அவள் இதனை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை…
சட்டென தன்னிலை மீண்டவள் அந்த அறையை விட்டு ஓட எத்தனிக்க அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்த ஜீவனோ,
“இப்படி உன்னை சுலபமா விட்டுறதுக்காக இத்தனை வருஷம் உன்னை அடைய வெறியா இருந்தேன்… சும்மா சொல்லக் கூடாது! உன் பாட்டை விட நீ ஆளு செமயா இருக்க. நீ சிங்கிங் காம்படீஷன்ல வின் பண்ணும் போதே உன்னை அடையணும்னு முடிவு பண்ணிட்டேன்…”
“அத் த சேம் டைம் உன் வாய்ஸ்ஸூம் ரொம்ப போதையா இருந்துச்சு.. அதனால உன்னை பாட வைச்ச அப்புறம் உன்னை எனக்கு பணிய வைக்கலாம்ன்னு நினைச்சா.. அப்போ வந்தான் அந்த ஆத்மன்…அந்த மியூசிக் டிரேக்டர் வைச்சு விஷயத்தை தெரிஞ்ச ஆத்மன்… என்னை மேலிடத்துல போட்டுக் கொடுத்து உன்னை அடைய விடாம பண்ணிட்டான்.. அதுக்கு மேல என் மேல கைய வைச்சு பெரிய தப்பு பண்ணிட்டான்…” என்றவனின் கரமோ ஆத்மன் தன்னை முகத்தில் அடித்து உருவாக்கிய தழும்பில் வைத்து பார்த்தது.
அவனின் ஆக்ரோஷம் அவனின் முகத்தில் தென்பட அவனிடம் இருந்து விடுபட முடியாமல் போராடினாள் அமிர்தா..
ஆத்மனை போய் தவறாக எண்ணி விட்டோமே என்று பெண்ணவளின் மனம் துடித்துக் கதற, இந்த கொடியவனிடம் இருந்து விடுபட முடியாமல் போராடினாள் அமிர்தா.
“என்ன டி ரொம்ப முரண்டு பிடிக்குற” என ஜீவன் ஏரிச்சல் அடைய,
“என் புருஷனுக்கு மட்டும் இது தெரிஞ்ச உன்னை கொன்னுடுவாரு டா.. ஒழுங்கு மரியாதையா என்னை வெளிய விடு” என்று அவள் கத்த,
“அதுக்கு நீ முதல்ல உன் புருஷன் கிட்ட சொல்லணுமெ.. உன்னை சொல்ல விடாம பண்ண தானே நான் உன்னை இப்போ வீடியோ எடுக்க போறேன்” என்று அவன் வெறியுடன் சொல்லி முடிக்கவும், அமிர்தா அதிர்ச்சியில் ஸ்தம்பிக்க அவளுக்கு அதிர்ச்சியில் மயக்கம் வரவும், அடுத்த நொடியே சுருண்டு விழுந்தான் அந்த கொடிய ஜீவன்.
அவனை அப்படி சுருண்டு விழ வைத்தது வேறு யாரும் அல்ல.. ஆத்மன் ரெட்டி!
நேற்றே ரெஸ்டாரண்டில் அமிர்தா அழுவதை கண்ட டிரைவர், ராஜேஷ் ரெட்டிக்கு கால் செய்து சொல்ல உடனே மகனுக்கு அழைத்தார் அவர்.
“நீ அமிர்தாவை ஏதாவது சொன்னியா ஆத்மா” என அவர் கவலையுடன் விசாரிக்க,
“என்னாச்சு நானா” என்று அவன் கேட்க, நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி முடித்தார் ராஜேஷ் ரெட்டி.
“ஆமா நானா எங்க ரெண்டு பேருக்கும் சின்ன சண்டை” என்றான்.
தந்தையிடம் மனைவியை அவன் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அதனால் பொய் சொன்னான்.
“என்ன சண்டை நடந்தாலும் எதுக்குப் ப்பா ஆம்பல பசங்க கிட்ட எல்லாம் அதை சொல்லி அழுகுறா.. நம்ம குடும்பத்துக்குனு மானம் மரியாதை இருக்கு ஆத்மா” என்று அவர் அதிருப்தியுடன் சொல்ல, “நானா.. ஸ்டாப் இட்” என அழுத்தமாக சொன்னவனோ,
“அமிர்தா பத்தி இந்த மாறி நீங்க பேசறது இது தான் கடைசி தடவயா இருக்கணும் நானா” என வேகமாக சொன்ன மகனிடம் பேச முடியாமல் திணறினார் ராஜேஷ் ரெட்டி.
“அமிர்தா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு நானா. உங்க மகன் நான் ஒண்ணும் யோக்கியனா அவ கிட்ட நடந்துக்கல” என்றவனோ அவன் நடந்துக் கொண்ட அனைத்தையும் குற்றுவுணர்ச்சியுடன் சொன்னவன்,
“ஷீ நீட்ஸ் டைம் ப்பா.. அவ கண்டிப்பா சர்வாவை தான் மீட் பண்ண போயிருக்கணும்.. சர்வா அவளோட பெஸ்ட் பிரண்ட் அதனால அவ பேசியிருக்கலாம்.. இதை நீங்க அவ முன்னாடி லவ் பண்ணதை வைச்சு லிங்க் பண்ணாதீங்க” என முடித்தவன் கால்லை அணைத்துவிட்டு சற்று நேரம் சோர்வாக அமர்ந்து இருந்தான்.
தந்தையிடம் தன்னவளை விட்டுக்கொடுக்க முடியாதவன், உடனே டிரைவருக்கு கால் செய்தான்.
அவனோ, “ஆத்மன் காரு” என பவ்வியமாக பேச,
“அமிர்தா கூட ரெண்டு பசங்க இருக்காங்க தானே.. அவங்களுக்கு தெரியாம அவங்களை ஃபோட்டோ எடுத்து அனுப்புங்க” என்றான் குழப்பமாக.
ஆத்மனுக்கு அமிர்தாவின் மீது அக்கறை, அவளின் பாதுகாப்பை நினைத்து பயம்..
அதனால் மட்டுமே அவன் புகைப்படம் கேட்டுருக்க, டிரைவரும் அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து அவனுக்கு அனுப்பியிருக்க, அதைக் கண்டவனின் புருவமோ இடுங்கியது…
இதோ நாளை அவனுடைய படத்தின் பாடல்கள் வெளியிடும் விழா.. அதில் அவனுக்கு வேலை அதிகம்…
ஆனாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து மனைவியை கண்காணிக்க ஆரம்பித்தவனுக்கு புரிந்தது.. தன்னவளுக்கு ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்று அவனின் உள்ளுணர்வு எச்சரிக்க, அவளை கண்காணித்து தொடர்ந்து வந்தவன் இதோ அவளை காப்பாற்றி விட்டான்..
அமிர்தா மயங்கி விழும் போதே அவளைத் தரையில் விழாமல் தன் கைகளில் பாதுகாத்த ஆத்மன் ரெட்டிக்கு ஜீவனை துவம்சம் செய்யும் கோபம் இருந்தாலும் தன்னவளின் உடல்நிலையே அவனுக்கு முக்கியமாகப்பட, அவளைத் தூக்கிக் கொண்டு பதற்றத்துடன் மருத்துவமனை விரைந்தான்.
***
கதவை ஓங்கி அடித்து திறந்தவனின் கண்களோ ஆக்ரோஷத்தில் சிவந்தது…
ஆம், மயக்க நிலையில் சோனியா பெட்டில் மயக்கத்தில் படுத்திருக்க, அங்கு ஓரமாக நின்றுருந்த ஒருவனோ அவளை கண்களால் பார்த்தபடியே அவளின் அழகை ரசித்துக் கொண்டுருந்தான்..
அதனைக் கண்ட விக்னேஷோ அவனின் சட்டையை ரௌத்திரத்துடன் பிடித்து, “யார் நீ! இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என கர்ஜிக்க,
“சார்.. நான் சோனியா சொல்லி தான் வந்தேன்.. இத்தனை நேரம் சந்தோஷமா இருந்துட்டு இப்போ தான் அவ தூங்குறா” என்று அவன் இஷ்டத்துக்கு பொய் சொல்ல,
“ச்ச இந்த சோனியா எவ்வளவு அசிங்கப்பிடிச்சவ.. இப்படி இன்னொரு ஆம்பிளையோட அசிங்கம் பண்ணிட்டு இருக்கா.. சரியான ஆம்பிளை பொறுக்கி” என அவள் பாட்டுக்கு வன்மத்தை கொட்டிக்கொண்டு இருக்க அப்போது தான் மயக்கத்தில் இருந்து மெல்ல விழித்தாள் சோனியா…
சோனியாவுக்கோ தன்னை சுற்றி விக்னேஷ், ப்ரீத்தா மற்றும் இன்னொருவன் இருக்க, அவளுக்கு நடப்பவை ஒன்றுமே புரியவில்லை…
விக்னேஷோ அந்த ஆடவனை சரமாரியாக அடிக்க, “சார் நான் சொல்றது உண்மை தான்… சோனியா தான் ரொம்ப மூடா இருக்கு வான்னு கூப்பிட்டா” என அப்பட்டமாக பொய் சொல்ல,
“வாட்” என அலறினாள் சோனியா.
“என்ன டி வாட்.. உனக்கு ஆம்பளைங்க வேணும்னா அதை வெளியே போய் பண்ணவேண்டியது தானே” என ப்ரீத்தா அருவருப்பாக பேச,
“வாயை மூடு ப்ரீத்தா” என அந்த அறையே அதிரும் அளவிற்கு கத்தினான் விக்னேஷ் கார்த்திக்.
விக்னேஷை வைத்தே சோனியாவை வெளியே துரத்தி விட பிளான் போட்டிருந்த ப்ரீத்தாவோ இப்போது விக்னேஷ கர்ஜிக்க புரியாமல் விழித்தாள்…
சோனியாவோ, அந்த ஆடவனின் சட்டையை கோபமாக பற்றி, “யார் டா நீ! எதுக்கு இப்படி உன் இஷ்டத்துக்கு பொய் சொல்ற” என்றபடி அவனின் கன்னத்தை அடிக்க,
“நீ தான் சோனியா” என்று அவன் மீண்டும் அவனின் பொய்யை ஆரம்பிக்க, அவனின் வாயிலேயே பலாரென்று குத்து விட்ட விக்னேஷ்,
“உனக்கு உயிர் மேல ஆசை இருந்தா இந்த நிமிஷமே ஓடி போயிடு” என்றான் அவனை கொலைவெறியுடன் பார்த்தபடி.
சோனியாவிற்கு தவறாக எதுவும் நேரவில்லை என்பது அவளின் தோற்றத்தைப் பார்த்த போதே உணர்ந்த விக்னேஷ் கார்த்திக்கிற்கு அந்த ஆடவனை கொன்று விடும் ஆத்திரம்…
ஆனாலும் சோனியா முன்னே அவனின் உணர்வுகளை காட்ட விரும்பாதவன் தன்னை தன் கடும் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள, சோனியாவுமே ஒரு நொடி தனக்கு அந்த ஆடவனால் ஏதும் நேர்ந்துவிட்டதோ என பயந்து தன் உடை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்ட பின்னர் தான் அவளுக்கு உயிரே வந்தது..
விக்னேஷைப் பார்த்து பயந்தவனோ அலறி அடித்து வேகமாக ஓடி விட, சோனியாவை அழுத்தமாக பார்த்த விக்னேஷோ ப்ரீத்தாவின் புறம் வந்து அவளை பலாரென்று அறைந்தான்…
