அத்தியாயம் 26
வீடு வரும் வரை காருக்குள் அமைதி நிலவியது. சித்து மட்டும் ரோட்டில் போகிறவர்களைப் பார்த்து இவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்திருந்தான். வீடு வந்ததும் அஸ்வின் சித்துவை தூக்கிக்கொண்டு உள்ளேச் சென்றான். சுபாவிற்கு இந்த வீட்டைப் பார்த்த பின் பழைய நினைவுகள் அவளைச் சூழ்ந்தது. வீட்டினுள் சென்ற அஸ்வின் சுபா வருவது போல் தெரியவில்லை என்றவுடன் வெளியேச் சென்று அவளின் கையை இறுக்கமாகப் பிடித்து உள்ளே கூட்டிக்கொண்டு வந்தான். முதலில் அவர்களைக் கண்டது பொன்னம்மாள் தான். […]
