பிரியாதிரு 29

பிரியாதிரு 29 

 

அமிர்தாவின் கதறல் அழுகையை கண்டு அனன்யாவும் சாருபாலாவும் அதிர்ந்து பேசாது இருந்தார்கள்.. 

 

அவர்கள் இதை அமிர்தாவிடம் எதிர்ப்பார்க்கவில்லை…

 

அவள் அழுது முடிக்கட்டும் என இருவரும் காத்திருக்க, அவளோ அழுவதை நிறுத்தும் எண்ணமே இன்றி விசும்பி விசும்பி அழுதாள். 

 

“அன்னு என்ன டி இவ அழுதுக்கிட்டே இருக்கா” என அனன்யாவிடம் சாருபாலா கவலையுடன் சொல்ல, 

 

“அம்மு… அழாத டி” என்ற அனன்யாவிடம் கூற்று எல்லாம் அமிர்தாவின் காதுகளில் விழவில்லை… 

 

“அம்மு ப்ளிஸ் டி” என சாருபாலா விடாது கெஞ்ச, 

 

“என்னால முடியல பாலா.. மனசெல்லாம் வலிக்குது…” என கரகரத்த குரலில் சொன்னாள் அமிர்தா. 

 

“இதுக்கு தான் நான் உன்கிட்ட முதல்லயே சொன்னேன்… ஆத்மன் உன்னை சுத்தி வராரு.. அவர் காதல் உண்மைன்னு எனக்கு தோணுச்சுனு.. அப்போ நீ எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரி போல சர்வாவை அவர் கூட கம்பேர் பண்ணி ஓவரா பேசுன… இப்போ அவர் உன்னை மதிக்க மாட்டிங்குறாருன்னு அழுற” என தங்கையை நினைத்து கவலையில் கத்தினாள் அனன்யா. 

 

அனன்யா திட்டியதில் மீண்டும் பெரும் குரல் எடுத்து அமிர்தா அழ, “ஐய்யோ அன்னு.. அவளை சமாதானம் பண்ணாம கத்துனா என்ன டி அர்த்தம்!” என அனன்யாவிடம் நொந்த சாருபாலாவோ, 

 

“அம்மு.. இங்க பாரு.. எனக்கு தெரிஞ்சு நீ ஆத்மன் அண்ணா கிட்ட மனசு விட்டு பேசுனாலே எல்லாமே சரியாகிடும்னு தோணுது…” என்றாள் யோசனையாக. 

 

“மனசு விட்டு பேசுறதுக்கு அவர் என்னை முதல்ல அவர் வைஃப்பா நடத்தணும் பாலா” என கண்ணீரை துடைத்து ஆதங்கப்பட்டாள் அமிர்தா. 

 

“ஏய் அம்மு! முதல் பாதில அவர் உன் பின்னாடி சுத்துனாருல இப்போ நீ இப்போ அவர் பின்னாடி சுத்தேன்.. உன் புருஷன் தானே அவரு அப்போ தப்பே இல்ல” என்றாள் அனன்யா. 

 

“அன்னு சொல்றது ரொம்பவே கரெக்ட்.. ஆமா அம்மு உன் மனசை அவர் கிட்ட நீ வெளிப்படுத்தணும்… மே பி அவர் மனசுக்குள்ள இருக்குற காயங்கள் அதிகமா இருக்கலாம்… அதனாலேயே உன்கிட்ட இருந்து விலகி இருக்கலாம்… இப்போ தான் நீ அவரை நெருங்கணும் டி அவர் மனசுல இருக்குறதை வெளியே கொண்டு வா” என்றாள் சாருபாலா. 

 

நீண்ட நேரமாக தோழிகள் அறிவுரைத்ததில் ஒரு தெளிவிற்கு வந்த அமிர்தா, “சரி நான் அவர் மனசுல என்ன இருக்குனு வெளியே கொண்டு வரேன்” என்றவளோ அவசரமாக, “பாலா ப்ளிஸ் இந்தர் அண்ணா கிட்ட எதுவும் சொல்லிடாத” என பயத்துடன் சொல்ல, “கண்டிப்பா மாட்டேன் டி” என உறுதி கொடுத்தாள் சாருபாலா.

 

***

 

அன்று அதிகாலை வேலையில் தன்னுடைய டிமூடன் சுப்புரத்னம் சொன்ன கால்பந்து விளையாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தாள் சோனியா. 

 

மொத்தம் பத்து நாட்கள் இந்தப் போட்டிகள் நடக்கவிருக்கிறது என்பதால் அவளுக்கு பொறுப்பு அதிகமாகவே இருந்தது… அதிலும் பிரனவ்வின் இடத்தில் இருந்து முழு பொறுப்பை பார்க்கப் போகிறாள் அல்லவா! 

 

அவளின் டீமுடன் அவள் வெகு பிசியாக இருக்க, அடுத்த இரண்டு மணி நேரத்தில் சுப்புரத்னம் வருவதற்குள் அனைத்தையும் பக்காவாக தயார் செய்து வைத்திருந்தாள் சோனியா… 

 

“மேடம் சூப்பரா ரெடி பண்ணிட்டீங்களாட்ருக்கு” என்றபடி சுப்புரத்னம் வர, ஏதோ தீவிரமான வேலையில் ஈடுபட்டுருந்த சொனியாவோ மரியாதை நிமிர்த்தமாக நிமிர, அவளின் கண்களோ சுப்புரத்னத்தின் பின்னால் உயரமாக ஆண்மையின் இலக்கணமாக நடந்து வந்துக் கொண்டுருந்த அவனின் மேல் படிந்து அதிர்ச்சியில் உறைந்தது… 

 

“என்ன மேடம் அப்படியே பேயடிச்ச மாதிரி நிக்குறீங்க” என சிரிப்புடன் சுப்புரத்னம் கேட்க, 

 

“நீ கேட்ட கேள்விக்கே பதில் கொடுக்காம அலட்சியமா இருக்குறவ எப்படி வேலையை செஞ்சு முடிப்பா” என ஓங்கி ஒலித்தது அந்த நெடியவனின் குரல்… அந்த நெடியவன் வேறு யாரும் அல்ல சோனியாவின் முன்னால் கணவன் விக்னேஷ் கார்த்திக் தான்… 

 

அவனை இங்கு சற்றும் எதிர்ப்பார்க்காத சோனியா உண்மையாக பேயரைந்தாற் போலவே நிற்க, 

 

“மேடம், மேடம்” என்றபடி அவளின் தோளை உலுக்கினாள் கிருபா.. சோனியாவின் அசிஸ்டெண்ட். 

 

அப்போது தான் தன்னிலை மீண்ட சோனியா பேந்த பேந்தவென விழிக்க, 

 

“ஐய்யோ மேடம்க்கு ஏதாவது காத்து கருப்பு அடிச்சிருச்சுங்களா” என புரியாமல் கேட்டான் சுப்புரத்னம். 

 

கறுப்பு சட்டை மற்றும் காக்கி கலரில் பேன்ட் அணிந்திருந்தான் விக்னேஷ் கார்த்திக்…அவனின் முகத்தில் வளர்ந்து படர்ந்து இருந்தது தாடி… 

 

ஆனாலும் அப்போதும் கூட அவன் அழகாக வசீகரமாக தான் தெரிந்தான்… 

 

விக்னேஷோ சோனியாவை பார்த்தபடி, “என்ன சுப்பு.. இந்த பொண்ணு முன்ன பின்ன ஆம்பளைங்களை பார்த்தது இல்லயா என்ன!” என எளக்காரமாக கேட்க, அப்போது தான் தன்னிலை மீண்ட சோனியா, 

 

“சுப்புரத்னம் சார்… அவரை வார்த்தைய அளந்து பேச சொல்லுங்க! அவர் யார் முதல்ல என்னை இப்படி பேச…”, 

 

“மேடம்… அமைதியா இருங்க” என சுப்புரத்னம் சோனியாவின் வாயை அடைக்க முணுமுணுக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாத சோனியாவோ, 

 

“இது உங்களோட ஈவண்ட். நீங்க எனக்கு கஷ்டமர்.. அதுக்கு நடுவுல தேவை இல்லாம யார் அவதூறா பேசுனாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றாள் சோனியா கடுப்பாக. 

 

“மேடம்.. அவர் தான் இந்த பிளேகிரவுண்ட்டோட ஓனர் ங்க… இந்த பத்து நாள் போட்டிக்கே ஸ்பான்சர் அவர் தானுங்க” என்றான் பயம் கலந்த பதற்றத்துடன். 

 

இத்தனை நேரம் விக்னேஷிற்கு தக்க பதிலடி கொடுத்து விட்டோம் என நினைத்து இருந்த பெண்ணவளுக்கோ இப்போது தலைகுனிவாக போனது… 

 

ஆனாலும் தன் மனதை தளர விடாமல், “கிருபா… டிரிங்ஸ் எல்லாம் ரெடியா” என பேச்சை மாற்றினாள்.

 

அப்போது “சுப்பு” என கோபத்துடன் அழைத்த விக்னேஷ், “இந்த ஃபன்ஷன் நல்லபடியா நடக்கணும்னா இவளை என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்க சொல்லு” என்றுவிட்டு விக்னேஷ் நகர, அதைக் கேட்ட சோனியாவிற்கோ மனதில் பயம் கவ்விக் கொண்டது… 

 

“சோனியா மேடம்… விக்னேஷ் சார் கிட்ட உடனே மன்னிப்பு கேட்டுடுங்க” என சுப்புரத்னம் மறுநிமிடமே சொல்ல, 

 

“நான் எதுக்கு சார் மன்னிப்பு கேட்கணும்” என புரியாமல் கேட்ட சோனியாவிற்கோ அத்தனை கடுப்பு. 

 

இங்கு விக்னேஷ் இருப்பான் இன்னும் சொல்லப் போனால் இதுக்கு ஸ்பான்சர் அவன் தான் என தெரிந்து இருந்தால் கண்டிப்பாக வந்திருக்க மாட்டாளே… 

 

இது விக்னேஷின் பிளேகிரவுண்ட் என்று தெரிந்து இருந்தால் கூட அவள் இதற்கு வராமல் தான் இருந்துருப்பாள்… 

 

ஏனெனில் விக்னேஷ் இந்த கால்பந்து விளையாட்டுத் திடலை விலைக்கு வாங்கியே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தான் ஆகிறது.. அதனால் தான் அவளுக்கு இதைப்பற்றிய விவரம் இல்லை…

 

“நீங்க மன்னிப்பு கேட்கலன்னா இந்த ஈவண்ட்டை சார் கேன்சல் பண்ணிடு வாரு மேடம்” என்று அவன் பதறிக்கொண்டு இருக்கும் போதே சோனியாவின் ஃபோன் அடித்தது… 

 

பிரனவ் தான் அடித்துருந்தான்… “பிரனவ் நானே உங்களுக்கு கால்..” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 

 

“வாட் இஸ் திஸ் சோனியா… ஈவண்ட் பண்ண போன இடத்துல கிளைண்ட் கிட்ட திமிரா பேசுறீங்கன்னு கம்ப்ளைன்ட்” என்று அவன் எகிற, 

 

“பிரனவ்.. சுப்புரத்னம் தான் கிளைண்ட்…” என்று அழுத்தமாக சொன்னவளிடம், “அவர் ஜஸ்ட் கோஆர்டிநேட்டர் மட்டும் தான்.. விக்னேஷ் கார்த்திக் இஸ் அவர் கிளைண்ட்” என்றான் பாருங்க… அவ்வளவு தான் ஆடிப்போய் விட்டாள் சோனியா… 

 

அப்போது தங்கள் நிறுவனத்தை நாடியதும் விக்னேஷ் கார்த்திக் தானா! வேண்டும் என்றே செய்கிறானா? எனை விடாது துரத்தி பழி வாங்க வேண்டும் என்று நினைக்குறானா? இப்படி அவளுள் பல எண்ணங்கள்… 

 

பிரனவோ மேலும், “யாரா வேணும்னா கிளைண்டா இருக்கட்டும் சோனியா.. நீங்க ஏன் திமிரா நடந்துக்குறீங்க” என கோபமாக கேட்டான் பிரனவ். 

 

அவனுக்கும் சோனியாவின் நிலை புரிகிறது.. ஆனால் அவர்களின் கம்பெனியின் சார்பில் இருந்து அல்லவா அவன் பேச வேண்டியாகி இருக்கிறது.. 

 

“பிரனவ்! அவர் தான் என்னை” என சோனியா ஆரம்பிக்கும் போதே, 

 

“சாரி சோனியா.. கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்… விக்னேஷ் நம்ம பாஸ் பட்டேலுக்கு ரொம்ப கிளோஸ் பிரண்ட் போல எனக்கே இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி தான் தெரியும்… அதுவும் அடுத்த பத்து ஈவண்ட்ஸ்க்கு நம்ம கான்டராக்ட்ல சைன் பண்ணிருக்கோம்.. அப்போ நம்ம என்ன தான் பண்ண முடியும்.. பணிஞ்சு தான் போகணும்” என்றான் வேறு வழியின்றி. 

 

இந்திரஜித்தின் நண்பன் இங்கு ஒரு பார்ட்னர் என்றால் இப்போது பிரனவ் குறிப்பிடும் பட்டேலும் இன்னோரு பார்ட்னர்.. மொத்தம் நான்கு பார்ட்னர்கள் சேர்ந்து நடத்தும் கம்பெனி தான் இது… 

 

“அப்போ நான் இதுல இருந்து விலகிக்குறேன் பிரனவ்.. கிருபா இதை டேக் ஓவர் பண்ணிக்கட்டும்” என்றாள் கெஞ்சுதல் போல

 

“ஏற்கனவே நீங்க விக்னேஷ் கார்த்திக் கல்யாணத்துல பாதியிலேயே யோயிட்டீங்கனு பட்டேல் கிட்ட உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்துருக்காரு விக்னேஷ்… இப்போவும் நீங்க விலகுனா கண்டிப்பா பெரிய பிரச்சனை ஆயிடும் சோனியா…” என முடித்தான் பிரனவ். 

 

“இப்போ என்னை என்ன தான் பண்ண சொல்றீங்க!” என தலையில் கைவைத்தபடி சலிப்பாக கேட்டாள் சோனியா. 

 

“உங்க பேர்ஸ்னல் பிராப்ளத்தை வேலைக்குள்ள கொண்டு வராம ஃபிரொஃபஷனலா நடந்துக்கோங்க சோனியா.. என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்.. இனி விக்னேஷ் கிட்ட இருந்து பட்டேல்க்கு கால் போச்சுனா அது எனக்கும் தான் பிரச்சனை சோனியா.. நான் லாம் குடும்பஷ்தன் தான்.. பிள்ளைகுட்டிக் காரன்.. என் வயித்துல அடிச்சுறாதீங்க” என்றான் ஆதங்கமாக. 

 

பிரனவ் மிகவுமே நல்ல மனிதன்… சோனியா வுக்கு நல்ல உறுதுணையாக இருந்தான்.. தன்னால் அவனின் வேலைக்கு பிரச்சனை வந்துவிடுமோ என பயந்தவள், “நான் பாத்துக்குறேன் பிரனவ்… இதை சக்சஸ்ஃபுல்லா முடிச்சிடுவேன்.. இனி பட்டேல் சார்க்கு விக்னேஷ் கார்த்திக் கால் பண்ண மாட்டாரு.. ஐ வில் டேக் கேர்” என கட் செய்தவள் ஆழ்ந்த பெருமூச்சைவிட்டு, 

 

“ஐ அம் சாரி சுப்புரத்னம் சார்.. நான் என் வேலையை பார்க்க ஆரம்பிக்கலாமா” என பாசாங்காக பணிவாக கேட்டாள் சோனியா.. 

 

அப்போது சரியாக சுப்புரத்னத்தின் ஃபோன் ஒலிர அதை வேகமாக எடுத்தவன், “சொல்லுங்க சார்” என்றான்… 

 

மறுப்பக்கம் என்ன வந்ததோ, “சாரிங்க சார்.. இதோ சோனியா மேடம் உங்க கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்துட்டே இருக்காங்க” என பம்மி சொல்ல, சோனியாவுக்கு புரிந்துவிட்டது கால் செய்தது விக்னேஷ் கார்த்தி என்று! 

 

கால்லை கட் செய்தவனோ சோனியாவை கையெடுத்து கெஞ்ச, சுப்புரத்னத்தை முறைத்தபடி நின்றவள் அவனின் செய்கையை கண்களால் அளந்து, “உங்க சார் எங்க இருக்காரு?” என கேட்டு அவன் இருக்கும் அறை நோக்கி சென்றாள்… 

 

அந்த பிளேகிரவுண்ட்டை ஒட்டி ஒரு வீடு இருந்தது.. அங்கு வந்தால் விக்னேஷ் அங்கு தான் இருப்பான்.. 

 

ஆபீஸ் அறைக்குள் சென்றவளோ முதலில் கண்டது ஒரு ரிசெப்ஷன் அறை.. அதில் அழகான ஒரு பெண் அமர்ந்துருக்க, “மேடம் உங்களுக்கு என்ன வேணும்” என்று கேட்டாள். 

 

“விக்னேஷ் கார்த்திக் சாரை பார்க்கணும்” என்றாள் சோனியா. 

 

“வெயிட் பண்ணுங்க” என்றவள் அங்கிருந்த லேன்ட்லைன் எடுத்து கால் செய்தாள்..

 

பிளேகிரவுண்ட்டை ஒட்டி இருந்த அந்த ஒரு அடுக்கு வீட்டில் தான் விக்னேஷின் ஆபிஸ் அறை இருந்தது… இடம் ரொம்ப பெரிது இல்லை என்றாலும் அழகாக,சுத்தமாக, கண்களை குளிர்குக்கும் செடிகளுடன் வரை படங்களுடன் பார்க்கவே ரம்மியமாக இருந்தது… 

 

“சார் உங்களை உள்ளே வரச் சொன்னாரு மேம்… நேரா போய் ரைட்ல திரும்புங்க அங்க இருக்குற ரூம் தான் சாரோட ஆபிஸ் ரூம்” என்றாள். 

 

அவள் சொன்னது போல நடந்த சோனியாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது..

 

ஏன்? எதற்காக தன்னை இப்படி தலைகுனிய வைக்குறான்… அதான் அவனுக்கு இப்போது திருமணமும் ஆகிவிட்டதே.. பிறகும் ஏன் தன்னை வதைக்குறான் என மனதில் குமுறியவளுக்கு விடை தான் கிடைக்கவே இல்லை.. 

 

சிங்கத்தின் குகைக்குள் பயந்து நுழையும் மான் போல மெல்ல தயங்கி அடியெடுத்து வைத்தவள் மூடப்பட்டுருந்த கதவைத் தட்ட, “எஸ் எம் இன்” என கம்பீரம் கலந்த திமிரோடு குரல் கொடுத்தான் விக்னேஷ் கார்த்திக். 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!