Author name: Anu Jey

anujey

அத்தியாயம் 29

நேராக விக்ரமிடம் திரும்பியவன், “உன் தங்கையை இந்த இடத்தை விட்டு கிளம்ப சொல்லு விக்ரம், இல்லை என்றால்… நான் மனிதனாக இருக்க மாட்டேன்” என்றான் ஆக்ரோஷமாக.  மனிஷாவை இழுத்துக்கொண்டு விக்ரம், தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அறிவுரை கூற ஆரம்பித்தான். “மனிஷா, அண்ணா சொல்வதைக் கேளு. யமுனா தேவ்வின் வாழ்க்கையில் இருப்பது தான் நியாயம். உனக்கு நான் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்கிறேன். இல்லை நீ கூட வேறு ஒரு பையனைப் பிடித்திருந்தால் சொல்லு. ஆனால் […]

அத்தியாயம் 29 Read More »

அத்தியாயம் 28

“எனக்கும் அது தெரியவில்லை தேவ், போட்டு வாங்குறேன்” என்றவன், கிஷோர் இன்னும் வரவில்லை என்றவுடன், “கிஷோர்…” என்று கத்தினான்.  “சாரி சாரி போலாம், என் காரில் போலாம். உங்களுடைய கார் இங்கேயே இருக்கட்டும்” என்றான். “இல்லை கிஷோர், விக்ரம் உன்னோடு வருவான். நான் என்னுடைய காரில் வருகிறேன்” என்று இடத்தை விட்டு எழுந்தான் தேவ். பின் மூவரும் கிளம்பினர்.  கிஷோருடன் காரில் வந்து கொண்டிருந்த விக்ரம், “நீ காதலிக்கும் பெண்ணுடைய குடும்பம் பற்றித் தெரியுமா?” என்று கேட்டுப்

அத்தியாயம் 28 Read More »

அத்தியாயம் 27

கொட்டிவாக்கத்தில் இருக்கும் கிஷோரின் வீட்டிற்குச் சென்ற தேவ் மற்றும் விக்ரமை வரவேற்றார் குல்தீப் சிங். அவரைப் பார்த்தவுடன் தேவ்விற்கு ஏதோ சந்தேகமாகவே இருந்தது. ஆனாலும் நடப்பதைப் பார்ப்போம் என்று அமைதியாக உள்ளே சென்றான்.  “அங்கிள் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று விக்ரம் சொன்னான். ஆனால் நீங்கள் பார்க்க நல்லா தான் இருக்கீங்க?” என்று வெளிப்படையாகவே கேட்டான் தேவ்.  “ஹாஹா நீ நம்பர் ஒன் பிசினஸ் டைகூன்னா சும்மாவா, நல்ல புத்திசாலி தான் நீ தேவ்” என்று சிரித்தவர்,

அத்தியாயம் 27 Read More »

அத்தியாயம் 26

“அவங்க எல்லாரும் வந்தாலுமே, ஆதிராவுக்கு அன்னை பாசம் வேண்டும் இல்லையாப்பா? நானும் இன்னும் எவ்வளவு வருஷம் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை. அதனால் யமுனாவை…” என்று அவர்கள் கூறி முடிப்பதற்குள், “அம்மா நிறுத்துங்க… அந்தப் பெயரைக் கூட என்கிட்ட சொல்லாதீங்க, எரிச்சலாக இருக்கிறது” என்று தன் அறைக்குச் சென்றான் தேவ். *** “அண்ணா, திடீரென்று இந்தியா கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் அதிர்ச்சியாக போச்சு. ஆனால் தேவ்வும் வருகிறார் என்று சொன்னதுக்கு அப்புறம் தான், நான் ரொம்ப சந்தோஷமா

அத்தியாயம் 26 Read More »

அத்தியாயம் 25

“இன்னியோட அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அதற்குக் காரணம் அந்த யமுனா. அவளின் விலாசம் தான் முக்கியமா?” என்று கடுப்பானான். “அண்ணா, உங்களை எதிர்த்து பேசுறேனு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்கள் தான யமுனாவை வெளியே அனுப்புனீங்க. அதே மாதிரி யமுனா அண்ணி இல்லாமல் வீடே நல்லா இல்லை. அந்த கவலையில் தான் அப்பா இறந்தாங்க” என்று கூறி முடித்தாள்.  “என்னிடம் விளக்கம் கூறுகிற அளவிற்கு நீ வளரவில்லை பிரியா… அதான் அவளுடைய செல் நம்பர் இருக்கே,

அத்தியாயம் 25 Read More »

அத்தியாயம் 24

“மன்னிச்சிடுங்க தேவ், எனக்கு வேலைக்கு வருவதற்கு விருப்பம் இருக்கு. இனி இப்படி கண்டிப்பா நடக்காது” என்ற மனிஷா, “சார், இன்னிக்கு என்ன சாம்பார்? வாசம் தூக்குது, சீதா ஆன்ட்டி காலையிலேயே சமையலை முடிச்சிட்டாங்களா?” என்று பேச்சை வளர்த்தாள். அவளிடம் அனாவசியமாக பேச்சை எப்போதும் வளர்க்காத தேவ், இம்முறையும் அவளுக்கு பதில் அளிக்காமல், தனது லண்டன் பிரான்சுக்குச் சென்று விட்டான். ஆதிராவுடன் விளையாடிக் கொண்டிருந்த சீதாலட்சுமியிடம், “ஆன்ட்டி, உங்களுடைய மகனுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? சும்மாவே சிடுசிடு, இன்னிக்கு

அத்தியாயம் 24 Read More »

அத்தியாயம் 23

 “அம்மா… அம்மா வாங்க அப்பா வந்திட்டாங்க” என்று யமுனாவை இழுத்தாள் ஆதிரா. அப்போது அந்த அறைக்கு திவ்யா மற்றும் பிரியா வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆதிரா அவர்களிடம் திரும்பி, “அம்மா அப்பா பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள்.   “பிரியா ப்ளீஸ் ஆதிராவை நீங்க தூக்கிட்டுப் போங்க என் மனசு சரி இல்லை” என்று கடுப்பாகக் கூறினாள் யமுனா. திவ்யாவிடம் கண் அசைவில் செய்கை காட்டிய பிரியா ஆதிராவை வெளியே தூக்கிக்கொண்டுச் சென்றாள்.   யமுனாவிடம் திரும்பிய திவ்யா,

அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம் 22

 “அம்மா… அம்மா வாங்க அப்பா வந்திட்டாங்க” என்று யமுனாவை இழுத்தாள் ஆதிரா. அப்போது அந்த அறைக்கு திவ்யா மற்றும் பிரியா வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆதிரா அவர்களிடம் திரும்பி, “அம்மா அப்பா பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள்.   “பிரியா ப்ளீஸ் ஆதிராவை நீங்க தூக்கிட்டுப் போங்க என் மனசு சரி இல்லை” என்று கடுப்பாகக் கூறினாள் யமுனா. திவ்யாவிடம் கண் அசைவில் செய்கை காட்டிய பிரியா ஆதிராவை வெளியே தூக்கிக்கொண்டுச் சென்றாள்.   யமுனாவிடம் திரும்பிய திவ்யா,

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

 “ஹலோ சீனியர் சென்னையில் இருந்து எப்போ வந்தீங்க?” என்று அவனிடம் திரும்பியவள் அவள் பக்கத்தில் அவளை முறைத்து நின்றுக்கொண்டிருந்த திவாகரைப் புரியாமல் பார்த்தாள்.   “ஹே பிரியா நான் உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும். நீயும் தமிழ் நானும் தமிழ் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று மனீஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “ஸ்டாப் இட் மனீஷ் பிரியா என்னுடைய மனைவி எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகப் போகிறது. என்ன

அத்தியாயம் 21 Read More »

அத்தியாயம் 20

“இதைப் பற்றி என்கிட்ட பேசாதீங்க பிரியா ப்ளீஸ்” என்று பேச்சை மாற்றினாள் யமுனா. அன்று வந்த அதே துர்க்கை அம்மன் கோவிலுக்கு வந்தார்கள். “அண்ணி நீங்க இருங்க நான் விளக்கு ஏத்திட்டு வந்திடறேன்” என்று விளக்கேற்ற சென்றுவிட்டாள் பிரியா. கடைசி முறை இந்த கோவிலுக்கு வந்த போது திவ்யா சொன்னதை நினைத்துப் பார்த்தாள் கணவனின் ஆரோக்கியத்திற்காக அவரின் நலனுக்காக துர்க்கை அம்மனை வேண்டி விளக்கேற்றினால் நல்லது என்பதை நினைத்துப் பார்த்தவள் பக்கத்தில் இருந்த பூஜை சாமான் கடையில்

அத்தியாயம் 20 Read More »

error: Content copy warning!!