அத்தியாயம் 18

அத்தியாயம் 18

 

“பிரகாஷ் என்ன சொல்ற… விளையாடாத?” என அவன் சொன்னதை நம்பாமல் கேட்டாள் கோதை. 

 

கோதை பிரகாஷிடம் 

பேசுவதைப் பார்த்து அந்த டீ குடித்துக்கொண்டுருந்த பெண்ணும் கோதையின் பக்கத்தில் வந்து நின்றாள். 

 

பிரகாஷ் இன்னும் தன் கையை விடாமல் இருக்க, ராதை அவனிடம் இருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். 

 

“இங்க பாரு கோதை, நீ எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட் அவ்வளவு தான். ஆனா எனக்கு ராதை மேல இருக்குறது லவ்.. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். நான் அவளைத் தான் கல்யாணம் பண்ணுவேன்… கண்டிப்பா பண்ணிப்பேன்” என்று தீர்மானமாகக் கூறினான் பிரகாஷ்.

 

அப்போது அந்த இடத்திற்கு வந்த வனிதா மற்றும் விஜய் தான் பிரகாஷை இழுத்து ராதையை விடுவித்தனர். ராதையோ அழுதுக்கொண்டே வேகமாக நடந்து காட்டேஜை நோக்கி சென்றாள். கோதையோ அதே இடத்தில் அசையாமல் நின்று அழுதுக் கொண்டிருந்தாள். 

 

“ஏய் கோதை, தெருவுல இருக்குற எல்லாருமே நம்மளை தான் ஒரு மாதிரி பாக்குறாங்க வா, எதுவா இருந்தாலும் காட்டேஜ் போய் பேசிக்கலாம்” என்றாள் அந்த டீ குடித்த பெண் யசோ என்னும் யசோதா.

 

‘இது என்ன புது என்ட்ரி?’ என்பதைப் போல் யசோதாவை அலசும் பார்வையில் பார்த்த வனிதா, ‘பொண்ணு வெயிட்டு பார்ட்டி போல, நல்லா ஸ்டைலா இருக்கே’ என மனதில் நினைத்தவள் பிரகாஷ் புறம் திரும்பி, “நான் கிளம்புறேன் அத்தான், நல்லா நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க. ஆனா ராதைக்கு உங்க மேல காதல் இல்லை” என்றபடி அவளும் காட்டேஜ் நோக்கிச் சென்றுவிட்டாள். 

 

கோதையைப் பார்க்கப் பிடிக்காமல் பிரகாஷ் விஜயுடன் காரில் ஏறி எங்கோ சென்றுவிட்டான். அங்கு இருந்த கோதை மட்டும் அழுதுக் கொண்டே இருந்தாள். 

 

“ஏய் கோதை, உன்னோட பேர்ட்டே பார்ட்டியோட உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசப் போறாங்கன்னு வீட்டுல அம்மா, அப்பா சொன்னாங்க. ஆனா இங்க வந்து பாத்தா இப்படி இருக்கு.”

 

“அன்னிக்கே அந்த அனாதை பொண்ணை வீட்டை விட்டு அனுப்பிருந்தா உனக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. இப்போ பாரு உன் வாழ்க்கைக்கே ஆப்பு வெச்சிட்டா, இப்போ என்ன பண்ண போற?” என்று கேட்ட யசோதாவிடம், 

 

“நீ சொல்றது ரொம்பவே கரெக்ட் யசோ, அவளை அன்னிக்கே வீட்டை விட்டு அனுப்பிருந்தால் இன்னிக்கு என் வாழ்க்கைக்குப் பிரச்சனை வந்திருக்காது. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என்ற கோதையோ யசோதாவுடன் காட்டேஜை நோக்கிச் சென்றாள்.

 

ராதை காட்டேஜிற்கு வரும்போதே அங்கு கோதையின் தாத்தா, பாட்டி மற்றும் மாமா, அத்தையின் சிரிப்பு சத்தம் கேட்டது. அவர்களைக் கண்டும் காணாமல் போனால் நல்லா இருக்காது என்று அனைவரிடமும் இன்முகத்தோடு, “வாங்க…” என்று வரவேற்றாள். ஆனால் அவர்கள் முகத்தில் உணர்வுகளும் இல்லை ஒப்புதலும் இல்லை. 

 

இவர்கள் இப்படித்தான் என்று தெரிந்த விஷயம் தான். அதனால் ராதைக்கு பெரிதாக மனதைப் பாதிக்கவில்லை. தன் அறைக்குள் வந்து பூட்டிக்கொண்ட ராதை அழ ஆரம்பித்தாள். 

 

பிரகாஷ் அப்படிச் செய்வான் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லையே. இன்னும் அவனால் எந்த மாதிரி எல்லாம் பிரச்சனைகள் வரப்போகிறதோ என்று அஞ்சியவள் அறியவில்லை, கோதையால் தான் அவள் வாழ்க்கையே இனி தலை கீழாக மாறப் போகிறது என்று.

 

***

 

பெங்களூரில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வி2கே ஐடி நிறுவனத்தில், அங்கு நடக்கவிருக்கும் மீட்டிங்கிற்கு எல்லாம் தயாராக இருக்கிறதா என்று ஒருமுறை சரி பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிகா. 

 

‘ஐய்யோ பாஸ் வேற 

வந்திடுவாரே, அவர் வரதுக்குள்ள இந்த பிபிடியை ரெடி பண்ணனும்’ என மனதில் படபடப்பாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அழகாக ஃபார்மல் சூட் அணிந்து வெள்ளை பொம்மைப் போல் காட்சியளித்தாள் தாரிகா. 

 

“ஏய் தாரிகா, எல்லாம் 

ரெடியா? பாஸ் இன்னும் பத்து நிமிஷத்துல இங்க இருப்பாரு. இன்னிக்கு நமக்கு ரொம்ப முக்கியமான மீட்டிங். ஏற்கனவே ஐடி அண்ட் BPO ல நம்ம தான் இந்தியாவுலயே டாப். இப்போ நம்மளோடது பிராடெக்ட் பேஸ்ட் கம்பெனியா வேற ஆகப் போகுது, எல்லாமே நம்ம பாஸோட அறிவு, தொழில் தந்திரத்தால தான்… ஹி இஸ் வெரி பிரில்லியன்ட்.”

 

 

“அதுமட்டும் இல்லாம தலைவருக்குப் பயமே கிடையாது தாரிகா. எதுக்கும் ரொம்ப தைரியசாலியா இருக்காரு. இப்படி அவரைப் பத்தி சொல்லிட்டே போகலாம். இருபத்தி ஏழு வயசுல எவ்வளவு சாணக்யத்தனமா இருக்காரு” என புகழாரம் சூட்டினான் பிரணவ். 

 

தாரிகாவோ, “அவர் பார்க்க எவ்வளவு ஹேன்ட்சமா மேன்லியா இருக்காரு, ப்பா… அவர் ஹைட் இருக்கே கண்டிப்பா ஆறு அடி மேல இருப்பாரு, எவ்வளவு ஃபிட்டா இருக்காரு. அதுலயும் இன்னிக்கு அவர் போட்டுருக்குற அந்த பிளாக் சூட்… சக்கை அழகு” என்று அவள் வருணித்துக் கொண்டுருக்க, “சரி சரி வழியாத! பாஸ் வராரு” என்று எச்சரித்தான் பிரணவ். 

 

ஆறடிக்கு மேல் உயரத்துடன் ஆண்மையின் உறைவிடம் என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு மேன்லியான தோற்றம். பெண்கள் எல்லாருமே அவனின் அழகில் வழிந்து விழும் அளவிற்கு பிரம்மிப்பு தரும் ஆணழகன். இது எல்லாத்தையும் தாண்டி புத்தி கூர்மை அதீதம் உடையவன் தான் அவன்… அவன் வம்சி வேதந்த் கிருஷ்ணா. 

 

அவனின் வருகையை கண்டதும் பிரனவ் மற்றும் தாரிகா உள்ளுக்குள் பயந்து அமைதியாகினர். “பிரணவ், வாட் இஸ் திஸ், இன்னும் ஷிவானி குரூப்ஸோட எம்டி இங்க வரல? நீ என்ன தூங்கிட்டு இருந்தியா?” என்று கடுப்பாக கேட்டான் வம்சி வேதந்த் கிருஷ்ணா.

 

“பாஸ் அது வந்து நான் மேடமோட பிஏக்கு கால் பண்ணிகிட்டே இருந்தேன் பாஸ். ஆனால் அந்தப் பொண்ணு கால்ல எடுக்கலை” என்று அவன் பம்மி சொல்லும் போதே, அந்த கான்பரன்ஸ் ரூமிற்கு அவளுடைய டீமுடன் வேக மூச்சுடன் உள்ளே நுழைந்தாள் ஷிவானி. நேரம் அதிகமானதால் ஓடி வந்திருப்பாள் போல… 

 

“சாரி வம்சி, லேட் ஆயிடுச்சு. ஷால் வி ஸ்டார்ட்” என்றாள் மனதில் உள்ள பயத்தை மறைத்து. 

 

“டோன்ட் யூ ஹேவ் மேனர்ஸ் மிஸ் சிவானி? உள்ளே வரதுக்கு முன்னாடி எக்ஸ்க்யூஸ் மீ கேட்டுட்டு வரணும்னு கூட உனக்கு தெரியாதா? வந்ததே லேட் இதுல மேனர்ஸூம் இல்ல! எனக்கு டைம் கீப் பண்ணாதவங்க கூட பிசினஸ் பண்ண பிடிக்காது” என்று கடுப்பானான் வம்சி. 

 

“ஐ அம் ரியலி சாரி வம்சி,

என் தப்பு தான். இனி இது போல கண்டிப்பா நடக்காது” என்று அவள் மறுபடியும் மன்னிப்பு கேட்ட பின் தான் வம்சி அவளை அமரவே சொன்னான்.

 

“சோ சிவானி,எல்லாருக்குமே தெரியும் வி2கே இஸ் டாப் ஒன் கம்பெனி இன் ஐடி அன்ட் BPO, உங்களோட கம்பெனியோட ப்ராடக்ட்ஸ் எந்த வகையில யுனிக்கா இருக்குனு எக்ஸ்பிளைன் பண்ணுங்க… அதை வைச்சு தான் என்னால டிசைட் பண்ண முடியும். நீங்க ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி. சோ நாங்க கன்வின்ஸ் ஆகுறதுக்கு உங்க கிட்ட நிறைய ஸ்ட்ஃப்ஸ்( stuffs) இருக்கணும்… யூ கேன் எக்ஸ்பிளைன் நவ்” என்றவனோ ஷிவானியை பார்த்தான். 

 

“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் தாங்க்ஸ் ஃபார் கிவிங் திஸ் ஆப்பர்ச்சூனிட்டி வம்சி, எங்களோட பிசினஸே ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் தான். நீங்க ஏற்கனவே ஐடி உலகத்தோட ஜாம்பவான். இப்போ நம்மகிட்ட நிறைய பிராடெக்ட்ஸ் இருக்கு. நாங்க ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி எங்களோட பிராடெக்ட்ஸ்ஸோட டெமோ பாருங்க, பிடிச்சிருந்தால் நீங்க எங்களை டேக் ஓவர் செய்யலாம்” என்று முடித்தாள் ஷிவானி.

 

வம்சியின் ஃபோன் விடாது அடித்துக்கோண்டே இருக்க அதைப் பார்த்தவனோ இப்போது சிவானி யிடம், “ஒகே பிராடெக்ட்ஸ் டெமோ நெக்ஸ்ட் மண்டே வைச்சிக்கலாம்” என்றபடி வேகமாக தன் இடத்தை விட்டு எழுந்தான். கோதை தான் அவனுக்கு போன் செய்துக் கொண்டே இருந்தாள். 

 

வம்சியோ மனதிற்குள், ‘இவ வேற கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கா’ என்று அவன் சலிப்பாக யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் ஷிவானி அங்கு இருக்கும் அனைவரையும் வெளியேச் செல்லுமாறு செய்கை காட்டினாள்.

 

அனைவரும் வெளியே நகர்ந்த பின், “வம்சி, அது வந்து… நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப் போகுது, ஆனா நீங்க என்கிட்ட அன்பா ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கிறீங்க” என வருத்தமாக கேட்டாள். 

 

“லுக் ஷிவானி! ஃபர்ஸ்ட் அன்டர்ஸ்டான்ட் நான் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணல. நீ என்னோட மாமா பொண்ணு தட்ஸ் இட். சின்ன வயசுல இருந்தே உன் கூட நான் விளையாடிருக்கேன். ஆனா எனக்கு உன் மேல அந்த மாதிரி ஃபீலிங்க்ஸ் எல்லாம் வந்ததே இல்லை. நீ எனக்கு எப்படி மாமா பொண்ணோட, அதே போல உன்னை மாதிரி ஒரு அத்தை பொண்ணும் எனக்கு இருக்கா… கோதை. அவ தான் இப்போ கூட விடாம கால் பண்ணிட்டே இருக்கா. ஷி இஸ் மை பார்ட்னர் இன் கிரைம்.”

 

“அவ என்னோட பெஸ்ட் பிரண்ட். ஆனா அவளே என்கிட்ட வந்து லவ்னு சொல்லிருந்தா கூட, எனக்கு அவ மேல காதல் வராது. லவ் இஸ் அ பியூட்டிஃபுல் ஃபீலிங் ஷிவானி. அது இன்னும் எனக்கு உன் மேல் வரல… இப்போ கூட இந்த கல்யாணத்துக்கு நான் ஓகே சொல்லாமல் இருக்குறதுக்கு ஒரே காரணம் என்னோட பாட்டி, தாத்தா.”

 

“அவங்களோட ஹெல்த் கொஞ்சம் சரி இல்லாம இருக்கு. அவங்க ரெண்டு பேருமே என்கிட்ட கெஞ்சி கேட்டதால மட்டும் தான் நான் இந்தக் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். சோ என்கிட்ட நீ காதலை எதிர்பார்த்தா அது என் தப்பு கிடையாது, உனக்கு காதல் வேணும்னா நீ இந்த கல்யாணத்தை நிறுத்திக்கோ.. ஐ டோன்ட் கேர்” என்றான் தீர்மானமாக. 

 

ஷிவானியோ, “ஐய்யோ வம்சி… நான் உங்களை அஞ்சு வருஷமா காதலிக்குறேன். நீங்க என்னோட ஹஸ்பன்ட்டா ஆனாலே அது என்னுடைய பெரிய பாக்கியம். வீட்டுல அப்பா நம்ம நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கப் போறாங்க” என்றாள் காதலுடன். 

 

வம்சியோ அதற்கு, “ம்ம்” என்று மட்டும் தலையசைக்க, 

மறுபடியும் கோதையிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. 

 

இம்முறை அழைப்பை எடுத்த வம்சி, “வாட் இஸ் திஸ் கோதை.. நான் கால் எடுக்கலன்னா மீன்ஸ் ஐ அம் பிசின்னு அரத்தம்” என்று கடுப்புடன் ஆரம்பித்தவன் அவளுக்கு அடுத்த நாள் பிறந்தநாள் என்பதனை நினைவில் கொண்டு சற்று நிதானித்தவன், “நான் இன்னிக்கு நைட் கிளம்புறேன். ஹியர்லி மார்னிங் 2 க்கு ஊட்டில இருப்பேன்” என்றான் சலிப்பாக.

 

“உன்னை தொடர்ந்து டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி க்ருஷ்… ப்ளிஸ் டா நீ சீக்கிரம் கிளம்பி வா… நீ தான் என்னோட பிரகாஷை என் கூட சேர்த்து வைக்க ஏதாவது பிளான் பண்ணனும். நீ தான் மாஸ்டர் பிரைன் ஆச்சே. என்னோட பெஸ்ட் பிரண்ட் நீ தானே. ப்ளீஸ் சீக்கிரம் கிளம்பு” என்று அழுதுக் கொண்டிருந்தாள் கோதை. 

 

“கோதை ஃபர்ஸ்ட் லிசன். எனக்கு இன்னும் டூ ஹவர்ஸ் ல பிளைட். நான் அங்க வந்து உன்கிட்ட பேசுறேன்.. யூ ஃபர்ஸ்ட் ஸ்டாப் கிரையிங்” என்றவனோ அழைப்பை கட் செய்துவிட்டான். இன்னும் ஷிவானி அங்கேயே 

நிற்பதைக் கண்டு, “வேற ஏதாவது பேசணுமா?” என்று அதட்டலாக கேட்டான். ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து விட்டு வெளியேச் சென்றுவிட்டாள் ஷிவானி.

 

***

 

பிரகாஷ் தன்னிடம் அப்படி நடந்த பின்னர் யாரிடமும் பேசாமல் தன் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள் ராதை. கோதையும் ராதையின் மேல் வன்மத்தை வளர்த்தாளே தவிர, இந்த விஷயத்தில் ராதையின் மீது தப்பே இல்லை என்பதை அவள் உணரவில்லை. 

 

பிரகாஷோ கோதையுடன் ஏற்பாடு செய்த கல்யாணப் பேச்சு நிற்கவில்லை என்றால் நாளை கோதையின் பிறந்தநாள் பார்ட்டியில் எல்லோர் முன்னிலையிலும் தான் ராதையை விரும்புவதாய் கூற முடிவு எடுத்துருந்தான். 

 

ராதை இப்படி அறைக்குள் முடங்கி கிடப்பதற்குக் 

காரணம் மைதிலியின் குடும்பம் என்று தவறாக நினைத்த பாட்டி, அவளுக்குச் சாப்பாடு உள்ளேயே கொண்டு வந்து சாப்பிட வைத்தார். வனிதாவும் ராதையிடம் பேச நினைத்தாள். ஆனால் ராதை சிறிது நேரம் தனியாக இருக்க வேண்டும் என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பியதால் அவளும் ராதையை தொந்தரவு செய்யாமல் இருந்தாள். 

 

“ஏய் கோதை, அதான் அண்ணா கிட்ட சொல்லிட்டல அவர் பாத்துப்பார். நீ கவலைப்படாத, நீ இப்படியே இருந்தா எல்லாரும் என்ன ஏதுனு கேட்டுட்டு இருப்பாங்க” என்று அவளை சமாதானப்படுத்தினாள் யசோதா. 

 

***

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!