Author name: Anu Jey

anujey

அத்தியாயம் 39

 யமுனா சென்றபின் தேவ், ‘போய்டுடீ என்னை விட்டு… என் கூட காதலில் சேராமல் உடம்பிற்காகச் சேர்ந்தேன் என்று சொல்லிட்டு, என்னை கொன்னுட்ட!’ என்று வெறுமையாக நினைத்தான். ஆனால் யமுனா தேவ்வின் மேல் கொண்ட காதலால் தான், தேவ்வோடு சங்கமித்தாள் என்பதை யமுனா சொல்லாமல் தேவ் எப்படி அறிவான்.  சீதாலட்சுமி வெளியே வந்து யமுனாவைத் தேடிக்கொண்டிருந்தபோது, “அம்மா, யமுனா போய்ட்டா… இனி இங்கு வர மாட்டாள். அவளைப் பற்றி இனி என்னிடம் பேசாதீர்கள்” என்று கூறிவிட்டு வெளியே சென்ற […]

அத்தியாயம் 39 Read More »

அத்தியாயம் 38

தன் அம்மாவை அழைத்து, ஆதிராவை வெளியே எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டு, “வேற என்ன சொல்ல சொல்ற? எனக்கு நீ பிறக்கவில்லை என்று என்னால் கூற முடியாது. அதற்காக உன்னையும் விட்டுக் கொடுக்க முடியாது. பிரனிதா ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறாள், நான் அவளுக்கு பணத்தைக் கூட கொடுக்கத் தயார்.  ஆனால், அவள் வாங்கத் தயாரில்லை. அவளுக்கு குழந்தை வேண்டுமென தீர்மானமாக இருக்கின்றாள். இந்த விஷயத்தில் நான் ஒரு அந்நியன் ஆகிட்டேன் யமுனா. ஆதிராவின் அப்பா நான் இல்லாமல்,

அத்தியாயம் 38 Read More »

அத்தியாயம் 37

அப்படியே நீண்ட நேரம் ஷவரில் அமர்ந்து அழுதவள், “யமுனா… கதவைத் திற, எவ்வளவு நேரமாய் குளிச்சிட்டு இருக்க?” என்ற தேவ்வின் சத்தத்தைக் கேட்டு பதறியவள், மடமடவென ஷவரை ஆஃப் செய்துவிட்டு கண்களைத் துடைத்தாள். அங்கு இருந்த டவலை தலையில் கட்டி, உடையை அணிந்து கதவின் மேல் கையை வைத்தவள், எப்படி தேவ்வை எதிர்கொள்ள போகிறோம் என்று நினைத்து ஒரு பெருமூச்சுவிட்டு கதவைத் திறந்தாள்.  “என்ன பண்ணிட்டு இருந்த யமுனா இவ்வளவு நேரம்? ஏன் உன் முகம் ஒருமாதிரி

அத்தியாயம் 37 Read More »

அத்தியாயம் 36

“ஏங்க?” என்று அமைதியாக அழைத்தவளை ஒரு பார்வை பார்த்த தேவ், “காலையில் ஒரு ஆயிரம் தேவ் போட்டு பேசுன, இப்போது என்ன செலக்டிவ் அம்னீஷியாவா?” என்று நக்கலாகக் கேட்டான். “அம் சாரி… நான் அப்போது இருந்த நிலைமையில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன். உங்களை வேற தவறா பேசிட்டேன். நீங்கள் சொன்ன அப்புறம்தான் எனக்கு புரிஞ்சிது” என்று தயங்கினாள். ‘நீ என்னை எப்போது தான் சரியா புரிஞ்சிருக்க யமுனா?’ என்று மனதில் நினைத்தவன், யமுனாவிடம் எதுவும் கூறாமல் மறுபடியும்

அத்தியாயம் 36 Read More »

அத்தியாயம் 35

அந்த ஹோட்டலின் இரண்டாம் தளத்திற்குச் சென்றவனின் பின் பயத்தோடு சென்றவள், தேவ் ஒரு அறையைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற பின், அந்த அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றாள். “நம்முடைய முதல் சந்திப்பில் பயந்துட்டு வெளியே நின்ன மாதிரி, இப்போதும் பயந்துட்டு நிக்குறியா?” என்று நக்கலாகக் கேட்டவனிடம், “இல்லை உள்ளே வரேன்” என்று நுழைந்தாள். பணக்காரர்கள் தங்கும் பிரிமீயம் அறை போல் தோற்றம் அளித்தது அந்த அறை.  உள்ளே யமுனா வந்ததும், அவளைத் தாண்டி வந்து கதவைச் சாற்றிய

அத்தியாயம் 35 Read More »

அத்தியாயம் 34

யமுனாவிற்கு மனசு ஆறவில்லை. ‘எப்படி ஒருவரால் அவர்கள் பேசிய சுடு சொல் துன்புறித்தியதை எல்லாம் மறந்து, அவருடன் நிகழ்காலத்தில் வாழ முடியும்? அதுவும் இதுவரை தேவ்வின் வாயில் இருந்து அவன் யமுனாவிற்கு செய்த கொடுமைகளை மனதில் நினைத்து, ஒரு சாரி கூட வராமல் இருக்கும் நிலையில், தேவ்வின் இந்த அணைப்பு மற்றும் அவன் தற்போது கூறிய வார்த்தைகள் யமுனாவிற்கு எரிச்சலாக இருந்தது. தேவ்வின் அறைக்கு அவள் காஃபி எடுத்துச் சென்ற போது, அவன் ஏதோ ஆங்கில நாவலை

அத்தியாயம் 34 Read More »

அத்தியாயம் 33

“யமுனா நீ ஆதிராவைத் தூக்கிட்டு உள்ளே வா” என்று தன் அறைக்குள் சென்றான் தேவ். அவனை பின்னால் இருந்து முறைத்த யமுனா மனதில், ‘மத்தவங்க கதையைப் பார்க்க இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு. ஆனால் நம்ம கதையைப் பார்த்தா பயமா இருக்கே’ என்று எண்ணியவள் ஆதிராவைத் தூக்கச் சென்றாள். ஆனால் ஆதிரா அவளிடம் வராமல் அழுதாள்.  என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த யமுனா, ஆதிராவிடம் சென்று, “ஆதிரா குட்டி, நீங்க இப்போது அம்மா கிட்ட வந்தா நான் நிறைய கதைகள்

அத்தியாயம் 33 Read More »

அத்தியாயம் 32

‘இந்த அத்தை நல்லவங்க தான், ஆனாலும் நமக்கு பிரச்சனை தான், தேவ்வை உசுப்பேத்தி விட்டுட்டாங்க. இவன் சும்மாவே ஆடுவான், இப்போது என்ன சொல்லப் போறானோ?’ என்று மனதில் பதறியவள், தன் தலையைக் குனிந்து கொண்டாள்.  “நீங்க பிரியாவுடைய மாமனார், மாமியார் என்பதனால் தான் மரியாதை கொடுத்துப் பேசிட்டு இருக்கேன். என் பொண்டாட்டிக்கு நீங்க தாய்மாமாவாக இருந்தால் போதும், இந்த மாமா வேலை எல்லாம் என்னிடம் நடக்காது” என்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், “இந்த விஷயம் நீங்களா

அத்தியாயம் 32 Read More »

அத்தியாயம் 31

 தேவ்வின் அறை எங்கே என்று சீதாலட்சுமியிடம் கேட்டு, யமுனா தேவ்வின் அறைக்கு வந்து முதலில் குளித்து விட்டு, உடையை மாற்றி ஒரு காஃபி குடித்தாள். ஆதிரா மனிஷாவோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளைக் கண்ட மனிஷா இவளை முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.  ‘இது என்ன வம்பா போச்சு, என் புருஷனை இவள் கல்யாணம் பண்ண நினைச்சு என்னை முறைப்பாளாம், என்ன பெண்ணோ இவள்? முன்னாடி மாயா இப்போது இவளா?” என்று சலிப்பாக நினைத்தவள், ‘நாம் ஏன்

அத்தியாயம் 31 Read More »

அத்தியாயம் 30

அந்த சின்னப் பெண்ணைப் பார்த்த உடனே, அவள் ஆதிரா என்று கண்டு கொண்ட யமுனா, “ஆதிரா…” என்று சந்தோஷத்துடன் கத்தினாள். ‘ஓ இவள் தான் யமுனாவா?’ என்று ஆதிராவை தன் கையில் பிடித்து நடந்து வந்த மனிஷாவைப் பார்த்த யமுனா, ‘யார் இந்தப் பெண்? ஆதிராவை உரிமையோடு கை பிடித்து நடந்து வருகிறாளே, ஒருவேளை தேவ்வின் மனைவியா?’ என்று மனதில் ஆயிரம் குழப்பம் மற்றும் கேள்விகளுடன் பார்த்தாள்.  “ஆதிரா உன்னுடைய யமுனாம்மா வந்துட்டாங்க பாரும்மா” என்று சீதாலட்சுமி

அத்தியாயம் 30 Read More »

error: Content copy warning!!