January 22, 2026

அத்தியாயம் 42

“ஆ… ரேஷ் என்ன ஆச்சு, நான் ஆபிஸில் இருக்கிறேன்” என்று யமுனா கூறும்போது,  “யம்மு, ஆராதனா அழுதுட்டே இருக்கா. பாட்டில் பால் குடிக்க மாட்டுறா, சோறு ஊட்டுனா சாப்பிடலை. பாவம் பிள்ளை பதினைந்து நிமிஷமா விடாமல் அழுறா” என்று கூறும்போதே யமுனாவின் கண்களில் கண்ணீர் கொட்டியது.  “யம்மு லைன்ல இருக்கியா? அம்மா ஃபோனில் சொன்னாங்க, நீ தாய்ப்பால் கொடுக்கும் நேரம் இதுன்னு. ஒரு அரை மணி நேரம் பெர்மிஷன் போட்டு வந்து பால் குடுத்துட்டு போடீ” என்றாள் […]

அத்தியாயம் 42 Read More »

அத்தியாயம் 41

“என்ன ஷிரீஜா மேடம், உங்களுடைய அக்கவுண்ட்டிற்கு வாய் இல்லையா? நீங்களே பேசிக்கொண்டு இருக்கீங்க. அவங்களை வேலையில் வைக்கணுமா வேண்டாமா?” என்று நக்கல் தொனியில் தேவ் பேசிய விதம், ஷிரீஜாவிற்கே வருத்தத்தைக் கொடுத்தது. “சாரி சார், அது வந்து கைக்குழந்தை வெச்சிட்டு இருக்கா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க” என்று ஷிரீஜா கூறியபோது அதிர்ந்த தேவ், அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “கணவன் வெளிநாடுன்னு சொல்றீங்க? அப்போது எதுக்கு மேடம் மிஸஸ் யமுனா கைக்குழந்தையுடன் கையேந்திட்டு நிற்க வேண்டும்?” என்று

அத்தியாயம் 41 Read More »

அத்தியாயம் 40

“பிரனிதா, இதை தேவ் உன்னிடம் தரச் சொன்னான்” என்று செக்கைக் கொடுத்தவர், “ஆதிரா இனி உன்னோடு இருக்கட்டும்” என்று கூறும்போதே அவரின் கண்கள் கலங்கியது. வேறு வழி இல்லை என்று தெரிந்த பின்னர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையை அவள் கையில் வாங்கியவர், முத்தமிட்டு திரும்பி பிரனிதாவிடம் கொடுத்தார்.  ‘தங்களின் கைக்குள்ளேயே வளர்ந்த குழந்தை, இப்போது தங்களைவிட்டு போகிறது என்றால் மனது எவ்வளவு கனமாக இருக்கும்? இன்னும் இந்த விஷயம் பிரியாவிற்கும் குணாவிற்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தால்,

அத்தியாயம் 40 Read More »

அத்தியாயம் 39

 யமுனா சென்றபின் தேவ், ‘போய்டுடீ என்னை விட்டு… என் கூட காதலில் சேராமல் உடம்பிற்காகச் சேர்ந்தேன் என்று சொல்லிட்டு, என்னை கொன்னுட்ட!’ என்று வெறுமையாக நினைத்தான். ஆனால் யமுனா தேவ்வின் மேல் கொண்ட காதலால் தான், தேவ்வோடு சங்கமித்தாள் என்பதை யமுனா சொல்லாமல் தேவ் எப்படி அறிவான்.  சீதாலட்சுமி வெளியே வந்து யமுனாவைத் தேடிக்கொண்டிருந்தபோது, “அம்மா, யமுனா போய்ட்டா… இனி இங்கு வர மாட்டாள். அவளைப் பற்றி இனி என்னிடம் பேசாதீர்கள்” என்று கூறிவிட்டு வெளியே சென்ற

அத்தியாயம் 39 Read More »

அத்தியாயம் 38

தன் அம்மாவை அழைத்து, ஆதிராவை வெளியே எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டு, “வேற என்ன சொல்ல சொல்ற? எனக்கு நீ பிறக்கவில்லை என்று என்னால் கூற முடியாது. அதற்காக உன்னையும் விட்டுக் கொடுக்க முடியாது. பிரனிதா ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறாள், நான் அவளுக்கு பணத்தைக் கூட கொடுக்கத் தயார்.  ஆனால், அவள் வாங்கத் தயாரில்லை. அவளுக்கு குழந்தை வேண்டுமென தீர்மானமாக இருக்கின்றாள். இந்த விஷயத்தில் நான் ஒரு அந்நியன் ஆகிட்டேன் யமுனா. ஆதிராவின் அப்பா நான் இல்லாமல்,

அத்தியாயம் 38 Read More »

அத்தியாயம் 37

அப்படியே நீண்ட நேரம் ஷவரில் அமர்ந்து அழுதவள், “யமுனா… கதவைத் திற, எவ்வளவு நேரமாய் குளிச்சிட்டு இருக்க?” என்ற தேவ்வின் சத்தத்தைக் கேட்டு பதறியவள், மடமடவென ஷவரை ஆஃப் செய்துவிட்டு கண்களைத் துடைத்தாள். அங்கு இருந்த டவலை தலையில் கட்டி, உடையை அணிந்து கதவின் மேல் கையை வைத்தவள், எப்படி தேவ்வை எதிர்கொள்ள போகிறோம் என்று நினைத்து ஒரு பெருமூச்சுவிட்டு கதவைத் திறந்தாள்.  “என்ன பண்ணிட்டு இருந்த யமுனா இவ்வளவு நேரம்? ஏன் உன் முகம் ஒருமாதிரி

அத்தியாயம் 37 Read More »

அத்தியாயம் 36

“ஏங்க?” என்று அமைதியாக அழைத்தவளை ஒரு பார்வை பார்த்த தேவ், “காலையில் ஒரு ஆயிரம் தேவ் போட்டு பேசுன, இப்போது என்ன செலக்டிவ் அம்னீஷியாவா?” என்று நக்கலாகக் கேட்டான். “அம் சாரி… நான் அப்போது இருந்த நிலைமையில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன். உங்களை வேற தவறா பேசிட்டேன். நீங்கள் சொன்ன அப்புறம்தான் எனக்கு புரிஞ்சிது” என்று தயங்கினாள். ‘நீ என்னை எப்போது தான் சரியா புரிஞ்சிருக்க யமுனா?’ என்று மனதில் நினைத்தவன், யமுனாவிடம் எதுவும் கூறாமல் மறுபடியும்

அத்தியாயம் 36 Read More »

அத்தியாயம் 35

அந்த ஹோட்டலின் இரண்டாம் தளத்திற்குச் சென்றவனின் பின் பயத்தோடு சென்றவள், தேவ் ஒரு அறையைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற பின், அந்த அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றாள். “நம்முடைய முதல் சந்திப்பில் பயந்துட்டு வெளியே நின்ன மாதிரி, இப்போதும் பயந்துட்டு நிக்குறியா?” என்று நக்கலாகக் கேட்டவனிடம், “இல்லை உள்ளே வரேன்” என்று நுழைந்தாள். பணக்காரர்கள் தங்கும் பிரிமீயம் அறை போல் தோற்றம் அளித்தது அந்த அறை.  உள்ளே யமுனா வந்ததும், அவளைத் தாண்டி வந்து கதவைச் சாற்றிய

அத்தியாயம் 35 Read More »

அத்தியாயம் 34

யமுனாவிற்கு மனசு ஆறவில்லை. ‘எப்படி ஒருவரால் அவர்கள் பேசிய சுடு சொல் துன்புறித்தியதை எல்லாம் மறந்து, அவருடன் நிகழ்காலத்தில் வாழ முடியும்? அதுவும் இதுவரை தேவ்வின் வாயில் இருந்து அவன் யமுனாவிற்கு செய்த கொடுமைகளை மனதில் நினைத்து, ஒரு சாரி கூட வராமல் இருக்கும் நிலையில், தேவ்வின் இந்த அணைப்பு மற்றும் அவன் தற்போது கூறிய வார்த்தைகள் யமுனாவிற்கு எரிச்சலாக இருந்தது. தேவ்வின் அறைக்கு அவள் காஃபி எடுத்துச் சென்ற போது, அவன் ஏதோ ஆங்கில நாவலை

அத்தியாயம் 34 Read More »

அத்தியாயம் 33

“யமுனா நீ ஆதிராவைத் தூக்கிட்டு உள்ளே வா” என்று தன் அறைக்குள் சென்றான் தேவ். அவனை பின்னால் இருந்து முறைத்த யமுனா மனதில், ‘மத்தவங்க கதையைப் பார்க்க இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு. ஆனால் நம்ம கதையைப் பார்த்தா பயமா இருக்கே’ என்று எண்ணியவள் ஆதிராவைத் தூக்கச் சென்றாள். ஆனால் ஆதிரா அவளிடம் வராமல் அழுதாள்.  என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த யமுனா, ஆதிராவிடம் சென்று, “ஆதிரா குட்டி, நீங்க இப்போது அம்மா கிட்ட வந்தா நான் நிறைய கதைகள்

அத்தியாயம் 33 Read More »

error: Content copy warning!!