அன்று இரவாகி இருந்தது..
ஆத்மனின் அறையில் அமர்ந்து இருந்த அமிர்தாவோ சற்று நேரம் முன்னர் தான் அவளின் அக்கா அனன்யாவிடம் பேசி வைத்தாள்.
கவிதா கொடுத்த உடையை தான் அணிந்து இருந்தாள்..
இரவு பத்து இருக்கும்… ஆத்மன் இன்னும் வந்தபாடில்லை.
‘அவன் வருவானா மாட்டானா… எங்க போனான்!’ என்கிற யோசனையில் அவள் மனம் உழன்றுக் கொண்டு இருக்கும் போதே,
“அமிர்தா” என்றழைத்தபடி உள்ளே வந்தார் கவிதா.
“சொ.. சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள் தடுமாற்றத்துடன்.
“ஆத்மன் சிந்துஜாவோட மூவி டிஸ்கஷன்ல இருக்கான்… அவன் வர நேரம் ஆகும்.. நீ துங்கு” என்று சொல்லிவிட்டு அவர் செல்ல, அமிர்தாவிற்கு தான் மனது குபுகுபுவென எரிந்தது.
அவளுக்கு ஒருப்பொட்டு தூக்கம் வரவில்லை.
‘அந்த சிந்துஜா அவருக்கு ரொம்ப நெருக்கமா இருக்கா… அவ அவ்வளவு நெருக்கம்ன்னா என்னையே ஏன் காதலிக்குறேன்னு சொல்லிட்டு திரிஞ்சாரு…’ என யோசித்து குழம்பியவளோ அப்படியே கண் அயர்ந்து உறங்கி விட்டாள். அவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.
தாங்கள் புக் செய்த ஹோட்டல் ரூமில் குளித்து முடித்து இடுப்பில் ஈர துண்டுடன் வெளியே வந்தான் ஆத்மன். அவனையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டு இருந்தாள் சிந்துஜா.
“யு ஆர் சோ ஹாட் ஆத்மன்…” என்றவளோ அவனின் முதுகில் கோலம் போட ஆணவனின் உடம்போ சிலிர்த்தது…
“அழகை அனுபவிக்கணும் ஆத்மன்… என்னோட அழகை நீ அனுபவி” என்றவளோ அவனின் முதுகில் தன் இதழைப் படிக்க, அவ்வளவு தான் ஆத்மனின் உணர்வுகள் மேல் எழுந்தது…
சிந்துஜாவை அப்படியே தன் புறம் கொண்டு வந்தவன் அவளின் இதழை வேகமாக ஆட்கொண்டபடியே கட்டிலுக்கு செல்ல, “நோ…… நோ…”. என்ற அலறலுடன் எழுந்தாள் அமிர்தா.
அவளின் அலறலில் பக்கத்தில் உறங்கிக் கொண்டுருந்த ஆத்மனும் எழ, “என்ன ஆச்சு அமிர்தா” என அவளின் தோள்களை உலுக்கினான்.
அப்போது தான் பெண்ணவளுக்கு புரிந்தது.. தான் கண்டது கனவு என்று!
அவனை அப்படியே கண் இமைக்காமல் பார்த்தாளே தவிர எந்த பதிலும் அவள் சொல்லாமல் இருக்க, அவளுக்கு இன்னுமே கனவின் வீரியம் தாக்கம் எல்லாம் குறையவில்லை…
“அமிர்தா என்ன ஆச்சு?” என்று ஆத்மன் சற்று அதட்டலாகக் கேட்ட போது தான் தன்னிலைக்கு வந்தவள், “ஒ… ஒன்னும் இல்ல.. கெட்ட கனவு” என்றாள் தயங்கியபடி.
என்ன தான் அவளின் மீது கோபம் மலையளவு இருந்தாலும் காதல் கொண்டவன் மனம் அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவளுக்காக துடித்தது.
அங்கு மேஜையில் இருந்த தண்ணீர் நிரம்பிய குவளையை ஒரு கிளாஸ் தம்பளிரிற்கு மாற்றி அவளிடம் நீட்டி, “தண்ணீ குடி யு வில் ஃபீல் பெட்டர்” என்றான்.
“தாங்க்ஸ்” என்றவளோ அதை வேகமாக பருகி முடித்தாள்… இன்னுமே ஏன் அப்படி ஒரு கனவு வந்தது என்று அவளுள் நடுக்கம்…
அதனின் விளைவு அவளின் உடலில் மெல்லிய நடுக்கம் இருந்துக் கொண்டே இருந்தது…
அதை உணர்ந்த ஆத்மனுக்கோ அவளை அப்படியே விட தோன்றவில்லை…
“ஐ நீட் யு” என்றான் அதிகாரத் தோரணையில்.
பட்டென அவள் திரும்பி பார்க்க, அவளை தன்னோடு இறுக்கியவன் மிக மிக மென்மையாய் அவளை அணைத்தான்.
அவளின் பயத்தை, நடுக்கத்தை எப்படியாவது போக்க வேண்டும் என யோசித்தவனுக்கு இதைச் செய்தால் அதிர்ச்சியிலாவது அவளின் அந்த கனவுக்கான நடுக்கம் நிற்கும் என அவன் யூகித்திருக்க, அவளின் நடுக்கமும் அவனின் மென் தொடுகையில் நின்றது… அதிர்ச்சியில் அல்ல ஒரு பாதுகாப்பு உணர்வில்!
ஐ நீட் யு என சும்மா தானே சொன்னான் ஆத்மன்… அவளை வலுக்கட்டாயமாக அடைந்து தான் அவளை இப்போது தன் வீட்டில் மனைவியாய் வைத்திருக்கிறான்.
ஆனால் இனி அவளின் மனதில் இடம் பிடிக்காமல் அவளின் விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக அவளின் உடலைத் தீண்ட கூடாது என்று அவன் அமிர்தா வீட்டிற்குள் வரும் பொழுதே முடிவு செய்துவிட்டான்.
அவளை படுத்தபடியே தன் அணைப்பிற்குள் வைத்தவனோ அப்படியே உறங்கி விட, அமிர்தாவும் அவனின் மார்பு சூட்டில் உறங்கித் தான் போனாள்.. அதன் பின்னர் அந்த கெட்ட கனவு அவளுக்கு வரவில்லை.
காலை அமிர்தா சற்று தாமதமாக தான் விழித்தாள்… அவள் விழிக்கும் போது அங்கு ஆத்மன் இல்லை… நேற்றைய நிகழ்வு அவளுக்கு அழையா விருந்தாளியாய் சிந்தனைக்குள் ஒலிக்க, தலையைப் பிடித்து அமர்ந்தவளுக்கு அந்த கெட்ட கனவு தான் முதலில் ஞாபகத்துக்கு வந்தது…
அதை நினைக்கும் போது இப்போது கூட அவளின் உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் வந்து சென்றது.
அதன் பின்னர் ஆத்மன் அவளிடம் ‘ஐ நீட் யு’ என சொல்லிவிட்டு அவளை அவனோடு சேர்த்து அணைத்து படுத்த பின்னர் அவளுக்கு எதுவும் ஞாபகத்துக்கு இல்லை…
உடனே அவளின் கைகள் தாமாக அவளின் உடலை வருடிப் பார்த்தது… ஆனால் அவளுக்கு அதிர்ச்சி தரும் விதமாய் அவளின் ஆடைகள் அவளிடத்தில் தான் அப்படியே இருந்தது.
‘அப்போ அவன் நம்மளை எதுவுமே பண்ணலயா’ என்கிற யோசனையோடு அவள் மெதுவாக கட்டிலில் இருந்து எழ, அவளின் ஃபோன் ஒலித்தது..
அடித்தது சர்வா தான்…
‘சர்வா எதுக்கு கால் பண்றான்’ என்கிற யோசனையோடு அவள் கால்லை எடுக்க,
“உன்னை மீட் பண்ணனும் அம்மு.. அந்த ஆத்மன் பண்ணின அயோக்கியதனத்தை உன்கிட்ட சொல்லணும்” என்றான் ஆக்ரோஷமாக. சர்வா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள் அமிர்தா.
***
விக்னேஷின் அறையில் இருந்து வேகமாக வெளியேறிய பின்னர் மறந்தும் கூட சோனியா அவனின் அறைப்பக்கம் செல்லவில்லை.
விக்னேஷ் மற்றும் ப்ரீத்தாவின் சங்கீத் கொண்டாட்டம் ஆரம்பித்தது..
அதை பாற்கும் தெம்பு இல்லை என்றாலும் தன்னை திடமாக்கிக் கொள்ள அதை பார்க்கத் தொடங்கினாள் சோனியா.
சோனியா சங்கீத்தில் ஆடல் மற்றும் பாடலுடன் தோழிகளின் கிண்டலில் லயித்திருக்க, இன்னும் விக்னேஷ வந்திருக்க வில்லை.
“சோனியாவை நீங்க கிளம்ப சொன்னீங்களா” என அபினவ் சர்மாவிடம் தனிமையில் கேட்டான் விக்னேஷ்.
“அ.. அது” என தடுமாறியவரிடம்,
“அவ அவளோட வேலையை செய்ய வந்துருக்கா அவளை வெளியே அனுப்ப உங்களுக்கு ரைட்ஸ் இல்ல” என பட்டென்று சொன்னவன் சங்கீத் நடக்கும் இடத்திற்கு அதற்கே தகுந்த பைஜாமாவுடன் கம்பீரமாக செல்ல, அவனை சூழ்ந்துக் கொண்டார்கள் அவனின் ஃபுட்பால் டீம் மேட்ஸ்.
ப்ரீத்தாவோ விக்னேஷை பார்த்த சந்தோஷத்தில் நாணத்தில் அவனின் கைகளோடு தன் கைகளை கோர்த்துக் கொள்ள விக்னேஷின் கண்களோ அங்கே கண்களில் கண்ணீர் வரவா என்பது போல் பச்சை வண்ண சுடிதாரில் வந்தவர்களுக்கு பானங்கள் வழங்கிக் கொண்டுருந்த சோனியாவைத் தான் கூர்மையாக பார்த்தது…
அனைவருக்கும் பானங்கள் கொடுத்தாலும் சோனியாவின் கண்கள் விக்னேஷ் மற்றும் ப்ரீத்தாவின் நெருக்கத்தை கண்டு மனம் வருந்திக் கொண்டு தான் இருந்தது..
