அத்தியாயம் 9
வீட்டிற்கு வந்த அஸ்வினை மாளவிகாவின் குடும்பம் அனைவரும் வியந்து பார்த்தனர். மாளவிகாவின் கணவன் அவினாஷின் தங்கை சோனியா அஸ்வினைப் பார்த்து வாயைப் பிளந்தாள். ஆறடி உயரத்தில் இருக்கும் அஸ்வின் பார்க்க சிவப்பான நிறத்தில் கட்டுக்கோப்பான உடலைக் கொண்டவன் ஆண்களே பொறாமைப்படும் ஆண்மைதனத்தில் இருந்தான். வந்தவர்களை வரவேற்று நேராக தங்கை மாளவிகாவிடம் சென்று, “சாரி டா என்னால கல்யாணத்திற்கு வர முடியல” என்று வைர நெக்லசை பரிசாக கொடுத்தான். “ஹாய் அவினாஷ், நீங்க ரொம்ப பாவம் […]
