பிரியாதிரு 39
“உனக்கு பார்த்தா தெரியலையா என்ன!” என்றவனோ அவளைக் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் அவளை அவனின் கைகளில் அள்ளியபடியே ஹோட்டலின் அறைக்குள் சென்றான்.
அங்கிருந்த கட்டிலில் அவளை விடுவித்தவன், சீக்கிரம் குளிச்சிட்டு ரெடி ஆகு.. நான் கொடுக்குற டிரெஸ்ஸை தான் நீ போடணும்.. அப்போ தான் எனக்கு செம மூட் வரும்” என்று அவன் கண்களில் மோகத்துடன் சொல்ல,
“நீங்க சாருபாலாவோட அண்ணனா இருந்துட்டு எப்படி இவ்வளவு லோவா பிஹேவ் பண்றீங்க” என ஆதங்கத்துடன் கேட்டாள் சோனியா.
சோனியாவால் இத்தகைய விக்னேஷை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
“என்கிட்ட நீ என்ன பேசுனாலும் பதில் வராது.. தேவை இல்லாம இப்போ எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத! நைட் நிறைய ரௌண்ட் போகும் மயங்கி விழுந்துட போற.. அதனால பேசாம எனர்ஜிய சேவ் பண்ணு” என்றவனோ அவள் இருந்த அறைக் கதவை சாற்றிவிட்டு சில நொடிகளுள் ஒரு பையோடு திரும்பி வந்து,
“இதை போட்டுக்கோ..” என அவன் அப்பையை அவளிடம் கொடுக்க,
“முடியாது” என்றாள் வேகமாக.
“நீ இதை தான் போட்டு ஆகணும்” என்றான் கட்டளையாக.
“ஏன் விக்னேஷ்? எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.. இன்னொருத்தி புருஷனோட..” என்று அவள் ஆத்திரத்துடன் ஆரம்பிக்கும் போதே,
“நீ இதை தான் போடணும் தேவை இல்லாம பேசாத.. ” என பட்டென்று சொன்னவனோ, “உனக்கு ஒரு மணி நேரம் தான் டைம்.. அதுக்குள்ள கிளம்பி இருக்கணும்.. அண்ட் உன்னை ரெடி பண்ண மேக்கப் ஆர்டிஸ்ட் வருவாங்க” என்று சொல்லி விட்டு அவன் கிளம்ப,
“இதெல்லாம் டூ மச் விக்னேஷ்” என கடுப்புடன் சோனியா சொல்ல,
“ஐ டோன்ட் கேர்” என்றபடி அவனின் அறைக்குச் சென்றான் விக்னேஷ்..
தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் சோர்வாக அமர்ந்துருந்த சோனியா சற்று நேரம் தலையில் கைவத்தபடி இருந்தாள்..
எவ்வளவு மறுத்தும் அவளின் கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் நிற்க மாட்டேன் என அடம் பிடித்தது..
இந்நொடி கூட உயிரை மாய்த்து விட்டால் என்ன என்று ஒரு நொடி அவளுக்கு தோன்ற, விக்னேஷ் சற்று முன்னர் நக்கலாக பேசியது தான் அவளின் மனதிற்குள் ஓடியது…
“பொண்டாட்டிய வைச்சிட்டு தப்பு பண்றவனே நிம்மதியா இருக்கான் நம்ம எதுக்கு சாகணும்” என ரோஷத்துடன் நினைத்தவள் எவ்வளவு நேரம் தான் அப்படியே அசையாது உட்கார்ந்துருக்க முடியும்…
அவளின் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்க அப்போது தான் சுயவுணர்வுக்கு வந்தவள் பயத்தில் வேகமாக வந்து கதவைத் திறக்க, அங்கு இரண்டு பெண்கள் அவளுக்கு மேக்கப் செய்வதற்காக வந்துருந்தார்கள்…
அவர்களை உள்ளே விட்டவள் அவர்களை காத்திருக்க சொல்லிவிட்டு வேகமாக பாத்ரூமில் சென்று குளித்தாள்..
ஷவரில் நிற்கும் போது அவளுக்குள் ஆயிர எண்ணங்கள்.. அவளின் வாழ்க்கையில் விக்னேஷை அடைய அவள் என்ன என்ன திருத்துத்தனம் செய்துருக்குறாள்…
அதனால் என்னவோ தனக்கு இப்போது இப்படி ஒரு அவநிலையோ!
இப்போதைக்கு எதையும் சிந்திக்காமல் அவளின் அண்ணனின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே அவளின் மூளையில் ஓடிக்கொண்டே இருக்க, குளித்து முடித்து விட்டு அப்பையை எடுத்துப் பார்க்க அதில் ஒரு சில்க் காட்டன் புடவை இருந்தது..
‘நம்ம பண்ண போற இந்த கேவலமான வேலைக்கு இது மட்டும் தான் கேடு’ என நொந்துக் கொண்டாலும் அவளுக்கு அதை அணிவதை தாண்டி வேறு வழியில்லாமல் போக, அதை அணிந்து விட்டு வெளியில் வர,
அவளுக்கு மேக்கப் ஆரம்பிக்கப் பட்டது… அவர்கள் செய்தது லேசான மேக்கப் தான்.. ஆனாலும் சோனியா பேரழியாக ஜொலித்தாள்… அவளின் முகத்தை அவளுமே கண்ணாடியில் பார்க்கவில்லை…
மேக்கப் செய்யும் பெண்கள் அவர்களின் கடமையை முடித்து விட்டு வெளியில் சென்றுருக்க, வெறுமையில் அசையாது அமர்ந்துருந்தாள் சோனியா.
அடுத்த சில நொடிகளில் அவள் இருந்த அறைக்கதவு தட்டப்பட, பெண்ணவளின் வறுற்றுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது..
கதவு சற்று வேகமாக தட்டப்பட பதற்றத்துடன் எழுந்தவள் வந்து கதவைத் திறக்க, “வா சோனியா” என இன்முகத்துடன் அவளின் கைப் பிடித்து அழைத்து சென்றது அனன்யா தான்…
‘என்ன நடக்குது! அனன்யா எப்படி இங்க?’ என்று சோனியாவின் மூளை அதிர்ச்சியில் விழித்துக் கொண்டுருக்க, அவளுக்கு அனன்யாவிடம் கேட்க கேள்விகள் பல இருந்தாலும் அதிர்ச்சியில் நா எழவில்லை..
சோனியாவின் கைப்பிடித்தபடி சந்தோஷத்துடன் அனன்யா அழைத்துச் சென்று அந்த ஹோட்டலில் இருந்த ஒரு திறந்த கூடத்திற்கு தான்..
முன் இரவு வேளையில் அழகான மையலாக தெரிந்தது அந்த திறந்தவெளி…
ஏக்கர் கணக்கில் பெரிய இடம் எல்லாம் இல்லை..
பச்சை புல்வெளி கொண்ட லானில் ஐம்பது பேர் அமரும் அளவுக்கு வேள்ளை சேட்டர்ன் கொண்ட அழகான இருக்கையில் சோனியாவின் பெற்றொர்கள், விக்னேஷின் பெற்றொர்கள் சந்தோஷ முகத்துடன் அமர்ந்துருக்க அங்கு அமிர்தாவும் அவளின் கணவன் ஆத்மன் மற்றும் அவளின் மாமனார் மாமியாருடன் வந்திருந்தாள்…
அனைவரையும் கண்ட சோனியாவிற்கு அங்கு நடப்பது எல்லாம் என்னவென்று கூட தெரியவில்லை…
அமிர்தா குழந்தை உண்டாகி இருக்கும் விஷயம் குடும்பத்தினர் அனைவருக்கும் பெரிய சந்தோஷத்தை கொடுத்துருக்க, இப்போதோ சொல்லவே வேண்டாம்..
ரம்மியமான சூழ்நிலையில் நடக்கவிருக்கும் ரம்மியான மனநிலை அவர்களுக்கு..
“என்ன நடக்குது அனன்யா!”
ஒருவழியாக சுயவுணர்விற்கு வந்த சோனியா கேட்க,
“அதை நீங்க அவர் கிட்டயே கேளுங்க” என அவர்களுக்கு எதிரில் கைகாட்ட,
அங்கு அந்த இருக்கைகளுக்கு முன்னே சின்னதாக போடப்பட்ட மணமேடையில் பட்டு வேஷட்டி சட்டையுடன் கம்பீரமாக அமர்ந்துருந்தான் விக்னேஷ் கார்த்திக்…
அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டுருந்த சோனியாவின் கைப்பிடித்த அமிர்தா, “வா சோனியா.. போய் உட்காரு.. டைம் ஆச்சு” என்றபடி அவளை மணமேடைக்கு அவசரமாக அழைத்துச் செல்ல, அவளைத் தான் விழி அகலாமல் பார்த்துக் கொண்டுருந்தான் விக்னேஷ் கார்த்திக்.
“உட்காரு” என அமிர்தா அவளை அமரவைக்க,
“என்ன நடக்குது விக்னேஷ்” என புரியாமல் அதிர்ச்சி கலந்த கோபத்துடன் கேட்டாள் சோனியா.
“பேருக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டா உன்னை மஜா பண்ணி இன்னும் பல பல விஷயங்கள் பண்ணலாமே அதுக்குத் தான்” என்றான் பாருங்க.. அவனை கொன்றுவிடுவது போல் அக்னியாக பார்த்தாள் பெண்.
ஆனால் அவளின் பார்வையை எல்லாம் சட்டை செய்யாமல், “என்னை சைட் அடிக்குறதை விட்டுட்டு ஒழுங்கா சிரிச்ச மாதிரி போஸ் கொடு” என்றுவிட்டு அவன் திரும்பிக் கொள்ள,
“விக்னேஷ்.. ஆர் யூ கிரேசி… நீங்க ப்ரீத்தாவை கல்யாணம் பண்ணிட்டு” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
“அவ ஒரு பக்கம் நீ இன்னொரு பக்கம்.. மூனாவது பொண்டாட்டியா இரு சோனியா..” என இலகுவாக சொன்னவனை முறைத்தவளிடம், “ரொம்ப முரண்டு பிடிச்சனு வை.. பென் டிரைவ் அமேரிக்காக்கு பறந்து போயிடும்” என்றபடி தோள்களை குலுக்கினான்.
அவ்வளவு தான்.. கப் சிப் என்று வாயை மூடிக்கொண்டாள் சோனியா..
அவளின் புரியாத சிந்தனைகளுக்கு நடுவே அவளின் கழுத்தில் தாலி கட்டி அவளை மீண்டும் தன்னுடையவள் ஆக்கிக்கொண்டான் விக்னேஷ் கார்த்திக்..
விக்னேஷின் கைகளால் அவளுக்கான தாலி மீண்டும் பெண்ணவளின் கழுத்தை நிறப்ப, அவளின் குழப்பங்களையும் மீறி அவளின் கண்களில் நிம்மதியான கண்ணீர்த் துளி துளிராமல் இல்லை…
சோனியாவின் நெற்றியில் குங்குமத்தை வைக்கும் போது தான் அவளின் குழப்பமான முகத்தை கண்ட விக்னேஷ் என்ன நினைத்தானோ, “சோனியா இங்கப் பாரு” என்றவன் அழுத்தமாக அழைக்க,
குழப்பமான முகத்துடன் அவனை புரியாமல் பார்த்தவளிடம் தன் குரலை செருமியபடி, “நீ என்னோட ரெண்டாவது பொண்டாட்டி.. என்னோட முதல் பொண்டாட்டியும் நீ தான்” என்று விட்டு அவன் எழ, தன் இமைகளை கூட சிமிட்டாமல் அசைக்காமல் பேர் அதிர்ச்சியில் சிலையாய் அமர்ந்துருந்தாள் சோனியா.
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்ல மாப்பிள்ளை” என சுந்தரம் பாந்தமாக கேட்க,
“இல்ல மாமா நான் இப்போ கிளம்புனா தான் என்னால கரெக்ட்டா பிளைட்டை பிடிக்க முடியும்” என்று அவன் சொன்னதெல்லாம் சோனியாவின் காதுகளில் விழுந்தாலும் அவளால் அதை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.. ஏனெனில் அவளின் மூளை தான் உறைநிலையில் இருக்கின்றதே…
அனைவரிடமும் விடைப்பெற்று விக்னேஷ் சென்றேவிட்டான்… ஆனால் சோனியா தான் இன்னும் மணமேடையை விட்டு கூட எழாமல் சிலையாய் இருந்தாள்…
“சோனியா எழுந்திடு” என்றவளை அமிர்தா உலுக்கிய பின்னர் தான் சுய உணர்விற்கு வந்தவளுக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது..
‘அப்போ விக்னேஷ் ப்ரீத்தாவை கல்யாணம் பண்ணலயா’ என தன்னிடமே வியப்பாக கேட்டுக் கொண்டவள் விக்னேஷை தேட,
அவளின் தேடலை உணர்ந்த அமிர்தா, “அத்தான் கிளம்பி பத்து நிமிஷம் மேல ஆகுது மேடம்.. மூனு மாசம் உனக்கு கஷ்டம் தான்” என்றபடி புன்னகைத்தாள்.
தன்னைச் சுற்றி அனைவருக்கும் ஏதோ தெரிந்திருக்கிறது.. தனக்கு ஒன்றுமே தெரியவில்லையே என இன்னொரு மனம் வெதும்பி விக்னேஷின் மேல் கோபம் தான் வந்தது…
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்து இருக்கும்…
சர்வாவின் திருமணத்தை முடித்த அமிர்தாவை கோயம்புத்தூரில் வந்து வீட்டில் தங்குமாறு விசாலாட்சி மற்றும் வரலட்சுமி அழைக்க, அமிர்தாவுக்கும் அவர்கள் ஆசையாக அழைக்கும் போது மறுக்க முடியவில்லை..
அன்று மருத்துவமனையில் இருந்து மனைவியை வீட்டுக்கு வந்த பின் அவளுக்கு ரெஸ்ட் அவசியம் என்று மருத்துவர் சொன்னதால் ஆத்மன் அவளின் பக்கமே செல்லவில்லை..
அடுத்த நாள் காலையே அவளுக்கு கோயம்புத்தூரில் இருந்து அழைப்பு வந்தது..
“அமிர்தா.. நீயும் மாப்பிள்ளையும் குடும்பத்தோட கிளம்பி இன்னிக்கு சாயந்தரம் ஊட்டி வர முடியுமா.. இன்னிக்கு நம்ம விக்னேஷ் தம்பிக்கும் சோனியாவுக்கும் அவசரமா கல்யாணம் நடக்க போகுது.. இது சோனியாவுக்கே சர்ப்ரைஸ் தான்.. நான் உன் அத்தைக்கு கால் அடிச்சு பேசுறேன்.. கண்டிப்பா வந்துடுடுங்க” என்றுவிட்டு கால்லை அணைத்தார் விசாலாட்சி.
அவளின் குடும்பத்தை பார்த்து எத்தனை மாதம் ஆயிற்று.. அதிலும் விக்னேஷ் மற்றும் சோனியா மறுபடியும் வாழ்க்கையில் இணையப் போகிறார்கள் என்கிற விஷயம் வேறு அவளுக்கு உற்சாகத்தை கொடுக்க, ஆத்மன் வீட்டிலும் கிளம்பி வந்துவிட்டார்கள்.
இப்போது சர்வாவின் திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் கோயம்புத்தூர் வந்துரைக்கையில் வீட்டினர் இவ்வாறு சொல்லியிருக்க ஆத்மனின் முகத்தை பார்க்காமலேயே அமிர்தா ஒத்துக்கொள்ள, அவனுக்கு தான் ஏக்கமாகிப்போனது.
கணவனுடன் கிடைத்த தனிமையில், “சாரிங்க.. இங்க பெரியம்மா ரெண்டு பேரும் ஆசையை கேட்குற போது நான் என்ன பண்ண!” என உதட்டை பிதுக்கி பாவமாக அவள் கேட்ட விதத்தில் இளகித் தான் போனான் அவளின் காதல் கணவன் ஆத்மன்.
“இரு தாராளமா இரு.. ஆனா நானும் இங்க உன் கூடவே தான் இருப்பேன்” என்றான் பாருங்க… ஆனந்த அதிர்ச்சியில் ஆடிப்போய் விட்டாள் அமிர்தா.
“யார் வீட்டுலயும் ஆத்மன் தங்கவே மாட்டேன்.. சொந்தக்காரங்க வீட்டுல கூட அவன் தங்க மாட்டான்” என கவிதா அன்றொரு நாள் சொன்னது அவளுக்கு இப்போது ஞாபகத்திற்கு வந்தது..
“என்னை அவ்வளவு லவ் பண்றீங்களா ஆத்மன்” என ஆனந்த கண்ணீருடன் அமிர்தா கேட்க,
“சும்மா இல்ல டி.. நீ ஸ்கூல் படிக்குற காலத்துல இருந்து உன்னை மட்டும் தான் சின்சியரா காதலிச்சு இருக்கேன்.. வெரி ஸ்டார்ங் லவ்” என கர்வம் கலந்த காதலுடன் அவளின் கைகளுக்குள் தன் கைகளை கோர்த்தபடி அவன் சொல்ல,
“நான் ரொம்ப லக்கி ஆத்மன்” என்றாள் மனநிறைவாக.
“சாரி அம்மு.. உன்னை என்கூட இப்படி காதலா இருக்க வைக்க, பேச வைக்க உன்னை ரொம்ப ரொம்ப அழ வைச்சிட்டேன்.. இதெல்லாமே நான் உன் மேல வைச்ச வெறித்தனமான காதல் தான் காரணம் டி” என்றான் கண்களில் காதலை தேக்கி வைத்து.
அவனின் மார்பில் தன் முகத்தை குழந்தை போல புதைத்துக்கொண்டு, “பாப்பா பிறந்த அப்புறமும் என்னை தான் நீங்க ரொம்ப லவ் பண்ணனும்” என்றாள் செல்ல கட்டளையாக.
“சரி டி என் செல்ல ராட்சசி..” என்றபடி அவளின் நுனிமூக்கை ஆசையாக கிள்ளினான் கணவன்.
சோனியா இங்கு ஊட்டியில் விக்னேஷின் வீட்டில் தான் இருக்கிறாள்…
திருமணம் நடந்த கையோடு மருமகளை அழைத்து விட்டார்கள் விக்னேஷின் பெற்றொர்கள்..
இந்திரஜித் மற்றும் சாருபாலாவும் சோனியாவிற்கு கால் செய்து வாழ்த்தை தெரிவித்தார்கள்…
தங்கையின் குழப்பமான முகத்தை கண்ட இந்திரஜித்தோ தங்கையிடம், “என்ன ஆச்சு சோனி? ஆர் யூ ஓகே!” என சந்தேகமாக கேட்க,
“அம்மா அப்பா யார் கிட்டயும் சரியா பேச முடியல ண்ணா.. விக்னேஷ் கிளம்பின உடனே அவங்களும் சாப்பிட்டு கிளம்பிட்டாங்க.. சந்தோஷமா தான் கிளம்புனாங்க.. விசாலாட்சி சித்திக்கு உடம்பு சரியல்லை குளிர் ஒத்துக்காதுனு சொன்னாங்க.. நாளைக்கு வராங்களாம் ண்ணா” என அவள் இழுக்க,
“விக்னேஷ்க்கும் ப்ரீத்தாவுக்கும் கல்யாணம் நடக்கலனு எனக்கு ஏற்கனவே தெரியும் சோனி” என்று இந்திரஜித் நிதானமாக சொல்ல,
“அண்ணா” என அதிர்ந்தே விட்டாள் சோனியா.
ஆம், அவளின் பெற்றவர்களிடமும் சரி விக்னேஷின் பெற்றவர்களிடமும் சரி விக்னேஷ் ப்ரீத்தாவின் கல்யாணம் எப்படி நின்றது என்கிற விஷயத்தை பற்றி அவள் கேட்கவில்லை..
ஏனோ அவர்களிடம் அதைப் பற்றி கேட்க அவளுக்கு சங்கடமாக இருந்தது…
“ஆமா சோனி.. உன் மனசுல தேவை இல்லாம ஹோப் கொடுக்கக் கூடாதுனு தான் சொல்லல.. பட் எவ்ரிதிங் ஹாப்பேன்ட் ஃபார் அ குட் ரீசன்..” என்றவனோ தங்கையிடம் பொதுப்படையாக நலம் விசாரித்து விட்டு கால்லை அணைக்க,
கடந்த ஒரு வாரமாக அவளின் மனதை மூளையை ஆக்கிரமித்திருந்த விக்னேஷைப் நினைவுகள் தான் பெண்ணவளை சூழ்ந்துக் கொண்டு இருந்தது..
அவனிடம் கேட்க பல கேள்விகள் இருந்தது..
மூன்று மாதங்கள் எப்படி அவனிடம் இதைப் பற்றி பேசாமல் இருக்க முடியும்..
ஆம் விக்னேஷ் சர்வதேச கால்பந்து விளையாட்டுக்காக வெளிநாடுக்கு சென்று இருக்கிறான்.
அவன் வரவே மூன்று மாதங்கள் ஆகும்.. அவனுக்கு மெசேஜ் செய்து கேட்கலாமா என நினைத்த எண்ணத்தை உடனே கைவிட்டாள்.
அதனால் அவளும் பேசவில்லை.. விக்னேஷிடம் இருந்தும் அவளுக்கு கால் வரவில்லை..
இவளுக்கு நாட்கள் இப்படி செல்ல, கடந்த இருபது நாட்களாக கோயம்புத்தூரில் இருந்தபடியே மனைவியை பார்த்துக் கொள்கிறான் ஆத்மன்.
“இப்படிப்பட்ட புருஷன் கிடைக்க நீ கொடுத்து தான் வச்சிருக்கணும் அமிர்தா.. அண்ணா ரொம்ப ஜெம்” என மனதார புகழ்ந்தாள் பவித்ரா, விஜய்யின் மனைவி.
“எங்க அண்ணனும் தான் உங்களை அவ்வளவு லவ் பண்றாரு” என்றபடி அண்ணியின் பக்கத்தில் அமர்ந்தாள் அனன்யா.
“வேண்டாம் அன்னு போயிடு” என முகத்தை திருப்பிய பவித்ராவை சமாதானப்படுத்துவதற்குள் அமிர்தாவிற்கும் அனன்யாவிற்கும் போதும் போதும் என்றானது..
இன்றோடு முழுதாக மூன்று மாதங்கள் முடிவடைந்து இருந்தது…
இன்று தான் தன்னுடைய வீட்டிற்கு விக்னேஷ் திரும்பும் நாள்..
அன்று காலையில் இருந்தே சோனியாவின் மனதிற்குள் ஏகப்பட்ட படபடப்பு, பதற்றம், பயம் எல்லாமே ஒருவிதமாய் தொற்றிக் கொண்டது.
விக்னேஷை எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம் என்கிற பயம் அவளுக்குள் ஏகமாய் சூழ்ந்தது..
விக்னேஷின் அன்னை லதா இப்போது மருமகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார்…
சோனியாவோ வீட்டில் சமையல் செய்வது வீட்டை சுத்தம் செய்வது என தன்னை முழு நேர வேலையில் ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறாள்…
அவளின் இந்த புதிய பரிமாணத்தில் விக்னேஷின் பெற்றொர்களுக்கே பெரிய ஆச்சரியம் தான்…
அன்று மாலை ஊட்டியில் உள்ள அவனின் வீட்டிற்கு வந்தடைந்தான் விக்னேஷ்…
அவனை சந்தோஷத்துடன் அவனின் பெற்றொர்கள் வரவேற்க அவர்களுக்கு பின்னால் நின்றுக் கொண்டு இருந்த சோனியாவோ எந்தவொரு உணர்வும் இன்றி அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்..
இத்தனை நாள் அவனை மனதில் சுமந்தாலும் அவனை நேரில் கண்ட நொடி அவன் அவளிடம் சொன்ன வார்த்தைகள், மிரட்டல்கள் எல்லாம் தான் அவளின் மூளையில் ஓடிக்கொண்டு இருக்கிறது…
தன் பெற்றொர்களை அன்பாக அணைத்துக் கொண்டவன் அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு சோனியாவின் அருகில் வர,
அவளுக்கோ படபடப்பு.. இப்போது தான் புதிதாக திருமணம் ஆனது போல் அவளின் மனது பயந்து, பதற்றம் அடைந்தது… ஆனால் இதையும் தாண்டி அவன் அவளின் காதலன் விக்னேஷாக அவளுக்குத் தெரியவில்லை. அந்த அந்நியமே அவளை அவனை நிமிர்வாக பார்க்க விட முடியவில்லை.
அவளின் சிந்தனைகளுக்கு இடையில் அவன் அவளை நெருங்கியிருக்க, “உ.. உங்க மேட்ச் எல்லாம் எப்படி இருந்துச்சு” என தடுமாறி திசைத்திருப்பி பேசினாள்…
“நீ எனக்கு ஒரு கால் கூட பண்ணல.. மெசேஜ்ஜும் பண்ணல அதனால ஃபைனல்ல தோத்துட்டேன்” என இலகுவாக சொல்லிவிட்டு அவன் அறை நோக்கி சென்றுவிட்டான்.
விக்னேஷின் அறையில் தான் சோனியா இத்தனை நாட்கள் இருந்தாள்.. விக்னேஷ் அந்த அறை நோக்கி செல்ல அவனின் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல், அவனின் பின்னால் ஓடிச்சென்ற சோனியா,
“நீங்களும் தான் அன்னிக்கு எதுவும் சொல்லாம.. எல்லாரையும் கூப்பிட்டு.. கல்யாணம் பண்ணி.. என் கிட்ட சொல்லாம கிளம்புனீங்க” என மூச்சு வாங்க வார்த்தைகளை வசனமாக கோர்க்க முடியாமல் திண்டாடினாள்.
“முன்னாடி எல்லாம் நான் எங்க போனாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் மெசேஜ் பண்ணுவ.. சம்டைம்ஸ் அது எனக்கு டார்ச்சரா கூட இருக்கும்.. பட் இப்போ நிறையவே மாறிட்ட” என அவளைப் பார்த்து யோசனையுடன் சொன்னவனிடம்,
“பேச்சை மாத்துறீங்க விக்னேஷ்.. எதுக்கு இதெல்லாம்.. ப்ரீத்தாவை ஏன் நீங்க கல்யாணம் பண்ணல” என்றவளிடம்,
“ஏன் எங்க அம்மா அப்பா அதைப் பத்தி சொல்லலயா?” என கேள்வி கேட்டான்.
“நான் அவங்ககிட்ட அதைப் பத்தி கேட்கல” என்றாள் எங்கோ பார்த்தபடி.
“மூனு மாசம் கழிச்சு கல்யாணமான புது புருஷன் கப் அடிச்சிட்டு வந்துருக்கான்.. அவனை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்காம செவுர பார்த்து பேசுனா என்ன அர்த்தம்” என்றவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்தபடி தன் தலையை கோத, அவன் சொன்ன விதத்தில் சோனியாவிற்கு சிரிப்பு வந்தாலும், அவள் அதை நன்றாகவே அடக்கிக் கொண்டாள்.
“அப்போ கப் அடிச்சிட்டீங்க.. கங்குராஜிலேஷன்ஸ் விக்னேஷ்” என புன்னகையுடன் சொன்னவள் மீண்டும் தன் கூண்டுக்குள் சென்று இறுக்கமான முகத்திற்கு மாறினாள்.
“இந்த விஷ் ஒரு கர்டிசிக்குத் தான்.. நான் காதலிச்ச விக்னேஷா நீங்க இப்போ இல்ல.. அதான் உங்களை கண் பார்த்து பேச முடியல.. ஐ ஹேட் யூ விக்னேஷ்..” என அவள் ஆரம்பிக்க,
“யூ ஹேட் மீ ரைட். இதுக்கு தான் இவ்வளவு பண்ணினேன்” என்றான் பாருங்க ஆடிப்போய்விட்டாள் சோனியா.
“எஸ்.. அன்னிக்கு நீ டைவர்ஸ் பேப்பர் சைன் பண்ணி கொடுத்த போது என்னால அதை அக்செக்ட் பண்ணிக்கவே முடியல..”
“அஃப்கோர்ஸ் நான் தான் உன்கிட்ட விவாகரத்து கேட்டேன்.. என்னால அப்போ நீ பண்ணின காரியத்துக்கு எல்லாம் உன்னை பொண்டாட்டியா ஏத்துக்க முடியல.. அத் தி சேம் டைம் நீ விவாகரத்துக்கு சரினு சைன் பண்ணி தரும் போது என்னால அதையும் ஏத்துக்க முடியல..”
“நீ சைன் பண்ணி கொடுத்த கோபத்துல தான் நான் ப்ரீத்தாவை கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னேன்.. வீம்புல சொன்ன விஷயம் கல்யாணம் வரை வந்துடுச்சு..”
“நீ அங்க ஜெய்ப்பூர் வரலன்னா முதல் நாளே நான் கல்யாணத்தை நிறுத்துருப்பேன்.. அங்கேயும் வந்து உனக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி நீ சுத்திக்கிட்டு இருந்த.. அதுல எனக்கு ரொம்ப கோபம் ஏறி வீம்பு ஏறி அப்படியே ஓட்டுனேன்.. ஃபைனலி கல்யாணத்துக்கு முந்தின நாள் மிட் நைட் நானே கல்யாணத்தை நிறுத்திட்டேன்.”
“ப்ரீத்தாவுக்கும் புரிஞ்சுது.. உங்களை கல்யாணம் பண்ணி வாழ்ந்தாலும் திடீர்ன்று என்னை விட்டுட்டு போக மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்னு சொல்லி அவ கசின் விரேன் சர்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா..!”
விக்னேஷ் பேச பேச தன் கண்களை பெரிதாக விரித்து அதிர்ந்து பார்த்தாள் சோனியா…
“பட் அவ என் கிட்ட கேட்டது ஒன்னே ஒன்னு தான்.. உங்க மனசுல இன்னும் சோனியா தான் இருக்காளான்னு…”
“அந்த நிமிஷம் வரைக்குமே ப்ரீத்தாவை ஒரு துளி கூட என்னால ஏத்துக்கல முடியல.. அதே போல உன்னையும் என்னால முழு மனசா ஏத்துக்க முடியல..”
“அவ கிட்ட அன்ஸ்சரே சொல்லாம வந்துட்டேன்.. அவளோட அப்பா அம்மா வந்துருந்தவங்க எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டு வந்தேன்.. அவ அம்மாவும் அப்பாவும் அவரோட பொண்ணு வாழ்க்கையை நான் கல்யாணம் பண்ணி ஏமாத்தாம விட்டதே சந்தோஷம்ன்னு சொல்லிட்டாங்க.. நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்பு சோனியா..” என்றவன் என்ன நினைத்தானோ பட்டென அவளின் கைகளை தன் கைகளுக்குள் வைத்து,
“ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்றேன்னு ஹோப் கொடுத்துட்டு அவளை ஏமாத்திட்டு கல்யாணத்தை நிறுத்திட்டு வந்துட்டேன் சோனியா.. உனக்காக! இல்ல எனக்காக.. உன் இடத்துல என்னால யாரையும் வைச்சு பாக்க முடியல டி!” என்று சொல்லும் போதே சோனியாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி கன்னத்தைத் தொட்டது…
“ஸ்டில் கல்யாணத்தை நிறுத்துனாலும் அப்போ உன்னை அக்செப்ட் பண்ற மனநிலை எனக்கு இல்ல.. உன்னை நான் வார்த்தையால நிறைய துன்புறுத்தி இருக்கேன்.. நிறைய பொய் சொல்லி உன்னை காயப்படுத்திருக்கேன்.. ஏன்னு தெரியுமா! நான் அப்படி உன்னை ஹர்ட் பண்ணினால் தான் நீ எனக்கு பண்ணின துரோகத்தை எல்லாம் மறந்து நான் உனக்கு பண்ணின தப்புகள் மட்டுமே என் ஞாபகத்துல இருந்தால் மட்டும் தான் என்னால உன்னை ஏத்துக்க முடியும்னு தோணுச்சு!”
“சோ நான் நினைச்ச போலவே நீ என்னை ஹேட் பண்ற அளவுக்கு நான் நடந்துக்குட்டேன்.. இத்தனை நாள் உன்னை காயப்படுத்துனதுல உன்னை விட நான் தான் டி நிறைய சித்திரவதையை அனுபவிச்சேன்” என்றவனோ அவளை கைகளை விடுவித்து சோர்வாக கட்டிலில் அமர்ந்தான்.
அவன் சொன்னதை எல்லாம் உள்வாங்கவே பெண்ணவளுக்கு சற்று நேரம் எடுத்தது…
அவளின் மூளை எல்லாம் வலித்தது…
தன்னால், தன்னுடைய கடந்த கால துரோகத்தால் தன்னவன் அவனையே கெட்டவனாக்கி தன்னை துன்புறுத்தி அதை விட அவன் அதில் துன்பப்பட்டு.. அவளால் அதற்கு மேல் எண்ண முடியவில்லை…
“என்னை மன்னிச்சுருங்க விக்கி.. நான் பண்ணின எல்லாத் தப்புகளுக்கும் என்னை மன்னிச்சுருங்க” என கதறியபடி அவனின் கால்மாட்டில் விழுந்து அமர்ந்து அவனின் கால்களை இறுக்கமாக கட்டிக் கொண்டபடி அழுதாள் சோனியா..
அவளின் கதறல் அழுகையை தடுக்காது அமர்ந்து இருந்தவனின் மனதிலோ இந்த நொடியே அவளின் மொத்த துன்பமும், துயரமும் அழுகையாய் வெளியே வரட்டும் என அசைவற்று தான் அமர்ந்து இருந்தான் விக்னேஷ்.
நேரம் செல்ல செல்ல அவளின் கதறல் அழுகை விசும்பலாக மாறினாலும் அவனின் கால்களை இறுக்கி கொண்டுருந்ததை அவள் விடுவதாய் இல்லை…
தீடீரென அவனை விட்டு விலகியவள், “நீங்க என்னை என்ன வேணாலும் பேசியிருக்கலாம்.. பண்ணிருக்கலாம்.. ஆனா என் அண்ணா.. உங்க தங்கச்சி.. அந்த விஷயத்தை மட்டும் என்னால மன்னிக்கவே முடியாது விக்னேஷ்.. அதைப் பத்தி இப்போ நினைச்சாலும் ரொம்ப அருவருப்பா இருக்கு” என்று அவள் வேகமாக சொல்ல,
அதே வேகத்துடன் தன்னுடைய கப்போர்ட்டில் அவன் வைத்திருந்த ஒரு பென்டிரைவை எடுத்து சோனியாவின் கைப்பிடித்து அதில் திணித்தவன், “இதை பிளே பண்ணி பாத்துட்டு என் கிட்ட பேசு” என சொல்லும் போதே அவனின் குரலிலும் கரகரப்பு தென்பட்டது.
“இது..” என புரியாமல் சிவந்த மூக்குடன் அவள் விழிக்க,
“உன் அண்ணாவோடது தான்..” என சன்னமான குரலில் சொன்னான்.
அவளின் கைகள் நடுங்க, “நா..நான் எ.. எப்படி விக்னேஷ்!” என்றவளின் குரல் தடுமாறினாலும் அவளின் த்தொனியும் முகபாவனையும் கோபத்தை தான் காட்டியது.
“இதை பாத்துட்டு வந்து என்கிட்ட பேசு சோனியா.. தட்ஸ் இட்” என அமைதியாக ஆனால் அழுத்தமாக சொல்லிவிட்டு எழுந்தவன் குளிக்கச் சென்றுவிட்டான்.
அவனின் மன அழுத்தத்திற்கு இந்த குளியல் கண்டிப்பாக தேவைப்பட்டது.
அவ்வாறு சொல்லிவிட்டு சென்ற கணவனை தீயென முறைத்தவளின் கைகளில் அப்பெண்டிரைவ் அழுத்தப்பட, அவளுக்கு அந்த ஏசி குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது..
ஒரு தங்கையாக அவள் எப்படி இத்தகைய வீடியோவை பார்ப்பாள்.. அவளால் இந்த விஷயத்தை வைத்து தன்னை கேவலமாக மிரட்டிய விக்னேஷை கொஞ்சம் கூட மன்னிக்க முடியவில்லை…
ரொம்ப நேரமாக தன் கையில் இருந்த பென் டிரைவை வெறித்து பார்த்தவள், ‘பேசாம இந்த பென்டிரைவை எரிச்சிடலாம்’ என முடிவெடுத்து அவளின் அறையை விட்டு செல்ல எத்தனிக்க,
இடுப்பில் துண்டுடன் வெளியே வந்த விக்னேஷ் அவனது கணீர் குரலில், “என்ன பண்ற?” என்று கேட்க அதில் திடுக்கிட்ட சோனியா,
“இனஃப் விக்னேஷ்.. எவ்வளவு தைரியம் இருந்தா என் அண்ணனோட…” என நிறுத்தியவள், “இதை நான் எறிக்கப் போறேன்” என மூக்கு சிவக்க அதீத கோபத்தில் சொன்னவளின் கைகளில் இருந்து பட்டென்று எடுத்தவன்,
“சரி நீ பாக்க வேண்டாம் நானே போட்டு காட்றேன்” என்றபடியே வேகமாக அவனது கம்ப்யூட்டரில் மாட்ட,
கோபத்தில் அந்த அறையை விட்டு வெளியேற எத்தனித்தாள் சோனியா.
அதற்கு விடுவானா விக்னேஷ்… அவளை தன் கைவளைவிற்குள் சிறை செய்து,
“பாத்துட்டு என் கிட்ட பேசு டி” என்றபடி அவளின் முகத்தை சிஷ்டம் நோக்கி வலுக்கட்டாயமாக திருப்ப, கண்களை இறுக்க மூடிக்கொண்டாள் சோனியா..
விக்னேஷிடம் இருந்து விடுபட திமிறிக் கொண்டுருந்தவளின் செவி மூடப்படவில்லை தானே..
அதனால் தாராளமாக வீடியோவில் நடக்கும் விஷயம் கேட்டது..
“வெல்கம் லேடீஸ் அண்ட் ஜென்ட்டில்மேன்” என்று கம்பீரமான குரலில் அவளின் அண்ணன் இந்திரஜித் குரல் கேட்க, பட்டென்று கண்களைத் திறந்தாள் சோனியா.
அமேரிக்காவில் மூன்று மாதங்களுக்கு முன் உலகளாவிய கான்ஃபரன்ஸ் ஒன்றில் இந்திரஜித் கொடுத்த ஸ்பீச் உலகம் முழுதும் டிரென்ட் ஆகி வைரல் ஆனது…
அதைக் கண்டு அதிர்ந்தவளிடம், “நீ என் கூட ஊட்டிக்கு வரலன்னா இந்த வீடியோவைத் தான் அமேரிக்காவுக்கு கொரியர் அனுப்பியிருப்பேன்” என்றான் பாருங்க…
சட்டென்று அவளின் முகம் மலர்ந்தது..
“யூ சீட்” என செல்லமான கோபத்துடன் அவனின் முகுகில் தட்டியவளை,
“நான் சீட் தான்.. ஆனா நீ கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா.. இந்த விக்னேஷால அப்படி பண்ண முடியுமா.. இல்ல உன் அண்ணன் கிட்ட தான் யாராவது மோத முடியுமா.. நீ எதையுமே யோசிக்காம விட்டதை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்… ஆனாலும் நான் அந்த மாதிரி மிரட்டினது தப்பு தான்.. வேணும்னா அது பனிஷ்மென்ட்டா உனக்கு நூறு கிஸ் பண்றேன்” என விஷமமாக சொன்னவனை வேகமாக கட்டிக்கொண்டவள்,
அவனின் காதை கடித்தபடி “ஃப்ராடு பையா..” என்று சொன்னது தான் தாமதம்.. இத்தனை நாட்கள் தான் அனுபவித்த பிரிவை, வலியை, வேதனையை, காதலை எல்லாம் ஒரே இதழ் முத்தத்தில் காட்டினான் விக்னேஷ் கார்த்திக்…
நீண்ட நேரமாக அவளின் இதழில் தேன் எடுத்தவன் அவளின் கண்களை ஆழமாக பார்த்து, “இனி எப்போவும் எனை நீ பிரியாதிரு” என்று இறுக்கமாக கட்டிக் கொண்டான்.
அன்றைய இரவில் இத்தனை நாட்கள் தன்னவள் மீது வைத்திருந்த ஆசையை, காதலை, காமத்தை, மோகத்தை எல்லாம் அவளிடம் சொல்லி அவளை வெட்கப்பட வைத்து அவளை காதல் கலந்த காமத்துடன் ஆண்டு அவளுள் தன் ஆளுமையைக் காட்டினான் விக்னேஷ்.
இழந்த சந்தொஷம் எல்லாம் ஒரே நாளில் கிடைத்த நொடி அவனின் காதலிலும், காமத்திலும் திக்கு முக்கு ஆடிப்போனாள் விக்னேஷின் சோனியா.
ஆறு மாதங்கள் கடந்திருந்தது…
விக்னேஷின் வீடே கோலாகலமாக இருந்தது..
பின்னே அவனின் காதல் மனைவி சோனியா கருவுற்று இருக்கிறாள் அல்லவா…
இன்று அவளுக்கு வளைகாப்பு..
அவர்களின் சொந்தங்கள் அனைத்தும் அங்பு கூடியிருக்க, அமிர்தா நிறைமாதம் என்பதால் அவளால் வர முடியவில்லை..
லட்சுமி பாட்டி, இந்திரஜித் மற்றும் சாருபாலா அமேரிக்காவில் இருப்பதால் அவர்களாலும் இங்கு வரமுடியவில்லை..
அவர்கள் விழாவை காண வேண்டும் என்றே லைவ் வீடியோ அக்செஸ் கொடுத்துருந்தான் விக்னேஷ் கார்த்திக்.
அமிர்தாவின் மாமனார் மற்றும் மாமியார் வந்துருந்தார்கள்… அமிர்தா இப்போது கோயம்புத்தூரில் தான் இருக்கிறாள். அவளுக்கு வீட்டில் துணையாய் ஆத்மன் இருந்து பார்த்துக் கொள்கிறான்.
“அங்க தான் ஆத்மன் மாப்பிள்ளை நம்ம அம்முவை தாங்குறாருன்னு பார்த்தா இங்க விக்னேஷ் மாப்பிள்ளையும் சோனியாவை தாங்கு தாங்குனுல தாங்குறாரு” என நெகிழ்ந்தார் விசாலாட்சி.
“எல்லாரும் உங்க மகனை மாதிரி இருப்பாங்களா அத்தை” என பெருமூச்சுவிட்ட மருமகளை சோர்வாக பார்த்தார் விசாலாட்சி.
அதை உணர்ந்த பவித்ராவோ, “அங்க பாருங்க சோனியாவுக்கும் விக்னேஷ் அண்ணாவுக்கும் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு.. சுத்தி தான் போடணும்” என அவளே பேச்சை மாற்றினாள்.
ஆம் பச்சை வண்ணப் பட்டில் சோனியா கருவுற்று இருக்க இன்னுமே அவளின் அழகின் பொழிவு கூடி பேரழகியாய் காட்சியளிக்க, அவளின் பக்கத்தில் அவளின் கைகளை கோர்த்தபடி பட்டு வேஷ்ட்டி சட்டையில் ராஜகுமாரன் போல இருந்தான் அவளின் மணவாளன்…
வந்தவர்கள் அனைவரும் அவளை மனமார வாழ்த்த ஆனந்தத்தில் அவளின் கண்களில் நீர் பூத்தது..
மனைவியின் கண்ணீரைப் பார்த்து, “என்னாச்சு டி!” என பதறினான் விக்னேஷ்.
தன் மேடிற்ற வயிற்றைத் தடவி, “சாரி விக்கி.. இவனை பொக்கிஷமா பாத்துப்பேன்” என்றாள் உறுதியாக.
“நீ முதல்ல உன்னை பத்திரமா பாத்துக்கோ.. என் பொண்ணு ராணி மாதிரி இருப்பா” என்றவனோ மனைவியின் கைகளில் ஆதரவாக அழுத்தத்தைக் கொடுத்தான்.
வளைகாப்பு முடிந்த பின்னர் சோனியாவை கோயம்புத்தூர் அழைத்துச் செல்ல அவளின் வீட்டினர் தயாராக இருக்க, விக்னேஷோ மனைவியை விட மாட்டேன் என முடிவாக நின்றான்.
“விக்கி..ப்ளிஸ்! அம்மா வீட்டுக்கு நான் இப்போ கிளம்புறது தானே முறை” என அவள் மென்மையாக சொல்ல,
“நான் நெக்ஸ்ட் வீக் கோயம்புத்தூர் வருவேன் அப்போ உன்னை நானே கூட்டிட்டு போறேன் டி.. இப்போ வேணாமே” என்று அவன் ஏக்கமாக கெஞ்ச,
தன்னவனின் நெஞ்சில் சாய்ந்த சோனியாவோ, “அவங்க பாவம் விக்கி” என சமாதானப்படுத்தினாள்.
“அப்போ நான் பாவம் இல்லயா டி.. ஒருவாரம் நீ இல்லாம எப்படி நான் தூங்குவேன்” என்றான் செல்லக் கோபத்துடன்.
பின் விக்னேஷை சமாதானம் செய்து சோனியா அவர்களுடன் கிளம்புவதற்குள் போதும் போதும் என்றானது.
அடுத்த இருபது நாளில் அமிர்தாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது..
அவ்வளவு தான் ஆத்மன் கோயம்புத்தூரிலேயே மனைவி மற்றும் மகளுடன் தங்க ஆரம்பித்து விட்டான்.
இங்கே விக்னேஷும் மனைவி வீட்டில் வந்து தங்கிவிட, தங்கள் மகள்கள் மீது மாப்பிள்ளைகள் வைத்துருக்கும் பாசத்தைப் பார்த்து சொக்கித் தான் போனார்கள் சுந்தரம் மற்றும் வரலட்சுமி…
அடுத்த மூன்றரை மாதத்தில் சோனியாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது…
தன் குழந்தையை கையில் வாங்கிய அந்த நொடி விக்னேஷின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்…
குழந்தையை அள்ளி முத்தமிட்டவனின் மனது மனைவியைத் தேடி ஓடியது…
அவள் மயக்கத்தில் இருந்தாலும் அவளை தன் மனதில் நிறப்பிக் கொண்டான்..
பிள்ளைக்கு சோனியா பால் கொடுத்த பின்னர் தானே பார்த்துக் கொள்வதாய் அடம்பிடித்து அதை சீராக செய்யவும் செய்து காட்டினான் விக்னேஷ்.
மொத்தத்தில் விக்னேஷ் மற்றும் ஆத்மனின் வாழ்க்கை அவர்களின் குடும்பங்களுடன் இனிமையாய் அழகாய் நகர்ந்தது..
இப்படியே அவர்களின் வாழ்வில் வண்ணங்கள் மலர்ந்து கொண்டே இருக்க வாழ்த்தி விடைபெறுவோம்…
சுபம்
(அஷ்வின் அனன்யா மற்றும் விஜய் பவித்ராவின் கதை விரைவில் வரும்.)
உங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றிகள்.
