பிரியாதிரு 22

ஆத்மனின் அறைக்குள் வரவே அமிர்தாவிற்கு கடுப்பாக இருந்தது..

 

இதோ சர்வாவைப் பார்த்துவிட்டு வந்து விட்டாள். 

 

ராஜேஷ் மற்றும் கவிதா அமிர்தாவை எதுவும் கேட்கவில்லை… 

 

யாரிடமும் எதுவும் பேசவில்லை அமிர்தா.. வந்ததில் இருந்து சாப்பிடவும் இல்லை… 

 

மனமெங்கும் வெங்கட் மற்றும் சர்வா சொன்னது தான் அவளுக்கு நியாபகத்தில் வந்தது… 

 

“அழாதீங்க அமிர்தா… உங்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துருக்கு! நாளைக்கு சாயந்தரம் மூனு மணிக்கு நான் சொல்ற ஸ்டுடியோக்கு வாங்க… தெலுங்கு, தமிழ் சினிமாலயே ஃபேமஸ் இயக்குனரான ஜீவன் சார் தான் உங்களுக்கு முதல்ல வாய்ப்பு கொடுத்தாரு. அதை தான் இந்த ஆத்மன் தட்டி பறிச்சான். இப்போ அவரே உங்களுக்கு மறுபடியும் வாய்ப்பு தர தயாரா இருக்காரு” என அவன் ஆர்வமாக சொல்ல, சற்று குழப்பத்துடன் விழித்தாள் அமிர்தா. 

 

“என்ன யோசிக்குற அம்மு.. நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வந்திடலாம்” என்று அவன் உறுதியாக சொல்ல, அமிர்தாவிற்கு தான் படபடப்பாக இருந்தது. 

 

ஆத்மன் மீது மலையளவு கோபம் அவளுக்கு இப்போது இருந்தாலும் இப்போது அவனுக்கு தெரியாமல் இதெல்லாம் செய்வது ஏதோ அவளுக்கு பயத்தைக் கொடுத்தது…

 

“இல்ல சர்வா நாளைக்கே” என அவள் மறுக்க ஆரம்பிக்கும் போதே, 

 

“உனக்கு இப்போ பாடுற ஆசை பெருசா இல்லன்னு நினைக்குறேன் அம்மு விடு” என்றான் சலிப்பாக. 

 

“ஹே சர்வா.. என்ன சொல்ற.. எனக்கு இப்போயும் பாட்டு தான் முக்கியம். 

எல்லாத்தையும் விட அதான் முக்கியம்” என்று அவள் வேகமாக சொல்ல, 

 

“அப்போ நாளைக்கு கிளம்பி வா.. உன்னை பத்திரமா கூட்டிட்டு போய் திருப்பி கூட்டிட்டு வரேன்.. நான் உன்” என்று நிறுத்தியவனொ, 

 

“உன் பெஸ்ட் பிரண்ட் சர்வா.. என்னை நம்பி வா அம்மு” என்றான் பாசமாக. 

 

ஆம், இன்று சர்வாவை காண காரில் அமிர்தா வந்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு நீள மெசேஜை சர்வா விற்கு அனுப்பி இருந்தாள் அமிர்தா… 

 

தன்னை இனி ஒரு நண்பியாய் மட்டுமே அவன் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்க, அவளின் அந்த நீண்ட பெரிய மெசேஜை படித்து விட்ட சர்வாவோ அதை உள்வாங்கவே நிறைய நேரம் எடுத்துக் கொண்டான்… அவளுக்கு பதிலும் தரவில்லை.. 

 

இதோ இப்போது பதில் கொடுத்து விட்டான்.. இனி உன் நண்பனாக மட்டும் இருப்பேன் என்று அவளுக்கு உத்திரவாதம் கொடுத்து விட்டான். 

 

அவனின் பதிலில் நெகிழ்ந்து போன அமிர்தாவோ, “சரி சர்வா நாளைக்கு என்னைக் கூட்டிட்டு போயிட்டு திரும்பி கூட்டிட்டு வந்திடு” என்றாள் நெகிழ்வாக. 

 

“அப்புறம் இந்த விஷயம் ஆத்மன் கிட்ட மறந்தும் சொல்லிடாதீங்க.. அப்புறம் இந்த வாய்ப்பும் பறிபோயிடும்” என்றான் வெங்கட் அவசரமாக. 

 

“ஆமா அம்மு.. அவன் கூட சண்டை போட்டாலும் நாளைக்கு எல்லாம் முடிஞ்ச அப்புறம் போட்டுக்கோ” என்றான் யோசனையாக. 

 

நடந்த எல்லாவற்றையும் அவள் நினைத்து பார்க்க, இப்போது ஆத்மனுக்கு தெரியாமல் இதை செய்வது அவளுள் ஒரு நடுக்கம் தான்.. 

 

“அமிர்தா சாப்பிட வாம்மா” என கவிதா அழைக்க வந்திருக்க, அதற்கு மேல் அமிர்தாவால் மறுக்க முடியவில்லை. 

 

தன் ஆதங்கத்தை இவரிடம் காட்டி என்ன பயன்… 

 

இன்று இரவு ஆத்மன் வந்த பின்னர் அவனின் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை என அவள் நினைத்திருக்க, ஆத்மனோ அன்று இரவு வரவே இல்லை.. 

 

யோசனையுடன் அமர்ந்தவள் முன் வந்த கவிதாவோ, “என்ன அமிர்தா தூங்கலயா!” என கேட்க, 

 

“ஆன்ட்டி அவர்” என இழுத்தாள்.

 

“ஆன்ட்டின்னு ஏன் மா கூப்பிடுற.. அத்தைனு கூப்பிடேன்” என பாசமாக சொன்னவரோ, “இன்னிக்கு ராத்திரி ஆத்மன் வர மாட்டான்.. அவனுக்கு ஏதோ பட வேலை இருக்காம்” என்று சொல்லிவிட்டு சென்றார். 

 

ரொம்ப நேரமாக உறங்காமல் இருந்த அமிர்தாவோ எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை… 

 

நாளை அவளுக்கு நடக்கப் போகும் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து அவள் தப்பித்து விடுவாளா இல்லை சிக்கி சின்னாபின்னமாகப் போகிறாளா? 

 

***

 

அன்று இரவு தனக்கான அறைக்குள் நுழைந்த சோனியாவோ எப்போதும் போல் கதவைச் சாற்றி திரும்ப, அவளின் முகத்தில் ஸ்பிரே அடித்தான் ஒரு முகமூடி மனிதன்… 

 

அதில் மயங்கிய விட்டாள் சோனியா… 

 

அரக்கு நிறத்தில் சிப்ஃபான் சேலையை அணிந்து இருந்தாள் சோனியா.. 

 

அவளின் நிறத்திற்கு அது ரொம்பவே எடுப்பாக இருந்தது… ஆளை அசத்தும் அழகில் இருந்தாள் பெண்ணவள்… அந்த மூகமூடி மனிதனோ அவளை நான் ஆட்கொள்ளும் ஆசையில் வெறியில் பார்த்தான்… 

 

ஆனாலும், “நான் சொன்னதை மட்டும் தான் நீ செய்யணும்… அவ மேல ஏதாவது கை வைச்சன்னு வை அவ அண்ணா உன்னை கொன்னு என்னையும் கொன்னு கூறுப்போட்டு தான் மறுவேளை பார்ப்பான்… 

இன்னிக்கு நான் சொன்னதை மட்டும் செய் போதும் வேலையே முடிச்சிட்டு உடனே நீ மால்டிவ்ஸ்க்கு உன் குடும்பம் குட்டியோட கிளம்பு.. அங்கே உனக்கு நான் வேலை போட்டு தரேன்” என கட்டளையாக சொன்ன ப்ரீத்தா, சோனியாவின் அறைச் சாவியைப் போல் மாதிரி ஒன்றை தயாரித்து ஒரு தடியனை உள்ளே அனுப்பி வைத்தாள்.. 

 

ப்ரீத்தாவிற்கு சோனியாவின் அண்ணன் இந்திரஜித்தை நினைத்து பயம்… 

 

அதனால் அந்த தடியனுக்கு அவ்வளவு எச்சரிக்கை கொடுத்து தான் உள்ளே அனுப்பினாள்… 

 

அந்த தடியனும் சோனியா மீது சபலப்பட்டாலும் ப்ரீத்தா சொன்னதை ஞாபகத்தில் வைத்து பயந்தவன், அவளுக்கு கால் அடித்து தான் வந்ததை சொல்லியிருக்க,

 

“சரி நான் பாத்துக்குறேன்” என்றாள் வன்மமாக. 

 

“மேடம்.. மருந்து க்கு பவர் ஒரு மணி நேரம் வரை தான் இருக்கும்… அதுக்குள்ள வந்திடு வீங்க தானே” என பதற்றத்துடன்

 

“நான் சரியா டைம்க்கு வந்திடுவேன்” என்றவள் தான் தீட்டிய திட்டத்தை நடைமுறைப் படுத்த ஆரம்பித்தாள்.. 

 

இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்பதால் இன்று ஹால்டி விழா நடந்துக் கொண்டு இருந்தது… 

 

சோனியாவையும் விக்னேஷையும் சேர்ந்து அமர வைத்து மலர்களால் தயாரான ஆபரணங்களையும், மஞ்சள் உடையையும் அணிந்து அவர்களை சுற்றி தோழிகள் பட்டாளம், இளைஞர் பட்டாளம் என குழுமியிருக்க, விக்னேஷின் கண்களோ சற்று நேரம் முன்னர் வரை தன் வேலையில் முனைப்பாக சுற்றிக் கொண்டுருந்த சோனியாவைத் தான் கண்களால் தேடியது… 

 

சோனியாவின் உடையில் ஒரு குட்டிப் பெண் பழச்சாற்றை கொட்டி விட, அதைத் துடைத்து வேறு உடை போடத் தான் சோனியா அவளின் அறைப் பக்கம் நோக்கி வந்ததே… 

 

அந்த சிறிய பெண்ணிடம் சாக்லேட் பல கொடுப்பேன் என்று சொல்லி அதை செய்ய வைத்ததே ப்ரீத்தா தான்… 

 

சோனியாவை இப்போதும் விக்னேஷ் வெறுக்கின்றான் தான்… அவள் செய்த தவறுகளை அவனால் இன்று அளவிலும் கூட மன்னிக்க முடியவில்லை… 

 

ஆனாலும் அவளின் மேல் அவ்வப்போது சாயும் உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை… 

 

கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அங்கு சோனியா இல்லை… 

 

அவளின் குழு அவளை ஒருப்பக்கம் தேட, விக்னேஷிற்கோ மனதில் எதுவோ தப்பாகப்பட்டது… 

 

இப்படியே சில நிமிடங்கள் கடந்திருக்க, ப்ரீத்தா தன் வேலையை நன்றாக செய்ய தொடங்கினாள்… 

 

“உங்க டீம் சோனியா எங்க.. அங்க மெஹந்தி ஸ்டாக் நீண்டு போச்சு.. அதை வைக்க வேண்டியது அவ பொறுப்பு தானே” என அதிகாரமாக சொல்லத் தொடங்கினாள் ப்ரீத்தா. 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!