அத்தியாயம் 38
அடுத்த நாள் காலை வம்சி எழுந்திருக்கும் முன்னரே ராதை எழுந்து குளித்து விட்டு கீழேச் சென்றாள். வம்சியின் அம்மா என்ன பேசினாலும் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விடவேண்டும் என முடிவெடுத்து சென்றாள். அங்கு காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தனர் பெரியவர்கள். “என்னம்மா நேத்து பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?” என்று புன்முறுவலோடு கேட்டார் விஸ்வநாதன். “ஆ… நல்லா இருந்துச்சு தாத்தா” என்று மெலிதாய் புன்னகைத்த ராதைக்கு, காஃபி எடுத்துக்கொண்டு […]
