அத்தியாயம் 5
இவர்கள் பேசிய சலசலப்பிலேயே விழித்த யமுனாவிற்கு அவளுடைய செல்லிற்குக் கால் வந்தது. ஏதோ தெரியாத நம்பர் என்று தூக்க கலக்கத்திலேயே அட்டெண்ட் செய்த யமுனா, “ஹ… லோ!!!” என்று சோம்பல் முறித்தாள். “இன்றைக்குக் கல்யாணம் இருக்குனு தெரிந்தும் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க யூ இடியட் இன்னும் ஒன் ஹவர்ல நீ வடபழனி கோவில்ல இருக்கவேண்டும் இல்லன்னா என்னுடைய இன்னொரு ஃபேஸ் நீ பார்ப்ப உன்னை சும்மா விட மாட்டேன்” என்று கட் செய்து விட்டான். […]
