அத்தியாயம் 48

“மணி பன்னிரண்டு ஆகப் போகுது ராதை, உன் ரூமுக்கு போ. எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்” என்றவனை முறைத்த ராதை, “இப்போ ரூம்க்கு போனா எனக்கு தூக்கம் வராது. உங்க கிட்ட நான் பேசியே ஆகணும் ப்ளிஸ்…” என்று கெஞ்சியவளைப் பார்த்தவனோ,

 

மனது கேட்காமல், “சரி, இங்கே வேண்டாம். கார்டனுக்குப் போலாம்” என்று முன்னாடி நடக்க ஆரம்பித்தான். ராதையும் அமைதியாக அவன் பின்னே நடந்தாள். 

 

இரவு நேர அமைதியில் குளிர்ந்த காற்றில் கார்டனில் நடந்துக் கொண்டிருந்த வம்சியை அதிசயமாகப் பார்த்த ராதை, “ஏன்…?” என்று மட்டும் கேட்டாள். 

 

“புரியல” என்று அவளைப் பார்த்து திரும்பி நின்றான். 

 

“ஏன் என்னை ஊட்டில பார்த்தீங்க? ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? இப்போ ஏன் என்னை விட்டு விலகி போறீங்க? இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்யுற அளவுக்கு என்னை வெறுத்துட்டீங்களா?” என்று கேள்வியாய் அவனை நோக்கினாள்.

 

“ம்ம்… எல்லாத்துக்கும் அன்ஸ்சர் உனக்கே தெரியும் ராதை” என்று எங்கோ வெறித்துப் பார்த்தான். 

 

“இல்லைங்க, நான் உங்ககிட்ட எல்லாத்துக்கும் பதில் எதிர்பார்க்குறேன்” என்றாள் வெறுமையாக.

 

“நீ கேட்குற எல்லாத்துக்கும் நான் பதில் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. என்னை விட்டுட்டு வேணாம்னு தாலியைத் தூக்கி எறிஞ்சிட்டு போனவ தானே நீ? உன்னை இவ்வளவு பொறுமையா நான் ஹாண்டில் பண்றதே பெரிய விஷயம்” என்று கடுப்பானான். 

 

“உனக்கென்ன பதில் தானே வேணும்… ஆமா உன்னை ஊட்டில முதன் முதல்ல பார்த்த போதே காதல் விழுந்துட்டேன். எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு கூட நிச்சயம் ஆனது கூட எனக்கு அது பெருசா தெரியல. நீ வேணும்னு நினைச்சேன்.”

 

“ஆனால் நீ ராதைனு  தெரிஞ்ச அப்புறம், அதுவும் அன்னிக்கு நீ என்னை அவமானப்படுத்துன.. உன்னை காயப்படுத்தியாவது அடையணும்னு  நினைச்சேன்… நான் நினைச்ச மாதிரி நீ என் பொண்டாட்டி ஆயிட்ட. அதுக்கு அப்புறம்  உன்னோட ஒழுக்கமான குணம், உயிரை விட மானம் பெருசுனு உன் உயிரையே கொல்ல கூட நினைச்ச உன்கிட்ட முழுசா விழுந்தேன்” என்றபடி அவளின் கண்களை ஆழமாகப் பார்த்தவன், 

 

“நான் நினைச்சுருந்தா உன்னை வலுக்கட்டாயமா அடைஞ்சுருப்பேன் ராதை… ஆனா நான் உன்னோட காதலை எதிர்பார்த்துக்கிட்டு  இருந்தேன்… ஆனால் அது தான் நான் பண்ணி பெரிய தப்பு” என்றபடியே அவளை முறைத்துவிட்டு, “நீ என் காதலுக்கு தகுதி ஆனவ இல்லை…” என்று அவன் அழுத்தமாகக் கூறும்போது ராதையின் கண்களில் வந்த அந்த கண்ணீர், வம்சிக்கு ஒரு பொருட்டாக கூடத் தெரியவில்லை.

 

“உன்னோட அழுகையை கொஞ்சம் நிறுத்துறியா..? நீ நீயா இரு. மத்தவங்களுக்காக டிரஸ் பண்றது, இது எல்லாம் நீ இல்லை ராதை… உன்னை நம்பி இப்போ கோயம்புத்தூர்ல ஒரு குடும்பம் இருக்கு, அதைப் பாரு. அனிதா, பிரணவோட அக்கா… அக்கா ன்னா பிரணவ் அப்பாவோட முறைப்படி இல்லாத மனைவிக்கு பிறந்த பொண்ணு.”

 

“பிரணவ், யசோ நிச்சயம் அப்போ வீட்டுக்கு வெளியே போதையில அனிதா கத்திக்கிட்டு இருந்தா… அவளோட அம்மாவோட மறைவுக்கு அப்புறம் இந்த உலகத்துல தான் எதுக்கு வாழணும்ன்ற நினைப்பு அவளை போதைக்கு அடிமை ஆக்கிடுச்சு. ஒரு பொண்ணோட சாபம் என் தங்கச்சியை நல்லா வாழ வைக்காது, அவளைப் பார்க்க எனக்குப் பரிதாபமாகவும் இருந்துச்சு. அதனால அவளோட ஃபிரண்டாகி அவளைத் திருத்த முயற்சி பண்றேன்.”

 

“கோயம்புத்தூர்ல பிரணவ் அப்பாவுக்கு சொந்தமான கம்பெனியை அனிதா பெயருக்கு மாத்திட்டாங்க.. அவ போதையில இருந்து வெளியே வந்து கம்பெனியை நல்லா நடத்துறா…”

 

“அனிதா என்னை விரும்புனா… இந்த உலகத்துல அனிதா இல்ல வேற யார் வந்து என்னை விரும்பினாலும் என்னோட காதல் அது உனக்கு மட்டும் தான் ராதை… ஆனால் அதுக்கு தகுதியானவ நீ இல்லை! நான் அனிதாவை கல்யாணம் பண்ணிக்கல. உனக்கு அன்ஸ்சர் எல்லாம் கொடுத்தாச்சு” என்று அவளைக் கூர்மையாய் பார்த்தவன், “உன் ரூமுக்குப் போ” என்று கட்டளையிட்டான்.

 

ஆனால் ராதை நகராமல் அங்கேயே நின்றாள். அப்போது பார்த்து மழையும் பெய்ய ஆரம்பித்தது. 

 

“ராதை, இப்போ என்ன நிரூபிக்க இப்படி பண்ணிட்டு இருக்க? மழையில நனையிறது தெரியலையா உனக்கு?” என்று அவன் கத்துவதை ராதை கேட்டாலும் தன் கைகளைக் கட்டிக்கொண்டு மழையில் நனைந்து கொண்டிருந்தவளைக் கண்டவனுக்கு, அவ்வளவு நேரம் தான் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த பொறுமை காற்றில் பறந்தது.

 

“நான் இவ்வளவு சொல்லியும் நீ அசையாம நின்னா, உனக்கு எவ்வளவு திமிர் டி இருக்கும்?” என்று அவளின் கையை இறுக்கமாகப் பற்றியவனை எந்த ஒரு உணர்வுகள் இல்லாமல் பார்த்தாள் ராதை. 

 

வம்சிக்கு ராதையின் இந்த தோற்றம் மனதில் ஒரு பயத்தை வரவழைத்தது. ‘இவ எதுக்கும் அசர மாட்டாள். இப்படியே நின்னா, அவளுக்கு மழையில முழுசா நனைஞ்சு காய்ச்சல் தான் வரும்’ என்று அவளுக்காக வருந்தியவன், அவளைத் தன் கைகளில் ஏந்தி லிப்ட்டிற்குள் சென்று அவளின் அறைக்குள் சென்றான். 

 

அப்போதும் ராதையின் முகத்தில் எந்த ஒரு உணர்வுகளையும் வம்சியால் காண முடியவில்லை. அவளை சோபாவில் அமரவைத்து விட்டு, நகர முற்பட்ட போதும் அவள் கண்களை இமைக்காமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அதனைப் பார்த்து கோபம் அடைந்த வம்சி, “ராதை பைத்தியம் மாதிரி நடந்துக்காத, ஒழுங்கா டிரஸ் மாத்து. இப்போ நான் நினைச்சால் கூட உன்  டிரஸ்ஸை மாத்த முடியும். ஆனா, நீ என்னோட பொண்டாட்டியா இருந்திருந்தால்… நீ தான் இப்போ யாரோ ஆயிட்டியே, நான் கிளம்புறேன்” என்று அவளின் முகத்தைக் கூட பார்க்காமல் சென்று விட்டான். 

 

‘ஏன் ராதையைப் பார்த்தோம்? ஏன் அவளைக் காதலிச்சு நானும் இப்படி வெறுமையை அனுபவிக்குறேன்… அவளுக்கும் என்னை பிடிக்கல’ என்றபடி யோசித்தவன் தன் அறைக்குள் நுழைந்து, அவளைப் பற்றி நினைத்திருந்த கோபத்திலேயே அனிதாவிற்கு கால் செய்தான்.

 

“அனிதா நீ உடனே உன் ரூமுக்குப் போ… ராதை அங்க தனியா மழையில் நனைஞ்சுட்டு டிரஸ் கூட மாத்தாம இருக்கா” என்று அனிதாவை அவசரப்படுத்தினான்.

 

“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க வம்சி, உங்க பொண்டாட்டி தானே, நீங்களே அவளுக்கு டிரஸ் மாத்தி விட்டுருக்க வேண்டியது தானே, ராதையும் என்னைப் போல ஒரு சராசரிப் பொண்ணு தானே. பிடிக்காத புருஷனா இருந்தாலுமே அவகிட்ட நீங்க நெருங்கும் போது உங்களை பிடிக்கலாம் இல்லையா…?” என்று இழுத்தாள். 

 

“இடியட், என்ன பேசுற நீ? பிரணவ்வோட அக்கா ன்றதால உன்னை சும்மா விடுறேன். இல்லனா உன்னை அறைஞ்சிருப்பேன். எனக்கு ராதையோட காதல் தான் வேணும், நீ சொல்ற மாதிரி நான் நடந்துருக்கணும்னா, எங்களுக்கு இந்நேரம் குழந்தையே பிறந்திருக்கும். ஆனா என்னை அவள் காதலிக்கணும். அது தான் எனக்கு வேணும்.” 

 

“காதல் இல்லாம அவகிட்ட நெருங்குற அளவுக்கு நான் முரடன் இல்லை. இனி இப்படி பேசுன உன்கிட்ட நான் பேசுறது இதுவே கடைசி முறையாய் இருக்கும்… அண்ட் நான் ராதைகிட்ட எல்லா உண்மையைச் சொல்லிட்டேன். அதனால உன் கேவலமான நாடகத்தை நிறுத்து.”

 

“ஒழுங்கா உன்னையே உலகம்னு காதலிக்குற அபிஷேக்கை கொஞ்சம் கன்சிடர் பண்ணி பாரு, நம்ம வாழ்றது ஒரு வாழ்க்கை தான் அதுல உன்னை ஒருவன் உலகம்னு நினைச்சு காதலிக்குறானா உன்னை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. நான் நாளைக்கு காலைல பெங்களூர் கிளம்புறேன். என்னால் இனி ராதையைப் பார்க்க முடியாது.. நீ ராதையைப் போய் பாரு.. சீக்கிரம் போ” என்று மடமடவென கூறிவிட்டு காலை கட் செய்தான் வம்சி. 

 

முகத்தில் ஓங்கி அறைந்தது போல் உணர்ந்தாள் அனிதா. கீழே இருந்தவள் தன் அறைக்குச் செல்லும் வழியில் அபிஷேக் யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டாள். அவனைப் பார்க்கவும் அனிதாவிற்கு அந்த நிமிடம் பாவமாகத் தான் இருந்தது. 

 

விபத்து நடந்ததற்கான காரணம் தன்னுடைய கவனக்குறைவாக இருந்தாலும், தன் தாயை இழந்த தவிப்பு, கோபம், துன்பம், கவலை, வெறுப்பு எல்லாமே அபிஷேக்கின் மீது அவளுக்கு பாய்ந்தது. 

 

அவள் போதைக்கு அடிமை ஆனதும் கூட அபிஷேக்குக்குத் தெரிந்து அவனுமே அவளை அதில் இருந்து காப்பாற்ற முயன்று தோற்றவன்… அதன் பின்னரும் அவன் அவளை காதலிக்குறான் என்றால் வம்சி கூறுவது போல் அவள் அதிர்ஷ்டசாலி தானோ என்று அங்ஙனம் அனிதாவிற்குத் தோன்றியது.

 

அபிஷேக்கின் முதுகு தான் அவளுக்கு தெரிந்தது.. இருந்தாலும் அவளை மீறி, ‘அபிஷேக் அந்தப் பொண்ணு கூட என்ன பேசிட்டு இருக்கான்?’ என யோசித்தபடி பார்க்க பக்கத்தில் செல்லும் போது அந்தப் பெண்ணோ, “தி இஸ் டூ அன்ஃபேர் அபி, தட் கேர்ள் இஸ் நாட் ஈவன் ரெஸ்பெக்ட்டிங் யூ. வை கான்ட் யூ லவ் மீ?” என்று ஏக்கமாக கேட்டுக் கொண்டு இருந்தாள். 

 

அதைக் கேட்ட அனிதாவிற்கு தூக்கி வாரிப் போட்டது. 

 

“ம்ம்… ஐ லவ் அனிதா.. சாரி ஐ கான்ட் திங்க் அபௌட் எனி ஒன்! அனிதா, வில் பி மை வைஃப்” என்று தீர்மானமாகக் கூறியவனை, “அபிஷேக் ஐ லவ் யூ…” என்று சத்தமாக அழுதவளை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்த அபிஷேக்கைக் கட்டி அணைத்துக் கொண்டாள் அனிதா.

 

***

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!