அத்தியாயம் 20

அத்தியாயம் 20

 

வம்சி உறங்கி எழுந்திருக்கும் போது மணி பன்னிரண்டு ஆகி இருந்தது. அவன் எழுந்திருக்கும் போதே அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் கோதை. 

 

“க்ருஷ் மணி இப்போவே பன்னிரண்டு ஆயிடுச்சு, ஈவினிங் ஆறு மணிக்கு பார்ட்டி ஸ்டார்ட் ஆயிடும். சோ நம்ம சீக்கிரம் பிளான் பண்ணனும்” என்றாள் படபடப்பாக. 

 

‘ஐய்யோ இவ முழு பைத்தியமாவே ஆயிட்டா போல எந்நேரமும் கிரிமினல் மாதிரி யோசிச்சிட்டே இருக்காளே’ என்று மனதில் நினைத்தவனோ, “சொல்லு…” என்று சொல்லும் போதே அவனுடைய தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டி அவனைக் காண வந்தனர்.

 

“வம்சி டிராவல் எல்லாம் எப்படி இருந்துச்சு?” என்று கேட்டார் தந்தை சேதுராமன். 

 

“நாட் பேட் டாட்” என்றவன் தன் அன்னையைப் பார்த்து, “எனக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வாங்க ம்மா” என்று பிரஷ் செய்ய எழுந்தான். 

 

வம்சி பிரஷ் செய்து முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வரும் போது அவனின் தாத்தா, பாட்டி கோதையிடம் பேசிக்கொண்டிருந்து இருந்தார்கள். கோதைக்கும் அவர்கள் தாத்தா மற்றும் பாட்டி தானே! 

 

“ஏன் கோதை, உன் பாட்டி அந்த பொண்ணு ராதை கூட மட்டும் தான் இருக்காங்க. நீயும் அவங்களுக்கு பேத்திதானே… எப்போ பார்த்தாலும் அந்த ராதைப் பெண்ணைத் தான் செல்லம் கொஞ்சிட்டு இருக்காங்க. உன் அம்மாவும், அப்பாவும் கூட அந்த பெண்ணை அப்படித் தாங்குறாங்க” என்றார் கோதையின் பாட்டி காந்திமதி.

 

“ஆமா பாட்டி, எப்போவுமே ராதை தான் இந்த வீட்டுக்கே செல்லம்” என்றாள் கடுப்பாக.

 

“இதுக்குத் தான் கோதை சொல்லுவாங்க, ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியைத் துரத்துச்சாம்” என ஏற்றிவிட்டார் லட்சுமி.

 

காஃபியைக் பருகிக்கொண்டிருந்த வம்சி தன் அன்னை கோதையிடம் பேசுவதைப் பார்த்து, “அம்மா அவளே ஏற்கனவே கடுப்புல இருக்கா. இதுல நீங்க வேற அவளை ஏத்திவிடாதீங்க” என்றான்.

 

“சரி நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே கிளம்புங்க, நான் க்ருஷ் கிட்ட தனியா பேசணும்” என்றாள் கோதை. 

 

“அடியே பொண்ணே! அடுத்த மாசம் ஷிவானிக்கும் வேதந்துக்கும் நிச்சயதார்த்தம். இனி வேதந்த் கூட நீ தனியா பேசுறதை ஷிவானி பார்த்தால் அவ கடுப்பாயிடுவா” என்று கிண்டலடித்தார் வம்சியின் அம்மா.

 

“அத்தை, இவன் எப்போவுமே என்னோட பிரண்ட் க்ருஷ் தான். ஊர் உலகத்துக்கு இவன் வம்சி. உங்களுக்கு இவன் வேதந்த். அதே மாதிரி எனக்கு இவன் எப்போவுமே க்ருஷ் தான்” என்று கடுப்பில் ஆரம்பித்தவள் தன் உரிமையை நிலைநாட்டினாள்.

 

“சரி சரி.. விளையாட்டுக்கு தான் சொன்னேன், உன் அம்மா மைதிலி தானே என் பசங்களுக்கே பெயரை வைச்சா. கிருஷ்ண புராணம் படிச்சு என் பசங்க ரெண்டு பேருக்கும் அழகான பேரை வைச்சிருக்கா…” என்றவர், “சரி வேதந்த் இன்னும் சாப்பிடல. சீக்கிரம் பேசிட்டு அனுப்பு” என்ற லட்சுமி அனைவரையும் கிளப்பி வெளியேச் சென்றார்.

 

“க்ருஷ் இங்கப் பாரு, நான் சொல்ற பிளான் படி இன்னிக்கு நடக்கணும். ப்ளீஸ் உன்னை கெஞ்சிக் கேட்கிறேன், எனக்காக இதைப் பண்ணிடு” என்றாள் கோதை.

 

 

“சரி, நீ முதல்ல உன் பிளானைச் சொல்லு” என்ற வம்சி தன்னுடைய மொபைலில் முக்கியமான மீட்டிங் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“ஓகே, இன்னிக்கு காலையில இருந்து ராதை வெளியவே வரல. காட்டேஜ்ல தான் அடைஞ்சு கிடக்குறா. நான் ராதைக்கிட்ட பேசப் போறேன், உனக்கு என் மேல உண்மையான பாசம் இருந்தா இந்த பார்ட்டில கலந்துக்காதனு சொல்லப் போறேன். அப்படி சொன்னா ராதை கண்டிப்பா கலந்துக்க மாட்டா.” 

 

“அப்புறம் ஈவினிங் ஆறு மணிக்கு பார்ட்டி தொடங்குற நேரத்துல ராதையை நீ இருக்குற காட்டேஜ் நம்பர் அஞ்சுக்கு அனுப்பிடுவேன். அது இப்போ காலியா தானே இருக்கு. சோ ராதைக்கு டவுட் வராது. அவளும் அது காலியான காட்டேஜ்னு நம்பி அங்க வருவா…”

 

“அவளை எப்படி அங்கே அனுப்புறேன்னா, பிரகாஷ் உன்னை வலுக்கட்டாயப்படுத்த உன் ரூம்க்கே வந்துடுவான், அதனால யாரும் இல்லாத நேரத்துல வேற காட்டேஜ்ல இருனு அவகிட்ட அனுப்பி விட்டுடுவேன். அவளை யாருக்கும் தெரியாம நீ இருக்குற காட்டேஜ்க்கு அனுப்பப் போறேன்” என்றாள் கோதை.

 

தன் இருகைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டுருந்த வம்சியொ, ‘மேலே சொல்லு’ என்பது போல் சைகை காட்டினான். 

 

“அதுக்கு அப்புறம்… நீ தான் ராதையை ஏதாவது பண்ணி… பயப்பட வைக்கணும்” என தடுமாறினாள் கோதை.

 

“வாட் யூ மீன்?” என இம்முறை கத்தினான் வம்சி.

 

“அது வந்து… இல்ல கிருஷ், அவ உள்ள வந்ததும் நீ கதவை சாத்தி அவளை மிரட்டிடு… உன் மேல அவளுக்கு பயம் அதிகம்.”

 

“நீ அவக்கிட்ட சொல்லு க்ருஷ், கோதை வாழ்க்கை நல்லா இருக்கணும்னா இப்போ எல்லாரும் நம்மளைத் தேடி வருவாங்க. அப்போ நீயா தான் விருப்பப்பட்டு என் ரூம்க்கு வந்தேன்னு சொல்லணும்னு அவளை மிரட்டு ப்ளிஸ்” என்றாள் கோதை.

 

அவளை விசித்திரமாகப் பார்த்த வம்சியோ, “கிரிமினல் மாதிரி நீ யோசிக்கிற கோதை, அவ்வளவு வெறியா உனக்கு அந்த பிரகாஷ் மேல?” என்று ஆதங்கத்துடன் கேட்ட வம்சி, 

 

“சரி பண்றேன்… சோ ராதையோட நேம் கண்டிப்பா கேவலப்படும். அதுக்கு அப்புறமும் பிரகாஷ் எப்படி உன்னைக் கல்யாணம் பண்ணிப்பான்னு நம்பிக்கையா இருக்க? ஒருத்தியை வெறுத்தா இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணனும்னு லாஜிக் எல்லாம் கிடையாதே. உன் பிளான்ல நிறைய ஓட்டை இருக்கே” என்றான் வம்சி ஏளனமாக.

 

“ஐய்யோ, நான் எப்படியாவது பிரகாஷை நெருங்கிடுவேன் க்ருஷ். ப்ளிஸ் நான் இப்போ உனக்கு ஒரு வீடியோ அனுப்புறேன்” என்றவள் தான் அழுதுக் கொண்டே ஒரு செல்ஃபி வீடியோவை எடுக்க ஆரம்பித்தாள். 

 

“பிரகாஷ் இன்னிக்கு ஈவ்னிங் என்னோட பர்த்டே பார்ட்டியில் என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கலைனா… நான் இன்னிக்கு நைட்டே உயிரை விட்டுடுவேன்” என்று அழுதவள் வீடியோவை சேவ் செய்தாள். 

 

அவள் செய்வதை இரு கைகளையும் கட்டிக்கொண்டு கவனித்துக் கொண்டிருந்தான் வம்சி. 

 

“இந்த வீடியோவ உனக்கு இப்போ அனுப்புறேன். நீ அவக்கிட்ட இதைக் காட்டு, ராதை எல்லாம் சப்ப மேட்டர் க்ருஷ், எனக்காக கண்டிப்பா நீ சொல்றதை எல்லாம் பண்ணுவா” என்றாள் கோதை நம்பிக்கையாக.

 

“ம்ம் நான் என்ன சொன்னாலும் செய்வாளா?” என்று ஒருமாதிரி ஏளனமாகக் கேட்டான் வம்சி. 

 

“ஆமாம் க்ருஷ், என்னை வெச்சு அவளை மிரட்டினால் என்ன வேணும்னாலும் பண்ணுவா” என்றாள் நம்பிக்கையாக.

 

“ஃபைன்.. தட்ஸ் இட்” என்றபடி வம்சி காட்டேஜை விட்டு வெளியேச் சென்றான். 

 

அங்கு அனைவரும் மதியம் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

 

வம்சியின் மனதிலோ, ‘இந்த ராதையை பார்த்தே ஆகணுமே! பத்து வருஷம் முன்னாடி பாத்தது! அப்போவே பெரிய இவ மாதிரி விளையாடக் கூப்பிடுவா’ என அவளைத் தேடிய கண்களில் தென்பட்டது என்னவோ வனிதா தான்.

 

‘இவளா ராதை? இவளுக்காக தான் அந்த பிரகாஷ் துடிக்கிறானா?’ என வம்சி நினைக்க, ராதையோ இன்று முழுவதும் வெளியே வராமல் உள்ளே இருக்கிறாள் என்று கோதை சொன்னதை அவன் கவனிக்கவில்லை.

 

ராதை ஏன் வெளியே வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த பிரகாஷ், எப்படி இருந்தாலும் இன்று மாலை அவள் வந்து தானே ஆக வேண்டும். அப்போது அவளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டான். 

 

‘யார் இவரு பார்க்க இவ்வளவு அழகாக இருக்காரு?’ என்று நினைத்த வனிதா பிரகாஷிடம், “அத்தான் அவர் யாரு? உங்க பிரண்டா? பார்க்க அவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காரு” என்று வம்சியை பார்த்துக் கேட்டாள். அவளிடம் பதிலைக் கூறாமல் உள்ளேச் சென்றுவிட்டான் பிரகாஷ்.

 

***

 

இராஜேஸ்வரி பாட்டியும் ராதையை வெளியே வந்து இருக்குமாறு வற்புறுத்தவில்லை. ராதையைத் தேடி வந்த கோதை, அவளிடம் போலிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

 

“சாரி ராதை நான் தான் உன்னை தப்பாக புரிஞ்சிக்கிட்டேன்” என்றபடி பாவமாக அவளின் முகத்தைப் பார்த்தாள்.

 

“கோதை க்கா, என் மேல ஒரு தப்பும் இல்லை… ப்ளிஸ் என்னை புரிஞ்சிக்கோங்க! அன்னிக்கு ஒரு நாள் என்னை வழிமறிச்சு காதலிக்குறேன்னு பிரகாஷ் சொன்னாரு, நான் அப்போவே முடியாதுனு சொல்லிட்டேன். கோதை அக்காவை தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு கூட சொல்லிட்டேன்” என்று கோதையின் விஷம் கொண்ட புத்தியை அறியாமல் கண்ணீர் மல்க சொன்னாள் ராதை.

 

‘நீ எனக்கு வாழ்க்கை பிச்சை போடுறீயா? இன்னிக்கு நைட் இருந்து பிரகாஷை என் பின்னால் சுத்த வைக்குறேன் டி’ என்று மனதில் கொதித்தாள் கோதை.

 

“இன்னிக்கு பார்ட்டில எனக்கும் பிரகாஷூக்கும் கல்யாணம் முடிவாகிடுச்சுனு சொல்லப் போறாங்க, நீ பார்ட்டிக்கு வந்தா பிரகாஷ் உன்னை காதலிக்கிறதா எல்லார் முன்னாடியும் சொல்ல போறேன்னு சொன்னார். அதனால நீ ஈவ்னிங் பார்ட்டிக்கு கிளம்பு, ஆனால் வராம இருக்கணும்” என்றாள் கோதை. 

 

தன் கண்களைத் துடைத்துக்கொண்ட ராதை, “நான் வரமாட்டேன் க்கா, இங்கேயே இருக்கேன்” என்றாள்.

 

“இல்ல ராதை, நீ கிளம்பணும். வெளியே வர மாதிரி வந்து அஞ்சாவது காட்டேஜ்க்கு போய்டு. அப்போ தான் பிரகாஷ் உன்னைத் தேடினாலும் நீ இருக்குற இடம் தெரியாம அவர் எவ்வளவு தேடுனாலும் கிடைக்க மாட்ட. எல்லாமே நைட் எட்டு மணி வரை தான் ப்ளீஸ்” என்றாள் கோதை.

 

“காட்டேஜ் நம்பர் அஞ்சுல மைதிலி பெரியம்மாவோட குடும்பம் இருக்காங்களே அக்கா” என்று தயங்கினாள் ராதை.

 

“இல்ல ராதை, அவங்க எல்லாருமே காட்டேஜ் நம்பர் நாலுல தான் இருக்காங்க, அஞ்சுல யாரும் இல்லை. அதனால் கிளம்புகிற மாதிரி கிளம்பி காட்டேஜ் அஞ்சுக்கு போயிடு. பார்ட்டி டெரேஸில தானே, அதனால யாரும் உன்னைக் கவனிக்க வாய்ப்பு இல்லை” என்றாள் கோதை.

 

“சரி க்கா, நீங்க சொன்ன மாதிரியே நான் பண்ணிடுறேன்” என்றாள் ராதை வெள்ளந்தியாக.

 

***

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!