அனல் 8

பிரபல மருத்துவமனை அது… 

 

இன்று வெளிவந்து இருக்க வேண்டிய திரைப்படம் அது…  இசை! 

 

இஷாக் வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இது என்று கூட சொல்லலாம்.. 

 

இதுவரை பண்ணிறாத கதாப்பாத்திரத்தை இந்தப் படத்தில் எடுத்து இருந்தான்… 

 

தன் முழு உழைப்பை கொடுத்தும் நடித்து இருந்தான்… 

 

நேற்றிரவு வீட்டில் நடந்த கலவர நேரத்தில் பிரொடீயூசரிடம் இருந்து கால்… 

 

யோசனையுடன் ஃபோனை எடுத்தவனிடம், “இஷாக்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா.. உன்னால தான் எல்லாமே… உன்னை நம்பி ஒரு மடங்கு பணம் போட்டா மூனு மடங்கா திரும்பி வரும்” என சந்தோஷத்துடன் சொல்லி வைத்தவர், இன்று அதிகாலை மாரடைப்பால் அவதிப்பட்டு பிரபல ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டார்… 

 

அதனால் இந்த படம் இன்று ரிலீஸ் ஆகாமல் ஒத்திப்போக வேண்டிய நிலையில் தள்ளப்பட, 

 

பிரொடீயூசரிடம் சிரித்து பேசாது இருந்தாலும் அவர் மீது மரியாதை வைத்திருந்த இஷாக் அவரைக் காண நேராக மருத்துவமனைக்கே வந்துருந்தான்… 

 

அவருக்கு மூன்று இடங்களில் அடைப்பு இருக்கிறது என டாக்டர் சொல்லி இருக்க, பிரொடீயூசரின் மகன் தான் இஷாக்கிடம் விஷயத்தை சொன்னான்… 

 

“இஷாக்… இன்னிக்கு ரிலீஸ் ஆக வேண்டிய படம் அடுத்த மாசம் தள்ளிப் போயிடுச்சு…” என்றான் அவன் சுகந்தன். 

 

“சாரோட ஹெல்த் தான் முக்கியம் சுகந்தன்” என்றான். 

 

ஏறத்தாள இருவருக்கும் ஒரே வயசு தான்… 

 

“அப்பாவோட பெரிய ஹோப் இந்தப் படம்” என்றவன், “படம் ரிலிஸ் ஆகுற வரைக்கும்… நீங்களும் டீமும் ஆல் இந்தியா பிரமோஷன் பண்ண முடியுமா.. இல்லன்னா நம்ம படத்தோட கிரேஸ் போயிடும்” என கோரிக்கையாக கேட்டான். 

 

பொதுவாக இந்த மாதிரி இறங்கி எல்லாம் இஷாக் பிரமோஷன் செய்வது கிடையாது.. 

 

அவனின் படம் பிரமோஷன் இல்லாமலேயே பிளாக்பஸ்டர் அடிக்கும்… 

 

ஆனால் அந்த பிரோடீயூசரின் நிலை அவனுக்கு புரிந்தது… 

 

ஏற்கனவே அட்டாக் வந்து இருக்கிறார்… இன்று வரவேண்டிய படம் தள்ளிச் சென்றால் அது பெரிய கரும்புள்ளி தானே… 

 

அதனால் அப்படத்தின் பிரொடீயூசரின் நலனுக்காக ஒத்துக் கொண்டான்… 

 

“தாங்க்யூ சோ மச் இஷாக்” என நன்றி தெரிவித்து விட்டு சென்றான் சுகந்தன்.. 

 

சுகந்தனும் பிரொடக்ஷனில் தான் இருக்கிறான்… 

 

அன்று வீட்டிற்கு வந்திருந்த இஷாக் அன்று இரவே ஆல் இந்தியா பிரமோஷனுக்கு கிளம்பி விட்டான்… 

 

இதில் திருமண பேச்சை பற்றி எல்லாம் அவன் யோசிக்கவும் இல்லை… சகுந்தலா தேவி பேரனிடம் பேச அவருக்கு நேரமும் கிடைக்கவில்லை… 

 

அவசரமாக கிளம்பியவன் ஏர்ப்போர்ட் வந்தடைந்த பின்னர் தான் தன் பாட்டிக்கு கால் செய்து விஷயத்தையே சொன்னான்..

 

“கண்ணா…என்ன சொல்ற நீ! ஒரு மாசம் கழிச்சு தான் வருவியா… நீ வந்து அடுத்த மூனாவது நாள் உன் அப்பா பிறந்தநாள் ப்பா அதுக்கு ஒரு நாள் முன்னாடி உனக்கு கல்யாணம்” என அவர் சொல்ல இஷாக்கோ, 

 

“விளையாடுறீங்களா பாட்டி…” என கடுப்பாக கத்தி விட்டான் இஷாக்… 

 

பின்னே நேற்றே இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என அவன் இருக்க, மறுபடியும் கம்மா போட்டு இழுக்கிறாரே பாட்டி என கடுப்படைந்து விட்டான் இஷாக்… 

 

“உன்னை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த சொல்லல இஷாக் இது உனக்கு நிரந்தரம் கிடையாது” என பாட்டி சொல்ல புருவத்தை சுருக்கினான் இஷாக். 

 

“ஆமா… அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிட்டு ஒரு வருஷத்துல விவாகரத்து கொடுத்திடு… அதுக்கு அப்புறம் உனக்கு பிடிச்ச விசித்திராவை கல்யாணம் பண்ணி வைக்குறேன்” என்றார் அவனிடம் உறுதியாக. 

 

“வாட்… என்ன உளர்றீங்க பாட்டி” என அழுத்தி கேட்டான் இஷாக்.

 

“ஆமாப்பா உன் அப்பாவோட உயிரும் எனக்கு முக்கியம்… நீயும் எனக்கு முக்கியம்… நான் குடும்ப ஜோசியர் கிட்ட இப்போ தான் கேட்டு வந்தேன்.. அதுப்படி உன் முதல் மனைவி உன் அப்பாவுக்காக, உனக்கு கல்யாணமாகி ஒரு வருஷத்துல உன் அப்பா கண்டத்துல இருந்து தப்பிச்சிடுவான்.. அதுக்கு அப்புறம் நீ இன்னொரு கல்யாணம் உனக்கு பிடிச்ச பொண்ணை பண்ணிக்கலாம்…”

 

“என் அப்பா இல்ல உங்க பையன்” என்றான் அழுத்தமாக. 

 

“சரி சரி.. என் பையன் தான் போதுமா… உனக்கு விசித்திராவை ரொம்ப பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்” என்றார். 

 

“எனக்கு விசித்திராவை பிடிக்கும் தான் பாட்டி… ஆனால் அவளை இன்னும் என் மனைவியாய்” என நிறுத்தியவன், 

 

“அதுக்கு முன்னாடி முதலா வரப் போற பொண்ணோட வாழ்க்கை” என இஷாக் கேள்வியாக கேட்க, 

 

“பணத்தை கொடுத்து செட்டில் பண்ணிடலாம் இஷாக்… ப்ளிஸ் இஷாக் இதுக்கு ஒத்துக்கோ இல்லன்னா உன் பாட்டி உயிரோட” என அவர் மீண்டும் ஆரம்பிக்க, 

 

“என்னமோ பண்ணித் தொலைங்க.. ஆனா எனக்கு பிடிச்ச பொண்ணு மட்டும் தான் என் மனசுக்குள்ள மனைவியா நுழைய முடியும்… அது விசித்திராவா இல்லையான்னு” என அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, 

 

“விசித்திரா உன் மேல உயிரையே வைச்சு இருக்கா இஷாக் கண்ணா… நீ இல்லன்னா செத்துடுவேன்னு சொல்றா” என அவசரமாக சொன்னார் சகுந்தலா தேவி… 

 

“என்ன பாட்டி… அடுத்த பிளாக்மெயில்லா” என நக்கலாக கேட்டான் இஷாக். 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!