“அத்தான் ரொம்ப சாரி, அவ கொஞ்சம் ரிசர்வ்டு டைப். அதனால இப்படி சொல்லிட்டு போயிட்டா, ஆனா ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட பெஸ்ட் பிரண்ட். நான் வினிதாகிட்ட பேசி உங்களுக்கு அவளோட நம்பர் வாங்கி கொடுக்குறேன்” என்றாள் வனிதா.
“இல்லை வனிதா, எனக்கு யாரோட நம்பரும் வேண்டாம்… சார்ட் ஒட்டிட்டாங்க, நீ டிரெயினல் ஏறி உட்காரு, நான் கிளம்பறேன்” என்றவனோ வேக நடையுடன் தன் காரை நோக்கி சென்று ஏறினான். அவனின் கோபத்தில் கார் வேகமாக சீறிப் பாய்ந்தது…
ஒரு இடத்தில் ஓரமாக தன் வண்டியை நிறுத்திய பிரகாஷ், ராதை தன்னை அவமானப்படுத்தியதை நினைத்து கடும் கோபத்தில் இருந்தான். இதுவரை மற்ற பெண்கள் தன்னை நாடி வந்துதான் பிரகாஷ் பார்த்திருக்கிறான். ஆனால் ராதையோ அவனை அவமதிப்பது போல் நடந்துக் கொண்டது அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
“நீ என்னை எவ்வளவு ஒதுக்கினாலும் வெறுத்தாலும் இந்தப் பிறவியில உனக்கு கல்யாணம் நடந்தால், அது என் கூட மட்டும் தான்” எனத் திமிராக சொன்ன பிரகாஷ் தன் காரை எடுத்துக் கொண்டு விரைந்தான்.
ரயில் புறப்படும் வரையில் வனிதா, ராதையிடம் பிரகாஷ் பற்றி எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, “ஏன் ராதை இப்படி பண்ண? அவர் என் கூட பேசத்தானே உன் நம்பர் கேட்டாரு, நீ ஏன் அப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பிரகாஷ் அத்தானை அவமானப் படுத்துன?”
“அவர் கிளம்பும் போது அவர் முகத்தை பார்க்கவே எனக்கு அவ்வளவு பயமா இருந்திச்சு டி. அவ்வளவு கோபம் அவருக்கு… வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைச்சிட்டடி” என்று சோகமாக ஜன்னலின் பக்கம் திரும்பினாள் வனிதா.
இதைக் கேட்ட ராதைக்கு பயங்கரமாக கோபம் வந்தது. “நீ அவரை கல்யாணம் பண்ண போற, அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் வனிதா? அவர் உன்னை தானே கல்யாணம் பண்ணிக்க போறாரு, அப்போ நான் நம்பர் கொடுக்கலனாலும் உன்னை தப்பா எடுத்துக்க மாட்டாரு. இனிமே என்கிட்ட உன் அத்தை மகனை பத்தி தயவுசெஞ்சு பேசாத” என்றவளோ கோபத்தில் தன்னுடைய ஹியர் போனை காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.
வனிதாவும் கொஞ்ச நேரம் பேசாமல் தான் இருந்தாள். ஆனால் அவளுக்கே தான் ராதையிடம் பேசியது கொஞ்சம் அதிகப்படியோ என்றே தோன்றியது. ராதைக்கு மிகப் பிடித்த கட்லெட்டை ரயிலில் வித்துக் கொண்டிருந்தார்கள். அதை வாங்கிய வனிதா, ராதையிடம் மன்னிப்பு கேட்டு அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தாள்.
ராதைக்கு என்ன தான் குடும்பம் என்று இருந்தாலும் கூட, தாய், தந்தை இல்லாமல் வளர்ந்த பெண் என்பதால் வனிதாவிற்கு அவள் மீது தனி பாசம் இருக்கிறது.
கோதையும் பிரகாஷும் தொழில்முறையிலும் நண்பர்கள் ஆனார்கள். அவர்களின் நட்பும் தொடர்ந்தது. கோதையிடம் நல்ல நண்பனாக மட்டுமே இருந்தான் பிரகாஷ். கோதையுடன் சாப்பிட எங்காவது வெளியேச் செல்வான். தொழில் ரீதியாக வெளியேச் செல்வான். ஆனால் பார்க், சினிமா என்று கோதை அழைத்தால் வர முடியாது என்று நேரடியாகவே சொல்லி விடுவான்.
கோதையும் பிரகாஷ் தன்னை சினிமாவிற்கு தவிர்க்கிறான், தன் மேல் அவனுக்கு காதல் நோக்கம் இல்லை என்பதை உணரவேயில்லை. கோதை ராதையைப் பற்றி பிரகாஷிடம் பேசவே மாட்டாள். அவனும் ராதை தன்னை அவமதித்த பின் அவளைப் பற்றி விவரங்கள் சேகரிப்பதை விட்டு விட்டான். ஆனால் நாளுக்கு நாள் அவன் ராதை மேல் வைத்திருந்த காதல் அப்படியே வளர்ந்து, இரண்டு வருடங்கள் கழிந்து அவள் மேல் ஒரு வெறியாக உடுமாறியது.
***
அன்று கல்லூரியின் கடைசி நாள். கடந்த ஒரு வருடமாக பிராஜெக்ட் வேலை அதிகமாக இருந்ததால் ஊருக்கே செல்லாமல், சென்னையில் இருந்து தன் கல்லூரி கேம்பஸிலேயே கோயம்புத்தூரில் உள்ள ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை வாங்கினாள் ராதை.
வனிதாவிற்கும் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது. அது பெங்களூரை மையமாகக் கொண்டுள்ள கம்பெனி. ஆனால் கோயம்புத்தூரிலும் அதனின் கிளை இருப்பதால் இருவரும் தங்கள் ஊரிலேயே வேலை பார்க்கலாம் என்கிற சந்தோஷத்தில், கல்லூரியில் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று கிளம்பினார்கள்.
அன்று ராதை சென்னை வந்த பின்னர் இன்று தான் இரண்டு வருடங்கள் கழித்து கோயம்புத்தூர் செல்கிறாள். அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு வனிதா பிரகாஷை பற்றி ராதையிடம் பேசவில்லை.
கோதையும் பிரகாஷுடன் சுற்றுவதிலேயே குறியாய் இருந்ததால் ராதையிடம் அவனைப் பற்றி பெரிதாக பேசவில்லை. அது ராதைக்கு ரொம்பவே நிம்மதியாக இருந்தது. அவனைப் பற்றி பேச்சை இருவரும் எடுக்காததால், கிட்டத்தட்ட அப்படி ஒருவன் இருப்பதைக் கூட ராதை மறந்துவிட்டாள் எனலாம்.
இருவரும் கோயம்புத்தூரிற்கு ரயிலில் ஏறிய பின், “ராதை, ரெண்டு வருஷம் கழிச்சு ஊருக்கு வர, நானாவது அதுக்கு அப்பறம் ஒரு தடவையாவது போயிட்டு வந்தேன். நீ அதுவும் போகல” என்றாள் வனிதா.
இதைக் கேட்ட ராதை மென்மையாக சிரித்து, “இனிமே என் வாழ்க்கையே அங்க தானே” என்றபடி ஜன்னலில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
தன் வீட்டில் தன்னுடைய பன்ச்சிங் பேக்கை அடித்துக் கொண்டிருந்த பிரகாஷ், “வெல்கம் மை ஃபீயுச்சர் வைஃப் மிஸஸ் கோமகள் ராதை பிரகாஷ் சிவமாறன்… ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ!” என்றபடி அந்த பன்ச்சிங் பேக்கை ஒரு முறை வேகமாக அடித்தான்.
***
