தீ 5

அத்தியாயம் 5

 

சரியாக மதியம் இரண்டு மணிக்கு வீட்டின் கதவை தட்டினான் சர்வஜித்…

 

கதவை தட்டியும் அது திறக்கப்படவில்லை…

 

ஏதோ தப்பு என உணர்ந்தவனோ, அந்த பெரிய வீட்டின் பின் பக்கம் இருக்கும் நுழைவு வாயிலின் கதவை நோக்கி சென்றான்…

 

அவனிடம் எப்போதுமே வீட்டின் சாவிகள் இருக்கும்…

 

அதனால் பின் வாசல் சாவியை வைத்து திறந்தவன் உள்ளே சென்று, “ஏய்!” என கர்ஜித்தபடியே செல்ல, அப்போதும் ஒரு பதிலும் இல்லை… 

 

அவளுக்கான அறையிலும் அவள் இல்லை என கண்டவனுக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்று புரிய, அவன் நேராக சென்றது பாத்ரூமிற்கு தான்… 

 

அவனின் யூகிப்பு சரியாக இருந்தது… 

 

பாத்ரூமில் பரிமளா மயங்கி விழுந்திருந்தாள்… அதுவும் அவள் எடுத்த வாந்தியின் மீதே! 

 

சிக்கனை சமைக்க முயன்று முயன்று, கொமட்டி கொமட்டி, வாந்தி வாந்தியாய் எடுத்து அதை சுத்தம் செய்து மறுபடியும் வாந்தி எடுத்து அப்படியே மயங்கியும் போனாள் பாவையவள்… 

 

பரிமளா கண் விழிக்கும் பொழுது தான், ‘என்ன ஆச்சு எனக்கு? நான் எப்போ தூங்குனேன்’ என யோசித்தபடியே எழுந்தவள், நடந்ததை மனதிற்குள் கொண்டு வந்து புரிந்து கொண்டவள், குனிந்து தன்னை பார்க்க கறுப்பு நிறத்தில் ஒரு சட்டை மட்டும் தான் அணிந்திருந்தாள்… கீழே எதுவும் இல்லை… 

 

“என்ன டிரெஸ் இது?” என தன் தொடைக்கு மேலே ஏறியிருந்த உடையை பிடித்து பிடித்து இழுத்தவள் அசதியில் முனங்க, 

 

“ஏன் டிரெஸ் ரொம்ப பெருசா இருக்குனு ஃபீல் பண்றியா” என அவள் படுத்திருந்த கட்டிலில் பின்னால் இருந்த மேஜையில் லேப்டாப்பில் லேலை பார்த்துக் கொண்டு இருந்த சர்வஜித் நக்கலாக கேட்டபடியே எழுந்து வர, அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது… 

 

“அ…அது நீ..ங்க என்ன” என அவள் திணற, 

 

“ஒரு சிக்கனை சமைக்க துப்பு இல்ல உனக்கு எல்லாம் வாந்தி ஒன்னு தான் கேடு” என அவன் குத்திக் காட்ட, 

 

‘இவனுக்கு பிடிக்காத சாப்பாட்டை சமைக்க வைச்சா தான் இவனுக்கு அதோட வலி தெரியும்’ என மனதிற்குள் அவனை கடிந்தவள்,

 

வெளியே மௌனமாக தலை குனிந்து தான் இருந்தாள். சர்வஜித்தோ அவளின் தாடையை தன் கையில் வன்மையாக பிடித்தவன், “இதை விட சின்ன டிரெஸ் வேணும்னா சொல்லு… உனக்கு ஸ்பெஷலா ரெடி பண்றேன்” என்றபடி அவளின் உடலில் கண்களை மேய விட்டவன்,

 

மேஜை புறம் குறிப்பிட்டு, “நீ பிரிட்ஜ்ல வெச்ச மிச்ச பொங்கல் இருக்கு சாப்பிடு” என்றான்…

 

பசி உயிரை எடுத்துவிடும் போல… அத்தனை பசி பரிமளாவிற்கு… வாந்தி வேறு எடுத்து இருக்கிறாள் அல்லவா! 

 

ஆனாலும் மிச்ச பொங்கலை சாப்பிட அவளுக்கு முகத்தில் அடித்தது போல இருந்தது… 

 

அதனால், “இல்ல நானே கிச்சன்ல போய்” என அவள் சோர்வாக இழுக்க, 

 

அவளை ரௌத்திரமாக பார்த்தவனோ,”நீ யாருன்றதை மறந்துட்டியா” என அனல் தெறிக்க கத்தியவனின் பார்வையில் மருட்சி அடைந்தாள் பெண்… 

 

“அஃப்டரால் நீ பணத்துக்காக என் கூட படுக்குற பொம்பளை… உனக்கு உரிமையா கிச்சன்க்கு போக கேட்குதோ” என எளக்காரமாக கேட்டான் பாருங்க… பரிமளாவிற்கு கண்களில் மடமடவென கண்ணீர் மூண்டது… 

 

அழக் கூடாது அழக் கூடாது என்று தான் அவளை அவளே கட்டுப்படுத்திக் கொள்கிறாள்…

 

ஆனாலும் சில சமயம் அவளையும் மீறி கண்ணீர் வந்து தொலைக்கிறது… 

 

“கிச்சன்ல நான் என்ன சார் பெரிய உரிமை கொண்டாட போறேன்” என தழுதழுத்த குரலில் கேட்டாள் பரிமளா… 

 

“என்னோட படுக்கை அறையில வேசியா இருக்குறவ கிச்சன்ல மட்டும் நினைச்ச நேரம் நுழைஞ்சிட முடியுமா? கிச்சனுக்கும் நான் சொன்னா மட்டும் தான் நீ போய் சமைக்கணும்… தட்ஸ் இட்” என அவன் அதிரடியாக சொல்ல, 

 

சாப்பாடு விஷயத்தில் கூட தன்னை வாட்டி வதைக்கும் ராட்சசனிடம் பெண்ணவள் என்ன தான் பேச முடியும்… 

 

தன் கண்களை அழுத்த துடைத்து மெல்ல எழுந்தவள், மேஜை மீது இருந்த பொங்கலை பக்கத்தில் வைத்திருந்த தட்டில் போட்டு சாப்பிட்டாள்…

 

ஃபிரிட்ஜில் இருந்ததால் பொங்கலும், சட்னியும் சில்லென இருந்தது… 

 

இதில் சட்னி வேறு லேசாக ஊசிப் போயிருந்தது… 

 

அதனால் வெறும் பொங்கலை அவள் எடுத்து சாப்பிட, பல்லெல்லாம் கூசியது… 

 

பிரிட்ஜில் இருந்ததால் பொங்கல் காய்ந்து வேறு போய் இருந்தது… தொண்டையில் இறங்குவேனா என்று இருந்த பொங்கல் வேறு அவ்வப்போது அவள் தொண்டையில் இறங்காமல் அடைக்க, திணறிக் கொண்டுருந்தாள் பரிமளா. 

 

அதனை கவனித்தவனோ, “சுடச் சுடச் பொங்கலை நல்லா என்ஜாய் பண்ணி சாப்பிடுற போல” என அங்கிருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து நக்கலாக கேட்டான்… 

 

அதில் மனம் கொதித்தவளோ, “தொண்டையில மாட்டுதுனு நான் அப்போ அப்போ தண்ணி குடிக்கிறேன்ங்க” என கண்ணீர் கலந்த ஆதங்கத்துடன் சொன்னாள்…

 

“அதைத் தெரிஞ்சு தானே நான் கொடுத்தேன்” என்றபடி ஆக்ரோஷமாக சிரித்தவன், 

 

“சட்னி போட்டு சாப்பிடு” என அதிகாரமாக சொன்னான். 

 

“அது கெட்டுப் போச்சு ங்க” என சொல்லும் போதே பெண்ணவளின் உதடுகள் கோபம் கொடுத்த வேகத்தில் நடுங்கியது… 

 

“ஐ க்னோ” என தாடையை நீவியபடி அவளை கூர்மையாக பார்த்தவனோ,” கெட்டுப் போனதை சாப்பிட நீ தகுதியானவ தான்… சாப்பிடு டி” என அவன் அதட்ட, 

 

‘இவன் மனுஷனை இல்ல மிருகம் இல்ல அதையும் விட கொடூரன்… ராட்சசன்’ என்பது போல் அவனை கோப விழிகளுடன் பார்த்த பரிமளாவை இப்போது அனல் தெறிக்க பார்த்தவன், 

 

“நீ இப்போ எடுத்து சாப்பிடலன்னா நான்” என அவன் மிரட்டிக் கொண்டு இருக்கும் போதே, அவனை முறைத்தபடி வேகமாக சட்னி இருந்த கின்னத்தை எடுத்தவள் அதை பொங்கலில் போட்டு சாப்பிடத் தொடங்கினாள்… 

 

லேசாக தான் ஊசிப்போயிருந்தாலும், அதை வாயில் போட்டவளுக்கு கொமட்டிக் கொண்டு வந்தது… 

 

ஆனாலும் இவன் முன்னே வாந்தி எடுக்காதே என மனதில் தோன்றிய வைராக்கியத்தில் மூக்கை மூடி அனைத்தையும் அதி வேகமாக உண்டு தண்ணீர் அருந்தினாள்…

 

அவளின் அவஸ்வதையை கண்டு வெளிப்படையாக சிரித்தான் சர்வஜித்… 

 

அவளின் கஷ்டத்தை கண்டு குளிர்காய்பவனை, ‘நான் சாப்பிட்டு முடிச்சுட்டேன்’ என்பதை போல் வெற்றியாக பார்த்தாள்… 

 

அவளின் அப்பார்வையை அலட்சியமாகப் பார்த்தவனோ தன் கைகளை கழுத்திற்கு பின்னே முட்டுக்கொடுத்து, “அதான் நல்ல டேஸ்ட்டா கொட்டிக்கிட்டியே… கிச்சனுக்கு போய் எனக்கு சுடச் சுடச் சப்பாத்தியும், குருமாவும் பண்ணு… இன்னும் நாப்பது நிமிஷத்துல ரெடி ஆகி இருக்கணும்… அண்ட் யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ” என அவன் அழுத்தமாக சொல்ல, 

 

“நான் டிரெஸ் சேன்ஜ் பண்ணனும்… அதுக்கு அப்புறம் டைம் ஸ்டார்ட் பண்ணுங்க ப்ளிஸ்” என கெஞ்சினாள். 

 

“இந்த டிரெஸக்கு என்ன… இதுலயே போய் குக் பண்ணு” என்றான் அதிகாரமாக… 

 

“எப்படிங்க இதுல பண்றது… கைய தூக்குனாலே சட்டை மேல தூக்குது” என கோபத்துடன் சொன்னாள் பெண். 

 

“எனக்கு உடம்பை காட்ட தானே நீ துடிச்சிக்கிட்டு இருக்க… வேணும்னா சொல்லு இந்த சட்டையையும் கழட்டிடலாம்” என்று நக்கலாக சொன்னவனை கண்களால் எரித்தாள் பரிமளா… 

 

‘உன் பார்வை எல்லாம் என்னோட கால் தூசிக்கு பெறாது’ என்பது போல் விசிலடித்தவன், “மூனு நிமிஷம் முடிஞ்சுது” என்றான் கடிகாரத்தை பார்த்தபடி… 

 

அவ்வளவு தான்… ஓடினாள் ஒரு ஓட்டம்… 

 

பதறி அடித்துக் கொண்டு ஓடினாள் என்பார்களே அதற்கு லைவ் டெலிகாஸ்ட் வேண்டும் என்றால் பரிமளா ஓடுவதை பார்க்கலாம் என்பது போல் ஓடினாள்… 

 

அதை கொடூரமாக ரசித்தவனோ அவளை தொடர்ந்து கீழே வந்தான்… 

 

அவளின் ஓட்டத்திலேயே அவள் அணிந்திருந்த சட்டை நன்றாக மேலே ஏற, அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாதவள் கீழே தன் ஃபோனை தேடிக் கொண்டு இருந்தாள்… 

 

அவளின் பின்னே நின்றிருந்த படி அவளின் பதற்றத்தை, பரிதவிப்பை, படபடப்பை, பயத்தை எல்லாம் கொடூரமாக ரசித்துக் கொண்டிருந்தான் சர்வஜித்… 

 

அவனின் கண்களுக்கு அவளின் வாழைத்தண்டு தொடைகள் வேறு தாராளமாக விருந்து கொடுக்க, அதை அப்படியே கடிக்க வேண்டும் என்கிற வெறி உணர்வு அவனுக்குத் தோன்றியது… 

 

எப்படியோ தன் ஃபோனை கண்டெடுத்தவள் யூடியுப்பில் ரெசிப்பியை பார்த்து முடிக்க, அடுத்த பத்து நிமிடங்கள் முடிந்திருந்தது… 

 

அவதி அவதியாக சமையலை தொடங்கினாள் பரிமளா… 

 

அவசரத்தில் கரண்டி வேறு கீழே விழ அதை அவள் குனிந்து எடுக்க, அதில் அவள் அணிந்திருந்த சட்டை நன்றாக மேலே தூக்க, அவளின் பின்னழகு அப்படியே சர்வஜித்தின் கண்களுக்கு விருந்தாகியது… 

 

அவனுக்கு இருக்கும் பசியில் விட்டால் அதையும் கடித்து சாப்பிட்டு விடுவான் போல… 

 

அவனுக்கு அத்தனை காம வெறி அவளின் மேல்! 

 

எப்படியோ சொன்ன நேரத்திற்குள் சரியாக முடித்தாள் என்பதை விட ஒவ்வொரு நொடியும் அதீத பதற்றத்தில் அவசரத்தில் செய்து எப்படியோ முடித்து விட்டிருந்தாள்…

 

தயார் செய்ததை சாப்பாடு மேஜையில் வைத்துவிட்டு சோஃபாவில் அமர்ந்திருந்தவனை அழைக்க சென்றவளை தாபமாக பார்த்தவன், 

 

“நல்லா ஷோ காட்டுன டி… மிட் நைட் மசாலாவுக்கே நீயெல்லாம் நடிக்க போகலாம்” என ஏளனமாக சொல்லி அவளை அவன் காயப்படுத்த, சுர்ரென்று எழுந்த கோபத்தின் மீதே இப்போது கோபம் கொண்டாள் பரிமளா… 

 

ஏனெனில் சர்ரென்று கோபம் வந்தால் மட்டும் அதை அவனிடம் வெளிப்படையாக காட்ட முடியுமா இல்லை காட்டினாலும் அவன் தான் தன்னை சும்மா விட்டுவிடுவானா… மேலும் மேலும் தானே காயப்படுத்துவான்! 

 

கண்ணீர் மட்டும் எப்போதும் போல் அழையாத விருந்தாளியாய் எட்டிப் பார்க்க, 

 

அவளின் கண்களில் கண்ணீர் சூழ்வதை கண்டவனோ, “எதுக்கு இப்போ பெரிய உத்தமி போல அப்போ அப்போ அழுது சீன் கிரியேட் பண்ற!” என சுள்ளென்று விழுந்தவன், 

 

“போடீ… சாப்பாடு எடுத்து வை” என்றபடி அலட்சியமாக எழுந்தான்… 

 

‘என்னோட உணர்வுகள் உண்மைன்னு இவனுக்கு கொஞ்சம் கூட புரியலையா!’ என மனம் வெறுத்தவளோ, அவனின் அடிமையாய் அவனுக்கு அடி பணிந்தாள்! 

 

சப்பாத்தி மற்றும் குருமாவை வாயில் வைத்தவனுக்கோ அதனின் ருசி பிடித்தது…

 

முதல் முறை தான் பரிமளா சமைக்கிறாள் செய்கிறாள்… யூடியுப் வீடியோவை பார்த்து அளவு எல்லாவற்றையும் சரியாக போடுகிறாள். அதனால் சாப்பாடும் நன்றாக வருகிறது… எல்லாவற்றையும் தாண்டி அவளுக்கென்று நல்ல கைப்பக்குவம் இருக்கிறது… 

 

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை பரிமளாவிற்கு திக் திக்கென்று இருந்தது… 

 

அவன் தட்டு காலியாகும் பொழுது தான் அவளுக்கு லேசான நிம்மதி பரவ ஆரம்பித்தது… 

 

அப்போது தான் அவளுக்கு சிக்கனை பற்றிய நினைவும் வந்தது…

 

‘இங்க எங்கயும் சிக்கனை காணுமே… பிரிட்ஜ்ல காய் கறி எடுக்கும் போது கூட அது இருந்த போல இல்லயே… ஒருவேளை நான் சரியா பாக்கலயா’ என அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, 

 

“பால் எடுத்துட்டு மேல வா” என கட்டளையிட்டு எழுந்தவன் தன் கைகளை கழுவிவிட்டு மேலே சென்றான்.

 

 

 

 

 

 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!