அத்தியாயம் 32
‘இந்த அத்தை நல்லவங்க தான், ஆனாலும் நமக்கு பிரச்சனை தான், தேவ்வை உசுப்பேத்தி விட்டுட்டாங்க. இவன் சும்மாவே ஆடுவான், இப்போது என்ன சொல்லப் போறானோ?’ என்று மனதில் பதறியவள், தன் தலையைக் குனிந்து கொண்டாள். “நீங்க பிரியாவுடைய மாமனார், மாமியார் என்பதனால் தான் மரியாதை கொடுத்துப் பேசிட்டு இருக்கேன். என் பொண்டாட்டிக்கு நீங்க தாய்மாமாவாக இருந்தால் போதும், இந்த மாமா வேலை எல்லாம் என்னிடம் நடக்காது” என்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், “இந்த விஷயம் நீங்களா […]
