May 2026

அத்தியாயம் 8

“ஏய் ராதை, உன் மனசுல அப்படி என்ன தான் ஓடிட்டு இருக்கு, ஏன் நான் எப்போ பிரகாஷ் அத்தான் பத்தி பேசுனாலும் பேச்சை மாத்துற?” என ராதையிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டு விட்டாள் வனிதா.    “அப்படி எல்லாம் இல்லடி, அவரைப் பத்தி பேச எனக்கு எதுவும் இல்ல அன்ட் அவரைப் பத்தி நான் எதுக்கு டி பேசணும்.. அதான்” என முடித்தாள் ராதை.    “ஏன் ராதை, உன் அக்கா எப்போ எனக்கு போட்டிக்கு […]

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

தன் பாட்டிக்கு மாத்திரை கொடுத்து விட்டு அவளுடைய அறைக்குச் சென்று விட்டாள் ராதை. அனைவரிடமும் விடைபெற்ற பிரகாஷ், ராதையை தான் தேடினான், அவள் அங்கு இல்லை என்பதை உணர்ந்தவன் ஏமாற்றம் அடைந்தான்.    வீட்டிற்கு வந்த பிரகாஷிற்கு ராதையின் நினைப்பாகவே இருந்தது. ‘எவ்வளவு அழகான கண்கள்… அவளோட பால் வண்ண முகம்… அந்த அழகுக்கு அழகு சேர்க்குறது போல அவளுடைய அடக்கம், பணிவு, அமைதி…’ என அவளைப் பற்றிய நினைப்பு அவனைத் தூங்க விடாமல் செய்தது.   

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6

“மைதிலி, நீ கோதையை கொஞ்சம் கண்டிச்சு வெக்கணும். அவ எப்போ பார்த்தாலும் காரை எடுத்துட்டு சுத்திட்டு இருக்கா, இதெல்லாம் பார்க்க நல்லாவா இருக்கு?”    “அவளை மாதிரி தானே ராதையும்.இவ எவ்வளவு பொறுப்பா படிச்சிட்டு இருக்கா. கோதைக்கு படிப்பு தான் வரல, ஆனா ஒழுக்கம் அது ரொம்ப முக்கியம்! இன்னிக்கு உன் புருஷன் வந்ததும் அவளை கண்டிக்க சொல்லு” என்றார் இராஜேஸ்வரி.   வீட்டிற்கு வந்த கோதையிடம், “எங்க போய் சுத்திட்டு வர கோதை? உனக்கு வர

அத்தியாயம் 6 Read More »

அத்தியாயம் 5

ராதை வீட்டிற்கு வரும்போது கோதையும் வனிதாவும் கேரம்போர்ட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.    ‘என்ன கோதை அக்கா, இன்னிக்கு அதிசயமா வனிதா கூட விளையாடிட்டு இருக்கா?’ என்கிற யோசனையோடு வனிதாவிற்கு, “ஹாய் வனி…” என்று சொன்னாள் ராதை.   வனிதாவோ, “ஹாய் டி.. ராதை நம்ம ப்ராஜெக்ட் வொர்க்குக்கு நீ என்னை இங்க வீட்டுக்கு வர சொன்னல, பேசாம நீ எங்க வீட்டுக்கு வாயேன்டி” என்றாள்.    “இல்லடி, நீ வேற உன் அத்தை வீட்டுல இப்போ

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

விஜயா நினைத்தபடி தன் அண்ணன் மணிகண்டனிடம், “எனக்கு ஏதோ தனிமையா இருக்குற மாதிரி இருக்கு ண்ணா… பேசாம நீயும் அண்ணியும் இங்க வந்திருங்க, எனக்கு பேச்சு துணைக்கு அண்ணி இருப்பாங்கல” என்றவரோ தனிமையில் வாடுவது போல் நடித்தார்.    கோயம்புத்தூரில் ஒரு பிரைவேட் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்த மணிகண்டன் என்றும் பேராசை படமாட்டார். தன் தங்கையிடம் காசு, பணம் எதிர்பார்க்க மாட்டார். எனவே, முதலில் முடிவாக மறுத்தவர் தங்கை தொடர்ந்து அழுததால் மட்டுமே வேறு வழியின்றி

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 3

சென்னையில் இருக்கும் அந்தப் பிரபலமான பொறியியல் கல்லூரியில் பிரகாஷ் சிவமாறனின்  கார் நின்றது. அவனை வரவேற்ற அந்த கல்லூரியின் மாணவர் சங்க தலைவர் வினித், அவனை அழைத்து விருந்தினர் அறையில் அமர வைத்து, அவனுக்கு பழச்சாறு வழங்கினான்.    அவன் வந்த விஷயம் தெரிந்ததும் அவனைப் பார்க்க வந்த அந்தக் கல்லூரியின் முதல்வர், “வாங்க மிஸ்டர் பிரகாஷ் சிவமாறன், நீங்க இங்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களை மாதிரி யங் பிசினஸ் டைகூன் இங்க வந்து கலந்துக்கிட்டா,

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

அன்று கோதையின் இருபதாவது பிறந்தநாள். கோவையில் இருக்கும் பிரபலமான கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாம் வருடம் படித்து வருகிறாள். அவளுடைய பிறந்தநாளுக்காக வீடே கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டது.    பார்க்க அழகாக இருக்கும் கோதை எப்போதும் தன்னுடைய அழகில் மெனக்கிடுவாள். இன்று அவளின் பிறந்தநாளுக்காகத் அவளின் தந்தை வாங்கிக் கொடுத்த வைர நெக்லஸை அணிந்து கண்ணாடியில் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.    “கோத! ஏய் கோதை… இந்தா ராதை வீடியோ கால் பண்ணிருக்கா” என்று வயது முதிர்ச்சி

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

அத்தியாயம் 1   வான் எங்கும் கரு மேகங்கள் சூழ, இடியுடன் மின்னல் கூடும் அந்த வேலையில் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில், யாரும் உதவிக்குக் கூட இல்லாமல் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதி.    “ஏன்மா, உன் புருஷன் பேரும் செல் நம்பரும் கொடுமா, அட்டென்டர் இல்லாம இங்க யாரும் இருக்கக்கூடாது” என்றாள் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு செவிலியர் பெண்.    அப்போது கோயம்புத்தூரின் சூலூரில் இருக்கும் அந்தப் பிரபலமான துணி

அத்தியாயம் 1 Read More »

error: Content copy warning!!