பிரியாதிரு 33

பிரியாதிரு 33

 

“என்ன சொல்றீங்க விக்னேஷ்.. விளையாடாதீங்க!” என்று சோனியா பதற,

 

“இனிமேல் தானே நான் விளையாடவே போறேன்! அதுக்கு முன்னாடியே இப்படி சொன்னா என்ன அர்த்தம் எக்ஸ் பொண்டாட்டி” என்று நக்கலாக சொன்னான் விக்னேஷ் கார்த்திக்.

 

“இப்போ எதுக்கு தேவ இல்லாம என் அண்ணாவ இழுக்குறீங்க.. அவருக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா!” என்று அவள் ஆவேசமாக பேசிக் கொண்டு இருக்கும் போதே,

 

“நிறுத்து டி” என அலட்சியமாக சொன்னவன், “உன் அண்ணனுக்கு ஒன்னும் தெரியாது அதை தெரியவும் நான் விட மாட்டேன்.. பட் உன் அண்ணனை பத்தி தான் இந்த விஷயமே! நீ மட்டும் டாப் மேனேஜ்மெண்ட் கிட்ட என்னை கம்ப்ளைண்ட் பண்ணி தான் பாரு.. உன் அண்ணன் என் தங்கச்சிய கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி அவன் மத்த பொண்ணுங்களோட இருந்த..” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “ஸ்டாப் இட்” என்றபடி தன் காதுகளை தன் கைகளால் இறுக்கமாக மூடிய சோனியாவை நக்கலாக பார்த்து சிரித்தவனோ தன் நாற்காலியில் இருந்து எழுந்து அவளின் புறம் வேகமாக வந்து அவளின் கைகளை எடுத்தவன், 

 

“இன்னும் நான் முழுசா சொல்லி முடிக்குறதுக்கு முன்னாடியே காதை மூடுனா எப்படி டி” என புருவத்தை உயர்த்தி அவன் கேட்ட விதத்தில் கோப மூச்சுகளை வெளியிட்ட சோனியா, “ச்ச… நீங்க இவ்வளவு கீழ்த்தனமான மனுஷனா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல!” என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கினான் விக்னேஷ் கார்த்திக். 

 

அவனின் இச்செயலில் அதிர்ந்த பாவையின் பாவனைகளை கண்டுக்கொள்ளாமல், “என் தங்கச்சி சாருபாலா க்கு உன் அண்ணனோட அந்த வீடியோ பென் டிரைவ்வை கொரியர் பண்ணிடுவேன்” என அவன் சொல்லி முடிக்க, பெண்ணவளுக்கு எங்கு தான் அத்தனை திடமும், தைரியமும் வந்ததோ தன் முழு பலம் கொண்டு அவனிடம் இருந்து விடுப்பட்டவள் அவனின் கன்னத்தில் ஓங்க, அவளின் கைகளை பட்டென்று பிடித்தவன், 

 

அவளின் காது மடலில், “உன் அண்ணன் விஷயம்ன்னா உனக்கு அவ்வளவு கோபம் வருதோ… சாவடிச்சிடுவேன் டி” என அதட்டியபடி அவளின் கையை முறுக்கி அவளைத் திருப்பி தன் அருகே இழுத்து அவளின் காதில், “உன் அண்ணன் சம்பந்தப்பட்ட அந்த பென் டிரைவ் என் தங்கச்சி கையில கிடைச்சா… என்ன தான் என் தங்கச்சிக்கு உன் அண்ணன் அதான் டி கிரேட் பிசினஸ் டைக்கூன் இந்திரஜித்தோட பாஸ்ட் தெரிஞ்சாலும் அதை கண்ணால பாத்தா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு யோசிச்சுப் பாரு” என்றான் போலியான இரக்கத்துடன்.. 

 

“விக்னேஷ்.. நீங்களா இப்படி” என கதறி அழுதவள், “நீங்க உயிரெ வைச்சு இருக்குற உங்க தங்கச்சியோட வாழ்க்கை பத்தி கூட உங்களுக்கு அக்கறை இல்லயா… என்ன தான் ஆச்சு விக்னேஷ் உங்களுக்கு” என கதறியபடி அழுதாள் பெண். 

 

அவளை சட்டென்று தன் புறம் திருப்பியவன், “என்னை இவ்வளவு மிருகமா மாத்துனது நீ தான் டி” என எகிறியவன் என்ன நினைத்தானோ தன் தலையை கோதியபடி தன்னை சமநிலைப்படுத்தி, “கிளம்பு… நாளைக்கு நைட் என்னை வந்து மீட் பண்ணு…” என சொல்லிவிட்டு நகர, 

 

“விக்..” என பெண்ணவள் ஆதங்கத்துடன் ஆரம்பிக்கும் போதே, “நான் செம கடுப்புல இருக்கேன் சோனியா.. ஒழுங்கு மரியாதையா இப்போ கிளம்பு இல்லன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என அவன் கர்ஜித்த விதத்தில் பயந்தவளோ வேக நடையுடன் வெளியே சென்றாள்… 

 

இதோ இப்போது அவளுடைய வீட்டில் அவளின் அறையில் உறக்கத்தை தழுவ நினைத்தாலும் மீண்டும் மீண்டும் அன்று நடந்த சம்பங்கள் அவளின் மனதிற்குள் வந்து வந்து பெண்ணவளை நோகடித்து அச்சுறுத்திக் கொண்டு தான் இருக்கிறது… 

 

****

 

சாப்பாடு மேஜையில் ஆத்மன் அவ்வாறு பேசியது பெண்ணவளுக்கு மூக்குடைந்தது போல ஆனது… 

 

கண்ணீர் வேறு சட்டென்று அவளின் கண்களுக்குள் சூழ்ந்துக் கொள்ள அதன் பின்னர் அவள் அங்கே நிற்கவில்லை… 

 

வேகமாக தன் அறை நோக்கி வந்தவளுக்கு நிலை கொள்ள முடியவில்லை… 

 

தன் வாயை மூடி கதறி அழுதவளை தேற்ற தோழிகள் இருந்தும் அவர்களுக்கு கால் செய்து தன் நிலையை விளக்க தான் அவளுக்கு பிடிக்கவில்லை.. 

 

‘நான் அன்னு க்கும், பாலாவுக்கும் கால் பண்ணா மட்டும் அவங்க எனக்கு ஆதரவா ஏதாவது பேசுவாங்களா என்ன!’ என மனதில் புலம்பியவள் சோஃபாவில் தன் கால்களை குறுக்கி கைகளைச் சுற்றி அமர்ந்து பால்கனி வழியாக இரவு நேர நிலவையே வெறித்துருந்தாள்… 

 

“ஏன் ஆத்மா இப்படி பண்ண! அவ உன் பொண்டாட்டி” என சற்று கண்டிப்பா சொன்ன அன்னையை வெறுமையாக பார்த்த ஆத்மனோ, 

 

“உண்மைய சொல்லுங்க ம்மா.. அமிர்தாவா எனக்கு ஆசைப்பட்டு பரிமாற வந்தாளா” என்று அவன் கேள்வியாக கேட்க, அதில் தடுமாறித் தான் போனார் கவிதா. 

 

“அது வந்து” என அவர் தடுமாறிக் கொண்டு இருக்கும் போதே, “டீவில உன்னையும் சிந்துஜாவையும் பத்தி வந்ததை அமிர்தா கவனிச்சிருக்கலாம்” என்றார் ராஜேஷ் ரெட்டி யோசனையாக. 

 

“அதை பாத்து தான் அவ இப்படி ரியாக்ட் பண்றான்னா அதைப் பத்தி அவ நேரடியா என் கிட்ட கேட்டுருக்கணும் நானா! அந்த உரிமையை கூட அவ எடுக்கலன்னா நான் என்ன பண்ண முடியும்” என கைகளை விரித்தபடி ஆற்றாமையுடன் சொன்னான். 

 

“நீ தானே பாபு அவளை விடாம விரும்பி கல்யாணம் பண்ண!” என அன்னை கவிதா இழுக்க, 

 

“அது வரைக்கும் இழுத்து பிடிச்சு கொண்டு வந்துட்டேன் ம்மா.. ஆனா அதுக்கு அப்புறமும் அவளை என்னோட இழுத்து பிடிச்சு மனைவியா வாழணும்னு ஃபோர்ஸ் பண்ண என்னால முடியல” என்றான் உணர்வுகள் இன்றி. 

 

அவனின் வார்த்தைகளில் பெரியவர்கள் அதிர்ந்து விழிக்க, “அவளை மிஸ் பண்ற அளவுக்கு எனக்கு அக்செக்ட்சன்ஸ் இல்ல.. அதனால எல்லா எக்ஸ்ட்ரீமும் போய் தான் அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.. அதுக்கு அப்புறம் அவளை மிரட்டி, பயமுறுத்தி வாழ என்னால முடியல” என வலியுடன் சொன்னவனை வேதனையாக பார்த்தார்கள் பெற்றோர்கள். 

 

“அவ என் கிட்டயும், உன் நானா கிட்டயும் இப்போலாம் ரொம்ப உரிமையா தான் பேசுறா… உன்னை பிடிக்காமலா இப்படி எல்லாம் இருப்பா?” என யோசனையாக கேட்ட அன்னையிடம் வரட்டு புன்னகையை பதிலாக கொடுத்த ஆத்மன். 

 

“உங்களை ஏத்துக்கிட்டா அதான் நெருக்கமா இருக்கா.. என்னை அவ கொஞ்சம் கூட ஏத்துக்கல அதான் விலகியே இருக்கா” என்றபடி எழுந்தவன், “அவளுக்கு மேலே சாப்பாடு கொடுத்து விடுங்க ம்மா” என்றவனோ வெளியே தோட்டத்தை நோக்கி சென்று விட்டான். 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!