அத்தியாயம் 24

அத்தியாயம் 24

 

வீட்டிற்கு வரும் வரை அமைதியாக இருந்த கோதை, வீட்டிற்குள் வந்ததுமே அனைத்து பொருட்களையும் தூக்கி வீசினாள். 

 

“முதல்ல அந்த அனாதையை இந்த வீட்டை விட்டே வெளியே அனுப்புங்க… அவளால தான் என் வாழ்க்கையே போச்சு” என்று கத்தினாள். 

 

“கோதை! வாய மூடு, வம்சியோட சேர்ந்து எல்லா வேலைகளையும் பண்ணிட்டு, இப்போ ராதையைப் பத்திப் பேசுறதுக்கு உனக்கு தகுதி கிடையாது” என்று திட்டிய மைதிலியை முறைத்தாள் கோதை. 

 

யாரும் தனக்கு இங்கே ஆறுதல் இல்லை என்று உணர்ந்த கோதை, தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். 

 

ராதையோ தான் தேர்வான கம்பெனியின் ஆஃபர் லெட்டர் கிடைத்து விட்டால், இந்த வீட்டை விட்டு வெளியேச் சென்று விடலாம் என்று யோசித்தாள். 

 

இனி கோயம்புத்தூரில் இருந்தால் தனக்கு பிரச்சனைகள் அதிகம் என்று நினைத்து, வேறு ஒரு கம்பெனிக்கு விண்ணப்பம் கொடுத்துப் பார்க்கலாம் என்று முடிவு எடுத்தாள். 

 

தங்களுடைய வீட்டிற்கு வந்த பின்னர் வனிதா, ராதையை அலைபேசியில் அழைத்தாள். “ஏய் சாரி டி ராதை, என்னால அந்த இடத்துல ஒண்ணுமே செய்ய முடியல. அத்தை வேற இருந்தாங்க. இப்போ எப்படி டி இருக்க?” 

 

“இங்க பிரகாஷ் அத்தான் வீட்டுல ஒரே பிரச்சனை பண்றாரு. அத்தை எனக்கு தெரிஞ்சு உங்களோட கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்கனு நினைக்குறேன்” என்றாள். 

 

“யார் ஒத்துக்கிட்டாலும் என்னால இந்த பிரகாஷைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது டி, எனக்கு ஒரு உதவி பண்றியா?” என்று தயங்கி கேட்டாள் ராதை. 

 

“என்ன உதவி டி, உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்?” என்றவளிடம், “நீ இன்னும் ரெண்டு வாரத்துல பெங்களூர் போற தானே, நானும் உன் கூட வர்றேன். நீ தங்குற ஹாஸ்டல்ல நானும் தங்கிக்குறேன் டி.” 

 

“அங்க ரெண்டு மூனு கம்பெனில வேலைக்காக அப்ளிக்கேஷன் போட்டுருக்கேன். கிடைச்சுடும்ன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனா இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது. நான் பாட்டிக்கிட்ட கூட இப்போதைக்கு சொல்லல. எல்லா பிரச்சனையும் முடிஞ்ச அப்புறம் பாட்டிக்கு என்கூட வர விருப்பம் இருந்தா, அவங்களையும் என்னோட கூட்டிட்டு போயிடுவேன்” என்றாள் ராதை.” 

 

“ம்ம் சரிடி, ஆனா பிரகாஷ் அத்தான் கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியும்னு எனக்கு தோணல. உன்னை நான் பயமுறுத்த சொல்லல, எனக்கு என்னமோ தோணுச்சு, அதான் சொன்னேன்” என்றபடி பெருமூச்சு விட்டாள் வனிதா.

 

“நானே பயந்து இருக்கேன், நீ என்னை இன்னும் பயமுறுத்தாதடி ப்ளிஸ்” என்று அழைப்பை அணைத்த ராதை உறங்கச் சென்றாள்.

 

தன்னுடைய வீட்டில் அமர்ந்திருந்த ஷிவானி தன்னுடைய செல்லில் வம்சியின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே கனவில் ஆழ்ந்தாள். அவளைத் தட்டி எழுப்புவது போல அவளின் தந்தை சிவகுமார் மற்றும் தாய் கோகிலா சாப்பிட அழைத்தார்கள். 

 

வீட்டிற்கு ஒரே பெண்ணான ஷிவானிக்கு செல்லம் அதிகம் என்பதால் அவள் வாழ்வில் சந்தோஷம் மட்டும் நிலைத்திருந்தது.

 

“ஏன்ப்பா வம்சிக்கு என்னை எப்போ தான் பிடிக்கும்? எப்போ பார்த்தாலும் சிடு சிடுனே இருக்காரு” என தன் தந்தையிடம் ஏக்கமாக கேட்டாள். 

 

“ஹா ஹா! நீ தானே ம்மா கல்யாணம் பண்ணா வம்சியை மட்டும் தான் பண்ணுவேன்னு சொன்ன. உனக்கு வேண்டாம்னா வேறு மாப்பிள்ளையைப் பாக்கலாமா? நல்ல வேளை இன்னும் நிச்சயம் கூட ஆகல” என்று விளையாட்டிற்குச் சீண்டிப் பார்த்தார் தந்தை.

 

“அப்பா… ஏன்பா இப்படி எல்லாம் பேசுறீங்க? வம்சியை நான் எவ்வளவு காதலிக்கிறேன்னு தெரிஞ்சும் என்கிட்ட விளையாடுறீங்க” என்று முகத்தைத் திருப்பினாள் ஷிவானி.

 

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சிவக்குமாருக்கு தனது தங்கையிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

“அண்ணா சீக்கிரம் வேதந்த்துக்கும் ஷிவானிக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்கணும். கல்யாணத்துக்கு சீக்கிரமே நாள் பாக்கணும்” என்றார் லட்சுமி அவசரமாக.

 

“என்னமா அதிசயமா இருக்கு, கல்யாணத்தைச் சீக்கிரம் வைக்கலாம்னு நான் சொன்ன போதெல்லாம் நீ எதுக்கு அவசரம்னு கேட்ட, இப்போ நீயே இப்படி சொல்ற? எது எப்படியோ எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம்” என்றவரிடம்

 

“அண்ணா இது என் முடிவு. இந்த விஷயம் வீட்டுல யாருக்கும் தெரியாது. தெரிஞ்சாலும் யாரும் இதுக்கு ஒத்து வரமாட்டங்க. முக்கியமா வேதந்த்துக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது. நீங்களாவே வேதந்த்தோட அப்பாக்கு கால் பண்ணி கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்னு கேளுங்க” என்றார் தங்கை. 

 

யோசனையோடு இருந்த சிவக்குமார், தங்கை ஏதோ விஷயம் இருக்க போய்த் தான் தன்னை பேசச் சொல்கிறாள் என்று அவரும் பேச முடிவு செய்தார். இதை அறிந்த ஷிவானி மற்றும் தாய் கோகிலா சந்தோஷமாக இருந்தனர். 

 

இங்கு வீட்டிலோ சேதுராமன் குழப்பத்தில் இருந்தார். தனக்கு சிவக்குமார் கால் செய்து கூறிய விஷயம் அவருக்கு யோசனையைத் தான் கொடுத்தது. ஆனால் அவருக்குமே மனதில் ஒரு நெருடல் இருந்து கொண்டே தான் இருந்தது. எங்கு கோதையைத் தன் மகனுக்கு திருமணம் செய்ய கேட்டு விடுவார்களோ என்கிற பயம் அவருக்கும் இருந்தது. 

 

ஏனெனில் கோதை படிப்பில் மக்கு என்று குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவளை ஒப்பிட்டுப் பார்த்தால் ஷிவானி படிப்பில் கெட்டிக்காரி. தன்னுடைய மகனுக்கு நல்ல அறிவுடைய பெண்ணையே மணக்க நினைத்தார் சேதுராமன்.

 

அதனால் இப்போது அவருக்குமே வம்சி, ஷிவானியின் கல்யாணம் சீக்கிரம் நடந்தால் நல்லதே என்று தான் தோன்றியது.

 

ஏனெனில் மைதிலி வந்து வம்சியை மாப்பிள்ளை கேட்டு, தான் முடியாது என்று சொன்னால் அது நல்லா இருக்காது. இதனால் தேவையில்லாமல் மனதில் சங்கடங்கள் வரும். இதெல்லாம் வராமல் இருப்பதற்குச் சீக்கிரமே பேசிய கல்யாணம் நடக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தார் சேதுராமன்.

 

அனைவரும் பெங்களூர் வந்து அடைந்த பின்னும் வம்சி அவர்களின் வீட்டிற்கு வரவில்லை. வம்சி எப்போதுமே கோபமான மனநிலைக்குச் சென்றுவிட்டால் அவன் செல்லும் இடம் ஹார்ஸ்லி ஹில்ஸ். அங்கு ஹார்ஸ்லி ஹில்ஸில் இவர்களுக்குச் சொந்தமான ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது.

 

கனடாவிலேயே பிறந்து வளர்ந்ததால் வம்சிக்கு அந்த குளிரின் இதம் மிகவும் பிடிக்கும். வீட்டில் யாருடன் கோபத்தில் இருந்தாலும் அவன் ஹார்ஸ்லி ஹில்ஸ் சென்று விடுவான். அங்கு சென்ற வம்சி கோபம் தணியும் வரை வீட்டிற்கு வரவும் மாட்டான், யாருடைய ஃபோன் கல்லையும் அவன் எடுக்கவும் மாட்டான்.

 

இப்போதும் ஊட்டியில் இருந்து கிளம்பியவன் நேராக வீட்டிற்கு வராமல் தங்களுடைய ஹார்ஸ்லி ஹில்ஸ் பங்களாவிற்குச் சென்று தங்கினான். இரண்டு நாட்கள் ஆகியும் அவன் வீடு திரும்பவில்லை. 

 

இந்த விஷயத்திற்கு ஏன் வம்சி இவ்வளவு கோபத்தில் இருக்கிறான் என்று யோசித்த குடும்பத்தினர், அவன் பழிவாங்கத் துடிப்பதை உணரவில்லை. அந்த கெஸ்ட் ஹவுஸில் காலம் காலமாய் வேலை பார்க்கும் சாமுண்டீஸ்வரி அம்மாவிடம் அவனைப் பற்றிக் கேட்டு அறிந்துக் கொண்டனர் குடும்பத்தினர். 

 

பிரகாஷ் வீட்டில் இரண்டு நாட்கள் அமைதி நிலவியது. மூன்றாவது நாள் பிரகாஷ் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டான். தன் அன்னையிடம் அந்த சம்பவத்திற்குப் பிறகு பேச்சை நிறுத்தியவன், உண்ணாவிரதமும் மேற்கொண்டான். இதைப் பார்த்து கவலையடைந்து விஜயா ராதையையே மணம் முடிக்க பேசலாம் என்று தன் கணவனை அழைத்துக்கொண்டு கோதையின் வீட்டிற்கு இருவரும் விரைந்தார்கள். 

 

வீட்டின் முன் தோட்டத்தில் அமர்ந்திருந்த விஜயகுமாருக்கு பிரகாஷிடம் இருந்து கால் வந்தது. “ஹலோ அங்கிள், பிரகாஷ் பேசறேன். இப்போ என் அம்மாவும் அப்பாவும் உங்ககிட்ட ராதையைப் பொண்ணு கேட்க வராங்க” என்று மகிழ்ச்சியாகக் கூறினான். 

 

“பிரகாஷ், ராதைக்கு உன் மேல விருப்பம் இல்லையாம்பா. அப்போ எப்படி இந்த கல்யாணம் நடக்கும்…? நீ அவளை மறந்துடு. உனக்கு வேற ஒரு நல்ல வாழ்க்கை அமையும்” என்றார். 

 

“ராதைக்கு விருப்பம் இல்லன்னாலும் அவ என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும் அங்கிள்… அதுக்கு நீங்க தான் பொறுப்பு. இல்லன்னா உங்க குடும்பம் தான் நடுரோட்டுல நிக்கும்.”

 

“உங்களோட விபி குரூப்ஸ் ஷேர்ஸ் முக்கால்வாசி என் கையில இருக்கு. உங்களய பொண்ணு கோதையோட முட்டாள்தனத்தை நான் எனக்கு சாதகமாக்கிக்கிட்டேன் அவ்வளவு தான். ராதையை இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்குது உங்க பொறுப்பு” என்று மிரட்டிய பிரகாஷ் கால்லை கட் செய்துவிட்டான். 

 

எப்படியாவது ராதையை இக்கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்த விஜயகுமார், நேராக ராதையின் அறைக்குள் சென்று ராதையின் காலிலேயே விழுந்துவிட்டார். 

 

அவரின் இச்செயலில் ரொம்பவே அதிர்ந்த ராதை, “பெரியப்பா, என்ன பண்றீங்க… ப்ளிஸ் பெரியப்பா எழுந்திருங்க…” என்றபடி அழுதாள். 

 

“இல்லம்மா, இந்த குடும்பத்தோட கௌரவமே இப்போ உன் கையில தான் இருக்கு” என்றவரோ பிரகாஷ் மிரட்டிய அனைத்தையும் கூறியவர், அவளை கை எடுத்து கும்பிட்டு பிரகாஷைத் திருமணம் செய்யச் சொல்லி கேட்டார். 

 

தனக்காக எல்லாச் சூழ்நிலையிலும் நின்றுக் கொண்டிருந்த தன் பெரியம்மா, பெரியப்பாவிற்காPin clipboard items to stop them expiring after 1 hourக ராதையும் வேறு வழியின்றி பிரகாஷைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாள்.

 

***

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!