Author name: Anu Jey

anujey

அத்தியாயம் 9

கண்ணை முழுதாகக் கூடத் திறக்காமல், “உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்று நன்றாகக் கண்ணை விழித்தாள். அவள் கத்தியதில் ஆதிரா பயந்து அழுதவள் பின் தந்தையின் அறைக்கு ஓடினாள். ஆதிரா என்று தெரியாமல் இப்படி பண்ணிட்டோமே பாவம் சின்னக் குழந்தை என்று உண்மையாக அவளுக்காக வருந்தியவள் அவள் பின்னே ஓடினாள். “அப்பா… அம்மா கத்து” என்று அவனிடம் அழுதாள். ஆதிராவோடு பழகியவர்கள் எளிதில் அவளுடைய மழலை பாஷையை புரிந்துக்கொள்வர். அப்போது தான் யமுனா ஒடி வந்து, “சாரி […]

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8

‘இருபத்தி இரண்டு வயசான நான் எப்படி ஒரு இரண்டு வயசு குழந்தை அம்மாவா ஆக முடியும்..?’   “யமுனா என்ன பண்ணிட்டு வந்திருக்க நீ… ஆதிரா சின்ன குழந்தை உன்னை அம்மாவா நினைக்கிறாள் அவள் கிட்ட ஆன்ட்டினு சொல்லிட்டு வந்திருக்க… இங்க பார் நீ ஆதிராக்கு அம்மாவா மட்டும் தான் இங்க இருக்கணும்” என்றான் தேவ் அதிகாரமாக.   “என்னை விட நீங்க ஏழு வயசு பெரியவர் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது…நான் என்னுடைய

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

தன் வாழ்க்கையை நினைத்து நொந்தவள் பல் துலக்கி குளித்து விட்டு சாப்பிட்டு உடை அணிந்து வெளியே வர மணி பத்து ஆனது. கீழே இறங்கிச் சென்றவள் அங்கே ஹாலில் யாரும் இல்லை என்பதைப் பார்த்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் சோபாவில் போய் அமர்ந்தாள். “உனக்கு கிளம்ப இவ்வளவு நேரமா? ஆல்மோஸ்ட் மதியமே ஆக போகுது. எனக்கு நான் ஒன்னு சொன்னா அதன்படி பக்காவா நடக்கணும் காலைல உன் மாமாவ பார்க்கணும்னு சொன்னா இந்நேரம் அங்க இருந்திருக்கணும். நான்

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6

தேவ் அவளை கண்டுகொள்ளாமல் தன்னுடைய போட் ஹியர்ஃபோன்ஸை எடுத்து போட்டுக் கொண்டவன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். சாப்பாடு வரும் நேரம் வந்த உடனே, ‘உன் நடிப்பு போதும் யமுனா சாப்பாடு வருது எனக்கு மயக்கமே வர மாதிரி இருக்கு மயங்கி விழுந்தாலும் இவன் நம்மளை வெச்சி செஞ்சிருவான் அதனால் சாப்பாட்டைச் சாப்பிடு’ என்று நினைத்தவள் தூங்கி எழுந்திருக்கும் மாதிரி நடித்தாள். சாப்பிட்டு முடித்து விட்ட பின் அமைதியாக வானத்தை வெறித்தாள். ‘இவன் கூட பத்து நிமிஷம் இருக்கிறதே

அத்தியாயம் 6 Read More »

அத்தியாயம் 5

இவர்கள் பேசிய சலசலப்பிலேயே விழித்த யமுனாவிற்கு அவளுடைய செல்லிற்குக் கால் வந்தது. ஏதோ தெரியாத நம்பர் என்று தூக்க கலக்கத்திலேயே அட்டெண்ட் செய்த யமுனா, “ஹ… லோ!!!” என்று சோம்பல் முறித்தாள்.   “இன்றைக்குக் கல்யாணம் இருக்குனு தெரிந்தும் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க யூ இடியட் இன்னும் ஒன் ஹவர்ல நீ வடபழனி கோவில்ல இருக்கவேண்டும் இல்லன்னா என்னுடைய இன்னொரு ஃபேஸ் நீ பார்ப்ப உன்னை சும்மா விட மாட்டேன்” என்று கட் செய்து விட்டான்.

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

யமுனாவிற்கு சுத்தமாக எதிலுமே விருப்பம் இல்லை அடுத்த நாள் அலுவலகம் சென்ற யமுனாவை எச்ஆர்டியில் இருந்து அழைத்தனர். “ஹாய் யமுனா உங்கள் லாஸ்ட் டேட் இந்த வாரம் ஃபிரைடே சத்யதேவ் எங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டாரு. நீங்க ஒரு ரெஸிக்னேஷன் மெயில் மட்டும் அனுப்புங்க. அப்புறம் ஒன் வீக்ல ரிலீவ் ஆகுறதுனால மூன்று மாசம் சம்பளம் கட்டவேண்டும் அதை சத்யதேவ் தரேன்னு சொல்லிட்டாரு யமுனா” என்றான் எச்ஆர் ஹரி. “அதான் நீங்களே எல்லாம் பண்ணீட்டீங்களே ஹரி அப்போது

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 3

அப்போது அவளுக்கு ஒரு கால் வந்தது அழைப்பைப் பார்த்த யமுனா அதில் தன்னுடைய மாமா கால் செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். “யமூ குட்டி எப்படி டா இருக்க?” என்றவரின் குரல் தழுதழுத்தது. சேகருக்கு தற்போது 70 வயது இருக்கும் சிறிய வயதிலேயே தங்கள் அப்பா அம்மாவை இழந்த பதினைந்து வயது சேகர் தன்னுடைய எட்டு வயது தங்கை சாந்தியை ஒரு தந்தை போல் பாதுகாத்தார். அவளை படிக்கவைத்து இவரும் படித்து பகுதி நேரத்தில் வேலைப்பார்த்துப் படித்து

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

யமுனாவிற்கு மண்டையே குழம்பியது. அந்த நிமிடம் உட்கார்ந்து யோசித்தவள் திவாகருக்கு கால் பண்ணினாள்.   “யமுனா நானே சென்னைக்குத் தான் வந்துக் கொண்டு இருக்கேன். உன் விடுதி முகவரி எஸ்.எம்.எஸ் அனுப்பு” என்று காலை கட் செய்து விட்டான். அவளும் அனுப்பினாள்.   ‘நாம் திவ்யாவைப் பற்றிப் பேச நினைத்தோம் இவர் என்ன புது கதை சொல்கிறார்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் யமுனா.    யமுனாவிற்கு யோசித்து யோசித்து தலையே வலித்தது. அடுத்த நாள் திவாகர் யமுனாவின்

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

அந்த பரபரப்பான சூழலில் அனைவரும் தங்களுடைய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரவு பன்னிரண்டு மணி ஆன அளவிலும் கூட சாலைகள் வெறிச்சோடவில்லை. ஏனென்றால் இது ஒரு தூங்கா நகரம். ஆம் இச்சூழல் மதுரையில் மட்டுமே இருக்கும்.மதுரை என்றாலே சிறப்பு. நமது தமிழ்ச்சங்கம் பிறந்த ஊர்.    காலை ஆறு மணி அளவில் பழங்காநத்தம் திருவள்ளுவர் தெரு 3வது சந்தில் “துர்கா இல்லம்” என்று போடப்பட்டிருக்கும் வீட்டிலிருந்து சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது.    “சுபா எழுந்திரு ஆறு மணியாச்சு.

அத்தியாயம் 1 Read More »

அத்தியாயம் 1

சென்னை  தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.அத்தகைய ஊரில் அமைந்துள்ள சோழிங்கநல்லூரில் மென்பொருள் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கிறது. சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில், தன் அறையில் அழுதுக்கொண்டு இருந்தாள் திவ்யா. திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டுள்ள திவ்யாவிற்கு அப்பா அம்மா சிறிய வயதிலேயே பிரிந்தனர்.  இருவரும் மனம் வேறுபாட்டால் வெவ்வேறு பாதையில் சென்றனர். அவர்கள் திவ்யாவை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டனர். பதினைந்து வயதான திவ்யா அழுது கெஞ்சியும் அவர்கள் மனது

அத்தியாயம் 1 Read More »

error: Content copy warning!!