துருவம் 3
விஜய் வீட்டில் பூ வைத்து விட்டு சென்ற அடுத்த இரண்டாவது நாள் அஷ்வின் தன்னுடைய வீட்டிற்கு கால் செய்தான். அழைப்பை எடுத்த மணி பக்கத்தில் மனைவி இருப்பதால் ஸ்பீக்கரில் போட, “அஷ்வின்.. டெல்லில வேலை எல்லாம் முடிஞ்சுதா ப்பா.. ராகினி சொல்லுச்சு” என்றவரிடம், “எஸ் ப்பா.. முடிஞ்சுது.. ராகினி எப்போ ஃபோன் பண்ணா” என யோசனையுடன் கேட்டான். “ராகினி ஃபோன் பண்ணல ப்பா.. நம்ம பவாம்மா தான் ராகினிக்கு கால் பண்ணிருக்கா”

