அத்தியாயம் 25
சுபா திங்க்ஸை பேக் செய்துக் கொண்டிருந்த போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ‘யாராக இருக்கும்? ஒருவேளை கிளீனிங்க்கு யாராவது வந்திருப்பார்களா?’ என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சி. அவள் யாருக்கு பயந்து நான்கு வருடம் வீட்டை விட்டு தன் குடும்பத்தை விட்டு தன் ஊரை விட்டு விலகியிருந்தாளோ அவனே அவள் கண் முன் நிற்கிறான். ஏனெனில் அவள் கண்டது அவளுடைய கணவன் அஸ்வின். அஸ்வினைக் கண்ட மறுகணம் சுபாவிற்கு நடுக்கம் வந்தது. […]
