அத்தியாயம் 9
பரிமளா சிலையாக உறைந்து நிற்க…
‘அவன் ஒன்னு சொன்னான்… இவ வேற மாதிரி இருக்கா’ என புரியாமல் விழித்த பிரியாவோ,
“நீ அங்க பெட்ல போய் படு… நம்ம பிரோசீஜரை ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றவளோ, வெளியில் செல்ல, தன் கையில் இருந்த தனது செல்லில் காப்பர் டீ என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்று எல்லாவற்றையும் வேகமாக ஆராயத் தொடங்கினாள் பரிமளா…
“ஜித்து உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என சர்வஜித்தை அழைத்த பிரியா,”எல்லாம் முடிஞ்சதா?” என்று கைகளை கட்டியபடி அசையாது நின்று கேட்டான் சர்வஜித்…
“அதைப் பத்தி தான் பேசணும்” என பிரியா இழுக்க,
“அதைப் பத்தி பேச ஒன்னும் இல்ல” என்றான் அழுத்தமாக…
“இங்கப் பாரு… அவ காப்பர் டீ ன்னா என்னனு கேட்குறா… வயசு இருபது தான் ஆகுது” என்று ஒரு மருத்துவராகவும், சக பெண்ணின் மீது பரிதாபப்பட்டும் அவள் சொல்ல,
“நீயெல்லாம் என்னத்த படிச்சு டாக்டர் ஆனியோ! ஒருவேளை பிட் அடிச்சிருப்பியோ” என நக்கல் கலந்த கடுப்புடன் கேட்டவன்,
“உன் கிட்ட ஒரு பேஷண்ட் வந்து ட்ரீட்மெண்ட் எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு நான் ரொம்ப ஏழைங்க அதனால பணம் தர முடியாதுன்னு சொன்னா நீயும் சரிங்க நான் ஃபிரி செர்வீஸா நினைச்சிக்குறேன்னு பெருந்தன்மையா சொல்லுவியா” என கேள்வியாக கேட்டான்…
அதற்கு வேகமாக இல்லை என்பதை போல் தலையாட்டியவள்,”அது ஆனாலும் அவங்களை பார்த்தாலே தெரியும்ல அவங்க பொய் சொல்றாங்களா இல்ல உண்மை சொல்றாங்களான்னு” என இழுத்தாள் பிரியா…
“அதே மாதிரி தான் இந்த பரிமளா… அவ ஆக்டிங் எல்லாம் அப்படியே உண்மை மாதிரி தான் இருக்கும். அவ எல்லாம் விட்டால் இந்த உலகத்தையே வித்துடுவா… அவளுக்காக இனி என் கிட்ட ஏதாவது பேசிப்பாரு… இல்ல பேசித் தான் பாரேன்… அத்தோட உன்னை என் வாழ்க்கையில் இருந்தே தூக்கிடுவேன்” என்றான் ஆவேசமாக…
அதனைக் கேட்ட பிரியாவின் கண்களோ குளமாகியது…
“என்ன ஜித்து… இப்படி எல்லாம் பேசுற!” என கலங்கிய கண்களுடன் வருந்தியவளை முறைத்தவன்,
“மூடிக்கிட்டு வேலையை பாரு டி.. எனக்கு நிறைய வேலை இருக்கு… சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு அவளை அனுப்பிவிடு” என்றான் கட்டளையாக.
அதன் பின்னர் டாக்டர் பிரியாவால் ஒன்றுமே பேச முடியவில்லை… மௌனியாக தான் அவளின் அறைக்குள் சென்றாள்…
இங்கே பரிமளாவோ காப்பர் டீ யைப் பற்றிய விஷயங்களைக் கண்டு அறிந்து உறைந்து நின்றுருந்தாள்…
இருபது வயதில் திருமணம் செய்யாமல் பிரசவ வலி என்றால் என்ன என்பதை கூட பார்த்திராத பெண்ணிற்கு இதெல்லாம் வைக்க வேண்டும் என்றால் அவளால் இதனை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்…
மனதளவில் துடித்தாள்…
சோர்வாக உள்ளே வந்த பிரியாவோ சிலை போல நின்றுருந்த பரிமளாவை பார்த்து, “இது ரொம்ப பெயின்ஃபுல்லா இருக்கும்… அதனால லோக்கல் அனஸ்டீஸியா கொடுப்போம்… உனக்கு அந்த இடம் மரத்து போயிடும்” என பிரியா விவரித்து கொண்டுருக்க,
“அந்த ராட்சசனுக்கு இது தான் பிராசஸ்ன்னு தெரியுமா” என விரக்தியாக கேட்டாள் பரிமளா.
அவள் யாரை ராட்சசன் என்று குறிப்பிடுகிறாள் என்று பிரியாவிற்கு தெரியாமல் இல்லை…
“அவனுக்கு பிராசஸ் எதுவும் தெரியாது…” என விடை அளித்தவளை பார்த்து வெறுமையாக சிரித்த பரிமளா,
“தெரிஞ்சிருந்தா, எனக்கு வலி கொடுத்து தான் இதை பொருத்தி இருக்கணும்னு சொல்லி இருப்பான்…” என சொல்லி முடிக்கும் போதே அவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக தண்ணீர் கொட்டியது…
“நீ மட்டும்” என கொதிப்புடன் ஆரம்பித்த பிரியாவோ, “ஸ்டார்ட் பண்ணலாம்” என்றாள் எங்கோ பார்த்தபடி…
அனைத்தும் முடிந்த பின்னர் சோர்வாக வெளியே வந்தாள் பரிமளா…
அவளின் முகத்தை அலட்சியமாக பார்த்தவனோ, “கிளம்பு” என்று வேகமாக முன்னேறி நடக்க, பரிமளாவிற்கு தான் மூளையும், மனமும் தளர்ந்தது…
காரில் முன் பக்கம் தான் அமர்ந்தாள்… இல்லையெனில் அதற்கும் திட்டித் தீர்ப்பானே…
அவளின் வாடிய முகத்தை வேடிக்கையாக பார்த்தவனோ, “என்னை இப்படி சித்ரவதை படுத்த நீயே கான்டம் வைச்சிருக்கலாம்னு தானே உன் மைன்ட்ல ஓடுது” என சத்தமாக சிரித்தவன், “வைச்சிருக்கலாம் தான்… பட் ஐ நீட் ஃபுல் பிலெஷர்” என காரை ஓட்டியபடியே அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவனை வெட்டவா குத்தவா என்கிற ரீதியில் பார்த்தாள் பரிமளா…
அதனை கவனித்தவனோ, “இந்த லுக்கை எல்லாம் பத்தினி பொண்ணுங்க கொடுத்தா ஏத்துக்கலாம்… ஊர் மேயுறவ நீ எல்லாம் கொடுத்தா சாவடிச்சிடுவேன் டி” என்றான் ஆவேசமாக…
“நான் ஊர் மேஞ்சதை நீங்க எங்க பார்த்தீங்க…” என அந்த கோபத்தில் கூட நிறுத்தி நிதானமாக தான் கேட்டாள்…
அவளுக்கு இந்த கேள்விக்கு பதில் தேவைப்பட்டது… அதுவும் இல்லாமல் தன் மேல் பிழை இல்லாத விஷயம் என்பதால் மனதில் ஒரு திடம் வந்து அவளை நிதானமாக கேட்க வைத்தது…
‘பதில் சொல்லு டா!’ என கேட்பது போல் அசட்டு தைரியம் அது…
“என்னடி கொஞ்ச நாள் உன்னை தொடாம விட்டதுல திமிரு ஏறிப்போச்சோ! கேள்வி எல்லாம் கேட்குற… இன்னொரு தரம் இந்த மாதிரி உத்தமி போல பேசிப் பாரேன் வாயை உடைச்சிடுவேன்” என்று கர்ஜித்தவன் அவளை வீட்டில் விட, சரியாக அவனின் ஃபோன் அடித்தது…
அடித்தது அவனின் பாட்டி லட்சுமி தான்…
அவளை உள்ளே செல்லும் படி பணித்தவன் தன் ஃபோனை எடுத்து,”சொல்லுங்க பாட்டி!” என்க,
“ரிசெப்ஷன் டிரெஸ் எடுக்கணும் சர்வஜித்… உனக்காக தான் தேன்மொழி காத்துக்கிட்டு இருக்கா” என்றார்.
“இதோ பாட்டி கிளம்பிடுறேன்” என்றவன் தன் காரில் அவனின் வீட்டிற்கு வேகமாக விரைந்தான்…
சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் பெரிய பங்களா டைப் வீடு தான் சர்வஜித்துடையது…
AG Groups of Constructions இன் தற்போதைய உரிமையாளர் சர்வஜித் தான்…
மூன்று தலைமுறைகளாக இந்த கட்டுமான தொழிலில் கொடி கட்டி பறக்கிறார்கள்…
சர்வஜித்திற்கு அம்மா மற்றும் அப்பா இல்லை… பாட்டி மட்டும் தான்… சில வருடங்களுக்கு முன்பு இருவருமே வரிசையாக உடல் நலக் குறைவால் தவறி இருந்தார்கள்….
இவன் கல்லூரி படிப்பு படித்தது எல்லாமே அமேரிக்காவில் தான்…
அதுவரை இவனின் கம்பெனியை பொறுப்பாக பார்த்துக் கொண்டது பாட்டி லட்சுமி மற்றும் இவனின் ஆருயிர் நண்பன் அருணன் தான்…
அருணன்… சென்னையில் உள்ள பெரிய தனியார் நிறுவனத்தில் முக்கிய வேலையில் இருக்கிறான்…
படித்தது பிஈ… லட்சங்களில் சம்பாதிப்பவன்… பணக்கார குடும்பம் தான்… ஆனாலும் இவனுக்கு நிர்வாகிக்க பிடிக்காது…
இருந்தாலும் நண்பனுக்காக, நண்பனின் கம்பெனியை பாட்டியுடன் இணைந்து அவ்வப்போது பார்த்துக் கொண்டான்..
அதற்காக தன் வேலையையும் அவன் விடவில்லை… அது ஒரு பக்கம், இது ஒரு பக்கம் என இரண்டையும் சமாளிக்கும் திறன் கொண்டவன்…
பெசன்ட் நகரில் உள்ள பீச் ரோட்டில் இருக்கிறது சர்வஜித்தின் பெரிய பங்களா.. அவனின் உயர் தர பென்ஸ் கார் அவனின் வீட்டின் வாசலை தாண்டி உள்ளே செல்ல, அவனின் வீட்டின் ரம்மியான தோட்டமும் நீச்சல் குளமும் அவனை வரவேற்றது…
தன் கார்க் கீயை கையில் ஸ்டைலாக சுழற்றியபடி உள்ளே வந்தவனை, “டேய்! இங்க வாடா” என அதட்டி அழைத்தார் லட்சுமி…
அந்தப் பெரிய ஹாலில் உள்ள சோஃபாவில் நடு நாயகமாக அமர்ந்திருந்த பாட்டியை பார்த்து சிரித்து மழுப்பியவன், “சொல்லுங்க பாட்டி” என அவரின் பக்கம் சென்று அமர்ந்தான்…
“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வைச்சிக்கிட்டு ஏன் டா இன்னும் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட்டு இருக்க” என ஆதங்கத்துடன் கேட்டார் பாட்டி..
“பாட்டீ… அத்தானே இப்போ தான் வந்திருக்காங்க” என அவனின் குரல் கேட்டு வேகமாக வெளியே ஓடி வந்தாள் தேன்மொழி…
சர்வஜித்தின் அத்தை மகள்…
“ஆமா ப்பா… உனக்காக நாங்களும் வழி மேல விழி வைச்சு காத்துக்கிட்டு இருக்கோம்” என்று வந்தார்கள் தேன்மொழியின் பெற்றோர்கள் சந்திரன் மற்றும் ரேகா.
சந்திரனும் நல்ல வசதி தான்… ஆனால் அரசாங்க உத்தியோகம்… அவர்களின் குடும்பத்தில் தொழில் செய்து பழக்கம் இல்லை…
இரண்டு தெரு தள்ளி தான் அவர்களின் வீடும்… அடிக்கடி அவர்கள் இங்கு வருவது வழக்கம்… அப்படித் தான் இன்றும் வந்துருக்கிறார்கள்…
“ஆபிஸ்ல நிறைய வேலை மாமா… அதை முடிச்சிட்டு கெஸ்ட் ஹவுஸ்ல தங்குறது கம்ஃப்போர்ட்டா இருக்கு” என அவன் பொய் சொல்ல, பெரியவர்களிடம் மௌனம் தான்…
இந்த வீட்டின் ஆணி வேர் லட்சுமி பாட்டி தான் என்றாலும் இவர்களின் மொத்த குடும்பத்தையே வழிகாட்டியாக வழிநடத்துவது சர்வஜித் தான்…
அதில் அனைவருக்கும் அவன் மீது எண்ணற்ற மரியாதை மற்றும் நம்பிக்கை இருக்கிறது…
அனைவரின் மௌனத்தையும் கண்டவன் அவனின் அறை நோக்கி செல்ல, அவனின் பின்னாலேயே ஓடி வந்தாள் தேன்மொழி…
“அத்தான்… அத்தான்…” என ஆர்வமாக தன் பின்னே வந்தவளை, மென் புன்னகையுடன் பார்த்த சர்வஜித், “சொல்லு ஹனி..
ஏதாவது பேசணுமா” என இயல்பாக கேட்டான்.
“எங்கேயாவது வெளியே போகலாம் அத்தான்… நீங்களும் நானும் மட்டும் தனியா!” என்றாள் ஆசையாக.
அவளின் காதல் ஆசை எல்லாம் அவனுக்கு புரியாமல் இல்லை…
“கல்யாணத்துக்கு அப்புறம் ஆசை தீர போகலாம் டா” என மென்மையாக அவளின் தலையை ஆட்டியவன், உள்ளே செல்ல அவனை ஏக்கமாக பார்த்தாள் தேன்மொழி…
அறைக்குள் வந்ததும் இத்தனை நேரம் மென்மையாய் இருந்த அவனின் முகம் இப்போது இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது…
அவனின் மனமெல்லாம் ரணம்…
தன்னுடைய ரெக்லைனர் நாற்காலியில் சாய்வாக அமர்ந்தவனின் ஃபோன் ஒலிர, அதில் இருந்த எண்ணைக் கண்டவனோ வேகமாக கால்லை எடுத்து
“சொல்லு கிருஷ்ணா…” என்க,
“நான் அப்பாவாகப் போறேன் டா” என்றான் நெகிழ்வாக…
“வாவ்… கங்காராட்ஸ் மாப்பிள்ளை” என அவன் நண்பன் சொன்ன சேதியில் சந்தோஷம் அடைந்தவனின் இறுக்கம் அதன் பின்னர் பறந்துசென்றுவிட்டது…
வீட்டிற்குள் வந்த பரிமளாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக வலி பிறக்க ஆரம்பித்தது…
அவளின் வயிற்றிற்கு கீழே ஏதோ குத்துவது போன்ற உணர்வு… அழுத்துவது போன்ற உணர்வு… நடக்கும் பொழுது கால்களுக்கு இடையில் ஏதோ தட்டுப்படும் உணர்வு… நரக வேதனையாக இருந்தது…
தன் அறைக்குள் அமர்ந்தவளுக்கோ அத்தனை ஆத்திரம்…
உடலால் துன்புறுத்துகிறான்… மனதாலும் துன்புறுத்துகிறான்… இதற்கு அவளின் உயிரை எடுத்து மொத்தமாக எமனிற்கு கொடுத்துவிடலாமே என்கிற வெறி அவளுள் குடிக்கொண்டது…
தன்னை குறுக்கி அமர்ந்து தன் கைகளின் மீது முகத்தை அழுத்தி அழுதவளின் ஃபோன் ஒலிர, தன்னுடைய பெற்றொர்களாக இருக்கும் என்று அதனைக் கடுப்பில் பார்க்காது வெறுப்பில் அழுதுக்கொண்டுருந்தாள் பரிமளா…
நீண்ட நெடிய ரிங் அடித்து ஓய்ந்து மறுபடியும் அடிக்க, “ச்ச என்னை இந்த நிலைமைக்குள்ள தள்ளிவிட்டுட்டு மறுபடியும் மறுபடியும் கால் பண்றாங்க” என கடுப்பில் அழுதபடியே ஃபோனை பார்த்தவளின் கண்கள் பயத்தில் அப்படியே நின்றது…
அடித்தது சர்வஜித் தான்…
