January 2026

அத்தியாயம் 35

அந்த ஹோட்டலின் இரண்டாம் தளத்திற்குச் சென்றவனின் பின் பயத்தோடு சென்றவள், தேவ் ஒரு அறையைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற பின், அந்த அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றாள். “நம்முடைய முதல் சந்திப்பில் பயந்துட்டு வெளியே நின்ன மாதிரி, இப்போதும் பயந்துட்டு நிக்குறியா?” என்று நக்கலாகக் கேட்டவனிடம், “இல்லை உள்ளே வரேன்” என்று நுழைந்தாள். பணக்காரர்கள் தங்கும் பிரிமீயம் அறை போல் தோற்றம் அளித்தது அந்த அறை.  உள்ளே யமுனா வந்ததும், அவளைத் தாண்டி வந்து கதவைச் சாற்றிய […]

அத்தியாயம் 35 Read More »

அத்தியாயம் 34

யமுனாவிற்கு மனசு ஆறவில்லை. ‘எப்படி ஒருவரால் அவர்கள் பேசிய சுடு சொல் துன்புறித்தியதை எல்லாம் மறந்து, அவருடன் நிகழ்காலத்தில் வாழ முடியும்? அதுவும் இதுவரை தேவ்வின் வாயில் இருந்து அவன் யமுனாவிற்கு செய்த கொடுமைகளை மனதில் நினைத்து, ஒரு சாரி கூட வராமல் இருக்கும் நிலையில், தேவ்வின் இந்த அணைப்பு மற்றும் அவன் தற்போது கூறிய வார்த்தைகள் யமுனாவிற்கு எரிச்சலாக இருந்தது. தேவ்வின் அறைக்கு அவள் காஃபி எடுத்துச் சென்ற போது, அவன் ஏதோ ஆங்கில நாவலை

அத்தியாயம் 34 Read More »

அத்தியாயம் 33

“யமுனா நீ ஆதிராவைத் தூக்கிட்டு உள்ளே வா” என்று தன் அறைக்குள் சென்றான் தேவ். அவனை பின்னால் இருந்து முறைத்த யமுனா மனதில், ‘மத்தவங்க கதையைப் பார்க்க இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு. ஆனால் நம்ம கதையைப் பார்த்தா பயமா இருக்கே’ என்று எண்ணியவள் ஆதிராவைத் தூக்கச் சென்றாள். ஆனால் ஆதிரா அவளிடம் வராமல் அழுதாள்.  என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த யமுனா, ஆதிராவிடம் சென்று, “ஆதிரா குட்டி, நீங்க இப்போது அம்மா கிட்ட வந்தா நான் நிறைய கதைகள்

அத்தியாயம் 33 Read More »

அத்தியாயம் 32

‘இந்த அத்தை நல்லவங்க தான், ஆனாலும் நமக்கு பிரச்சனை தான், தேவ்வை உசுப்பேத்தி விட்டுட்டாங்க. இவன் சும்மாவே ஆடுவான், இப்போது என்ன சொல்லப் போறானோ?’ என்று மனதில் பதறியவள், தன் தலையைக் குனிந்து கொண்டாள்.  “நீங்க பிரியாவுடைய மாமனார், மாமியார் என்பதனால் தான் மரியாதை கொடுத்துப் பேசிட்டு இருக்கேன். என் பொண்டாட்டிக்கு நீங்க தாய்மாமாவாக இருந்தால் போதும், இந்த மாமா வேலை எல்லாம் என்னிடம் நடக்காது” என்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், “இந்த விஷயம் நீங்களா

அத்தியாயம் 32 Read More »

அத்தியாயம் 31

 தேவ்வின் அறை எங்கே என்று சீதாலட்சுமியிடம் கேட்டு, யமுனா தேவ்வின் அறைக்கு வந்து முதலில் குளித்து விட்டு, உடையை மாற்றி ஒரு காஃபி குடித்தாள். ஆதிரா மனிஷாவோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளைக் கண்ட மனிஷா இவளை முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.  ‘இது என்ன வம்பா போச்சு, என் புருஷனை இவள் கல்யாணம் பண்ண நினைச்சு என்னை முறைப்பாளாம், என்ன பெண்ணோ இவள்? முன்னாடி மாயா இப்போது இவளா?” என்று சலிப்பாக நினைத்தவள், ‘நாம் ஏன்

அத்தியாயம் 31 Read More »

அத்தியாயம் 30

அந்த சின்னப் பெண்ணைப் பார்த்த உடனே, அவள் ஆதிரா என்று கண்டு கொண்ட யமுனா, “ஆதிரா…” என்று சந்தோஷத்துடன் கத்தினாள். ‘ஓ இவள் தான் யமுனாவா?’ என்று ஆதிராவை தன் கையில் பிடித்து நடந்து வந்த மனிஷாவைப் பார்த்த யமுனா, ‘யார் இந்தப் பெண்? ஆதிராவை உரிமையோடு கை பிடித்து நடந்து வருகிறாளே, ஒருவேளை தேவ்வின் மனைவியா?’ என்று மனதில் ஆயிரம் குழப்பம் மற்றும் கேள்விகளுடன் பார்த்தாள்.  “ஆதிரா உன்னுடைய யமுனாம்மா வந்துட்டாங்க பாரும்மா” என்று சீதாலட்சுமி

அத்தியாயம் 30 Read More »

அத்தியாயம் 29

நேராக விக்ரமிடம் திரும்பியவன், “உன் தங்கையை இந்த இடத்தை விட்டு கிளம்ப சொல்லு விக்ரம், இல்லை என்றால்… நான் மனிதனாக இருக்க மாட்டேன்” என்றான் ஆக்ரோஷமாக.  மனிஷாவை இழுத்துக்கொண்டு விக்ரம், தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அறிவுரை கூற ஆரம்பித்தான். “மனிஷா, அண்ணா சொல்வதைக் கேளு. யமுனா தேவ்வின் வாழ்க்கையில் இருப்பது தான் நியாயம். உனக்கு நான் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்கிறேன். இல்லை நீ கூட வேறு ஒரு பையனைப் பிடித்திருந்தால் சொல்லு. ஆனால்

அத்தியாயம் 29 Read More »

அத்தியாயம் 28

“எனக்கும் அது தெரியவில்லை தேவ், போட்டு வாங்குறேன்” என்றவன், கிஷோர் இன்னும் வரவில்லை என்றவுடன், “கிஷோர்…” என்று கத்தினான்.  “சாரி சாரி போலாம், என் காரில் போலாம். உங்களுடைய கார் இங்கேயே இருக்கட்டும்” என்றான். “இல்லை கிஷோர், விக்ரம் உன்னோடு வருவான். நான் என்னுடைய காரில் வருகிறேன்” என்று இடத்தை விட்டு எழுந்தான் தேவ். பின் மூவரும் கிளம்பினர்.  கிஷோருடன் காரில் வந்து கொண்டிருந்த விக்ரம், “நீ காதலிக்கும் பெண்ணுடைய குடும்பம் பற்றித் தெரியுமா?” என்று கேட்டுப்

அத்தியாயம் 28 Read More »

அத்தியாயம் 27

கொட்டிவாக்கத்தில் இருக்கும் கிஷோரின் வீட்டிற்குச் சென்ற தேவ் மற்றும் விக்ரமை வரவேற்றார் குல்தீப் சிங். அவரைப் பார்த்தவுடன் தேவ்விற்கு ஏதோ சந்தேகமாகவே இருந்தது. ஆனாலும் நடப்பதைப் பார்ப்போம் என்று அமைதியாக உள்ளே சென்றான்.  “அங்கிள் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று விக்ரம் சொன்னான். ஆனால் நீங்கள் பார்க்க நல்லா தான் இருக்கீங்க?” என்று வெளிப்படையாகவே கேட்டான் தேவ்.  “ஹாஹா நீ நம்பர் ஒன் பிசினஸ் டைகூன்னா சும்மாவா, நல்ல புத்திசாலி தான் நீ தேவ்” என்று சிரித்தவர்,

அத்தியாயம் 27 Read More »

அத்தியாயம் 26

“அவங்க எல்லாரும் வந்தாலுமே, ஆதிராவுக்கு அன்னை பாசம் வேண்டும் இல்லையாப்பா? நானும் இன்னும் எவ்வளவு வருஷம் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை. அதனால் யமுனாவை…” என்று அவர்கள் கூறி முடிப்பதற்குள், “அம்மா நிறுத்துங்க… அந்தப் பெயரைக் கூட என்கிட்ட சொல்லாதீங்க, எரிச்சலாக இருக்கிறது” என்று தன் அறைக்குச் சென்றான் தேவ். *** “அண்ணா, திடீரென்று இந்தியா கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் அதிர்ச்சியாக போச்சு. ஆனால் தேவ்வும் வருகிறார் என்று சொன்னதுக்கு அப்புறம் தான், நான் ரொம்ப சந்தோஷமா

அத்தியாயம் 26 Read More »

error: Content copy warning!!