும் பத்தலயே” என கைகளை கழுத்தில் வைத்து நெட்டுடைத்தான்.
“ச்ச உங்க கிட்ட பேசி புரியவைக்க நினைச்சது என் தப்பு..” என கோபத்துடன் சொன்னவளோ அந்த இடத்தை விட்டு வெளியேற எத்தனிக்க,
தன் செல்லை எடுத்து யாரிடமோ, “அந்த பென்டிரைவை அமேரிக்கால நான் சொல்ற அட்ரெஸ்க்கு அனுப்பிடு” என விக்னேஷ் சொல்லும் போது வெளியேற எத்தனித்தவளின் கால்கள் அப்படியே அசையாது சிலையாய் நின்றது..
ஆனாலும் அவள் அவ்வாறு சொல்வதறியாது திகைத்து நின்றது ஒரே ஒரு நொடி தான்..
வேகமாக விக்னேஷ் புறம் வந்து, “நீங்க எல்லாம் ஒரு மனுஷனா.. உங்களுக்கு என்ன தான் வேணும்.. ஏன் இப்படி என்னைப் போட்டு படுத்துறீங்க!” என கதறி அழுதாள்.
அவளின் கதறலை எல்லாம் கண்டு அவனின் மனம் என்ன நினைத்தது என்று அவனுக்கு மட்டும் தான் வெளிச்சம்..
ஆனால் வெளியில் என்னவோ கல் போன்று தான் தெரிந்தான்..
“வெரி சிம்பிள் சோனியா.. ஐ நீட் யூ” என்றான் தெளிவாக.. தீர்மானமாக! அதில் ஒரு உறுதியும் கூட தெரிந்தது..
அவன் சொன்னதை கேட்டு அவளின் இதயம் சுக்கு நூறாக உடைய, “நாளைக்கு நைட் என்னோட ஊட்டில ஒரு ஸ்டே.. ஒன் நைட் ஸ்டாண்ட்னு வெச்சிக்கோ” என்றான் விழுங்குவதைப் போல் பார்த்து.
கண்களில் கண்ணீர் மல்க, ‘ஏன்டா இப்படி தரம் கெட்டு நடந்துக்குற’ என கேட்க துடித்த நா தான் அவன் அவளுக்கு தொடர்ந்து கொடுக்கும் அதிர்ச்சியில் பேச்சிழந்து நிற்கிறது.
தன் குரலை செருமிக்கொண்டபடி, “நாளைக்கு ஈவ்னிங் 4 க்கு இங்க வந்துடு.. நம்ம ஊட்டி போய் பண்ண வேண்டியதை எல்லாம் ஆசை தீர பண்ணிட்டு கிளம்பிடலாம்” என்று அவன் முடிக்க,
“அசிங்கமாயில்லையா விக்னேஷ்..” என வெறுமை சூழ்ந்த குரலில் கேட்டாள் சோனியா.
“இந்த டையலாக் பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வைச்சிக்காத.. அந்த பென் டிரைவ் அமேரிக்க போகக் கூடாதுன்னா நீ வா.. அவ்வளவு தான் கிளம்பு” என அவன் அழுத்தமாக சொல்லிவிட்டுருக்க, எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்றே தெரியாத சோனியா எப்படி உறங்கினாள் எப்படி அடுத்த நாள் எழுந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
அப்படி இப்படி என மாலை நேரம் நெருங்க சோனியாவிற்கு உடலுக்குள் ஒரு நடுக்கம்..
விக்னேஷின் தீர்மானமான பேச்சிலேயே அவளுக்கு தெரிந்தது அவன் சொன்னதை செய்துவிடுவான் என்று..
அவளின் முடிந்து போன வாழ்க்கையை விட இப்போது அவளுக்கு அவளின் அண்ணனின் அழகான, இனிமையான வாழ்க்கை தான் அவளின் கண் முன்னே தெரிந்தது…
மாலை நான்கு மணி போல அவளின் இருச்சக்கர வாகனம் அந்த கிரவுண்ட்டில் வந்து நிற்க, அவளுக்காகவே காத்திருந்தது போல் காரின் உள்ளே இருந்தபடி ஹார்ன்னை அடித்தான் விக்னேஷ்..
மறத்து போன உணர்வுகளுடன் அவனின் காரில் ஏறியவள் அச்சீட்டில் சாய்ந்து கண் மூடினாள்…
அவனுடனான அந்த தனிமை அவளை ஏதோ செய்தது… அது பயமா, பதற்றமா! இல்லை நடுக்கமா எதுவென அவளுக்கே தெரியவில்லை..
அந்த தனிமையில் இருந்து தன்னை தற்காலிகமாக விடுவித்துக்கொள்ள அவள் கண்களை மூட,
“என்ன சோனியா.. பயமா இருக்குற மாதிரி நடிக்குறியா” என சுருக்கென்று கேட்டான் விக்னேஷ்.
அதில் திடுக்கிட்டு எழுந்தவள் அவனை விழித்துப் பார்க்க, “என்னை டிராப் பண்ணி உன் கூட பிளான் பண்ணி படுக்க வைச்ச நீயெல்லாம் இப்படி பயந்தாங்கோலி வேஷம் போடலாமா.. ஹுஹூம் உனக்கு இந்த ஆக்டிங் எல்லாம் கொஞ்சம் கூட செட் ஆகல” என்றான் நக்கலாக.
அவள் இப்போது முன்னால் இருந்த சோனியா இல்லை என்பதை விக்னேஷ் உணராமல் இல்லை. ஆனாலும் அவன் அனுபவித்த வலிகளை அவளுக்கு திருப்பி கொடுக்க நினைக்குறான்..
எப்படியோ அரங்கேற வேறிய அவர்களின் முதல் கூடல் அவளின் சூழ்ச்சியால் அல்லவா அவன் அவளுக்குள் மயங்கி விழுந்தான்..
தான் அவளிடம் ஏமாறிய தருணம்.. தன்னை அவள் ஏமாற்றிய தருணம் எல்லாம் அவனுள் ஆறாத வடுவாய் தழும்பாகியது.
“விக்னேஷ்.. இதுக்கு பேசாம என்னை கொன்னுடுங்க.. நான் நிம்மதியா செத்துடுவேன்.. நீங்களும் ரொம்ப நிம்மதியா இருப்பீங்க” என்றாள் கண்களில் கண்ணீர் மல்க.
“சோ உன்னால நான் அனுபவிச்ச வலிகள் எல்லாம் இப்போ நீ அனுபவிக்க மாட்ட.. யூ நோ வாட் நீ இப்பவும் பக்கா சுயநலவாதி தான் அதான் சாகணும்னு சொல்ற.. உனக்கு நீ பண்ணின தப்புக்கான தண்டனையை உயிரோட இருந்து அனுபவிக்க முடியல” என மட்டம் தட்டினான்.
அதில் பெண்ணவளின் தன்மானம் தூண்டிவிடப்பட்டு இருக்க, “அப்படி இந்த தண்டனைல இருந்து நான் எஸ்கேப் ஆக நினைச்சுருந்தா என்னிக்கோ செத்துருப்பேன்” என்றாள் ஆவேசமாக.
“ஒ அப்போ அன்னிக்கு தற்கொலை பண்ண அட்டெம்ப்ட் பண்ணது யாரு உன்னோட டிவின் சிஸ்டரா” என நக்கலாக அவன் கேட்ட விதத்தில் சோனியாவால் பதில் சொல்லவே முடியவில்லை.
“சொல்லு.. என்ன பதிலயே காணும்” என அதட்டினான் விக்னேஷ்.
“அதுக்கு அப்புறம் நான் ரொம்ப ஸ்ட்ராங் விக்னேஷ்.. நீங்க இவ்வளவு அடிச்சும் தான் தாங்குறேன் தானே.. பாருங்க” என பாசாங்கன புன்னகையை அவள் விடுத்தாலும் அவளின் கண்களில் தெரிந்த வலி, வந்துவிடுவேன் என்று நிற்கும் அந்த கண்ணீர்த் துளி அவனின் ஆழ்மனது வரை சென்றடைந்தாலும் அதை அவன் வெளிப்படுத்தவில்லை.
“சோ நான் உன்னை இன்னும் எவ்வளவு ஹர்ட் பண்ணினாலும் தாங்குவ.. இனி தற்கொலை பண்ண மாட்ட அப்படித் தானே” என நக்கல் சிரிப்புடன் கேட்டான்.
அவனை முறைத்தபடி பார்த்தவள், “நான் தற்கொலை பண்ற அளவுக்கு போனா கூட அதை வைச்சு நக்கல் தான் பண்றீங்க விக்னேஷ்.. இந்த விக்னேஷை நான் காதலிக்கவே இல்லை” என்றாள் விரக்தியாக.
“ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன் நான் இப்போ இன்னொரு பொண்ணுக்கு சொந்தமானவன்.. ஹனிமூன்ல ஈருடல் ஓருயிருமா சூப்பரா கலந்துட்டோம்” என்றபடி அவன் கார் ஸ்டீயரிங்கில் தாளமிட்டு விசிலடிக்க, அவன் தனக்கு சொந்தமானவன் இல்லை என்று சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளின் இதயத்தை குத்தி கிழித்தது… அவனிடம் பேசி போராட துணிவின்றி வாயை மூடிக் கொண்டாள் சோனியா.
அதன் பின்னர் என்னவோ விக்னேஷும் அவளிடம் எதுவும் பேசவில்லை…
சோனியாவின் வீட்டில் கல்லூரி தோழியை சந்தித்து விட்டு நாளை வருவதாய் சொல்லியிருந்தாள்..
இப்படி வீட்டை ஏமாற்றி, அவளின் அண்ணனிடம் சொல்லாமல் இதை எல்லாம் ப்ரீத்தாவிற்கு தான் செய்யப் போகும் துரோகத்தை நினைத்து பெண்ணவளின் மனது குத்திக் கொண்டே இருந்தது…
கோயம்புத்தூரிலுந்து ஊட்டி செல்லும் வழிப்பாதையில் காரில் உள்ள ஏசியை ஆஃப் செய்த விக்னேஷ் சோனியாவின் வெளிறிய முகத்தைக் கண்டு காரின் விண்டோவை திறந்து விட்டான்..
சில்லென்ற காற்று பெண்ணவளின் முகத்தை தீண்ட, அதில் லயித்து சுவாசிக்க தான் அவளுக்கு முடியவில்லை..
ஆனாலும் தன்னையும் மீறி சீட்டிலேயே சாய்ந்து உறங்கி விட்டாள்…
நல்ல உறக்கத்தில் இருந்தவள் ஆணவன் தொடுகையில் சடாரென்று விழித்தாள்…
ஆம், சோனியா கண் விழிக்கும் போது விக்னேஷின் கைவளைவுக்குள் அவள் இருக்க,
“விக்னேஷ் என்ன பண்றீங்க?” என பதறினாள்…
